04-12-2005, 12:54 PM
தெஹெல்காவில் விடுதலைப் புலிகள் பற்றி
இந்த வார - 16 ஏப்ரல் 2005 தேதியிட்ட - தெஹெல்காவில் நிருபர் வி.கே.சஷிகுமார் புலிகள் பகுதியில் மூன்று வாரம் தங்கியிருந்து ஒரு நான்கு பக்க ரிப்போர்ட் எழுதியிருக்கிறார். அத்துடன் S.P.தமிழ்ச்செல்வன், தமிழ்க் கவி ஆகியோருடன் பேட்டிகள். தமிழ்க் கவி என்ற பெண் வே.பிரபாகரனின் speech writer என்று குறிப்பிடுகிறார்.
இந்த ரிப்போர்ட்டில் புது விஷயம் எதுவும் இல்லை. ஆனால் இந்திய மக்களுக்கு இது புது விஷயம். புலிகள் சார்புநிலை உள்ள ஒரு ரிப்போர்ட் இந்திய mainstream பத்திரிகையில் வருவது இதுவே முதல் தடவை.
சார்புநிலை என்று சொல்வதைக் காட்டிலும் புலிகள் பகுதியில் உள்ள இயல்புநிலையைக் காண்பித்துள்ளது என்பதுதான் சரியானதாக இருக்கும். 'தி ஹிந்து' மட்டும்தான் அவ்வப்போதாவது இலங்கை விவகாரத்தைப் பற்றி எழுதி வருகிறது. ஆனால் அது முழுவதுமாக புலி எதிர்ப்பு நிலையாகவும், இட்டுக்கட்டிய செய்திகளாகவுமே இருந்து வருகிறது.
ஆனால் சஷிகுமாரின் செய்தி விளக்கமாகச் சொல்வது இதுதான்:
<b>* புலிகள் ஏற்கெனவே ஒரு தேசியத்தை அடைந்து விட்டார்கள் - a state within a state, a nation of their own.
* புலிகளின் தேசத்தை சுனாமிக்குப் பிறகு சர்வதேச அரசுகளும் ஓரளவுக்கு அங்கீகரித்துவிட்டன. இல்லாவிட்டால் புலிகளைச் சேர்க்காமல் நிவாரணப் பணி என்றால் காசு கொடுக்க மாட்டோம் என்று பல நாடுகள் அறிவித்துள்ளன. இது புலிகளுக்கு, முக்கியமாக பிரபாகரனுக்கு, புத்துணர்ச்சியைக் கொடுத்துள்ளது.
* சுனாமி அழிவு ஏற்பட்ட 20 நிமிடங்களுக்குள்ளாக ஈழப்பகுதியின் சிவில் அரசமைப்பு புணர்வாழ்வுக்கான வேலைகளில் ஈடுபட்டது. இதிலிருந்து புலிகள் வெறும் பயங்கரவாத அமைப்பல்ல, மக்கள் நலனை முன்வைக்கும் முழுமையான அரசமைப்பு என்று புலனாகிறது (என்று தமிழ்ச்செல்வன் சொல்கிறார், அதை சஷிகுமார் ஆமோதிக்கிறார்.)
* ஈழத்தில் நடைபெறும் நீதிமன்றம். 1993-ல் புலிகளால் ஆரம்பிக்கப்பட்ட நீதிமன்றம் இப்பொழுது முழுதானதோர் அமைப்பாக விளங்குகிறது. சிவில், கிரிமினல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் இந்திய நீதிமன்ற முறைப்படி நடக்கின்றன. கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இரு இடங்களில் உயர் நீதிமன்றங்கள் உள்ளன.
* முழுமையான உள்நாட்டுக் காவல்துறை.
* குடியேறல் துறை. ஈழப்பகுதிக்குச் செல்பவர்கள் பாஸ்போர்ட் தனியாக பரிசோதிக்கப்படுகிறது. ஈழத்திலிருந்து இலங்கை அரசுப் பகுதிகளுக்குச் செல்வதும், வருவதும் கண்காணிக்கப்படுகிறது.
* ஆனாலும் பல அத்தியாவசியப் பொருள்களுக்காக கொழும்பு அரசைத்தான் ஈழ மக்கள் நம்பியிருக்க வேண்டியுள்ளது.</b>
புலிகள் இந்தியா உறவு பற்றி சிறு பத்தி வருகிறது. அதிலிருந்து நேரடி மேற்கோள்:
<i>The LTTE claims that it has witnessed a phenomenal rise in grassroots support for its cause in Tamil Nadu through the growth of caste parties.
The party leaders in Tamil Nadu, who the LTTE claims to be in contact are -- Tamil Nationalist Movement president P.Nedumaran; MDMK general secretary Vaiko; PMK leader S.Ramadoss, who has the support of the Vanniyars who form a sizeable chunk of the middle class in the state and dalit leader R.Thirumavalavan.
But the LTTE is extremely careful of the way it positions the growing political support as it does not want India to feel threatened by Tamil expansionism.</i>
லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் வழியாக புலிகள் இந்திய அரசாங்கத்திடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர் என்றும் இந்தப் பத்தி சொல்கிறது.
இந்த நீண்ட கட்டுரையை முடிக்கும் முன் ஆசிரியர் சொல்வது இதுதான்:
இங்குள்ள புலிகள் தலைமையிடம் பேசும்போது, அமைதிப் பேச்சுவார்த்தை முடிவுக்காகக் காத்திருக்காமல், புலிகள் தாமாகவே சுதந்தரத்தை பிரகடனம் செய்துவிடுவார்கள் என்று தோன்றுகிறது. இதைத் தொடர்ந்து இலங்கை அரசு எந்த முடிவையும் எடுக்காவிட்டால், அவர்களே ஈழத்தை அங்கீகரித்தது போலாகும். ஆனால் இந்த முடிவை எதிர்த்து புலிகள் மீது போர் தொடுத்தால், அது பிரபாகரனுக்கு வசதியாகப் போகும். பிரபாகரன் இலங்கை அரசுதான் அமைதிக்கு எதிராகப் போரை ஆரம்பித்தது என்று அவர்கள் மீது கையைக் காண்பித்து விடலாம். மேலும் ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஆகியவை அமைதியை ஆதரித்து அமைதி இருந்தால்தான் இலங்கை அரசுக்கு நிதியுதவி செய்வோம் என்ற கொள்கையில் இருக்கும்போது, புலிகள் மீது படையெடுப்பது இலங்கை அரசுக்கு முடியாத செயலாக இருக்கும்.
ஆக சந்திரிகா எந்த முடிவை எடுத்தாலும் அது புலிகளுக்கு வசதியாகவே இருக்கும். இலங்கையில் ஓர் அரசியல் சூறாவளி நிகழவிருக்கிறது. ஆனால் புலிகளுக்கு இதனால் எந்தப் பிரச்னையும் இல்லை.
http://www.tehelka.com/story_main11.asp?fi...iger_rising.asp
நன்றி
http://thoughtsintamil.blogspot.com/2005/0...og-post_12.html

<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->