Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மன்மதன் விமரிசனத்தில் விசம்........
#1
நான் அனேகமாக எல்லாத் தமிழ்த் திரைப்படங்களைப் பார்ப்பேன். (சரத்குமார் விஜயகாந்த்?? சத்தியமாய் இல்லை - அஜித் விஜெய் சிம்பு படங்கள் இயக்குனர்கள் கதாநாயகிகளைப் பொறுத்து தெரிவிற்கு வரும்) தரமான படம் எண்டு பேசப்பட வேண்டும் எண்ட கட்டாயம் எனக்கில்லை. உடுப்பு பாட்டு நடிப்பு காட்சியமைப்பு எண்டதுக்காகப் பாப்பதும் உண்டு. வார இறுதி நாட்களில செய்வதற்கு ஒண்டும் இல்லாத பட்சத்தில பல தரமற்ற படங்களை நண்பர்களோட போய்ப் பார்த்திருக்கிறேன்.
திரைப்படம் பாக்கிறது அறிவை வளர்த்துக் கொள்ளுறதுக்கு?? இல்லா விட்டால் நல்ல ஒரு செய்தியைச் சமூகத்திற்குச் சொல்லுது அதைப் பார்ப்பம் எண்டு நான் ஒரு நாளும் நினைச்சதில்லை (முக்கியமாக தமிழ் திரைப்படங்கள்) முற்று முழுசா ஒரு பொழுது போக்குக்காக எண்டு எடுத்துக் கொள்ளுறதால திரைப்படங்களின்ர தரம் என்னை ஒரு நாளும் bother பண்ணினது கிடையாது. தரமான திரைப்படங்களைப் பார்க்க வேணும் எண்ட எனது ஆர்வத்தை பல தேடல்களால திரைப்படவிழாக்களிலையும் விடுபடுறதுகள் DVD யிலும் பாத்து ரசித்து அதிர்ந்து நிறைவாய் உணர்ந்து

மன்மதன் திரைப்படம் திரையரங்கில் “பொப்கோன” கோப்பி சகிதம் நண்பர்களுடன் சென்று பார்த்து மகிழ்ந்து வந்தேன் (Jothika is one of my favorite) சிம்புவின் திரைப்படத்தில் சேரன் மணிரத்தினத்திடம் கிடைக்கும் அந்தக் கொஞ்சத்தையேனும் நான் எதிர்பார்த்துப் போயிருந்தேன் எண்டால் தவறு சிம்புவினுடையது (அல்லது சிம்புவை வைத்து இயக்கியவரிடம்) அல்ல. என்னுடையதே. (மிருணாள் சென்னின் படம் அளவிற்கு சிம்புவின் இல்லை என்று அழுதவர்களும் உள்ளார்கள்)

சிம்பு வயதில் இளையவராக இருப்பதால் பாடல் காட்சிகளில் பார்வையாளர்களுக்கு bore அடிக்காமல் நடனம் ஆடுகின்றார். அவரின் உடைகளின் தெரிவு நன்றாக உள்ளது. கொஞ்சம் நடிக்கவும் செய்கின்றார். இதை விட ராஜேந்திரனின் மகனிடம் எதைத் தாங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?

“விருமாண்டி” கனடாவில் திரையரங்குகளில் திரையிடப்பட்ட போது பலர் தமது குழந்தைகளுடன் வந்து பார்த்துச் சென்றார்கள். (ஒரு வேளை தெனாலி போல் இருக்கும் என்ற எண்ணமோ என்னவோ) நேரடி வெட்டுக் கொத்துக்களைக் காட்டும் இது போன்ற திரைப்படங்களை விட “மன்மதன்” எந்த விதத்தில் குழந்தைகளுக்குப் பாதிப்பைத் தரப்போகின்றது என்பது எனக்குப் புரியவில்லை.

