Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆழிப்பேரலைகள் முல்லையில் நடத்திய கோரத்தாண்டவம்
#1
ஆழிப்பேரலைகள் முல்லையில் நடத்திய கோரத்தாண்டவம் - 11
'இரண்டாவது அலை அடிப்பதற்கிடையில்
ஐம்பது பேருக்கு மேல் மீட்டுவிட்டோம்"
-அ.லோகீசன்-

ஆழிப் பேரலைகள் முல்லையில் ஏற்படுத்திய கோரத்தில் சிக்கி உயிர் தப்பிய ஒருவரைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தபொழுது அவர் எங்களுக்கு ஒரு போராளியைப் பற்றி எங்களிடம் கூறினார். கடல் அலை குமுறி அடித்து வந்துகொண்டிருந்தபொழுது அந்தப் போராளி அதில் சிக்கித் தவித்தவர்களை மீட்டுக்கொண்டிருந்தார். ஆவரைச் சந்தித்தீர்கள் என்றால் நிறையவே அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளலாம் என்றார். அதன்படி அந்தப் போராளியைச் சந்தித்தோம். அவர் எங்களுடன் பகிர்ந்தவற்றை உங்களுக்காகத் தொடர்கிறோம்.




தமிழீழ கடற்படை அரசியல் போராளி அரவிந்தன்


கடல் புவி நடுக்கத்தால் எழுந்த பேரலைகள் முல்லைத்தீவைத் தாக்கிய வேளை கடற்கரைக்கு அண்மையில் இருந்த தமிழீழ கடற்படை அரசியல் அலுவலகத்தில் இருந்து உயிர்தப்பிய அதேவேளை அலையுடன் அடிபட்டுப்போய்க்கொண்டிருந்த பலரை மீட்டு உயிர்காத்த தமிழீழ கடற்படை அரசியல் போராளி அரவிந்தன் தான் நேரில் பார்த்தவற்றையும் தனது மீட்பு அனுபவத்தையும் பகிர்ந்துகொள்கிறார்.

நானும் இன்னும் ஒரு போராளியும் எங்கள் முகாமில் இருந்து வேலைகளைச் செய்து கொண்டிருந்தோம். திடீரென்று கடற்பக்கமாக பெரும் சத்தம் ஒன்று கேட்டது. சத்தத்தைக் கேட்டதும் நாங்கள் வெளியே வந்து பார்த்தோம்.வெளியே வரும்போது ஒன்றும் தெரியவில்லை. மரங்களும் கட்டடங்களும் விழுந்துகொண்டிருந்தது.

~அப்போது கடல் வருகுது 'எங்களைக் காப்பாற்றுங்கோ காப்பாற்றுங்கோ" என்று கத்திக்கொண்டு எங்கள் முகாமுக்கு முன்னால் உள்ள வீட்டுக்காரர் ஓடிவந்தார்கள். அவர்கள் சொல்லித் தான் கடல் பெருகிய விடயம் எங்களுக்குத் தெரியும். அவர்களில் ;நான்குபேரும் காப்பாற்றங்கோ காப்பாற்றுங்கோ என்று கத்தினார்கள். என்னால் அவ்வளவு பேரையும் எப்படிக் காப்பாற்ற முடியும். ஒரு அம்மா சின்னப்பிள்ளையை தூக்கி வைத்திருந்தார். தண்ணீர் எங்களடிக்கு வர அந்த அம்மா தனது பிள்ளையயை என்னிடம் தந்து தம்பி இந்தப் பிள்ளையைப் பக்குவமாய்க் கொண்டு காப்பாற்று என்றார்.

