Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மாற்று கருத்தா அல்லது மட கருத்தா?
#1
மடத்தனமாய்..


எனக்கு உடன்பாடில்லாத எழுத்துக்களையும் கருத்துக்களையும் எதிர்கொள்ளும் போதெல்லாம் பெரும்பாலும் உடனடியாக ஏற்றுக் கொள்வதில்லை.

ஆயினும் அக்கருத்தின் தர்க்கவியல், அவ்வாறான ஒரு கருத்து தோன்றுவதற்கு காரணமாயிருந்த சிந்தனை இவற்றை ஆராய்வதுண்டு.

இவையே அக்கருத்துக்களின் சொந்தக் காரர்கள் மீது எனக்கு தனியான எந்த வெறுப்புணர்வும் தோன்றாமல் விடுவதற்குரிய காரணங்களாக இருக்கின்றன.

இதற்கப்பால் இன்னுமொருவகையான கருத்துக்களையும் எழுத்துக்களையும் நான் எதிர் கொள்வதுண்டு.

எழுதுகின்ற தங்களையும் சரியான மடையன்கள் என்று வெளிச்சம் போட்டுக் காட்டி அதை வாசிப்பவர்களையும் மடையர்களாக்கி எழுதுபவர்கள் மீது முழுதும் வெறுப்பே எஞ்சி நிற்கிறது.

தினக்குரல் பத்திரிகையில் வெளிவருகின்ற சிங்கள நாளேடுகளில் இருந்து என்னும் ஒரு பகுதி!

அதனை ஆரம்ப காலங்களிலிருந்தே வாசிப்பது வழமை. தமிழர் போராட்டம் அது சார்ந்த நடவடிக்கைகள் செயற்பாடுகள் தொடர்பில் சிங்கள இனவாதப் போக்கு என்ன கருதுகிறது என்பதனை அறிய அந்தப் பகுதி வழியாயிருந்தது.

சிங்கள இனவாத பத்திரிகையில் எழுதுபவர்கள் எதுவும் தெரியாத மடையர்கள் என்கிற கருத்து எனக்குள் மெல்ல மெல்ல உருவாகி இப்பொழுது முழுவதுமாக உறுதியாகி விட்டது.

அண்மைக் கால உதாரணங்கள் சிலவற்றைப் பாருங்கள்.

சுனாமியின் தாக்குதலுக்குப் பின் விடுதலைப் புலிகளின் தலைவர் பற்றிய செய்தியொன்று கிளம்பியிருந்தது.

அத் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டு விட்டார் என்பதே அது!

எல்லா இனவாத சிங்கள பத்திரிகைகளும் உள்ளிருந்து பார்த்தது போல எழுதத் தொடங்கின.

கருணாவின் தகவலின்படி புலிகளின் தலைவர் இருக்கின்ற இடம் சுனாமியின் தாக்குதலுக்கு உள்ளான இடம் தான். அவர் மீண்டிருக்க வாய்ப்பில்லை என்று அவை எழுதின.

புலிகளும் அது பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் விட அந்த இனவாதக் காகிதங்களுக்கு குஷி தாங்க முடியவில்லை. தாம் என்ன நடக்க வேணும் என்று எதிர் பார்க்கிறார்களோ அது நடந்தது போலவே எழுதிக் கிழித்தன.

அந்த மேசைப் பத்திரிகையாளர்கள் இருந்த இடத்தில் இருந்தே எங்கோ முல்லைத் தீவில் நடந்திருக்க கூடிய சம்பவத்தை பக்கத்தில் நின்று பாத்து எழுதினர்.

சில காலத்தின் பின்னர் சுனாமி மீள் கட்டுமானம் குறித்து புலிகளின் தலைவர் வெளிநாட்டு தமிழ் அறிஞர்களைச் சந்தித்தமை குறித்த செய்தியும் படங்களும் வெளிவந்த போது உண்மையில் அந்தப் பத்திரிகைகள் ஆற்றாமையினால் வெம்பியிருக்க வேண்டும்.

ஆனாலும் அவர்களுக்கு மீசையில் மண் ஒட்டவே இல்லை!

அந்தப் புகைப்படத்தில் இருப்பது பிரபாகரன் இல்லை. அவர் போலத் தோற்றமுடைய இன்னொருவர். என்று அவை செய்தி எழுதின.

இனி இல்லை என்று சொல்லக்கூடிய மடத்தனத்தில் அந்தச் செய்திக்கு அவை சொல்கின்ற காரண காரியங்கள் இருந்தன.