“மன்மதன்” திரைப்படத்தின் முக்கிய கரு தவறு செய்யும் பெண்கள்??? (கெட்ட) கொலை செய்யப்படுகின்றார்கள். இது நாயகனின் தீர்ப்பு. புலம்பெயர்ந்து வாழும் எமது பிள்ளைகளுக்கு இக் கரு எந்த அளவிற்குப் புரியப் போகின்றது. (ஒரு வேளை இந்தியா போன்ற நாடுகளின் வாழும் குழந்தைகள் உளவியல் ரீதியான கேள்விக்கு ஆளாகலாம்) ஆனால்; புலம்பெயர்ந்து வாழும் குழந்தைகளின் அகராதியில் “தவறு செய்யும் பெண்கள்?’ என்று ஒன்று இடம்பெறப் போகின்றதா? “This is my mom’s boy friend” என்று அறிமுகம் செய்யும் கலாச்சாரத்தோடு இணைந்து வாழும் எம் குழந்தைகள் “மன்மதன்” திரைப்படத்தில் பார்த்து ரசிக்கப் போவது சிம்பு ஜோதிகாவின் பாடல் காட்சிகளையும் நடனத்தையும் தான்.

கடந்து வந்த தமிழ் சினிமா எமக்குப் புகட்டிப் போனதெல்லாம் என்ன?
ஒரு பெண் பாலியல் வற்புறுத்தலுக்குள்ளானால் அவள் (அவன் எவ்வளவு கெட்டவனாக இருப்பினும்) தன்னைத் தொட்டவனைத்தான் திருமணம் செய்வாள் இல்லையேல் தற்கொலை செய்து விடுவாள்.
பெண் வீட்டுக்கு அடக்கமாக இருந்து கொண்டு கணவனுக்கு தனது கடமைகளைச் செய்து இன்புறுவாள். கணவன் தவறு செய்தால் பொறுத்துக் கொண்டு அவனைத் திருத்தி நல்லவனாக்குவாள்.

நான் சின்ன வயதில் பார்த்த திரைப்படம் பெயர் மறந்து போனேன். சிவாஜி எஸ்.எஸ் ஆர் விஜயகுமாரி தேவிகா நடித்த திரைப்படம் இது. கண்பார்வை அற்ற பெண்ணிற்கு சிகிச்சை நடக்கின்றது. திருமண நாள் அன்றே அவளை விட்டுச் சென்ற கணவன் விபத்தில் இறந்து விட்டதாகத் தகவல் வருகிறது. சிகிச்சையின் பின்னர் முதல் முதலில் முகம் காணாத தனது கணவனைத் தான் பார்க்க வேண்டும் என்ற அவளது ஆசையை நிறைவு செய்ய பின் விளைவுகளை யோசிக்காமல். கணவனின் நண்பனை முன்னே நிறுத்துகிறார் பெண்ணின் தந்தை. நண்பன் பல வழிகளில் அவள் தன்னோடு. தனித்திருப்பதைத் தவிர்க்கின்றான். தனது கணவன் அவன் தான் என்று நம்பி இருந்தவளின் கைகளின் திருமணப் புகைப்படம் ஒன்று கிடைக்கின்றது. தான் மனதால் கணவன் என்று வரிந்து வாழ்பவன் உண்மையில் தனது கணவன் இல்லை என்று தெரிந்த போது கன்னி கழியாத அந்தப் பெண் தற்கொலை செய்கின்றாள். இப்படிப் பட்ட திரைப்படங்கள் கூறாத எந்த விதமான கோழைத் தனத்தை “மன்மதன்” கூறிவிட்டான்?

இப்படியான பெண்களின் முன்னேற்றத்திற்கும் சுதந்திரத்திற்கும் எதிரான திரைப்படங்களையும் இன்னும் தவறு செய்தால் தண்டிக்கலாம் கை காலை வெட்டலாம் பாணிப் படங்களை தானே இந்திய தமிழ் சினிமா காலம் காலமாகத் தந்து கொண்டிருக்கின்றது. இவற்றோடு ஒப்பிடும் போது “மன்மதன்” தரமற்ற திரைப்படமாக இருப்பினும் குரூரமான காட்சிகள் இடம் பெறவில்லை. மாறாக அழகியலுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது என் கருத்து.


