Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பசறைப் பகுதி பெருந்தோட்டங்களில்
#1
ன்பசிசறை தோட்டங்களில் னமுத்து தடுப்பூசி ஏற்றும் போர்வையில் யுவதிகளுக்கு கருத்தடை மருந்தேற்றல்

பசறைப் பகுதி பெருந்தோட்டங்களில் உள்ள பருவமடைந்த யுவதிகளுக்கு ஜெர்மன் சின்னமுத்து நோய் தடுப்பூசி ஏற்றும் போர்வையில், திருமணத்தின் பின் கருத்தரிக்காமல் இருக்கும் ஊசி மருந்து ஏற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தோட்டப் பகுதிகளில் சனத்தொகையைக் கட்டுப்படுத்தும் வகையிலேயே இச் சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

தோட்டங்களில் சேவையாற்றும் சமூகநல உத்தியோகத்தர்கள், டாக்டர்கள் ஆகியோர் இணைந்து, தோட்ட முகாமைத்துவத்தின் அனுசரணையுடன் அந்தரங்கமாக இச்சதித் திட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

சின்னமுத்து நோய் தடுப்பூசியான ருபெல்லா ஏற்றப்படுவது கைக்குழந்தைகளுக்காகும். ஆனால், பருவமடைந்த யுவதிகளுக்கே இவ்வூசி ஏற்றப்படுகின்றது. பசறைப் பகுதியின் பெரும்பாலான தோட்டங்களில் இத்திட்டம் முன்னெடுக்கப்படவிருப்பதாக அறிய முடிகின்றது. இந்த ஊசி மருந்தினால் உயிருக்கு எவ்வித ஆபத்துகளும் ஏற்படாது என்று கூறப்பட்ட போதிலும், பருவப் பெண்கள் கருத்தரிக்கும் வாய்ப்பை இழந்து விடுகின்றனர் என்றும் அறிய வருகின்றது. குறிப்பாக, மலட்டுத்தன்மையை இந்த ஊசி மருந்து ஏற்படுத்திவிடுகின்றது.

பெருந்தோட்டத்துறை இளம் பெண்கள் இது விடயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்று சமூக நலன் விரும்பிகளினால் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் திருமணமாகாத இளைஞர்கள், பணத்திற்காக கருத்தடை செய்து கொள்கின்றனர். கருத்தடைக்காக ஆட்சேர்க்க கூட்டமொன்று வந்து லொரிகளில் பெண்களை ஏற்றிச் சென்று, கருத்தடைகளை செய்த பின் தலா 500 ரூபா பணமும் ஒரு வாரம் சம்பளத்துடனான விடுமுறையும் வழங்கப்பட்டு வருகின்றது.

அரசின் ஒத்துழைப்புகளுடன் ஒருசில அரச சார்பற்ற நிறுவனங்கள் பெருந்தோட்டத்துறைப் பகுதிக்கு சென்று பசப்பு வார்த்தைகளைக் கூறி இந்திய வம்சாவளி இன ஒழிப்பை மும்முரமாக நடத்தி வருகின்றன. ஒரு சில தோட்டங்களில் டாக்டர்கள் இரகசியமாக இரு வருடங்களுக்கு கருத்தரிக்காத வகையில் `லூப்' எனும் சாதனத்தை பொருத்துகின்றனர். இதற்கென ஆயிரம் ரூபா முதல் மூவாயிரம் ரூபா வரை பெற்றுவருகின்றனர். இரு வருடங்களுக்கு மேல் அந்த லூப் அகற்றப்படாமல் இருக்குமேயானால் உயிராபத்துகள் கூட ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.

ஆகவே, இது விடயத்தில் சமூகத் தலைமைகள் என்று கூறப்படுவோர் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு இன ஒழிப்பு நடவடிக்கைகளை தடுத்துநிறுத்த ஆவன செய்ய வேண்டும்.

சுட்டது தினகுரல்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply
#2
:evil: :evil:
Reply
#3
தமிழ் இனத்தையே அழிக்கும் நோக்கம் தான்.
Reply
#4
அடப்பாவிகளா..இப்படியும் செய்கிறார்களா..
[size=16][b].
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)