03-21-2006, 01:37 PM
தொலைக்காட்சிப் பேட்டியில் வைகோவின் அண்டப்புளுகுகள்!
``தி.மு.க.வினர் வாஜ்பாய் மந்திரி சபையில் இருந்துகொண்டே, கடைசி நிமிடம் வரைக்கும் அதை அனுபவித்துக்கொண்டே காங்கிரசுடன் உறவுக்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்கள்" என்று தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் வைகோ புளுகியிருக்கிறார்.
``இரண்டரை மாதகாலமாக அ.தி.மு.க.வுடன் பேச்சு வார்த்தை நடத்தி வந்தோம்-இது திடீர் முடிவு அல்ல" என்று முன்பு ஒரு பேட்டியில் அவர் கூறியிருந்தார். இப்போது கல்கிக்கு அளித்துள்ள பேட்டியில் ``இரண்டரை மாத காலமாக அ.தி.மு.க.வுடன் பேச்சு வார்த்தை நடத்தியதாக நான் கூறவில்லை. இரண்டரை மாத காலமாகவே எனது கட்சித் தொண்டர்கள்-அ.தி.மு.க.வுடன் கூட்டு சேர்வது பற்றி என்னிடம் கூறி வந்தார்கள் என்றுதான் கூறினேன்"- என்கிறார்.
போயஸ் தோட்டத்தில் சரணடைந்த விநாடி முதலே இப்படி வைகோ பல்வேறு பல்டிகளை அடித்து பொய் சொல்வதில் ஜெயலலிதாவுடன் போட்டியிடுவதில் தீவிரம் காட்டி வருகிறார். அ.தி.மு.க. 100 இடங்கள் தந்தாலும் என் மகன் அதனுடன் கூட்டு வைத்துக் கொள்ளமாட்டான்-என்று வைகோவின் தாயார் ஜூனியர் விகடனுக்குப் பேட்டி அளித்தார். அம்மா அப்படிச் சொல்லவில்லை-உனக்கு எது தோது என்று படுகிறதோ அப்படியே செய் என்றுதான் கூறினார். அந்தப் பத்திரிகை அதனை திரித்து வெளியிட்டுவிட்டது என்றார் வைகோ.
ஜூனியர் விகடன்-வைகோ தாயாரின் பேட்டியை மறு பிரசுரம் செய்தது; அத்தோடு நில்லாமல் விகடன் இணையதளத்தில்-தாயாரின் குரலிலேயே ஒலிபரப்ப ஏற்பாடு செய்தது! வைகோவின் பொய்யை இதைவிட வேறு யாரால் ஆதாரபூர்வமாக-ஆணித்தரமாக மறுக்க முடியும்?
என்றாலும் என்ன? கல்கிக்கு அளித்த பேட்டியில் ``எங்க அம்மா அப்படிச் சொல்லவே இல்லை" என்றுதான் மறுபடியும் மறுத்திருக்கிறார். இதனை மறுப்பு என்பதை விட வைகோ புளுகுவதற்கு அஞ்சாதவர் என்று தானே எவராலும் கருத முடியும்?
அம்மாவின் குரலை அப்படியே விகடன் இணையதளம் ஒலிபரப்பிய பிறகும் ``அப்படிச் சொல்லவில்லை" என்கிற வைகோ-எந்த விஷயத்திற்காகவும்-எந்த அளவுக்கும் புளுகுவார் என்பதையே அவரது தொலைக்காட்சிப் பேட்டி உறுதிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.
பா.ஜ.க. அரசில் இருந்து கொண்டே-தி.மு.க. காங்கிரசுடன் பேசியது என்று இப்போது-ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்குப் பிறகு ரீல் சுற்ற முயலும் வைகோ பா.ஜ.க. அரசில் தி.மு.க. இருந்த வரையில் பதவி சுகம் அனுபவிக்க தமது கட்சியினரை அனுமதித்திருந்தார் என்பதோடு
-தி.மு.க. அமைச்சரவையிலிருந்து வெளியேறிய போது ம.தி.மு.க.வும் வெளியேற கட்டளையிட்டாரே அது ஏன்?