<span style='font-size:25pt;line-height:100%'>நாம் இப்போது – அதாவது ஈழத்தமிழர்களாகிய புலம்பெயர்ந்த நாம் இப்போது இங்கே வாழும் எமது எதிர்காலச் சந்ததிக்காக முக்கியமாக சிந்திக்க வேண்டியது என்னவெனின் பகைவரை அழிப்போம், துப்பாக்கி தூக்குவோம், எதிரிகளை வெட்டுவோம், கொத்துவோம் போன்ற எமது ஈழத்துப் போராட்டப் பாடல்களை முக்கியமாகத் தடைசெய்ய முயற்சித்தல் வேண்டும். – அதிலும் இப்படியான பாடல்களை தமது குழந்தைகளுக்குப் மனனம் செய்யப் பண்ணி அதனைப் பெருமையாக கலை நிகழ்ச்சிகளிலும் வானொலிகளிலும் பாட வைப்பதும். இப்படியான பாடல்களுக்குச் சிறுமியர் நடனம் ஆடுவதும். (ஒரு வேளை மொழி தெரிந்திருப்பின் கனேடிய சட்டம் இவர்களுக்குத் தண்டனை கொடுத்திருக்கும்) தடை செய்யப்படல் வேண்டும். எவ்வளவு தான் நாட்டுப் பிரச்சனையை எமது குழந்தைகளுக்கு ஊட்டினாலும் அவர்கள் வாழும் தளம் இங்குதான். பெற்றோர்கள் துவக்குத் தூக்கக் கற்றுக்கொள் எனின் அவர்கள் தூக்கப் போவது இங்குதான் ஊரில் அல்ல </span>

நன்றி கறுப்பி........

தங்கள் கருத்து......
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#2
ஆகா...ஆடு நனையுது என்று ஓநாய் ஒன்று ஓஓஓஓஓஓ என்று
அழுதிச்சாம்..! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
இவரும் ஈழத்தவர்....
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#4
யெக்கோ..... கறுப்பீ யெக்கோ..... மன்மதனுக்கும் ஈழத்துக்கும் என்ன சம்மந்தம் யெக்கோ.... வசி அண்ணன் சொல்வதை போல ஆடு நனையுதே என்று ஓனாய் அழுகிதாம். உங்கட பாசயில சொல்லப்போனால் புலம்பெயர்நாடுகளில் அமெரிக்க கொலிவூட் திரைப்படங்கள் கூட தடைசெய்யப்படவேணும் என சொல்லுறீங்க. தமிழனின் விடுதலைக்கான பாடல்களை என்றும் வரவேற்போம். புலிகளின் கீதங்களை வேதமாக ஓதுவோம். மன்மதனை விமர்சிக்கும் சாக்கில் சந்தில சிந்து பாடிய சந்திரிக்காவின் சகலியே கற்ப்பி. திரைப்படங்க்ளை ஒழுங்காக நாகரீகத்துடன் விமர்சிக்கவும்.

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#5
இவரது வலைப்பக்கங்களை பார்த்திருக்கிறேன் இவரும் ஒரு மிகபெரிய சனநாயகவாதி (சோ ராம் மாலன் மற்றும் சோபாசக்தி)இவர்களைபோல :twisted: :twisted:
; ;
Reply
#6
நாம் இந்த கட்டுரையை அட நல்லா எழுதியிருக்கிறாரே சினிமா குறித்து என்று படித்து கொண்டு வந்தேன். கடையில் உள்ள கருத்துக்களை படித்தபோதுதான் இவர் எங்கு ஆரம்பித்து எங்கு வருகின்றார் என்று புரிந்தது,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#7
<!--QuoteBegin-Mathan+-->QUOTE(Mathan)<!--QuoteEBegin-->நாம் இந்த கட்டுரையை அட நல்லா எழுதியிருக்கிறாரே சினிமா குறித்து என்று படித்து கொண்டு வந்தேன். கடையில் உள்ள கருத்துக்களை படித்தபோதுதான் இவர் எங்கு ஆரம்பித்து எங்கு வருகின்றார் என்று புரிந்தது,<!--QuoteEnd--><!--QuoteEEnd-->இப்படித்தான் இவர் எழுதிய சோபாசக்தியின் ம்.........புத்தக விமரிசனத்தையும் விசயம் தெரியாமல் நீங்கள் களத்தில் போட்டிருந்தீர்கள் மதன் Confusedhock:
; ;
Reply
#8
ம் அது எனது தவறுதான் புரிந்து கொண்டேன், மன்னிக்கவும்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#9
மன்னிப்பு எல்லாம் தோவையில்லை மதன் இவர்போன்றேரை இனிமேல் இனங்காணுங்கள் அதுவே போதும்.இவர்மற்றும் இலங்கையில் ராதிகா குமாரசாமி மகேஸ்வரி வேலாயுதம்போன்றசிலர்பெண்ணியம் என்றும் மனிதவுரிமை என்று அடிக்கடி கூவுறவை அதுதான்
; ;
Reply
#10
<!--QuoteBegin-Mathan+-->QUOTE(Mathan)<!--QuoteEBegin-->ம் அது எனது தவறுதான் புரிந்து கொண்டேன், மன்னிக்கவும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

