03-28-2005, 02:51 PM
மதன் அண்ணை நடிக, நடிகையர் தெரிவில் இறங்கியிருக்கிறார். ஏதும் படம் எடுக்கிற ஐடியவோ தெரியேல்லை. அப்பிடி ஏதும் ஐடியா இருந்தால் அதற்கான ஆலோசனையாக இவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=18]வாங்க படம் எடுக்கலாம்
'தமிழ் சினிமாவில இது மாதிரியான கதை இதுவரை வந்ததேயில்லை. ரொம்ப வித்தியானமான கதை. கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் இடையில ஏற்படுற காதலை புதுமையாகச் சொல்லியிருக்கோம்'
இப்படித்தான் கோடம்பாக்கத்து இயக்குனர் வட்டாரம் தங்களுடைய படங்களைப்பற்றிக் கூறுவது வழக்கம். திரையரங்குக்குப் போய் படம் பார்த்தால், 'அட அந்தப் படத்துக் கதை மாதிரியே இருக்குதுபா' என்று காசு கொடுத்து டிக்கெட் வாங்கிப் படம் பார்த்த நம்ம ரசிகசிகாமணி கமென்ற் அடித்தபடி கிளம்புவார்.
அப்படியானால் கோட்ம்பாக்கத்தின் ஹிட் பார்முலாதான் (formula) என்ன? என்று மண்டைக்குள் குடைச்சல் ஏற்படுகிறதா? உங்களுக்காக கோடம்பாக்கத்தின் ஹிட் பார்முலாக்களைத் தருகிறோம். நீங்களும் படம் எடுக்கலாம்.
1. பஞ்சாயத்து பார்முலா
இது கிராமத்துக் கதை. பதினெட்டுப்பட்டி என்ற சமாச்சாரத்தை எப்படியாவது படத்தில் ஒரு இடத்திலாவது வசனமாக வைத்துவிடவேண்டும். பதினெட்டுப்பட்டிக்கும் பஞ்சாயத்து செய்வார் கதாநாயகனின் அப்பா. அவருக்கு எதிராக வில்லனின் குடும்பம். குடும்பப்பகையைக் காட்ட ஒரு பிளாஸ்பக் அவசியம். குடும்பப் பகையையும் மீறி இரு குடும்பங்களின் வாரிசுகளும் காதல் வயப்படுவார்கள். இதனால் இரு குடும்பங்களுக்கும் இடையில் பெரிய பட்ஜெட் செலவில் அடிதடிக் காட்சிகள் இருக்கவேண்டும். சண்டைக்குப் பின் வில்லன் இறந்துவிடுவார். அல்லது மனம் திருந்திவிடுவார். கதாநாயகன் பதினெட்டுப்பட்டிக்கும் பஞ்சாயத்துச் சொல்ல தோளில் துண்டைப்போட்டபடி கிளம்பிவிடுவார். பின்னணியில் மீண்டும் டைட்டில் பாடல்.
2. காதல் பார்முலா
எப்போதும் வரவேற்புக் கிடைக்கும் காதல் கதை. இதற்காக ரொம்பவும் மினக்கெட வேண்டிய அவசியம் இருக்காது. கதைப்படி சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஹீரோ அல்லது ஹீரோயின். மற்றவர் பெரிய பணக்காரத் தொழிலதிபர் அல்லது தாதாவின் வாரிசாக இருக்கவேண்டும். ஹீரோவும் ஹீரோயினும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். இருவருக்குமிடையில் ஏற்படும் சண்டையில் காதல் மலரும். இதற்காகச் சம்பந்தமேயில்லாமல் கூடுவாஞ்சேரியில் ஏற்பட்ட காதலுக்காக ஜேர்மனியில் காதல் ஜோடி டூயட் பாடவேண்டும். காதலிக்காக ஹீரோ கல்லூரியிலுள்ள எதிர்க்கூட்டணியுடன் சண்டைபோடுவார். இது போதாதென்று ஹீரோயினின் அப்பா ஹீரோவை மிரட்டுவார். இதற்குப் பிறகு திடீரென்று வில்லன் சொல்லாமல் கொள்ளாமல் மறைந்துபோய்விடுவார். யாராவது உண்மைக் காதலர்களைச் சேர்த்து வைக்க சுபம்.