-காங்கிரசோடு தி.மு.க. கூட்டணி சேர்ந்தபோது ம.தி.மு.க.வையும் காங்கிரஸ் கூட்டணியில் இணைத்துக் கொண்டாரே அது; ஏன்?
-காங்கிரசோடு கூட்டுச் சேர்ந்து 4 இடங்களில் போட்டியிட்டு -நாடாளுமன்றத் தேர்தலில் நான்கு இடங்களிலும் வெற்றி பெற்று- ``என்னுடைய பிரச்சாரத்தால்தான் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது" என்று மார்தட்டிக் கொண்டாரே அது ஏன்?
அப்போதே ``தி.மு.க. காங்கிரசுடன் பேசுகிறது; நாங்கள் அதை ஆதரிக்கமாட்டோம்" என்று-இப்போது சாவகாசமாக தொலைக்காட்சிப் பேட்டியில் அவிழ்த்துவிட்டுள்ள புளுகை அப்போதே அவிழ்த்து விட்டிருக்கலாமே; ஏன் செய்யவில்லை?
வாஜ்பாய் அரசிலிருந்து வெளியேற வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு ஏன் வந்தது?
2001 தேர்தல் முடிந்து சட்டமன்றத்தின் முதல் கூட்டம் நடந்தபோதே-சட்டமன்றத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் ``அம்மா உங்களை ஆதரிக்க எங்களுக்கு மேலிடத்திலிருந்து சிக்னல் வந்து விட்டது" என்று பகிரங்கமாகவே அ.தி.மு.க.-பா.ஜ.க. உறவு பற்றி அறிவித்தார்.
அதன்பின்னர்-தொடர்ந்து தமிழகத்து பா.ஜ.க. வினரை பொறுத்தவரையில்-தி.மு.க.வை கடுமை யாக விமர்சிப்பவர்களாகவும்-அ.தி.மு.க.வின் அன்ன தானத் திட்டம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள் வதில் தீவிரம் காட்டுபவர்களாகவும் செயல்பட்டு வந்தார்கள்!
ஒரு கட்டத்தில் கலைஞர் அவர்கள் மத்தியில் மட்டுமே பா.ஜ.க.வுடன் உறவு; தமிழகத்து பா.ஜ.க.வுடன் ஒட்டுமில்லை உறவுமில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துவிடும் அளவுக்கு நிலைமை சீர்கெட்டு விட்டது.
இத்தனைக்குப் பிறகும் மத்திய பா.ஜ.க. தலைமை தமிழக பா.ஜ.க. தலைமையைக் கண்டிக்கவோ திருத்தவோ முன்வரவில்லை என்பது மட்டுமல்ல; அத்வானி போன்றவர்கள்-அ.தி.மு.க.வுக்கு மறைமுக ஆதரவு தரும் வகையில் செயல்பட ஆரம்பித்தார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் வைகோவை ஜெயலலிதா பொடா சட்டத்தில் கைது செய்தார். பொடா சட்டம் நிறைவேற்றப்பட்டபோது நாடாளு மன்றத்தில் தி.மு.க. போன்ற எதிர்க்கட்சிகளால் ``இந்த சட்டத்தை மாநில அரசுகள் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது" என்று சுட்டிக்காட்டியபோது ``அப்படி தவறாகப் பயன்படுத்தப்படாமல் மத்திய அரசு தலையிட்டுத் தடுக்கும்" என்று வாக்குறுதியாகவே-திட்டவட்டமாக பிரதமர், அத்வானி ஆகிய இருவருமே கூறினார்கள்.
ஆனால்-
வைகோவை ஜெயலலிதா பொடா சட்டத்தில்-அதிகாரத் துஷ்பிரயோகம் செய்து சிறையிலடைத்த போது,
"அது மாநில அரசு எடுத்த நடவடிக்கை; அதில் மத்திய அரசு தலையிட முடியாது" - என்று வாஜ்பாய் - அத்வானி இரண்டு பேருமே பல்டியடித் தார்கள்.
இதன் பின்னர்தான் பா.ஜ.க. உறவை முறித்துக் கொண்டு - பா.ஜ.க. அரசிலிருந்து வெளியேறி விடுவது என்ற முடிவுக்கு இறுதியாக வந்தது தி.மு.க.
