Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கலக்கும் கருப்பு ராஜா!
#1
கலக்கும் கருப்பு ராஜா!

<img src='http://i134.exs.cx/img134/4911/17black2ok.jpg' border='0' alt='user posted image'>



சாதாரண கிராமத்து ஆள் போன்ற உருவம். ஓரிரு வார்த்தை பேசினாலே தெரிகிறது மதுரைக்காரர் என்பது. சமீபத்தில் வெளியான "ராம்' திரைப்படத்தில் "வாழவந்தான்' கதாபாத்திரத்தில் நகைச்சுவையில் கலக்கியவர்தான் இவர். "கஞ்சா' கருப்பு.

திருச்சியில் "ராம்' திரைப்படம் ஓடும் திரையரங்குக்கு ஞாயிற்றுக்கிழமை வந்திருந்தார்.

""நான் நடிக்க வந்ததற்கு இயக்குநர் பாலா அண்ணேதான் காரணம். கருப்பு ராஜா என்பதுதான் என்னோட பேரு. பாலா எனக்கு அண்ணன் முறை. மதுரையில சுத்திக்கிட்டுத் திரிஞ்ச என்னை சென்னைக்குக் கூட்டிட்டு வந்தார். அவரிடம் ஆபிஸ் பாயா இருந்தேன்.

"பிதாமகன்' படத்தில் கஞ்சா வாங்கிக் குடிக்கும் கேரக்டருக்கு ஆள் கிடைக்கலே.

"நீ பண்ணு'ன்னு பாலாண்ணே சொன்னாரு.

பாலா அண்ணனிடம் பணிபுரிந்தவர் அமீர். "ராம்' படத்தில் அவர் எனக்கு வாய்ப்பு தந்தார். வாழவந்தான் கேரக்டர் நல்ல பேரு வாங்கித் தந்திருக்கு. அமீர் சார் சொல்லிக் கொடுத்ததை அப்படியே செய்தேன். ஏன்னா, எனக்கு நடிக்கத் தெரியாது. சொல்லித் தருவதை அப்படியே செய்வேன்.

பெரிய தயாரிப்பாளரான ஆர்.பி. செüத்ரி சார் பையன் ஜீவாவுடன் நடித்தேன். எனது நடிப்பை பார்த்து விட்டு அவுங்க வீட்டுக்கு கூப்பிட்டு சாப்பாடு போட்டு வாழ்த்தினாங்க. தன்னோட அடுத்த 3 படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாக செüத்ரி சார் சொன்னது ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

படத்துல நடிச்சவுடன் நான் எந்த ஊருக்குப் போனாலும் கைகுலுக்கி பாராட்டுறாங்க.

ஆட்டோகிராப்பெல்லாம் வாங்குறாங்க. சென்னை போனவுடன், பாலா அண்ணனை பார்த்து நான் நடிச்சதைப் பாத்தீங்களான்னு கேட்கணும். எனக்குப் படிக்கத் தெரியாது. ஹோட்டலில் பணிபுரிந்தேன். இப்போ நடிகனாயிருக்கேன். நானெல்லாம் நடிகனானது பெரிய விஷயம்ண்ணே'' எனக் கூறிவிட்டு சிரிக்கிறார் கருப்பு ராஜா.

தினமணி.com
Reply
#2
"ஆட்டோகிராப்பெல்லாம் வாங்குறாங்க. சென்னை போனவுடன்இ பாலா அண்ணனை பார்த்து நான் நடிச்சதைப் பாத்தீங்களான்னு கேட்கணும். எனக்குப் படிக்கத் தெரியாது. ஹோட்டலில் பணிபுரிந்தேன். இப்போ நடிகனாயிருக்கேன். நானெல்லாம் நடிகனானது பெரிய விஷயம்ண்ணே'' எனக் கூறிவிட்டு சிரிக்கிறார் கருப்பு ராஜா."
----------------- இந்தப்பணிவும் உண்மையும் உங்களுடன் இருக்கும் மட்டும் இன்னும் நிறையவே புகழ் கிடைக்கும்.
வாழ்த்துக்கள் கருப்பு ராஜா!! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
!!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)