Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மோடியின் பயணத்தடையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள பலவிடயங்கள்
#1
குஜாராத் முதலமைச்சர் நரேந்திரமோடி இங்கிலாந்து பயணம் செய்ய மேற்கொண்டிருந்த திட்டத்தை அவர்மேல் இங்கிலாந்தில் தொடரப்பட இருந்த வழக்கினால் கைவிட்டுள்ளதாக தினகரன் இணையத்தில் செய்திகள் வந்திருக்கிறது.
குஜாராத்தில் நடைபெற்ற மதக்கலவரத்தினால் கொல்லப்பட்ட இங்கிலாந்து குடியுரிமை பெற்ற ஒருவரின் தகப்பன் இங்கிலாந்தில் வழக்கு தாக்கல் செய்ய முயன்றமையினால் மோடி தன்னுடைய பிரயாணத்îத இடைநிறுத்தியதாக சொல்கிறார்கள்.
அப்படியானால் ஏன் நாங்களும் செம்மணியில் புதைகுழிகள் நாகர்கோவில் பள்ளிக்குண்டு வீச்சுகள் போன்றவற்றை ப்பற்றிய தகவல்களை திரட்டி படைக்கல அமைச்சராக இருக்கின்ற சந்திரிகாமீது வழக்கு தொடரமுடியாது? அதுசம்மந்தமாக எங்கள் அறிஞர்கள் ஏன்முயற்சிசெய்யக்கூடாது. ஒரு முதலமைச்சரின் இங்கிலாந்து பயணத்தை ஒரு தனிமனிதன் சட்டத்தின் துணைகொண்டு நிறுத்த முடிந்தபோது இங்கு எத்தனை ஆயிரம் பேர்களின் உறவுகள் கொல்லப்பட்டும் காணாமல் போயிருக்கின்றபோதும் சட்டத்தின்துணை கொண்டு ஏதாவது செய்யமுடியாது.
முன்பு ஒரு தடவை சந்திரிகா நெதர்லாந்து வந்தபோது யாரோ அவசரஅவசரமாக ஒரு வழக்கை தொடர்ந்தனர். அவர்கள் ஆதாரங்களை இணைக்கவில்லையென்று வழக்கு தள்ளுபடிசெய்யப்பட்டது. இப்பொதிருந்தே ஆதாரங்களை திரட்டி சந்தர்ப்பம் வருகின்ற போது செயற்படுத்தலாம்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#2
நல்ல விடயம் தான்.ஆனால் வெளிநாட்டில் இருந்து போன ஒருவர் அதில் கொல்லப்பட்டிருந்தால்த்தானே அப்படி ஏதாவது செய்யலாம். :roll: :roll: :roll:
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply
#3
வியாசன் இந்திய பாதுகாப்பு அமைச்சு மோடியின் உயிருக்கு அங்கு ஆபத்து ஏற்படலாம் என அறிவித்ததை தொடர்ந்து தான் மோடி பயணத்தை இரத்து செய்ததாக பல இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நீங்கள் அறிந்தது ஒருவேளை தவறான செய்தியாகக் கூட இருக்கலாம். அத்துடன் நீங்கள் கூறியது போல் வழக்கு பதிவு செய்து ஒன்றும் செய்து விட முடியாது. அது இன்னொரு நாட்டின் விடயத்தில் மற்றொரு நாடு தலையிடுவது போலாகிவிடும். வேண்டுமாயின் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். அதற்கும் நிறைய விதிமுறைகளுண்டு.
<i><b> </b>


</i>
Reply
#4
வசம்பு நீங்கள் தினகரன்(இந்தியா) பார்த்தீர்கள் என்றால் தெரியும் இங்கிலாந்து அதிகாரிகள் இந்திய தூதுவரலாயத்துக்கு அறிவித்ததை தொடர்ந்து மத்திய அரசு மோடியை போகவேண்டாமென்று எச்சரித்தார்களாம். கைதுசெய்ய வேண்டி வந்தால் ; இராஜதந்திர உறவுகள் பாதிக்கப்படுமென்ற படியால்தானாம் அவரை போகவேண்டாமென்று எச்சரித்தார்களாம். எழுத்துரு பிரச்சனையால் அதை சுடமுடியவில்லை.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#5
இல்லை வேறு நாட்டு குடியுரிமை பெற்ற யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் வழக்கு தொடரலாம்...
<b> </b>
Reply
#6
ம். ஆமாம் இலங்கையில் பிறந்து வெளிநாட்டு பிறஜாவுரிமை பெற்ற ஒருவர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டால் வழக்கு தொடரலாம். ஆனால் செம்மணியில் அப்படி நடந்ததாக தெரியவில்லை. இருப்பினும் சில சந்தர்ப்பங்களில் அப்படியான சம்பவங்கள் இடம் பெற்றிருக்கலாம். அதற்க்கு பாதக்கப்பட்டவர்கள் வழக்கு தொடர முன் வரவேண்டும்.
நிலவன்
<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)