Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உந்துருளி செலுத்துனருக்கு தமிழீழ காவல்த்துறை விடுக்கும் வேண்
#1
தமிழீழ காவல்துறையின் வாகனப் போக்குவரத்துப்பிரிவினர் மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கான வேண்டுகோள்களை விடுத்துள்ளனர்.

அண்மைக்காலத்தில் எமது கட்டுப்பாட்டுப்பிரதேசத்தில் கூடுதலான விபத்துக்கள் மோட்டார் சைக்கிள் சாரதிகளின் கவலையீனத்தாலும் வேகத்தினாலும் வீதிகள் அகலம் குறைவின் காரணத்தாலும் இடம்பெற்று வருகின்றன.

இவ் விபத்துக்கள் நடப்பதற்கு காரணம் மோட்டார் சைக்கிள் சாரதிகள் வீதியின் விதிமுறைகளை பின்பற்றாது சாரத்தியம் செய்வதே ஆகும். இவ் விபத்துக்களை தடுப்பதற்கு மோட்டார் சைக்கிள் சாரதிகள் வீதியின் விதிமுறைகளைக் கடைப்பிடித்து நடக்கவேண்டும்.

வீதியின் விதிமுறையெனக் கூறும்போது மோட்டார் சைக்கிள் செலுத்தும்போது வீதியின் இடதுபக்கமாக செலுத்துதல் வேண்டும். ஒரு வாகனத்தை முந்திச் செல்லும்போது வலது பக்கமாக முந்திச் செல்லுதல் வேண்டும். இதேபோன்று இடது பக்கமாக மோட்டார் சைக்கிளில் செல்லும்போது தாங்கள் வீதியின் தார் விளிம்பில் இருந்து மூன்று அடிக்குள் செலுத்துதல் வேண்டும். வீதியில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தும்போது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பக்கம் பக்கமாகச் செல்வதை தவிர்த்தல் வேண்டும். மோட்டார் சைக்கிளை வீதியில் செலுத்தும்போது ஒடிக்கொண்டிருக்கும் இன்னொரு மோட்டார் சைக்கிளில் பிடித்துக் கொண்டு செல்லுதல் தவிர்க்கப்பட வேண்டும்.

நீங்கள் வீதியில் மோட்டார் சைக்கிள் செலுத்தும்போது பின்னால் வரும் வாகனங்களுக்கு வழிவிடாது நடுவீதியால் செல்வதை தவிர்க்க வேண்டும். உங்களுக்கு முன்னால் செல்லும் வாகனங்களை சந்திகளில் பாதசாரதி கடைவைகளில் வளைவு நெளிவான இடங்களில் முந்திச்செல்வதை தவிர்த்தல் வேண்டும். நீங்கள் மோட்டார் சைக்கிளில் கிளை வீதியிலிருந்து பிரதான வீதிக்கு நுழையும்போது மோட்டார் சைக்கிளை கிளை வீதியில் நிறுத்தி பிரதான வீதியின் வலதுபக்கமும் பார்த்துää பின் இடது பக்கமும் பார்த்து திருப்பவும். வலதுபக்கம் பார்த்து வலது பக்கங்களில் இருந்து வரும் வாகனங்களையும் இடது பக்கங்களில் இருந்துவரும் வாகனங்களையும் செல்ல அனுமதித்த பின் மோட்டார் சைக்கிளை பிரதான வீதிக்குள் இடையூறு இன்றி வீதியின் விதிமுறைகளுக்கேற்ப செலுத்துதல் வேண்டும். நீங்கள் மோட்டார் சைக்கிளில் பிரதான வீதியால் சென்று கிளை வீதிக்கோ அல்லது கிளை வீதியிருந்து பிரதான வீதிக்கோ செல்லும்போது திசைக்கேற்ப நூறு அடிக்கு முன் சைகையை (லைற்சைகைää கைச்சைகை) தெளிவாக காட்டுதல் வேண்டும்.

இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிள் செலுத்தும்போது முன்பக்கத்தில் வெள்ளை நிற (முகப்பு வெளிச்சம்) வெளிச்சத்தையும் பின்பக்கத்தில் சிவப்புநிற வெளிச்சத்தையும் அல்;லது சிவப்பு நிற தெறிகல்லையும் பாவித்தல் வேண்டும். வெளிச்சமின்றி செலுத்துவதைத் தவிர்த்தல் வேண்டும்.

மோட்டார் சைக்கிள் செலுத்தும்போது முறையான கட்டுப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் பொருட்களை ஏற்றிச்செல்வதை தவிர்த்தல் வேண்டும்.

மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் அதற்கு மேற்பட்டோரை ஏற்றிச்செல்வதை தவிர்த்தல் வேண்;டும்.

மோட்டார் சைக்கிள் செலுத்தும்போது வீதியில் தேவையற்ற பொருட்கள் மீது தாங்கள் பார்வையை செலுத்துவதை தவிர்த்தல் வேண்டும்.

இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது மென்நிற ஆடை அணித்திருத்தல் வேண்டும்.

மோட்டார் சைக்கிள் வீதியில் செலுத்தும்போது வீதியில் பணிக்கப்பட்ட வேகத்தை கடைப்பிடித்து செலுத்துதல் வேண்டும்.

நீங்கள் பிரதான வீதியில் இருந்து இடது பக்கம் அல்லது வலது பக்கம் வரும் வீதிக்கு திரும்புவதற்காக இருந்தால் உங்கள் மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் வரும் வாகனங்கள் நேராகச்செல்லுமானால் அதற்கு வழிவிட வேண்டும்.

மோட்டார் சைக்கிளை வீதியில் செலுத்தும்போது மதுபோதையில் செலுத்துவதை தவிர்த்தல் வேண்டும்.

வீதியில் மோட்டார் சைக்கிள் செலுத்துவதற்கு முன் மோட்டார் சைக்கிளின் பொறிமுறைகள் விளக்குகள் டயர்ää தடுப்புக்கள்ää ஒலிக்கருவிகள் என்பன சரியான முறையில் உள்ளதா என உறுதிப்படுத்துங்கள் இவற்றைக்கடைப்பிடித்து வீதி விபத்திலிருந்து உயிர் இழப்புக்களையும் உடமை இழப்புக்களையும் தவிர்த்துக் கொள்ளுமாறு தமிழீழ காவல்துறையின் வாகனப்போக்குவரத்து பிரிவுப்பொறுப்பாளர் கேட்டுள்ளார்.

நன்றி புதினம்
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)