04-09-2005, 06:25 AM
'அய்யர்ஸ் தி கிரேட்' தமிழில் புதிய முயற்சி!
<img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/ayyer1.jpg' border='0' alt='user posted image'>
தமிழில் தயாராகும் முதலாவது முழு அனிமேஷன் படமான 'அய்யர்ஸ் தி கிரேட்' முடிவுறும் தருவாயில் உள்ளது.
சென்னையைச் சேர்ந்த மாயாபிம்பம் மீடியா என்ற நிறுவனம் இந்த தமிழ் அனிமேஷன் படத்தைத் தயாரித்து வருகிறது.
3 டி படமாக இப் படத்தைத் தயாரித்து வருகிறார்கள். இந்த நிறுவனத்தினரே உருவாக்கியுள்ள மாயா என்ற சாப்ட்வேரைக் கொண்டு இந்த அனிமேஷன் படத்தைத் தயாரித்து வருகிறாகள்.
<img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/ayyer2.jpg' border='0' alt='user posted image'>
சாப்ட்வேர் நிறுவனம் மாதிரி தான் இருக்கிறது இந்த சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகமும். ந் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வெங்கி பாபு கூறுகையில்,
முழு நீள தமிழ் அனிமேஷன் படத்தை யாரும் இதுவரை உருவாக்கியதில்லை. எங்களது படைப்புதான் முதலாவதாகும். நிறைய கவனம் எடுத்து இப்படத்தை உருவாக்கி வருகிறோம். இதில் நாங்கள் வெற்றி அடைவோம்.
வேறு ஏதோ மொழியில் எடுப்பதை விட நமது மொழியில், நமது மக்களுக்காக, உலக அளவில் பேசப்படக் கூடிய வகையில் அனிமேஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதே எங்களது நோக்கம். எனவே ஆங்கிலத்தில் அனிமேஷன் படங்கள் எடுக்கும் திட்டம் இல்லை.
'அய்யர்ஸ் தி கிரேட்' முடிவுறும் தருவாயில் உள்ளது. இதைத் தொடர்ந்து அர்ஜூன் என்ற இன்னொரு அனிமேஷன் படத்தை தமிழில் உருவாக்கவுள்ளோம். அர்ஜூன் என்ற சிறுவனைப் பற்றிய கதை இது.
<img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/ayyer3.jpg' border='0' alt='user posted image'>
இதற்கு அடுத்து, கல்கியின் இலக்கியப் படைப்பான பொன்னியன் செல்வன் கதையை அனிமேஷனில் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம் என்கிறார் வெங்கி பாபு.
வெங்கி அனிமேஷன் துறையில் 12 ஆண்டு அனுபவம் கொண்டவர். அந்த அனுபவத்தை வைத்து அய்யர்ஸ் தி கிரேட் அனிமேஷன் படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தைத் தயாரிக்கும் குழுவில் 10 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த நிறுவனத்தினரே உருவாக்கிய 'மாயா' என்ற சாப்ட்வேரைப் பயன்படுத்தி இந்த அனிமேஷன் படத்தை உருவாக்கியுள்ளனராம். இக் குழுவுக்கு ஸ்ரீதேவி ராவ் தலைமை வகிக்கிறார். இவர்தான் மாயாபிம்பம் நிறுவனத்தின் இயக்குனரும் கூட.
<img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/ayyer4.jpg' border='0' alt='user posted image'>
சரி, அய்யர்ஸ் தி கிரேட் படத்தின் கதைதான் என்ன? 4 பிராமண சகோதரர்கள் பொக்கிஷத்தைத் தேடி பயணம் கிளம்புகிறார்கள். அப்போது அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை கதை விளக்குகிறது.
இந்த பொக்கிஷ வேட்டைக்கு இடையே, நகர மக்களுக்கும், கிராம மக்களுக்கும் இடையே ஒரு சுவாரஸ்யமான போட்டியும் நடக்கிறது. அதாவது கிராம மக்களால் காரை ஓட்ட முடியுமா என்று நகரத்தினர் சவால் விடுகிறார்கள். அதை கிராம மக்கள் சாதித்துக் காட்டுகிறார்கள். இப்படிப் போகிறதாம் கதை.
<img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/ayyer5.jpg' border='0' alt='user posted image'>
இந்தப் படம் சிறுவர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லா வயதினருக்கும் மிக வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்கிறார்கள்.