3. நட்பு பார்முலா
இதுவும் காதல் கசமுசா பார்முலாதான். கல்லூரியில் படிக்கும் நண்பர்கள். அவர்களுக்கு நாலைந்து தோழிகள். இவர்கள் அனைவரும் எந்தச் சூழ்நிலையிலும் பிரியவே மாட்டார்கள். கல்லூரிப் படிப்பு முடிகிறது. இதனால் வீட்டில் பெற்றோர் தொல்லை அதிகமாகிறது. இதைச் சமாளிக்க எல்லோரும் கூட்டணியாக வீட்டைவிட்டு வெளியேறுகிறார்கள். இதற்குப் பிறகுதான் டான்ஸ் மாஸ்டருக்கு வேலையே. டூயட் பாடல்கள் இருக்கவேண்டும். திடீரென்று ஒரு குணச்சித்திர நடிகர் வந்து மனம்போன போக்கில் முத்துமுத்தாக வசனம் பேசுவார். படத்தின் பிலிம் அடி அதிகம் செலவு பிடிப்பதைப் புரிந்துகொண்டு காதலர்கள் உடனடியாக வீட்டுக்குத் திரும்பிவிடுவார்கள். அப்புறம் காதல் சக்சஸ் என்று எல்லோரும் கூட்டம் கூட்டமாக நடனமாடுவார்கள். கதை முடிகிறது.
4. போலீஸ் பார்முலா
ஹீரோ கடமை தவறாத பொலிஸ் அதிகாரி. காதலித்துத் திருமணம் செய்துகொள்ளவார்.
வில்லன் ஆட்களுடன் மோதும்போது பிரச்சினை வெடிக்கும். இதனால் வில்லனோடு நேரடியாக மோதுவார் ஹீரோ. திரைக்கதை ஆசிரியரின் அறிவுரைப்படி வில்லன் சம்பந்தப்பட்ட வழக்கு ஹீரோ வசம்வரும். வில்லனின் மோசமான தொடர்புகள் ஹரோவிற்குத் தெரியவரும். இதனால் ஹீரோவின் குடும்பத்தை அழிக்க வில்லன் தனது ஆட்களை அனுப்பி நமக்கு ரென்சனைக் கிளப்புவார். வில்லனால் பாதிக்கப்பட்ட ஹீரோ தனது பொலிஸ் அதிகாரி பதவியை ராஜினாமா செய்துவிட்டுää தனி ஆளாக வில்லனைப் புரட்டி எடுப்பார்.
5. அக்ஸன் பார்முலா
இந்த அக்ஸன் பார்முலாவில் ரசிகர்களின் காதில் எக்கச்சக்கமாகப் பூச்சுத்தலாம். இந்தியாவையோ அல்லது இந்தியப் பிரதமரையோ குறிவைத்துää பாகிஸ்தான் ஆதரவுடன் ஒரு தீவிரவாதி இந்தியாவிற்கு வருவார். அல்லது சிறையிலிருந்து தப்பித்துவிடுவார். இடையிடையே மந்திரிகளை அவரது நண்பர்கள் கடத்துவார்கள். இந்தத் தீவிரவாதி ஹிந்தி நடிகராக இருக்கவேண்டும். இவருக்கு கணீரென்று டப்பிங் குரல் கொடுப்பது மிக அவசியம். இவர் தமிழில் கொச்சையாகப் பேசியபடி அமிஞ்சிக்கரையிலுள்ள ஒரு துருப்பிடித்த குடோனில் மறைந்திருப்பார். கடமை தவறாத ஹீரோவிடம் இந்தத் தீவிரவாதியைப் பிடிக்கும் பொறுப்பை ஒப்படைப்பார்கள். தீவிரவாதியுடன் மோதும் காட்சிகளில் கிராபிக்ஸ் உதவியுடன் ஹீரோ சாகசம் செய்வார். ஆனாலும் வில்லன் அவரைப் புரட்டிப் போட்டு விடுவான். இறுதியில் இந்திய மண்ணை எடுத்து உடலில் பூசிவிட்டு சண்டைபோட்டு வில்லனை வதம் செய்வார் ஹீரோ.
அடடா! சக்சஸ் பார்முலாக்களைத் தெரிந்துகொண்டு நீங்களும் படம் எடுக்கக் கிளம்பிட்டீர்களா? நீங்களாவது கொஞ்சம் புதுசாக ஏதாவது யோசியுங்க.
சுட்டது - குமுதம்.

--
--
--