அவர் பிள்ளையைத் தந்து காப்பாற்று தம்பி என்று சொல்லி முடிக்கவில்லை தண்ணி என்னை மேலே தூக்கி அடித்துக் கொண்டு போனது. அதோடு அவர்களை நான் பிரிந்துவிட்டேன். என்னை அலை வேகமாக இழுத்துக்கொண்டு போனது. இப்படி அலை
இழுக்கும் எண்டு நான் நினைக்கவேயில்லை. அப்படி மூர்க்கமாக அலை இழுத்தது. அந்த அம்மா என்னிடம் தந்த அவரின் பிள்ளையை அலைபறிப்பது போல இழுத்தது. நான் பிள்ளையை விடவில்லை.

என்னுடன் இறுகப்பிடித்து வைத்துக்கொண்டிருந்தேன். அலையுடன் அடிபட்டுப் போய்க் கொண்டிருந்த நான் பிறப்பு இறப்புச் செயலகத்துக்குப் பக்கத்தில் உள்ள பூவரசம் மரத்தை எட்டிப்பிடித்து ஏறி அந்தப் பிள்ளையைப் பத்திரமாக இருத்திவிட்டு கீழே பார்த்தேன். கடல் வேகமாக வந்துகொண்டிருந்தது. அதற்குள் சிலர் மூழ்கி தத்தளித்துக் கொண்டு மூழ்கி மூழ்கி வந்தனர். இப்படியான காட்சியை நான் ஒருநாளும் கண்டதேயில்லை. அவர்களை நான் எப்படியாவது காப்பாற்ற வேண்டும். காப்பாற்றாமல் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை.

உடனே கீழ் இறங்கி மரத்தைப் பிடித்துக்கொண்டு அவர்களை ஒவ்வொருவராகப்பிடித்து மரத்தில் ஏற்றிவிட்டேன் ஒரு அக்காவாக இருக்க வேண்டும். எனது கைக்கெட்டாத தூரத்தில் தத்தளித்துக்கொண்டிருந்தார். அவரின் தலைமையிரில் எட்டிப்பிடித்திழுத்து மரத்தில் ஏற்றினேன். நான் இப்படிச் செய்தேனா என்று கூட இப்போது நம்ப முடியவில்லை. நான் மரத்தில் ஏற்றியவர்கள் எல்லோரும் என்னிடம் வந்து 'காப்பாற்றுங்கள் என்று கூறியவர்கள்தான் அவர்கள்". இப்படியே நான்கு உயிர்களைக் காப்பாற்றி விட்டேன். நாங்கள் ஏறிநின்ற பூவரசம்மரம் ஒரு 15 அடி உயரம் இருக்கும். அந்த மரத்தில் எங்களின் கால்களைத் தொட்டது போல கடல்நீர் ஓடிக்கொண்டிருந்தது. மரத்தில் ஏறி இருந்தவர்கள் பயத்தால் கதறிக்கொண்டிருந்தனர்.

சிறிது நிமிட நேரத்தி;ல் தண்ணீரின் மட்டம் குறைந்துவிட்டது. உடனடியாக நான் மரத்தில் இருந்து கீழே இறங்கிப் பார்த்தேன். கழுத்தளவு தண்ணீர் நின்றது. அவர்களை மரத்திலிருந்து கீழே இறக்கி புட்டியான இடத்துக்குக் கூட்டிக்கொண்டு போனேன். அவர்களைக் கூட்டிக்கொண்டு போய்க் கொண்டிருக்கும்போது காலுக்குள் சடலங்கள் மிதிபட்டுக்கொண்டிந்தது. தண்ணீர் நின்றபடியால் அவை எங்கள் கண்ணுக்குள் தெரியவில்லை. அப்படியே அவர்களைப் பாதுகாப்பாக அனுப்பிவிட்டேன்.

