Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இத படிங்க முதல்ல...
#1
சில நேரங்களில் சில நூல்கள்!





காணாமல் போனவர்களைப் பற்றிய அறிவிப்பு!
ஆசிரியர்: சதக் செல்லப்பா.

இது ஒரு நாவல் (என்று நம்பப்படுகிறது). கதையின் முதல் பக்கத்தில் திடீரென காணாமல் போய்விடும் அப்புசாமியைத் தேடிப்போகும் சுப்புசாமி காணாமல் போய்விடுகிறான். சுப்புசாமியைத் தேடிப்போகும் ராமசாமியும் காணாமல் போய்விட, ராமசாமியைத் தேடிப்போகும் கோவிந்தசாமியும் காணாமல் போய்விட, கோவிந்தசாமியைத் தேடிப்போகும் அப்புசாமியும் (சுப்புசாமி தேடிப்போகும் ஆள்தான்) காணாமல் போய்விடுகிறான் என கடைசிப் பக்கத்தில் கூறுகின்றார் ஆசிரியர். "மீண்டும் முதல் பக்கத்தில் இருந்து கதையைத் தொடர்ந்து படிக்கவும்' என ஒரு குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் புத்தகத்தைப் படித்து முடிக்கவே முடியாமல் வாசகர்கள் ஆனந்தக் கூத்தாடுகின்றனர்.

(வெளியீடு: காற்புள்ளி பதிப்பகம், நாவலூர். பக்கம்: 171; விலை: போடவில்லை).


30 நாட்களில் தூய தமிழ் பேசுவது சுலபம்!
ஆசிரியர்: இங்கிலீஷ்காரன்

"ஆக்சுவலி திஸ் புக் டெஸ்கிரைப் அபெüட் ஹெü டூ ஸ்பீக் இன் ப்யூர் டமில். திஸ் புக் இஸ் டீப்லி டெஸ்கிரைப் ஆல் டமில் வேர்ட்ஸ் வித் மீனிங் அன்ட் புரெüனன்சேஷன்' -இப்படி அட்டை டூ அட்டை தமிழ் கற்றுக்கொடுப்பதாக ஆங்கிலத்திலேயே ஜல்லியடித்திருக்கிறார்கள். அட்டையில் தலைப்பைத் தவிர வேறெங்கும் தமிழ் தேடினாலும் கிடைக்காது.

(வெளியீடு: ராமதாஸ் பதிப்பகம், சென்னை. பக்கம்: 420; விலை: 30$)


சாம்பார் வைப்பது எப்படி?
ஆசிரியர்: முருங்கைப்ரியா

சாம்பார் வைப்பது எப்படி என ர்ர்ரொம்ம்ப்ப விரிவாக விளக்கும் நூல். சாம்பாருக்குத் தேவையான பருப்பை, மிளகாய் வற்றலை, காய்கறிகளை எப்படி பயிர் செய்ய வேண்டும் என ஆ"ரம்ப'த்திலிருந்தே ஆரம்பித்து, அணு அணுவாக விளக்குகிறது. சாம்பார் வைக்கும் சட்டியின் விட்டம், உயரம், கரண்டியின் நீளம் எல்லாம் எவ்வளவு இருக்க வேண்டுமென தெளிவாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது இதில்! இந்த நூலைப் படித்துப் பொறுமையாக உங்கள் ஆயுசு முடிவதற்குள் ஒரு முறையாவது சாம்பார் வைத்துவிடலாம். ஆனால் கடைசியில் சாம்பாருக்கு உப்பு போட மறந்துவிட்டார்கள்.

(வெளியீடு: பருப்பு பதிப்பகம், காரைக்குடி. பக்கம்: 222; விலை: ரூ.100)


பிரேக்கூ கவிதைகள்
ஆசிரியர்: ஜூஜூபி

ஒரு புதிய வகை கவிதை எழுதும் முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர். பிரேக்கே இல்லாமல் இஷ்டத்துக்கு வார்த்தைகளை வாரித் தெளிப்பதுதான் "பிரேக்கூ' என்கிறார் கவிஞர்.

"துப்பாக்கியின் கொட்டாவியில்
சுளுக்கெடுக்கும் பட்டாம்பூச்சியின்
சட்டைப் பொத்தானுக்கு'

என ஆரம்பிக்கும் ஒரு கவிதை பிரேக்கே இல்லாமல் 22 பக்கங்கள் கழித்து

"வாலில்லா வாசலில்
வந்து நிற்கும் டவுன்பஸ்! என்று முடிகிறது!

(வெளியீடு: எடக் மடக் பதிப்பகம், சென்னை. பக்கம்: 534; விலை: ரூ94.15)

உடம்பை வளர்க்க உபயோகமான வழிகள்

ஆசிரியர்: தொப்பையப்பன்

இது மனிதர்களின் உடல் நலம் சம்பந்தப்பட்ட புத்தகமல்ல. நீங்கள் யானை வளர்த்தால் அதனை எப்படி ஆரோக்கியமாக வளர்ப்பது என விளக்கும் நூல். யானைக்கு எப்படி பல் தேய்ப்பது, யானையின் தொப்பையை எப்படிக் குறைப்பது என புகைப்படங்களுடன் அருமையாக விளக்கப்பட்டுள்ளது.

