Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒட்டுப் படை உத்தியை ஒட்டக் கைவிடுங்கள்!
#1
[size=18]ஆசிரியர் தலையங்கம் (24.02.2005 உதயன்)
ஒட்டுப் படை உத்தியை
ஒட்டக் கைவிடுங்கள்!

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழான யுத்த நிறுத்த ஏற்பாடு மிகுந்த ஆபத்தான கட்டத்தை அடைந்திருக் கின்றது என ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இருவர் சார்பிலும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இரண்டு தசாப்த காலகொடூர யுத்தத்துக்கு, இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழான யுத்த நிறுத்தமே தற்காலிகமாகவேனும் முடிவு கட்டியது.
யுத்தத்தில் ஈடுபட்டிருந்த விடுதலைப் புலிகளின் சார்பில் தலைவர் வே.பிரபாகரனும், அரசின் சார்பில் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இந்த ஒப்பந்தத்தில் கையயழுத்திட்டனர்.
அவர்கள் இருவரின் சார்பிலேயுமே இப்போது அந்த யுத்தநிறுத்த ஏற்பாடு ஆபத்துக்குள்ளாகியி ருக்கின்றது என்ற எச்சரிக்கை வெளியிடப்பட்டிருக் கின்றது.
யுத்தநிறுத்த உடன்பாடு ஆபத்தான கட்டத்தில் சிக்கிக் கொண்டுள்ளது என எச்சரித்திருக்கும் முன் னாள் பிரதமரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலை வருமான ரணில்விக்கிரமசிங்க, வேறு உள்நோக்கம் கொண்ட தரப்புகள் யுத்தத்துக்குப் போகவே முயலு கின்றன என்பதையும் சுட்டிக் காட்டியிருக்கின்றார்.
இதேபோன்று, இந்த உடன்பாட்டில் ஒப்பமிட்ட மற்றையவரான புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் சார்பில் புலிகள் இயக்க அரசியல்துறைப் பொறுப் பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் யுத்தநிறுத்தம் முறியும் ஆபத்தில் இருப்பது பற்றிய முன்னெச்சரிக்கையை வெளிப்படுத்தியிருக்கின்றார்.
மமஇலங்கையில் புதிய அரசு பதவியேற்ற பின்னர் அதன் படைத்தரப்பு புதிய, புதிய ஆயுதக் குழுக்களை உரு வாக்கி, படைத்தரப்பும் அவர்களோடு இணைந்து, விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதும் தேசப்பற்றா ளர்கள் மீதும், தமிழ் மக்கள் மீதும் ஒரு மறைமுக யுத் தத்தைத் தொடுத்துக் கொண்டிருக்கின்றது.
மமஇப்போக்குத் தொடருமானால் அமைதிச் சூழல், சமாதான நிலைமை, யுத்தநிறுத்த ஏற்பாடு - எல்லாமே தகர்த்தெறியப்பட்டு விடும்டுடு இவ்வாறு அவர் சுட்டிக் காட்டியிருக்கின்றார்.
யுத்த நிறுத்த உடன்பாடு ஆபத்தான கட்டங்களைத் தாண்டித் தாண்டி, மேலும் மேலும் மிக ஆபத்தான கட்டங்களுக்குள் நுழைந்து கொண்டிருக்கின்றது என்பதையும் செய்தியாளர்களுக்கு எடுத்து விளக்கியி ருக்கின்றார் தமிழ்ச்செல்வன்.
யுத்த நிறுத்த ஏற்பாடுகள் மீறப்படுவது மட்டுமல்ல, புலிகள் அமைப்பின் மீது ஒரு மறைமுகப் போரே தொடுக்கப்பட்டிருக்கின்றது என்பதைப் புலிகள் சுட்டிக் காட்டியிருப்பது விசேடமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
கடந்த ஏப்ரலில் கருணா என்ற தற்குறி, தமிழர் விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக்கொடுக்கும் காக்கை வன்னியனாக மாறியபோது அந்தக் கும்பலை வைத்துக்கொண்டு தமிழ்ப் போராளிகள் மீது - யுத்த நிறுத்த காலத்தில் - ஓர் இருள் யுத்தம் நடத்தப்பட்டது.