அதன்பிறகு யாராவது தப்பியிருப்பவர்களை மீட்போம் என்று திரும்பி வந்தேன். நான் வந்தபோது மூன்று பேர் தங்கள் உறவினரைப் பார்க்கவந்து பேரூந்து நிலையத்தில் தவித்துக்கொண்டு நின்றார்கள். அவர்களும் என்னுடன் கூடவே மீட்பு வேலைகளுக்கு வந்தார்கள். நாங்கள் முதலாவது அலை அடித்த கையோடு சமாசக் கட்டடத்தைத் தாண்டி கடலை நோக்கிப் போய்க் கொண்டிருந்தபோது கட்டடங்களின் மேலும்ää மரங்களின் மேலும் சடலங்கள் வெளவால்கள் தொங்கிக் கொண்டிருப்பதுபோல தொங்கிக் கொண்டிருந்தன.

அதைப் பார்க்கவே பயங்கரமாக இருந்தது. எல்லா இடமும் அழுகுரலும் அபாயச்சத்தங்களும் தான் கேட்டுக்கொண்டிருந்தது. இப்படியே கையில் அகப்படுபவர்களை மீட்டு பஸ்நிலையப் புட்டியில் கிடத்தினோம். நாங்கள் மீட்ட அனைவரும்உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை வெளியால் கொண்டு செல்வதற்கு வாகனவசதிகள் அந்த கண நேரத்தில் கிடைக்கவில்லை. அதனால் நாங்கள் தண்ணீருக்குள் தவித்துக்கொண்டிருந்தவர்களை வெளியே எடுத்துக்கொண்டிருந்தோம். நாங்கள் சடலங்கள் எதையும் உடனடியாக மீட்கவே இல்லை. உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்தவர்களைத் தான்மீட்டோம்.

அப்படியே மணல் குடியிருப்புப்பக்கமாக அதாவது அந்தோனியார் கோயில் பக்கமாக வந்து கொண்டிருந்தோம். முதல் அலை அடித்த உடனே இந்தப்பகுதிக்கு வந்தோம். கட்டடங்கள் எல்லாம் இடிந்து போய் இருந்தது. கால்களுக்குள் வீட்டுத் தளபாடங்களும்ää கல்லுகளும்ää மரங்களும் மனித உடல்களும் மிதிபட்டுக்கொண்டிருந்தது. வேதக்கோயிலும் நொருங்கி விழந்திருந்தது. மொத்தத்தில் முல்லைத்தீவின் தோற்றமே மாறியிருந்தது.

நாங்கள் வித்தியாசமான ஒரு உலகத்தில் நிக்கிறோம் என்றுதான் நினைத்தேன். அதனுள்ளாலும் பெரும் சிரமத்தின் பின் சேச்அடிக்கு வந்தோம். சேக்சுக்குப் பக்கத்தில் வந்தபிறகு பின்னால் திரும்பிப் பார்த்தேன் வயது முதிர்ந்த அம்மா பட்ட மரம் ஒன்றின் உச்சியில் பிடித்துக்கொண்டு நின்;றார். உடனடியாகவே ஓடிப்போய் அந்த மரத்தில் ஏறி அம்மாவைக் கீழே இறக்கினோம். அந்த மரம் அம்மாவின் வீட்டின் பின் மூலையில் இருந்தது. அது வீட்டை விட உயரமான மரம் அம்மாவால் மரத்திலிருந்து இறங்கத் தெரியவில்லை.

ஒருகையால் அம்மா வைப்பிடித்துக் கொண்டு ஒருவாறு கீழ் இறங்க அம்மா என்னையும் பிடித்துக் கொண்டு மரத்தின் கீழ் இருந்த கிடங்கில் விழுந்து விட்டார். கடல் வந்து விழுந்த வேகத்தில் தான் அந்தக்கிடங்கு வந்திருக்க வேண்டும். நானும் தாண்டு அந்த அம்மாவும் தாண்டு போய்விட்டோம். ஒரு மாதிரி நான் கரையைப் பிடித்து மேலே வந்து அந்த அம்மாவையும் பிடித்துக் காப்பாற்றி விட்டேன்.