(வெளியீடு: யாரென்று போடவில்லை. பக்கம்: 120; விலை ரூ.35)


வாஸ்து உங்கள் தோஸ்து
ஆசிரியர்: வாஸ்தவா

வாஸ்து சாஸ்திரப்படி இந்தப் புத்தகத்திற்கு அட்டை கிடையாது. வீட்டின் ஈசான மூலையில் படுத்துத் தூங்கினால் "பீஸôன' மூளையும் இயங்க ஆரம்பிக்கும், வடதென்மேல்கிழக்குத் திசையில் பச்சை நிற கிழிந்த பாயின்மேல் 35 டிகிரி சாய்வாக டி.வி.யை தலைகீழாக வைத்துப் பார்த்தால் செல்வம் பெருகும் என்பது போன்ற பல பயனுள்ள வாஸ்துக் குறிப்புகள் புத்தகம் முழுவதும் வாஸ்துப்படி தலைகீழாக அச்சிடப்பட்டுள்ளது. நம் வீட்டுக்குள் ஆமை புகுந்தால் ஆமையின் வீட்டுக்குள் நாம் புகுந்துவிட வேண்டும் என பல அரிய யோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

(வெளியீடு: செங்கல் பதிப்பகம், கலவையூர். பக்கம்: 84 1/2; விலை: ஒரு லோடு மணலின் விலை)


மனம் ண்ள் ஹ மனம்
ஆசிரியர்: சுவாமி சுனாமியானந்தா

மனம் என்பது மனம் சம்பந்தப்பட்ட விஷயம். மனதை அடக்கி ஆள்வது என்பது லாரிக்கு பின் நின்று கூட்டத்தில் முட்டி மோதி ஓட்டைக்குடத்தில் தண்ணீர் பிடிப்பதற்குச் சமம். மனிதர்களின் மனம் என்பது கார்ப்பரேஷன்காரன் தோண்டிப்போட்ட குழி போன்றது! பெரிய மனிதர்களின் மனம் என்பது மாநகராட்சி குப்பை வண்டிக்காக ஏக்கத்துடன் காத்திருக்கும் ஒற்றைக் குப்பைத் தொட்டி போன்றது! -இது போன்ற சுவாமிஜியின் ஆழ்ந்த அனுபவ உரைகள் புத்தகம் முழுவதும் உப்பிக் கிடக்கிறது. "ராகித்ய அகாதெமி' விருதுக்காக இந்தப் புத்தகம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

(வெளியீடு: உள்ளீடு பதிப்பகம், கீழ்ப்பாக்கம். பக்கம்: 238-ல் ஆரம்பித்து 11-ல் முடிகிறது. விலை: நம் மனம் விரும்பும் விலை.)


குருதிக் கோட்டுக் குருவிகள்!
ஆசிரியர்: ரெüத்ரப்பித்தன்

இந்நூல் பின் நவீனத்துவக் கட்டுரைகளின் தொகுப்பு. மொத்தம் 222 கட்டுரைகள். ஒவ்வொரு கட்டுரையும் குறைந்தது 25 பக்கங்கள். எந்தக் கட்டுரையிலும் தான் சொல்ல வருவது எந்த ஒரு வாசகனுக்கும் புரிந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக செயல்பட்டிருக்கிறார் ஆசிரியர். "நான் சொல்ல வருவது புரிதலையும் தாண்டிய புனிதம். நான் எழுதிய சில விஷயங்கள் எனக்கே புரியவில்லை' என்ற ஆசிரியரின் முன்னுரையைப் படிக்கும்போது மயிர்க்கூச்சம் ஏற்படுகிறது.

(வெளியீடு: பிச்சைப்பாத்திரம், தர்மபுரி. பக்கம்: எண்ண முடியவில்லை. விலை ரூ.800)


108 வகைக் கோலங்கள்
ஆசிரியர்: புள்ளிராணி

விதவிதமான புள்ளிக் கோலங்களைப் போடக் கற்றுக்கொடுப்பதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கமே. நூலாசிரியர் காதல் வயப்பட்டிருப்பதால் "புள்ளி வைச்சுக் கோலம் போட மறந்து'விட்டார். அதனால் கோலப் புத்தகம் அலங்கோலப் புத்தகமாகிவிட்டது.

(வெளியீடு, பக்கம், விலை: ரொம்ப முக்கியம்!)


எலக்கன பிலையின்றி எலுதுவது எப்டி?
ஆசிரியர்: தமிழ்க்கோடாரி

"இலக்கணப் பிழையின்றி எழுதுவது எப்படி?' என வந்திருக்க வேண்டிய புத்தகம். பக்கத்திற்குப் பக்கம் ஏராளமான எழுத்துப் பிழைகளுடன் இப்படி வந்திருக்கிறது. நூலாசிரியருக்கு தமிழில் பெரிய "ழ' என்னுமொரு எழுத்து இருப்பதே தெரியாது போல! "ஆ' என்பதை "அô' எனவும், "ஈ' என்பதை "இô' எனவும், மேலும் "உô', "எô', "ஒô' எனப் பல புதிய எழுத்துகளைக் கண்டுபிடித்து தமிழுக்கு பெரும் தொண்டு ஆற்றியிருக்கிறது இந்நூல்.

(வெளியீடு: நியூ பதிப்பகம், செம்மொழியூர். பக்கம்: 120 (எழுத்துப் பிழையின்றி ஒரே ஒரு வெற்றுப்பக்கம்); விலை: ரூ.33).

ThanksBig Grininamani.....
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#2
இதை முதல்ல படிச்சு என்னங்க செய்யிறது?

நானும் எலுத்து பிலையின்றி எப்படி எலுதுவது எப்டி?
என்று புதுபுத்தகம் ஒன்று எழுதவா இப்படி.

----------------------------------------------------------------------------------------------
..............................................................................................
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Cry Cry Cry Cry Cry Cry Cry
:wink: :wink: :wink: :wink: :wink: :wink:
:oops: :oops: :oops: :oops: :oops: :oops:
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#3
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)