மதன் நல்ல ஆக்கங்களை கொண்டுவந்து தாருங்கள். அத்தோடு சில விசமிகளின் படைப்புக்களை இனம் காண்பது மிகவும் முக்கியம். அத்தோடு உங்களின் சேவையினையும் மற்றும் வானம் பாடியின் சேவைதனையும் பாராட்டுகின்றோம்.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#11
கறுப்பிக்கு தெரியுமா? கற்பூர வாசனை! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#12
<b>கறுப்பியிடம் காத்திரமா படைப்பு?</b>
கறுப்பி (சுமதிரூபன்)அவர்களின் இணைய பக்கத்தில் மன்மதராசா என்ற பதிவில் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களாகிய நாம் இப்போது வாழும் எமது எதிர்காலச் சந்ததிக்காக முக்கியமாக சிந்திக்க வேண்டியது என்னவெனின் பகைவரை அழிப்போம், துப்பாக்கி
து}க்குவோம், எதிரிகளை வெட்டுவோம், கொத்துவோம் போன்ற எமது ஈழத்துப் போராட்டப் பாடல்களை தடைசெய்ய முயற்சித்தல் வேண்டும். என்றும் பெற்றோரும் தமிழ் ஆசிரியர்களும் துவக்குத் து}க்கு என்று கூறுவது சிறுவர்களைக் குழப்பத்திற்கு ஆளாக்கும். சிறுவர்கள் பாடி ஆட அழகிய ஈழத்துப் பாடல்கள் நிறம்பவே இருக்கின்றனவே. எமது நாடு பற்றிய ஏக்கம். போராட்டத்தால் ஏற்பட்ட உளவியல் தாக்கங்கள். எமது மொழி எப்படி அழிக்கப்டுகின்றது இன்னும் நல்ல முறையில் சொல்லப்பட்ட எழுச்சிப் பாடல்கள் இருக்கின்றன, அவைகள் சரி மற்றவைகளைத் தடைசெய்ய வேண்டும் என்று எழுதி இருந்தார். ஆகவே அவர் கருத்துக் குறித்தும் அவர் போன்றோர் குறித்தும் சற்று எழுதலாம் என்று தோன்றியது

முதலில் அவருடைய பக்கத்திலேயே எழுதலாம் என்றுதான் இருந்தேன். ஆனால் ஏற்கனவே அது பின்னுட்டங்களால் அனகோண்டா அளவிற்கு நீண்டு விட்டதாலும் அங்கே வேறு ஏதோ தனிப்பட்ட பிரச்சனைகளை வம்பளந்து கொண்டு இருந்ததாலும் இங்கே பதியலாம் என்று வந்துவிட்டேன். வீரம் விடுதலை ஈழப்போராட்டம் என்ற சகலவற்றையும் தள்ளி வைத்துவிட்டு கொஞ்சம் பொதுவாக புலம்பெயர்ந்தோர் பிள்ளைகளின் வாழ்க்கை
நிலைபற்றிப் பார்ப்போம்.