வைகோவுக்கு இழைக்கப்பட்ட கொடுமை காரண மாகவே மத்திய அரசிலிருந்து விலகுவது என்ற முடிவை தி.மு.க. எடுத்தது என்பது உண்மை என்பதால்தான் - வைகோவும் பா.ஜ.க. உறவை முறித்துக் கொண்டார் - மத்திய அரசிலிருந்து வெளியேறக் கட்டளையிட்டார் ம.தி.மு.க.வினருக்கு.
அதன் பிறகு -
பா.ஜ.க.வை தோற்கடிக்க - அகில இந்திய அளவில் பலம் வாய்ந்த மாற்றுக் கட்சியாக இருக்கும் ஒரே கட்சியான காங்கிரசுடன் கூட்டணி கொள்ள முன்வந்தது தி.மு.க; அதிலே தவறு என்ன?
பா.ஜ.க. - தி.மு.க. உறவு சீர்குலைந்ததற்கு - தமிழக பா.ஜ.க.வினரின் இரண்டு வருடத்திற்கும் மேற்பட்ட சீர்குலைவுச் செயல்பாடுகளே காரணம் என் பதும் அது - வைகோ கைதுக்குப் பிறகு அறவே முறிந்து போகும் நிலைக்குத் தள்ளப்பட்டது என்பதும் எல்லோரும் அறிந்த உண்மை! அதே உண்மை காரணமாகத்தான் வைகோவும் - தி.மு.க. எடுத்த முடிவை வரிபிசகாமல் அப்படியே பின்பற்றினார்.
ஆனால் -
இன்று கடந்த இரண்டரை மாத காலமாக தனது சீட கோடிகள் மூலமாக அ.தி.மு.க.வுடன் ரகசியப் பேச்சு வார்த்தை நடத்தி - அ.தி.மு.க.வுடன்தான் கூட்டு என்று முடிவெடுத்து விட்டு - திருச்சி மாநாடன்று அந்த முடிவை அமல் நடத்திக் காட்டிய வைகோவின் நயவஞ்சக நடவடிக்கையை எல்லோரும் சந்தர்ப்ப வாதம் - "பெட்டி" அரசியல் என்று கேலி செய்த பிறகு -
தனது நயவஞ்சகத்தை மறைக்க இப்போது பா.ஜ.க. அரசில் இருந்தபடியே - தி.மு.க. காங்கிரசுடன் பேசி யது என்று இன்னொரு இமாலயப் புளுகை அவிழ்த்து விட்டிருக்கிறார் வைகோ.
தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஒன்றன் பின் ஒன்றாக - அடுக்கடுக்காய் பல பொய்களை அவிழ்த்துவிட்டிருக்கிறார் அவர்.
ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே எங் களை வெளியேற்ற வேண்டும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்து விட்டார்கள் என்று புளுகியிருக்கிறார் அவர்!
அப்படியானால் அப்போதே தி.மு.க. கூட்டணி யிலிருந்து வெளியேறி இருக்கலாமே இந்த யோக்கிய சிகாமணி!
அதன்பிறகும் ஆருயிர் அண்ணன், பாசமிகு அண்ணன் கலைஞர் என்று பசப்பிக் கொண்டிருந் தாரே; அது ஏன்?
வைகோவின் விடுதலைக்காக தொடர்ந்து பல முயற்சிகளில் ஈ.டுபட்டது தி.மு.க. ஆனால் விடுதலை ஆன வைகோ நடைப்பயணம் நடத்தி - இறுதி நாளன்று சென்னையில் நடத்திய கூட்டத்தில் கலந்து கொள்ள கலைஞரையோ - தி.மு.க.வினரையோ அழைக்கவில்லையே; ஏன்?
அப்போதே வைகோ தி.மு.க. உறவை முறித்துக் கொண்டு அ.தி.மு.க.விற்குத் தாவிட முடிவு செய்து விட்டார் - என்று அதற்கு இப்போது யாராவது வியாக் யானம் செய்தால் அதனை அவர் ஏற்றுக் கொள் வாரா?
