Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இமெயில் மூலம் மோசடி செக்ஸ் வலை
#1
மார்ச் 03, 2005

இமெயில் மூலம் மோசடி செக்ஸ் வலை: பாடகர் மனோவின் மகன் கைது

சென்னை:

பெண்களின் பெயரில் இமெயில் அனுப்பி, ஆண்களை செக்சுக்கு வரவழைத்து, அவர்களிடம் பணம் பறித்து வந்த பிரபல பின்னணிப் பாடகர் மனோவின் மகனும் அவரது 5 நண்பர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சென்னையைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் லோகேஷ் என்பவருக்கு ஒரு பெண்ணின் பெயரில் இமெயில் வந்தது. குறிப்பிட்ட ஒரு நட்சத்திர ஹோட்டலைச் சொல்லி அங்கு வருமாறு அவரை அழைத்துள்ளனர்.

இதையடுத்து அந்த மெயில் ஐடிக்கு தனது செல்போன் எண்ணைத் தந்துள்ளார் லோகேஷ்.

இதைத் தொடர்ந்து செல்போனில் பேசிய ஆண், லோகேஷை நட்சத்திர ஹோட்டல் வாசலுக்கு வந்துவிடும்படி கூறியுள்ளார்.

புரோக்கர் வைத்து இன்டர்நெட்செல்போன் மூலம் செக்சுக்கு அழைக்கும் பெண் என்ற நம்பிக்கையில், ஜொள்ளு விட்டபடி லோகேஷûம் கிளம்பிச் சென்றார்.

ஹோட்டல் வாசலில் 5 வாலிபர்கள் இருந்தனர். வளசரவாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் அந்தப் பெண் இருக்கிறாள் என்று சொல்லி மாருதி காரில் அழைத்துச் சென்றுள்ளனர்.

வழியில் லோகேஷின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய அவர்கள் அவர் வைத்திருந்த பணம் (பெண்ணை அனுபவிக்க எடுத்து வந்தது) நகைகள், வாட்ச் என அனைத்தையும் பறித்துக் கொண்டு இறக்கிவிட்டுச் சென்றனர்.

இதுகுறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் லோகேஷ்.

இதையடுத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். செல்போனில் லோகேசுடன் அந்தக் கும்பல் பேசியிருந்ததால், அதை வைத்து அக் கும்பல் அடையாளம் காணப்பட்டது.

போலீஸ் வேட்டையில் பாண்டிச்சேரி வில்லியனூரைச் சேர்ந்த ஹரி என்பவர் முதலில் பிடிபட்டார். இவரும் ஒரு சாப்ட்வேர் என்ஜினியர் தான். இவர் கொடுத்த தகவலின் பேரில் பாடகர் மனோவின் மகன் ஷகீர், சாவன் சுதாகர், ராமாபுரம் மனோகர், வண்டலூர் விஜய் பிரேம் ஆகியோர் பிடிபட்டனர்.

இவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, பெண்களின் பெயரில் இமெயில்களை அனுப்பியும், சேட்டிங் செய்தும் ஆண்களுக்கு இந்த ஐந்து பேரும் வலை விரித்துள்ளனர்.

ஆசையுடன் வருகிறவர்களை அடித்தும், மிரட்டியும், பணத்தைப் பறித்துக் கொண்டு அனுப்பி விடுவது இவர்களது வாடிக்கை.

25 ஆண்கள் இவர்களிடம் இதுவரை ஏமாந்துள்ளனர். இதேபோல பெண்களுக்கும், ஆண்கள் பெயரில் இமெயில் அனுப்பியும், தொலைபேசி எண்ணைத் தெரிந்து கொண்டு போன் செய்தும் பேசி மிரட்டியும் பணம் பறித்துள்ளனர்.

குறிப்பாக ஹைடெக் கால்கேர்ள்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வலை வீசியே இந்தக் கும்பல் பணம் பறித்துள்ளது. கூடவே செக்ஸ்ரீதியில் அவர்களை துன்புறுத்தியும் உள்ளனர்.

சமீபத்தில் பெங்களூரைச் சேர்ந்த இரு திபெத் பெண்களை சென்னைக்கு செக்ஸ் கம்பெனி தர என்று சொல்லி வர வைத்து உடல்ரீதியில் அவர்களை டார்ச்சர் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

இதுவரை ரூ. 10 லட்சம் வரை இந்தக் கும்பல் பணம் பறித்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இவர்களிடமிருந்து கார், மோட்டார் சைக்கிள்கள், 17 செல்போன்கள், 18 பவுன் நகைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கார்களில் சுற்றி காதல் வலை வீசியும் சில நல்ல குடும்பத்துப் பெண்கள், கல்லூரி மாணவிளையும் வளைத்து அவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து உடலுறவு கொண்டு, அதை படம் எடுத்து வைத்துக் கொண்டும் மிரட்டியும் இக் கும்பல் பணம் பறித்து வந்துள்ளது.

பிடிபட்டவர்களில் ஒருவன் பாடகர் மனோவின் மகன் என்பதால் போலீசாருக்கே அதிர்ச்சி ஏற்பட்டது. அதே போல இன்னொருவன் மிஸ் சௌத் இண்டியாவாகத் தேர்வான ஒரு பெண்ணின் சகோதரன் ஆவான்.

எல்லோருமே வசதியான வீட்டுப் பிள்ளைகள் தான்.

Thatstamil
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
திரைபட பாணியில் குற்றம் புரிபவர்களை தண்டித்தார்களாக்கும்........
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#3
இது தான் அப்பன் பெயரை பிள்ளை காப்பத்தும் தற்கால வளமை.. இகற்கு தாயகத்தில் பெருசுகளை கேட்டால் ஒரு பழமொழி சொல்லுவினம்... யாழ் இணையத்தில் இருக்கும் யாராவது பெருசுகளுக்கு தெரிந்தால் எங்களைக்போல சிறுசுகளுக்கு சொல்லித்தாங்கோ...
Reply
#4
அப்பனுக்கு தப்பி பிறந்திருக்குதுகள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
; ;
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)