இணையத்தளங்களில் நான் வலம் வருகிறபோது சிலவேளை எங்கள் வாலிபர்பளது புகைப்படங்களினைப் பார்க்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்துள்ளது. அதனைப் பார்த்து எங்களுடைய சமுதாயம் எங்கே போகிறது என்ற கவலை எனக்கு வரும். அதிலும் அதனைத் தவிர்க்க முடியாது என்றும் எனக்குத் தெரியும் (நாய் வேடம் போட்டால் குரைக்கத்தான் வேண்டும்). அதாவது வெளிநாடு வேண்டுமென்றால் வெளிக்கலாச்சாரமும் வரும். நூறு வீதமாக
எல்லோருக்கும் பொருந்தாவிட்டாலும் அதிமானோருக்கு பொருந்தும். இப்படி இருக்கிறபோது கறுப்பி (சுமதி ரூபன்) என்ன சொல்லுகிறார் (மன்மதராசா விமர்சனத்தில்) இங்கே (கனடா) டேற்றிங் போவது எல்லாம் சகஜம் என்பதால் மன்மதன் குழந்தைகளை அவ்வளவாகப் பாதிக்காது என்கிறார். உண்மைதான். மன்மதன் பாதிக்காது. பகைவரை அழிப்போம், துப்பாக்கி
து}க்குவோம், போன்ற பாடல் வன்முறையை வளர்க்கும் ஆகவே அதனைத் தடை செய்யவேண்டும். இது அவர் கருத்து. அப்படிப் பார்த்தால், மேற்குலகில் உள்ள அதிகமான பாடகர்கள் குண்டர்படையுடன் அலைபவர்கள். உதாரணத்திற்கு ஐம்பது சதம் (FIFTY CENTS)
இன்றுவரை உடலில் ஒன்பது துப்பாக்கிச் சுடுகள் வாங்கியபடி வலம் வருகிறார். இவரின் ஒரு நாள் பாதுகாப்புச் செலவு முப்பதாயிரம் டொலர். இப்படி இன்னும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இவர்கள் வர்த்தகத்திற்காக செய்கிறார்கள். அதுவும் உண்மை. இவர்களுக்கு சமூகம் மீது அக்கறை கிடையாது. சரி. பெற்றோர்தான் இவற்றினைக் கவனிக்க வேண்டும். அதுவும் சரி.

பெற்றோர், தங்கள் பிள்ளைகளைக் "குழந்தைகள்" என்று கருதுவது எத்தனை வயதுவரை? 12, 13, அவ்வளவுதான். அதற்கும் அங்காலும் அவர்களைக் "குழந்தைகள்" என்று பெற்றோர்தான் கருதுவார்கள். பிள்ளைகள் பின்னர் இரண்டு வாழ்க்கை வாழத் தொடங்குவார்கள் வீட்டுடன் ஒன்று வெளி சமூகத்துடன் ஒன்று. இப்படி வாழ்வதற்குக் காரணம் எமது சமுக நடை முறைகளுக்கும் மேற்கத்திய சமூக நடைமுறைகளுக்கும் இடையில் வேறுபாடுகளே.
இப்படி இருக்கிறபோது இவர்களுக்கு இயல்பாகவே, இயல்பாக வாழும் தன்மை இல்லாமல் போய்விடுகிறது. இந்தக்கால கட்டங்களில்த்தான் இவர்கள் தடம் மாறிப்போகிறார்கள். அதாவது மேற்குலகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்கள் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது இருப்பதால் அவர்கள் அதை மறைக்கிறார்கள். இப்படிப் மறைத்துப் பழகியவர்கள். பின்னர் ஏற்கனவே மறைத்துப் பழக்கப்பட்ட காரணத்தால், பின் தங்கள் ஆர்வம் சார்ந்த சகல
விடயங்களுக்கும் சாதாரணமாக எங்களை ஏமாற்றுகிறார்கள். ஆர்வம் சார்ந்த விடயம் என்று சொன்னேன் அல்லவா! அங்கேதான் சிக்கல் இருக்கிறது. எங்கள் நடை உடை பாவனைகளை விட மேற்கத்திய வாசனைகளே அவர்களுக்குப் பிடிக்கிறது. அதனால்த்தான் எங்கள் பிள்ளைகள் மேற்கத்திய பாடகர்களை பின்பற்றி அவர்கள் பின்பற்றுவதையும்
பின்பற்றுவார்கள் (பலருடைய அறைகளுக்குள் EMINEM விரலை நீட்டியபடி இருக்கும் படங்களினைப் பார்த்து இருக்கிறேன்).