அம்மாவைக்காப்பாற்றி புட்டிக்குக் கொண்டு வரும்போது அவரின் வீட்டுக்குப் பின்னால் உள்ள ஒரு பெரிய வீட்டில் இருந்து பெண் ஒருவர் 'ஐயோ என்ர பிள்ளையைக் காப்பாற்றுங்கோ" என்று பரிதாபமாகக் கதறிக் கொண்டிருந்த குரல் கேட்டது. உடனே அந்த இடத்துக்குப் போய் வீட்டிற்குள் பார்த்தோம். அந்தக் காட்சி என்னைத் திகைக்க வைத்தது. நான் திகைத்துப் போனேன். முப்பது வயது மதிக்கத்தக்க தாய் அலை வந்தவுடன் தனது பிள்ளையை ஏணையில் படுத்தி ஏணையின் கயிற்றை இழுத்து பிள்ளையை வீட்டு முகட்டளவுக்கு உயர்த்தியபடி தான் யன்னலில் ஏறி நின்றிருந்தார். நாங்;கள் அவர்களையும் மீட்டுக்கொண்டு நெஞ்சளவு தண்ணீக்குள்ளால் புட்டியை நோக்கி வந்து கொண்டிருந்த போது அம்மா ஒருவர் நெஞ்சளவு தண்ணீருக்குள் அங்கும் இங்குமாகத் தளம்பியவாறு பஸ் நிலையப் புட்டியை நோக்கி நடந்து போய்க்கொண ;டிருந்தார். அவர் எங்கிருந்து வந்தார் என்பது எனக்குத் தெரியாது. அவரின் கையிலிருந்த குழந்தை கதறி அழுது கொண்டிருந்தது.

இந்தக் கோர அலைக்குள் எப்படித் தப்பினார் என்பது எனக்குத் தெரியவில்லை. ஏதோ ஒருவாறு தப்பிவிட்டார். தனது பிள்ளையைக் காப்பற்ற வேண்டும் என்ற ஓர்மத்தில் அவர் தளம்பியவாறு நடந்து போய்க்கொண்டிருந்தார். சமாச கட்டடத்தின் அருகில் போயிருக்க வேண்டும். திடீரென அவரைக்காணவில்லை. என்ன நடந்திருக்கும் விரைவாக அந்த இடத்துக்கு வந்தோம் தாயும்பிள்ளையுமாகத் தண்ணீருக்குள் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருந்தனர். உடனே அந்த அம்மாவையும் தூக்கிää அவரின் குழந்தையையும் தூக்கிக் கொண்டு பஸ்தரிப்பு நிலையத்துக்குக் கொண்டுபோனோம். அந்த அம்மா மயங்கி விட்டார். பிள்ளையைத் தூக்கிப் பார்த்தேன். உடல் சூடாக இருந்தது. ஆனால் அந்தப் பிஞ்சுப் பாலகனின் உயிர் மட்டும் பிரிந்து விட்டது. கொடுமையான அந்த அலையிலும் பக்குவமாய் தான்பெற்ற குழந்தையைக் காப்பற்றிக் கொண்டு வந்து கடைசியில் பறிகொடுத்துவிட்டார்.

இப்படியே மீட்பு வேலைகளைச் செய்து கொண்டு போய்க்கொண்டிருந்தபொழுது
வண்ணாங்குளம் பகுதியில் தந்தையார் தனது பிள்ளையை ஒரு பனை மரத்தில் தூக்கி ஏற்றியவாறு பிடித்துக்கொண்டிருந்தார். அவராலும் இயலாமல் இருக்க வேண்டும். அவரை மீட்பதற்காக போய்க் கொண்டிருக்க தண்ணீரும் கூடிக்கொண்டிருந்தது. நாங்கள் பார்த்துக்கொண்டிருக்க அந்த அலை அண்ணையை அடிச்சுக் கொண்டு போனது.