இந்த இரண்டரை மாத காலத்தில் அவரது சீடர்கள் - அவரது ஆதரவாளர்கள் தி.மு.க.வுக்கு எதிராக எத்தனை எத்தனை பேட்டி அளித்தார்கள்; பேசினார் கள். அப்போதெல்லாம் கல்லூளிமங்கன் மாதிரி வாயை இறுக மூடிக் கொண்டு மவுனம் சாதித்து நயவஞ்சகம் காத்தவர்தானே வைகோ!
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாகவே ம.தி.மு.க.வை வெளியேற்ற தி.மு.க. முடிவு செய்து விட்டது என்று ஒரு கேள்விக்கு பதிலளித்த வைகோ - அடுத்து வந்த இன்னொரு கேள்விக்குப் பதிலளிக் கும்போது, "வெளியேற்ற வேண்டும் என்று நினைப்பதை விட கூட்டணியில் நான் நீடிப்பதை அவர்களைச் சுற்றி யுள்ள சில சக்திகள் விரும்பவில்லை."
- என்று இன்னொரு பல்டி அடித்திருக்கிறார்!
முதலில் "ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே எங் களை வெளியேற்ற முடிவு செய்து விட்டார்கள்" என்று திட்டவட்டமான அறிவிப்பு. அது கலைஞரே எடுத்த முடிவு என்பது போல ஒரு அழுத்தம் திருத்தம் அதிலே.
அடுத்து "வெளியேற்ற வேண்டும் என்று நினைப் பதைவிட - அவர்களை (கலைஞரை) சுற்றியுள்ள சில சக்திகள் நான் கூட்டணியில் நீடிப்பதை விரும்ப வில்லை என்று இன்னொரு காரணம்!
முதல் குற்றச்சாட்டு கலைஞர் மீது -
அடுத்த குற்றச்சாட்டோ - கலைஞரை சுற்றி இருப்பவர்கள் மீது!
இப்படி பல்டி மேல் பல்டியடித்துள்ள வைகோ 1972 ல் எம்.ஜி.ஆரை வெளியேற்றினார்கள். 1993 ல் என்னை வெளியேற்றினார்கள் - என்று குறிப் பிட்டிருக்கிறார். 2003 ல் தி.மு.க.வோடு மீண்டும் உறவு வைத்துக் கொண்டபோது - 2004 தேர்தலில் தி.மு.க.வுடன் கூட் டணி கொண்டபோது இந்த ஞானோதயம் வைகோவை விட்டு எங்கே போயிருந்தது? பேட்டியின் இறுதிப் பகுதியில் - இன்னொரு கண்டுபிடிப்பை வெளியிட்டிருக்கிறார் அவர்.
"ம.தி.மு.க. எம்.பிக்களின் கணக்கையும் சேர்த்து மத்தியில் தி.மு.க. மந்திரி பதவி வாங்கியிருக்கிறது" - என்பதுதான் அந்தப் புதிய கண்டுபிடிப்பு. சோனியா காந்தி அம்மையாரும், பிரதமருமே இந்தத் தகவலை இவரிடம் சொன்னார்களாம்!
அதை அப்போதே ஏன் சொல்லவில்லை என்ற கேள்வி எழுமே - என்ற குற்ற உணர்ச்சி வைகோவின் நெஞ்சில் குறுகுறுத்திருக்கிறது.
"எங்கள் எம்.பி.க்களையும் சேர்த்துத்தான் மந்திரி பதவி வாங்கினார்கள் என்ற விஷயம் பற்றி அப்போது தி.மு.க.விடம் பேசி பிரச்சினையாக்கவில்லை. ஒரு நெருடலை உண்டாக்க விரும்பவில்லை" - என்று நெளிந்திருக்கிறார் வைகோ!
இன்னும் பல புளுகுகளை அவர் தேர்தல் நேரத்தில் சொல்லி - போயஸ் தோட்டத்து எஜமானியை குளிர் விப்பார் என்பதற்கான ஆரம்ப அடையாளமே - அவரது தொலைக்காட்சிப் பேட்டி!

,
......
......