இப்படி சிக்கல்கள் நிறைந்துபோய் இருக்கிற எம் புலம்பெயர் சமூகத்தில் துவக்குத் து}க்கு என்று சொல்கிற பாடலைக் கேட்டுத்தான் பிஞ்சுகள் கெட்டுப்போகப் போகிறார்களாம்.

ஐயோ... உங்களுடன் ஒரே நகைச்சுவையாக இருக்கிறது போங்கள்.

நான் என்ன சொல்லுகிறேன்!
இப்படிப் பாடலைக் கேட்டால் தான் நாங்கள் யாரென்கின்ற உணர்வு எங்களுக்கு வரும். இது சின்ன வயதில் இருந்து வந்தால் தான் பின்னர் தாமே முடிவெடுக்கும் பருவம் வந்ததும் தாமே தம் இனம், நாடு குறித்து ஒரு தீர்க்கமான முடிவு வரும். ஐந்தில் அறிவித்தால்
தான் ஐம்பதுவரை நிற்கும். நல்ல முறையில் சொல்லப்பட்ட எழுச்சிப் பாடல்கள் இருக்கின்றன என்று கறுப்பி (சுமதிரூபன்) சொல்கிறார். எழுச்சி என்றாலே அடிமைத் தனத்திலிருந்து விடுதலை பெறும் உணர்வு தருவதுதானே! 'அழகான அந்தப்பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்" என்ற பாடல் எழுச்சிப்பாடல் அல்ல. அது சாதாரண பாடல்!

எடுகையில் வெடிகுண்டைப் புலியே நீ வாடா
அட இன்னும் சிங்களவன் கையில் உன் நாடா
உன் பாட்டன் உன் பூட்டன் ஆண்ட மண்ணன்றோ
இன்னொருவன் இதை ஆள நீ பணிதல் நன்றோ
என்னடா உனைப் பகைவன் நினைத்தானோ புழுவாய்
மண்ணதிர திசை எட்டும் விண்ணதிர எழுவாய்

இதுதான் எழுச்சிப்பாடல். இப்படிப்பாடல்கள்தான் பிள்ளைகளைக் கெடுக்கின்றன என்பது கறுப்பியின் (சுமதிரூபன்) வாதம். மிகவும் சிறிய குழந்தைகளுக்கு இவைகள் விளங்காது. ஒரளவு வளர்ந்த பிள்ளைகளுக்கு கொஞ்சம் அதிகம்தான் என்று வைத்துக்கொள்வோம். அப்படி என்றால் இந்தப்பாடல்களை சிறுவர்களுக்கு தெரியப்படுத்தாமல் விடுவோம்.
அதென்ன தடை செய்வது? அவர் யார்? அவர் பிள்ளைக்கு அவர் அதனைத் தெரியப்படுத்தாமல் விடட்டும். அப்படியே காளி (நாக்கினை வெளியே தள்ளி ஆவேசமாக ஆயுதத்துடன் நிற்பவர்) மற்றும் எங்கள் புராணக் கதைகள் போன்றவற்றை சொல்லிக் கொடுக்காமல் இருந்தார் என்றால் நல்லம். ஏனென்றால் அந்தக் கதைகளும் வன்முறையைத் தூண்டும் விசேடமாக தீபாவளிக்கெல்லாம் விளக்கம் சொல்லக்கூடாது.

ஆனால் ஆங்கிலப்பாடல்கள் எப்படி? ஒரு பாடலைப் பார்ப்போமா! மிகவும் பிரபல்யமான ஒருவரைப் பார்ப்போம். அவர்தான் திரு EMINEM ! இவரை அறியாத வட்டுகளே இல்லை அவருடைய Soldier என்ற பாடல் கீழே..

