Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மைதானத்தை அரசியல் இலாபத்துக்காக சுவீகரிப்பதா?
#1
பொதுமக்கள் பயன்படுத்தும் மைதானத்தை அரசியல் இலாபத்துக்காக சுவீகரிப்பதா?

மட்டக்குளியில் ஜே.வி.பி.க்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து ஆர்ப்பாட்டம்

கொழும்பு வடக்கு பிரதேச மக்களால் கடந்த 50 வருட காலத்திற்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வரும் முகத்துவாரம் விஸ்வைர்க் பொது விளையாட்டு மைதானத்தை ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தனது சொந்த அரசியல் நலனுக்கு சுவீகரித்துக் கொள்வதாக ஆட்சேபனை தெரிவித்து நேற்று வெள்ளிக்கிழமை பெரும் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் விஸ்வைர்க் பொது விளையாட்டு மைதானத்துக்கு முன்பாக குழுமிய வட கொழும்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் மேல்மாகாண மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்இ கொழும்பு மாநகர சபையின் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் லாகீர்இ நிஸ்தார்இ ஐ.தே.கட்சி உறுப்பினர் ஸ்ரான்லி கிறிஸ்தோபர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சிங்களஇ தமிழ் முஸ்லிம் மக்கள் அனைவரும் ஜே.வி.பி.க்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

அத்துடன் ஹதமிழ் சிங்கள முஸ்லிம் மக்களை மோதவிட்டு அரசியல் இலாபம் தேடாதே' ஹபாதிக்கப்பட்ட மக்களை மோதவிட்டு அரசியல் வளர்க்காதே' ஹவேண்டாம் வேண்டாம் ஜே.வி.பி.யின் அரசியல் வேண்டாம்' போன்ற கோஷங்களையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக விஸ்வைர்க் பொது விளையாட்டு மைதானத்தைச் சுற்றி பெருமளவு பொலிஸாரும் படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

கடல்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீடமைப்பு திட்டங்களை அமைத்துக் கொடுப்பதை நாம் வரவேற்கின்றோம். ஆனால்இ சுமார் 50 வருடங்களுக்கும் மேலாக இப் பகுதி மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் பொது விளையாட்டு மைதானத்தை ஜே.வி.பி. தனது அரசியல் இருப்புக்கு பயன்படுத்துவதையே நாம் எதிர்க்கின்றோம் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

இந்த விளையாட்டு மைதானத்தில் கடல்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென ஜே.வி.பி.யின் ஏற்பாட்டில் அமைக்கப்படவுள்ள வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல்லை கொழும்பு மாநகர பிதா பிரசன்ன குணவர்த்தன நேற்று முன்தினம் வியாழக்கிழமை நாட்டி வைத்ததையடுத்து இப் பகுதியில் முறுகல் நிலை தோன்றியுள்ளமையால் பொலிஸ்இ இராணுவ பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்த மனோ கணேசன் உரையாற்றுகையில் கூறியதாவது;

கடல்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடமைப்புத் திட்டங்களை அமைத்துக் கொடுப்பதை நாம் முழுமையாக வரவேற்கின்றோம். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் தான் பிழையானது.

வட கொழும்பைச் சேர்ந்த சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் அனைவரும் கடந்த 50 வருட காலத்திற்கும் மேலாக பயன்படுத்தி வரும் இந்த பொது விளையாட்டு மைதானத்தை ஜே.வி.பி. தனது சுயநல அரசியலுக்காகவே பயன்படுத்துகின்றது. இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

ஜே.வி.பி.யின் சுயநல அரசியலுக்கு கொழும்பு மாநகர மேயர் பிரசன்ன குணவர்த்தனவும் துணை போவது மிகவும் வெட்கப் பட வேண்டியதோர் விடயமாகும்.

இது தொடர்பாக ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முறையிட்டுள்ளேன். உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்.

பிரதி மேயர் ஆசாத் சாலிஇ ரவி கருணாநாயக்க எம்.பி. ஆகியோரும் இதனை ஒரு அரசியல் இலாபம் தேடும் நடவடிக்கையென்றே குற்றஞ் சாட்டியுள்ளனர்.


துறைமுக அதிகார சபை நகர அபிவிருத்தி அதிகார சபைஇ வீடமைப்பு அதிகார சபை போன்றவற்றுக்கான அரச நிலங்கள் பல வட கொழும்பில் உள்ள நிலையில் விஸ்வைர்க் மைதானம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஜே.வி.பி.யின் இலாபம் தேடும் ஒரு அரசியல் நடவடிக்கையாகும்.

இன்னும் இரண்டொரு தினங்களில் இதற்கு மாற்றுத் தீர்வு காணப்படாவிட்டால் வட கொழும்பு மக்கள் அனைவரையும் திரட்டி தொடர் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டி வரும்.

சுட்டபழம்
நன்றி தினக்குரல்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)