மரத்தில் இருந்த பிள்ளை தந்தையை அலை இழுத்துக்கொண்டு போக பார்த்துக் கதறிக் கொண்டிருந்தான். அவன் கதறி என்ன செய்ய முடியும். தண்ணீர் கேட்குமா? இல்லையே நாங்கள் அந்த இழுவைத் தண்ணீருக்குள்ளாலும் போய் மரத்தில் பிடித்திருந்த சின்னப்பிள்ளையை மரத்தில் இருந்து காப்பற்றி தூக்கிக்கொண்டு திரும்ப கடல் பக்கம் இருந்து தண்ணீரைக் கிழித்துக்கொண்டு ஒரு பூஸ்ரார் படகு எங்களுக்கு நேராக வந்தது.

நான் அதை பார்த்தவுடனே அந்தப் பிள்ளையுடன் தண்ணீருக்குள் இருந்துவிட்டேன். சிறிது கழித்து மேலே எழும்பிப் பார்த்தபோது அந்தப் படகு எங்கே போனது என்று கூடத் தெரியவில்லை. அந்தளவுக்கு அதன் வேகம் இருந்தது. தண்ணீருக்குள் மூழ்கியதால் அந்தப்பிள்ளையும் நானும் தண்ணி குடித்துவிட்டோம். அந்தப் பிள்ளையின் குடும்பமே அழிஞ்சுபோச்சுது. அவர்களின் குடும்பத்தில் தப்பிய ஒரே ஒருவர் இந்தப் பிள்ளைதான். இந்தளவும் ஒரு சில நிமிடங்களில் நடந்துவிட்டது. முதலாவது அலை அடித்து இரண்டாவது அலை அடிப்பதற்கிடையில் ஐம்பது பேருக்குமேல் காப்பாற்றிவிட்டோம். முதலாவது அலைக்கும் இரண்டாவது அலைக்கும் இடையில் ஏழு நிமிடங்களாவது இடைவெளி இருந்திருக்கும்.

மரங்களுக்கு மேல் பலர் இருந்தார்கள். அவர்களை எல்லாம் கீழே இறக்கிப் பாதுகாத்தோம். காயமடைந்தவர்களும் சரி பலர் இப்படி படகுகளும் மரங்களும் அடிச்சுத்தான் செத்தவர்கள். நாங்கள் அலை அடிச்ச பிறகு இஞ்சவந்தபோது பாதை எது கட்டடம் எது எண்டு எதுவுமே தெரியேல்ல. ஆனால் நான் கனகாலமாகப் பழகின இடம் எண்;டதால குறிப்பிலதான் போனனான். எங்குமே கடல்தான் தெரிஞ்சது. இதுக்குள்ளால போய் மீட்டுக்கொண்டிருக்கேக்க இரண்டாவது தரம் கடல் எழும்பியது. திரும்பிப் பார்த்தேன். எல்லோரும் ஓடிக்கொண்டிருந்தார்கள். கடல் இரண்டாவது தரம் எப்படி வந்தது அதன்பிறகு என்ன நடந்தது அடுத்தபகுதியில் தொடர்வோம்.

(தொடரும்)

நன்றி: ஈழநாதம்




முன்னைய பாகங்கள்

http://www.tamilnatham.com/articles/lokees...an/20050314.htm


http://www.tamilnatham.com/articles/lokees...an/20050310.htm


http://www.tamilnatham.com/articles/lokees...an/20050307.htm


http://www.tamilnatham.com/articles/lokees...an/20050302.htm


http://www.tamilnatham.com/articles/lokees...an/20050225.htm


http://www.tamilnatham.com/articles/lokees...an/20050222.htm


http://www.tamilnatham.com/articles/lokees...an/20050217.htm


http://www.tamilnatham.com/articles/lokees...an/20050212.htm


http://www.tamilnatham.com/articles/lokees...an/20050207.htm


http://www.tamilnatham.com/articles/lokees...an/20050203.htm



--------------------------------------------------------------------------------



ஆயin Pயபந
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)