I'm a soldier...
......
[b]பாடல் தணிக்கை செய்யப்பட்டுள்ளது- ஹரி

இதற்கு அர்த்தம் வேறு எழுதவேண்டுமா! இந்தப்பாடலை பிள்ளைகள் கேட்காது என்று எண்ணாதீர்கள் இந்த இணையப் பக்கத்திற்கு பாடசாலையில் இருந்து பிள்ளைகள் இலகுவாகச் செல்லலாம். ( பெரும்பாலான பாடல் இணையப்பக்கத்திற்குத் தடை இல்லை)

இப்படியான சூழலில் வாழ்ந்து கொண்டு இருக்கிற எங்களுக்கு கறுப்பி (சுமதிரூபன்) சொல்வது போல பிரச்சனை இருந்தால்! எந்த அளவுக்கு அது எங்களைப் பாதிக்கும். வேறு ஒரு விதமாகப் பார்ப்போமே, மேற்சொன்னது போல எவ்வளவோ சிக்கல்கள் எங்களுக்கு இருக்கும்போது எழுச்சிப்பாடலினைத் தடைசெய்வதுதான் இப்போ முக்கியமா!

எனக்குச் சிலரைத் தெரியும்!
புலிகளுக்கு எதிராக இருப்பதனால் -அல்லது
சொந்த நாடு பற்றி அக்கறைப்படாமல், வாழும் பிரதேசத்தினை மட்டும் வைத்து சிந்திப்பதனால் -அல்லது
தம்மைச் சுற்றி ஒரு பரபரப்பினை ஏற்படுத்த முற்படுவதனால் -அல்லது
இன்னும் பெரிதாக, பெரும் புள்ளிகளுக்கு சும்மா எங்காவது இருந்து சவால் விடுவதனால்

தங்களின் பக்கம் எல்லோருடைய கவனமும் திருப்பப்பட வேண்டி இப்படி எழுதுவார்கள். என்னசெய்வது எல்லாவிதமான மனிதர்களும் எங்கள் மத்தியில் இருக்கிறார்கள்.

இப்படி சொந்த இனத்தில் அக்கறை இல்லாமல் மேற்கத்திய மோகத்தினை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரிடம் இருந்து எப்படி புலத்தில் வாழும் மக்களுக்கு ஏற்புடையதான ஒரு காத்திரமான படைப்பினைப் பெறுவது?

கறுப்பி (சுமதிரூபன்) என்னைப்பார்த்து YOU2 சொல்ல முடியாது.

(இத்தனைக்கும் நான் புலியும் அல்ல! புலி ஆதரவாளன் என்று சொல்லிக் கொள்பவனும் அல்ல! நான் எங்கள் தேசியத்தில் அக்கறையுடையவன் அவ்வளவுதான்)


நன்றி
எல்லாளன்
Reply
#13
சுப்பிரமணிய சுவாமி அறிக்கை விடுவதுபோல தாங்களும் இருக்கிறோம்எங்களிற்கும் கனக்கதெரியும் எண்டு சிலபேர் ஏதாவது எழுதிகொண்டிருக்கினம் என்ன செய்ய?? :? :?
; ;
Reply
#14
shiyam Wrote:மன்னிப்பு எல்லாம் தோவையில்லை மதன் இவர்போன்றேரை இனிமேல் இனங்காணுங்கள் அதுவே போதும்.இவர்மற்றும் இலங்கையில் ராதிகா குமாரசாமி மகேஸ்வரி வேலாயுதம்போன்றசிலர்பெண்ணியம் என்றும் மனிதவுரிமை என்று அடிக்கடி கூவுறவை அதுதான்


ஷியாம் அண்ணா நீங்க சொன்ன ராதிகா குமாரசாமி மகேஸ்வரி போலத்தானா இவவும் எண்டால் கிட்டத்தட்ட வி...மகள்போலவா. எனெண்டா மேல சொன்ன இருவரும் அப்படி என்று இலங்கை சட்டக் கல்லூரியில படித்த மாமா சொன்னவர்.

இந்த சுமதி ருபன் யார் நான் இப்பதான் கேள்விப்படுறன். எங்கட தேசியத்தை விலை பேசி பிரபலம் தேடும் இவவுக்கும் அந்த இருவருக்கும் வித்தியாசமே கிடையாது :evil: :evil: :evil:
. .
.
Reply


Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)