Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜெயானந்தமூர்த்தி எம்.பி.க்கு கொலை அச்சுறுத்தல்.
#1
ஜெயானந்தமூர்த்தி எம்.பி.க்கு கொலை அச்சுறுத்தல்.

வன்னிப் புலிகளுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு தேவையற்ற விடயங்களை பேசி வருவதை நிறுத்திக்கொள்ளாவிட்டால் உமக்கான மரண தண்டனை விரைவில் நிறைவேற்றப்படும் என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்த மூர்த்திக்கு கருணா குழுவென்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட ஒருவரினால் தொலைபேசி மூலம் நேற்று நண்பகல் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி மேலும் தெரியவருவதாவது:

வன்னிப் புலிகளுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டும் அவர்கள் தொடர்பாக பொது மக்கள் மத்தியில் பிரசாரங்கள் செய்வதையும் அவர்களுக்கு ஆதரவான கூட்டங்களில் உரையாற்றுவதையும் நாம் அவதானித்து வருகிறோம். அது மாத்திரமல்லாமல் சில பிரதேச செயலகப் பிரிவுகளில் இடம்பெறும் நிவாரண மோசடிகளையும் நீர் அம்பலப்படுத்தி வருகிறீர். இது தங்களுக்குத் தேவையற்ற விடயம். அண்மையில் வாழைச்சேனைப் பிரதேச செயலகப் பிரிவில் இடம்பெற்ற மோசடிகளை நீர் அம்பலப்படுத்தியுள்ளீர். இதுபற்றி எமக்கு சம்பந்தப்பட்ட கிராம சேவை உத்தியோகத்தர்களும் பிரதேச செயலகத்தின் ஒருசில உத்தியோகத்தர்களும் மற்றும் கிராமங்களில் உள்ள ஒருசில பிரமுகர்களும் முறைப்பாடு செய்துள்ளார்கள். அவர்களின் நடவடிக்கைகளில் நீர் தலையிடுவதை நிறுத்திக்கொள்ளவும் என்று அந்த தொலைபேசி மிரட்டலில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள சில கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலகத்திலுள்ள ஒருசில உத்தியோகத்தர்களும் சுனாமி நிவாரண முத்திரைகளிலும், மரணக் கொடுப்பனவுகளிலும் பெரும் மோசடி செய்திருந்தனர்.

இதை பிரதேச செயலாளர் அறிந்திருந்தும் ஊழல்களுக்கு ஆதரவாக இருந்துள்ளனர். இதுதொடர்பாக நூற்றுக்கணக்கான கிராம மக்கள் கடந்த புதன்கிழமை வாழைச்சேனை பிரதேச செயலகத்துக்கு முன்பாக பிரதேச செயலாளரை இடம் மாற்றுவதுடன் சம்பந்தப்பட்ட கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்த மூர்த்திக்கு அவர்கள் அறிவித்ததையடுத்து அவர் அரசாங்க அதிபர் வே.சண்முகத்தையும் அழைத்து ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இதையடுத்தே சம்பந்தப்பட்ட கிராம சேவை உத்தியோகத்தர்களும், பிரதேச செயலகத்தின் ஒருசில உத்தியோகத்தர்களும் கருணா குழுவுக்கு முறைப்பாடு செய்திருக்கலாம் என்று சந்தேகம் எழுப்பப்படுகிறது.

மேற்படி ஊழல்கள் தொடர்பான சகல விடயங்களும் எழுத்து மூலம் அரசாங்க அதிபர் வே.சண்முகத்திடம் நேற்று பொது மக்களினால் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



வீரகேசரி
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)