02-26-2005, 11:13 AM
இசை அமைப்பாளர் ஜோஸ்வா இன்று சிறையில் அடைப்பு பல பெண்களை ஏமாற்றியதாக புகார்
<img src='http://www.dinakaran.com/daily/2005/Feb/26/flash/C1114_petty.jpg' border='0' alt='user posted image'>
ஜோஸ்வா - நடாஷா
சென்னை, பிப். 26- பல பெண்களை ஏமாற்றியதாக இசையமைப்பாளர் ஜோஸ்வா இன்று சிறையில் அடைக்கப்பட்டார்.
…காதல் திரைப்படத்துக்கு இசை அமைத்தவர் ஜோஸ்வாஸ்ரீதர். இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த நிலையில் இவரது இசைக்குழுவில் …கீ போர்டு வாசித்து வந்த நடாஷா என்ற இளம்பெண்ணுடன் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த கல்லூரி மாணவியான நடாஷாவை இசை அமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதர் கடத்திச்சென்று திருமணம் செய்து கொண்டதாக பெங்களூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரை நடாஷாவின் தாயார் எல்பிரா செய்திருந்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இருவரும் சென்னையில் இருந்ததால் பெங்களூர் போலீசார் இதுகுறித்து சென்னை நகர போலீசாருக்கு தெரிவித்தனர்.
போலீஸ் கமிஷனர் ஆர்.நட்ராஜ் இசைஅமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதரையும், நடாஷாவையும் உடனடியாக பிடிக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மயிலாப்பூர் சரக துணைகமிஷனர் கே.பி.சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் ஒரு தனிப்படையும், அண்ணாநகர் சரக துணைகமிஷனர் கருணாநிதி தலைமையில் மற்றொரு தனிப்படையும் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜோஸ்வா ஸ்ரீதர் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீனுக்காக ஒரு மனு தாக்கல் செய்தார். சென்னை ஐகோர்ட்டு ஜோஸ்வாஸ்ரீதர், நடாஷா ஆகியோர் மீது பெங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதால் 14 நாட்களுக்குள் பெங்களூர் கோர்ட்டில் அவர்கள் ஆஜராகி முன்ஜாமீன் பெறலாம் என்று கூறியிருந்தது.
ஆனால் இருவரும் பெங்களூர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. எனவே அவர்களை சென்னை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தது போலீசாருக்கு தெரிந்தது.
இதனை தொடர்ந்து மயிலாப்பூர் சரக துணைகமிஷனர் கே.பி.சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் மாறுவேடத்தில் அங்கு சென்ற போலீசார் அவர் களை பிடித்தனர். இன்று காலையில் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது ஜோஸ்வா ஸ்ரீதர் பல பெண்களை ஏமாற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே ஜோஸ்வாஸ்ரீதர் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க திட்டமிட்டு உள்ளனர். நடாஷாவை மீட்டு கமிஷனர் ஆர்.நட்ராஜ; முன்னிலையில் அவரது தாயாரிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
தினகரன்

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>