அதாவது

உண்மையில் பிரபாகரன் இறந்து விட்டார். கிட்டத் தட்ட அவரைப் போல இருக்கின்ற 6 பேரை பொட்டம்மான் தெரிவு செய்து பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை செய்து உரு மாற்றியிருக்கிறார். வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் முக்கிய புள்ளிகள் வரும் போது அவர்களோடு எப்படி பேசுவது என்பதை பொட்டம்மான் நெறிப்படுத்துகிறார்.

இதனாலேயே அடிக்கடி பிரபாகரன் மீசையோடும் மீசையற்றும் தோன்றுகிறார். அது தவிர இறந்து போன புலிகளின் தலைவருக்கு கையில் ஒரு பெருவிரல் இல்லை. ஆனால் தற்போதுள்ளவருக்கு அது இருக்கிறது. ஆக மொத்தத்தில் புலிகளின் தலைவர் சுனாமியில் இறந்து விட்டார்.
என அந்த பத்திரிகைகள் எழுதியிருக்கின்றன. இன்று வரைக்கும் அதையே எழுதி வருகின்றன.

உண்மையை சொல்லுங்கள். இது ஒரு மாற்றுக் கருத்து. அதனைச் சொல்ல அவர்களுக்கு உரிமை இருக்கிறது என்று நீங்களும் நினைக்கிறீர்களா?

அண்மையில் கௌசல்யன் கொலை குறித்த ஒரு கற்பனை ஆக்கத்திலும் தலைவர் இப்போது இல்லை. ஆகவே நீ எங்களோடு வந்து இணைந்து விடு என கருணா தரப்பிலிருந்து கௌசல்யனைக் கேட்டதாக எழுதியிருக்கிறார்கள்.

மாற்றுக் கருத்துக்களுக்கும் மடத்தனமான கருத்துக்களுக்கும் இடையிலான வித்தியாசத்தில் இது இரண்டாவது வகை.

---மாற்றுக் கருத்துக்களை காது கொடுத்து கேட்கின்ற அதே வேளை அந்தக் கருத்துக்களுக்கான எதிரான கருத்துக்களும் மாற்றுக் கருத்துக்களேயாதலால் அவையும் காது கொடுத்துக் கேட்கப்பட வேண்டும்.

மாற்றுக் கருத்துக்களில் இருக்கின்ற நியாயத் தன்மையை உணர்ந்து கொள்கின்ற அதே வேளை அந்த கருத்துக்களுக்கான எதிரான கருத்துக்களும் மாற்றுக் கருத்தக்களேயாதலால் அவற்றில் உள்ள நியாயத் தன்மையும் உணர்ந்து கொள்ளப் பட வேண்டும்---

நான் சொன்ன வடிகட்டின மடைத்தனமான கருத்துக்களை எழுதி தங்களையும் பேயன்களாக்கி வாசிக்கிறவர்களையும் விசரர் ஆக்க முயற்சிக்கிற பத்திரிகைகளை நினைத்தால் கோபம் வருகிறது.

அதை காசு கொடுத்து வாங்கி படிப்பவர்களை நினைத்தால் கவலை வருகிறது.

பின்குறிப்பு: நடப்பது யுத்தம்! இதிலே இவ்வாறான கருத்துக்கள் வருவது சகஜம் தானே. புலிகள் மட்டும் இப்படி எழுதியதே இல்லயா என்று யாராவது கேட்டுப் பின்னூட்டம் இடுவார்களோ தெரியவில்லை.

நன்றி - சயந்தன்/சாரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#2
இப்படி அலட்டில பத்திரைகளின் செய்திகளைப்படிக்கிறதிற்கு வேறை வேலையில்லையா..?? ஒரு படம் பாத்துப்போட்டுக்போகலாமே.. உப்புச்சப்பில்லாத கதை தான் போங்க.. :mrgreen:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
தலைவரின் ஜாதகம் பார்த்து தலைவர் 2000 ஆண்டு முடிவதற்குள் இறந்துவிடுவார் என எழுதியதும் இந்த பத்திரிக்கைகள் தான்!
Reply
#4
யெயசிக்குறு நடக்கேக்கைதலைவருக்கு கெட்டகாலம் வரவேணுமெண்டு பிக்குமார் கனபேர்சேர்ந்து கண்டியிலை ஒரு யாகம்செய்தவை ஞாபகம் இருக்கோ
; ;
Reply
#5
தமிழர்கள் தான் தமிழ் தேசியத்தில் ஒற்றுமை இல்லை.ஆனால் எவ்வளவு தான் குத்துப்பட்டாலும் பாதுகாப்பு நிதி மீதான விவாதங்களின் போது சிங்களவர்களின் ஒற்றுமையை காணலாம் :roll: :roll: :roll:
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)