Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
:: சமாதானம்! ::
#1
அவசரமாய் பூசிய அரிதாரம்
கலையும் முன்னரே
மீண்டுமோர் அரங்கேற்றம்!

காட்சிகள் என்னவோ ஒன்றுதான்
கதா பாத்திரங்கள் மட்டுமே
முகம் மாற்றப்பட்டுள்ளது.
கதையறியாமலே கதாபாத்திரங்களாக்கப்பட்ட
கோமாளிகளே அங்கு அதிகம்

குரங்காட்டி ஒருவன்
சந்தை வந்தால்
கூட்டம் சேருவதும் - பின்
கலைவதும் புதிது அல்லவே
ஆட்டம் முடியும் வரை
கூட்டம் இருக்கும்
நட்டம் தனக்கென உணராத கூட்டம் அது!

வேடிக்கை காட்டியவனுக்கும்
வேசம் போட்டவனுக்கும்
வித்தியாசம் என்ன இருக்கு?
வந்தவரிடம் வாருவதே அவர் போக்கு
புரியாத ஜென்மங்கள்
புலம்புவதே இவர் போக்கு!

விடியாத இரவு ஒன்று இல்லை
முடியாத பொருள் எதுவும் இல்லை
பேசிப்பெற நாம் கோழை இல்லை
பறிபட்டுப்போக நாம் பரதேசிகளுமில்லை!

கெஞ்சிய போதெல்லாம் அவர் மிஞ்சுவதும்
நாம் மிஞ்சும் போதெல்லாம் அவர் துஞ்சுவதும்
காலம் கற்றுத் தந்த பாடம் - இன்னும்
கண்முடிக் கிடப்பதேனோ நீயும்?!

உளியோடு போரிட்டுத்தான்
சிலை பிறக்கிறது
மண்ணோடு போரிட்டுத்தான்
விதை முளைக்கிறது

புரியாது போனது ஏனோ??
:: ::

-
!
Reply
#2
Quote:உளியோடு போரிட்டுத்தான்
சிலை பிறக்கிறது
மண்ணோடு போரிட்டுத்தான்
விதை முளைக்கிறது

உளி கொண்ட போரட்டம்
சிலையைத் தரும்
விதை கொண்ட போராட்டம்
விருட்சம் தரும்

வாழ்ககைத் தத்துவத்தை
வாரி வழங்கும் குறும்பனே
அழகான அர்த்தமுள்ள கவிதை :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
" "
" "

Reply
#3
Kurumpan Wrote:விடியாத இரவு ஒன்று இல்லை
முடியாத பொருள் எதுவும் இல்லை
பேசிப்பெற நாம் கோழை இல்லை
பறிபட்டுப்போக நாம் பரதேசிகளுமில்லை!

கெஞ்சிய போதெல்லாம் அவர் மிஞ்சுவதும்
நாம் மிஞ்சும் போதெல்லாம் அவர் துஞ்சுவதும்
காலம் கற்றுத் தந்த பாடம் - இன்னும்
கண்முடிக் கிடப்பதேனோ நீயும்?!

உளியோடு போரிட்டுத்தான்
சிலை பிறக்கிறது
மண்ணோடு போரிட்டுத்தான்
விதை முளைக்கிறது

புரியாது போனது ஏனோ??

குறும்பா இனி நாம் கெஞ்சமாட்டோம் நாங்கள் பரதேசிகளல்ல கெஞ்சுவதற்கு.
நாங்கள் அதிகாலை நேரத்தில் பூபாளம் இசைக்கின்றோம் சூரியன் எழுவான் இன்னும் அதிகநேரமில்லை சில விநாடிப்பொழுதுகள்தான் இருக்கிறது. தலைவன் ஆணைகிடைக்கும்வரைதான் இந்த இருள்.
வாழ்த்துக்கள்
இந்த சந்திலை சிந்து பாடிய மழலைக்கவிக்கும் எனது வாழ்த்துக்கள்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#4
குறும்பன் கவிதைக்கும் பதில் வாழ்த்து எழுதி அசத்தும் மழலைக்கும் வாழ்த்துகள்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#5
நன்றி குளம் அண்ணா.... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
" "
" "

Reply
#6
Quote:இந்த சந்திலை சிந்து பாடிய மழலைக்கவிக்கும் எனது வாழ்த்துக்கள்
நன்றி வியாசன் அண்ணா :wink:
" "
" "

Reply
#7
குறும்பனுக்கும் மழலைக்கும் வாழ்த்துக்கள்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#8
நன்றி மதன் அண்ணா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
" "
" "

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)