Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காஷ்மீரில் வரலாறு காணாத பனிச்சரிவு கிராமங்கள் புதையுண்டன
#1
காஷ்மீரில் வரலாறு காணாத பனிச்சரிவு: பனிப்பாறைகளுக்கு அடியில் பல கிராமங்கள் புதையுண்டன

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இதுவரை இருந்திராத வகையில் பனிச்சரிவு ஏற்பட்டு வருகிறது. திங்கள்கிழமையும் நூற்றுக்கணக்கான கிராமங்கள் இருந்த இடம் தெரியாமல் பனியால் மூடியிருக்கின்றன, ஆயிரக்கணக்கான மக்கள் அதில் சிக்கித் தவிக்கின்றனர்.

காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து ஏற்பட்டுவரும் பனிச் சரிவில் இறந்தவர்களில் இதுவரை 84 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் 74 பேரைக் காணவில்லை என்றும் என்.டி.டி.வி. தெரிவிக்கிறது.

ரயில் பாதைகளும் நெடுஞ்சாலைகளும் பயன்படுத்த முடியாத அளவுக்கு பனிப்பாறைகளால் நிரம்பிவிட்டதால் போக்குவரத்து நின்றுவிட்டது. தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டிருக்கிறது. மோசமான வானிலையையும் பொருள்படுத்தாமல் இந்திய விமானப்படையின் சரக்கு விமானங்களும் ஹெலிகாப்டர்களும் உணவு, கம்பளி, மருந்துகள் போன்றவற்றை அப்பகுதிகளில் தொடர்ந்து போட்டவண்ணம் உள்ளன.

ஜவகர் சுரங்கப்பாதையில் 150-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிக்கிக் கொண்டுள்ளன. தொடர்ந்து 3-வது நாளாக போக்குவரத்து இல்லாமல் அதில் சிக்கியிருப்பவர்களுக்கு ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்களைப் போட்டனர். சுரங்கப் பாதையின் தெற்கு வாசல் வழியாகத்தான் அதைப் பெற முடிகிறது. உள்ளே 300-க்கும் மேற்பட்ட இந்தோ-திபேத்திய படைப்பிரிவைச் சேர்ந்த ஜவான்கள் சிக்கியுள்ளனர்.

இந்திய விமானப்படையினர் இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தியுள்ளனர்.

சண்டீகர், ஜம்மு, ஸ்ரீநகர், லெ ஆகிய நகரங்களுக்கு இடையில் ராணுவ விமானங்களும் ஹெலிகாப்டர்களும் பறந்து உதவிகளை அளித்து வருகின்றன.
Reply
#2
<b>காஷ்மீர் கொட்டும் பனிக்கு 130 பேர் பலி </b>

<img src='http://www.dinakaran.com/daily/2005/Feb/22/others/C196_kasmir.jpg' border='0' alt='user posted image'>
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பனிப்பொழிவில்
சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் இந்திய ராணுவத்தினர்

காஷ்மீர் மாநிலத்தில் நிலவும் கடுமையான பனிப்பொழிவில் சிக்கி 130 பேர் பலியாகி உள்ளனர்.

காஷ்மீர் மாநிலத்தில் கடுமையாக தற்போது பனிப்பொழிவு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. எங்கு பார்த்தாலும் வெள்ளைவெளேரென்று பனி மயமாக காட்சி அளிக்கிறது. வீடுகள் மீது பனி , மரம் , செடி கொடிகள் மீது பனி படர்ந்து விடுகிறது. இரவில் ஒரு காரை அல்லது ஸ்கூட்டரை வெட்ட வெளியில் நிறுத்தி விட்டு காலையில் பார்த்தால் பனியால் அவை மூடிக் கொள்ளப்பட்டு விடுகின்றன.

இந்த நிலையில் நேற்று ஸ்ரீநகர் பகுதியில் பனி கட்டிகள் சரிந்து விழுந்தன. அவை பனிமலை ஓரத்தில் அமைக்கப்பட்டு இருந்த மர வீடுகள் மீது விழுந்து அமுக்கின. இதனால் வீடுகளும் உடைந்து பனியோடு பனியாக மூழ்கின. இது போன்ற விபத்துக்களால் சுமார் 125 பேருக்கும் மேல் உயிர் இழந்து விட்டார்கள்.

100 பேரை காண வில்லை. அவர்கள் பனி மலைக்குள் மூழ்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. நேற்று 26 குழந்தைகள் , 18 பெண்கள் உள்பட 66 சடலங்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பனிக்குள் அமுங்கி கிடந்த 20 பேர் காப்பாற்றப்பட்டதாகவும் அவர்கள் கூறினர். பூஞ்ச் மாவட்டம் , தோடா மாவட்டம் ஆகியவற்றில் இந்த பாதிப்புகள் அதிகம் ஏற்பட்டன. கடந்த 3 நாட்களாக தினமும் சராசரி 12 அடி உயரம் அளவுக்கு பனி பொழிவு ஏற்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

கடந்த 48 மணி நேரத்தில் 200 வீடுகள் பனியின் பாரம் தாங்காமல் உடைந்து பனிக்குள் விழுந்து மூழ்கி போனதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். காஷ்மீர் அரசாங்கள் இந்த விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ரூ.1 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. உயிர் இழந்தவர்களின் ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் தலா ரூ. 50 ஆயிரம் , காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கவும் அரசு உத்தரவிட்டு உள்ளது.

