02-23-2005, 08:29 PM
ஜேர்மன் அமைச்சருக்கு அனுமதி மறுப்பு
புதன்கிழமை 23 பெப்ரவரி 2005 அருள்
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜேர்மனின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் கெய்டா மாரி தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு செல்லவிரும்பிய போதிலும் அதற்கான அனுமதியினை அரசாங்கம் வழங்கவில்லையென தெரிவிக்கப்படுகிறது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடவும் ஜேர்மன் அமைச்சர் விருப்பம் கொண்டிருந்ததாகவும் இது குறித்து அரசாங்கத்துக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் இதற்கான சாதகமான பதில் கிடைக்க வில்லை என்றும் தெரிய வருகின்றது. இதேவேளை ஜேர்மன் அமைச்சர் கெய்டா மாரி இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்கின்றார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்கு தாம் விஜயம் செய்யாத போதிலும் விரைவில் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனை சந்தித்து பேசவுள்ளதாக ஜேர்மன் அமைச்சர் கெய்டா மாரி தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழச்செல்வன் தலைமையிலான குழுவினர் விரைவில் ஐரோப்பிய நாடுகளுக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளமையினால் ஜேர்மனில் அவரை சந்தித்து பேச ஜேர்மன் அமைச்சர் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிதர்சனம்
http://www.nitharsanam.com/?art=8971

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>