இருளில் தாக்கியவர்களைப் புலிகள் அம்பலத் துக்கு - வெளிச்சத்துக்கு - கொண்டு வந்ததும் கருணா கும்பலின் பெயரிலான அட்டகாசம் ஓய்ந்தது.
இப்போது மீண்டும் மறைமுக யுத்தம் ஆரம்பிக் கப்பட்டிருப்பதையும், அதன் பின்னணி யார் என்பதை யும் தமிழ்ச்செல்வன் அம்பலப்படுத்தியிருக்கின்றார்.
மமவிடுதலைப் புலிகள் இவ்விடயத்தில் உச்சப் பொறு மையைக் கடைப்பிடிக்கின்றார்கள். புலிகளைக் கோப மூட்டித் தூண்டும் - சீண்டும் - நடவடிக்கைகள் கட்ட விழ்த்து விடப்படுகின்ற போதிலும், யுத்தநிறுத்தத்தைப் பூரணமாகக் கடைப்பிடிக்கும் முழு அர்ப்பணிப்புடன் புலிகள் பொறுமை பேணுகின்றார்கள். தொடர்ந்து இந் தப் பொறுமை எவ்வளவு தூரத்துக்கு - காலத்துக்கு - தாக்குப்பிடிக்கும் என்பதை எம்மால் இப்போது கூற முடியாது. அந்தப் பொறுமையின் எல்லையைக் கடக்க வைக்கும் சம்பவங்கள் தான் இப்போது நடந்தேறிக் கொண்டிருக்கின்றனடுடு என்று தமிழ்ச்செல்வன் சுட்டிக் காட்டியிருப்பது அமைதி விரும்பிகள் ஈண்டு கவனிக்க வேண்டிய விடயமாகும்.
தமிழர் தாயகத்தில் ஒட்டுப்படைகளை - சமூக விரோ தக்கும்பல்களை - துரோகக்குழுக்களை - வைத்துக் கொண்டு புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தி, அவர்களைச்சீண்டும் போக்குத் தொடர்கின்றது.
யுத்தநிறுத்த உடன்பாட்டின்படி இக்குழுக்கள் எல் லாம் தமிழர் தாயகமான வடக்கு - கிழக்கிலிருந்து அப் புறப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அந்த நடவடிக் கையை நிறைவேற்றும் பொறுப்பு ஒப்பந்தப் படி முற்று முழுதாக அரசுத்தரப்பையே சேர்ந்தது.
அதைச்சரிவரச் செய்யாமல், புலிகள் மீதான தாக்கு தல்களை அடுத்து ஏதோ ஒரு குழு மீது பொறுப்பைச் சுமத்திக்கொண்டு அரசு தனது கையை விரிப்பது ஏற் றுக்கொள்ளக் கூடியதல்ல.
அதேபோக்குத் தொடர்ந்தால் அரசுப் படைகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அரசுத் தரப்பு நிறைவேற்ற வேண்டிய அந்தப் பொறுப்பைப் புலிகள் தாமே செய்ய வேண்டிதாகிவிடும். அத்தகைய நிலை ஏற்பட்டால் அது யுத்தநிறுத்தம் நிரந்தரமாக முறிந்து போக வழிசெய்வ தாகிவிடும் என்பதை அரசுத்தரப்பு உணரவேண்டும்.
ஒட்டுப்படைகளின் பெயரில் அட்டகாசம் புரியும் மறைமுகத் தந்திரோபாயத்தை முற்றாகக் கைவிட அரசுப்படைகள் தாமதமின்றி முன்வராவிட்டால், போர் நிறுத்த உடன்பாடு செல்லாக்காசாவது தவிர்க்கப்பட முடியாததாகும்.

உதயன் 24.02.2005
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)