தினகரன்
Reply
#3
அங்கே காஷ்மீரில் பனி அளவுக்கு அதிகமாக கொட்டி மக்கள் இறந்துள்ளார்கள். ஆனால் இங்கே இங்கிலாந்திலோ இம்முறை விண்டரில் (Winter) பனி கொட்டவில்லையே என்று கவலைப்படுகின்றார்கள், சாதாரணமாக டிசம்பர் கிறிஸ்மஸ் காலத்தில் இங்கே பனி கொட்டும். ஆனால் இம்முறை அவ்வாறு நடக்கவில்லை. நேற்று இரவுதான் கொஞ்சம் பனி கொட்டியது, அதுகூட சினொ மான் (Snow Man) செய்து விளையாட போதவில்லை என்று குழந்தைகளுக்கு வருத்தம்,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#4
ஆம் இன்று காலையும் அப்படித்தான் ஓரளவு கொட்டிவிட்டு
நின்றுவிட்டது.. ஆனால் குளிரோ பயங்கர குளிர் :|
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
ஆமா ஏதோ பெயருக்கு கொட்டினாமாதிரி... :oops:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#6
கொஞ்சம் அனுபிவிடவோ..... <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
கடந்த 3 நாட்களாக தினமும் சராசரி 12 அடி உயரம் அளவுக்கு பனி பொழிவு ஏற்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


12 அடியா..... என்ன நம்பவே முடியலையே.. 12x3=36 அடி இது என்ன கதையா கற்பனையா.... 15 CM சினோ கொட்டினாலே இங்கை படுற பாடு.. எப்படி அந்த பகுதிகளில் மக்கள் இருக்க முடியும் :?
[b][size=18]
Reply
#7
இம்முறை பிரான்ஸ் நாட்டில் 30 ஆண்டுகளிற்கு பின்னர் நாடுமுழுவதும் பனி கொட்டியுள்ளது Cry Cry
; ;
Reply
#8
இங்கு இன்னும் பனி கொஞ்சம் கூட கொட்டினால் நல்லா இருக்கும். சற்று முன் கூட கொட்டி கொஞ்ச நேரத்திலேயே மழையால் கரைந்துவிட்டது. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#9
நான் பனியிலை வழுக்கி விழுந்து அழுறன்மதன் பனிகொட்டேலலையெண்டு அழுறார் என்ன செய்ய :evil:
; ;
Reply
#10
<!--QuoteBegin-kavithan+-->QUOTE(kavithan)<!--QuoteEBegin-->
12 அடியா..... என்ன நம்பவே முடியலையே.. 12x3=36 அடி  இது என்ன கதையா கற்பனையா.... 15 CM சினோ கொட்டினாலே இங்கை படுற பாடு.. எப்படி அந்த பகுதிகளில் மக்கள் இருக்க முடியும் :?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<span style='color:green'>தற்போது கிடைத்த செய்தியின் படி இறந்தவர் தொகை 170 ஆக
உயர்ந்துள்ளது. 100க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர்.
இது நான் பிபிசியில் பார்த்த செய்தி கீழே..


<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40853000/jpg/_40853167_tunnel_afp203.jpg' border='0' alt='user posted image'>

Avalanches and mud slides triggered by heavy rain have buried entire villages and crushed houses across the area.

The Indian army has been rescuing people from remote villages, many of whom have been trapped for two days.

Many areas in Indian and Pakistani administered Kashmir are still cut-off as fears grow of food shortages.


<b>Indian soldiers and medical personnel are searching for survivors in the worst-hit region - the series of villages in the Anantnag district south of Srinagar the summer capital of Indian administered Kashmir, which have seen 4.5 metres (15 feet) of snow since. </b>

"These areas are very far off and it takes eight hours of walking through heavy snow to reach there," a police official told the AFP news agency.

An Indian army rescue team has reached the village of Viltengnar, where more than 100 people were killed by the avalanche.

Soldiers rescued 74 villagers and are searching for more survivors in the village which had 600 people.

"The team has communicated that most of the homes are under 4.5 to 5.5 metres (15-18 feet) of snow and chances of finding survivors are very low," army spokesman Lt Col VK Batra is quoted as saying by the Associated Press.


Indian helicopters have dropped rations in affected areas
He said the army plans to drop food and blankets by helicopter in the area. </span>

<b>இது விடியோ காட்சி</b> (windows Media Player)
http://news.bbc.co.uk/media/news_web/video...045_bb_16x9.asx

__________
Reply
#11
<!--QuoteBegin-shiyam+-->QUOTE(shiyam)<!--QuoteEBegin-->நான் பனியிலை வழுக்கி விழுந்து அழுறன்மதன் பனிகொட்டேலலையெண்டு  அழுறார் என்ன செய்ய :evil:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

என்ன செய்ய கொட்டினாலும் கவலை கொட்டவில்லை என்றாலும் கவலை,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#12
<!--QuoteBegin-shiyam+-->QUOTE(shiyam)<!--QuoteEBegin-->நான் பனியிலை வழுக்கி விழுந்து அழுறன்மதன் பனிகொட்டேலலையெண்டு  அழுறார் என்ன செய்ய :evil:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


நம்ம ஏரியாவில பேருக்கு தான் கொட்டுது.. ஆனால் குளிருக்கு பஞ்சம் இல்லை.. :wink: :?
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#13
நன்றி வசி.... நான் நினைக்கிறேன் மண்சரிவு போல் பனிச் சரிவு நடந்ததால் ஏற்பட்ட பனியின் அளவை அவ்வாறு கூறுகிறார்கள் என.. ஏதோ எனக்கு புரியவில்லை Confusedhock:
[b][size=18]
Reply
#14
ஆம் அப்படித்தான் நினைக்கிறேன்.. பனிப்பாறைகள் சரிந்து விழுந்ததாக
செய்தியில் சொல்லியிருந்தார்கள். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)