Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சந்திரமுகியும் ஜெயிக்கட்டும் - கமலின் உயர்ந்த உள்ளம்
#1
By Amalan


'ரூபா நோட்டில் காந்தி தாத்தா போல நாம் சிரிப்போம்' காதலா காதலா படத்தில் காதல் இளவரசன் பாடும் இந்த பாட்டு நிஜமாக இருந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தவர்கள் நேற்று கண்ணாலேயே பார்க்க முடிந்தது.

<img src='http://cinesouth.com/images/new/29032005-TTCF0image1.jpg' border='0' alt='user posted image'>

பிரசாத் ஸ்டுடியோவில் மும்பை எக்ஸ்பிரஸ் டிரைலரை அறிமுகப்படுத்தும் விழாவில்தான் அந்த காட்சி. கமல் பத்திரிக்கையாளர்களை சந்திப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த சிறிய மேடையில் மெகா சைஸ் 500 ரூபாய் நோட்டு. வித்தியாசமாக தெரிகிறதே என நோட்டை 'நோட்' பண்ணிய போது ரூபாய் தாளின் மேலே 'Raajkamal Bank of India' என்றும் கீழ்புறம் 'குடும்பமே குதூகலிக்க உறுதியளிக்கும் அன்பன்' என்ற வாசகமும் அதற்கு கீழே அவரது கையெழுத்தும் இருக்க காந்தி தாத்தா இருக்கும் இடத்தில் நெற்றியில் ஏற்றிவிடப்பட்டிருந்த கண்ணாடி- சற்றே சிரிப்புடன் கமல்ஹாசன் அட்டகாசமாய் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்.

<img src='http://cinesouth.com/images/new/29032005-TTCF0image2.jpg' border='0' alt='user posted image'>

அந்த வித்தியாசமான ரூபாய், மீடியாக்காரர்களின் கண்களுக்கும், காமிராக்களுக்கும் இரை போட்டுக் கொண்டிருக்க இளமைத்துள்ளலுடன் மேடைக்கு வந்த கமல் சர் சர்ரென கிளம்பிய கேள்வி கணைகளுக்கு சரளமாக பதில் தர ஆரம்பித்தார். தமிழ், இங்கிலீஸ், இந்தி, தெலுங்கு என எந்த மொழியில் கேள்வி கேட்டாலும் அவரவர் பாஷையில் பதில் சொன்னது அமர்க்களம்.

<img src='http://cinesouth.com/images/new/29032005-TTCF0image3.jpg' border='0' alt='user posted image'>

<b>கொஞ்சநேரம் கமல் உங்களுடன் பேசுவதாக கற்பனை செய்துகொள்ளுங்களேன்...</b>

"இந்த சந்திப்பு கொஞ்சம் முன்பே நிகழ்ந்திருக்க கூடிய ஒன்று என்றாலும் சரியான தருணத்திலேயே சந்திப்பதாக நான் நினைக்கிறேன். இது படத்திற்கான விழா மட்டுமல்ல புதிதாக நான் ஆரம்பித்திருக்கும் ஆடியோ நிறுவனத்தின் அறிமுக விழாவாகவும் கருதலாம்.

இத்தனை வருடம் செய்யாததை இப்போது ஏன் செய்தீர்கள் என்ற கேள்வி எழலாம். அதற்கான எண்ணம் இப்போதுதான் தோன்றியது எனவேதான் இப்போது இதனை ஆரம்பித்துள்ளேன், இளையராஜா இருக்கும் தைரியத்தில்.

வழக்கமாக பாடல் கேசட் விற்பனைக்காக அதற்கு வெளியிட்டு விழா ஒன்று வைப்பார்கள். இதனை சற்று வித்தியாசப்படுத்தி பார்க்கவேண்டும் என்பதற்காக நாங்கள் முன்பே பாடல் கேசட்டை விற்று விட்டு வந்துள்ளோம் என்ற சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள இப்போது விழா எடுத்துள்ளோம். எனவே இவ்விழா நவீன விழாவாக எனக்கு தோன்றுகிறது. உங்களுக்கும் தோன்றும் என்று நம்புகிறேன்.

ஆடியோ கேசட் வாங்குபவர்களுக்கு சூரியன் எப். எம். மூலம் பரிசுத்திட்டம் ஒன்றையும் அறிவித்துள்ளோம். கேசட்டில் இருக்கும் ரகசிய எண்ணை தொலைபேசிமூலம் தெரிவிப்பவர்களிடம் நான் சில கேள்விகள் கேட்பேன். அதற்கு சரியான பதிலை தருபவர்களுக்கு ரூபாய் 5,000 முதல் 50,000 வரை பரிசுத்தொகை கொடுக்கப்படும்.

மும்பை எக்ஸ்பிரஸ் முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் எடுக்கப்பட்டுள்ளது. வழக்கமான பிலிம் ரோலிலும் இதனை மாற்றிக்கொள்ளலாம். டிஜிட்டல் முறையில் படத்தை பார்கக சென்சார் அதிகாரிகளும் ஒப்புக்கொண்டுவிட்டனர். அரசாங்கம் இதற்கு ஈடுகொடுத்து சில சட்ட திருத்தங்களை செய்ய வேண்டும்.

தமிழ், இந்தியில் தயாராகியுள்ள மும்பை எக்ஸ்பிரஸ் நிஜமாகவே குழந்தைகளுடன் பார்கக்கூடிய படம். கைக்குழந்தை முதல் கைத்தடி வைத்த தாத்தா வரை ரசிக்கும் படமாக இருக்கும். படத்தைப் பார்த்த தொழில்நுட்ப கலைஞர்கள் பலர் தினமும் இரண்டு முறையாவது மும்பை எக்ஸ்பிரஸை பாராட்டிக் கொண்டு இருக்கின்றனர்.

கதை என்ன என்று கேட்பவர்களுக்கு சுருக்கமாக எளிமையாகச் சொன்னால் இது ஒரு பணக்கார பள்ளிச்சிறுவனை கடத்தும் கதை. சின்ன கருதான். புல்லையே ஆயுதமாக்குவது வல்லவரின் வேலையல்லவா! அப்படியான வல்லவர்கள் சேர்ந்து உருவாக்கிய இந்த மகவின் பெயர் மும்பை எக்ஸ்பிரஸ்" என்று கொஞ்சம் இடைவெளி விட்ட நேரத்தில் கிளம்பிய கேள்விகளும் அதற்கு கமல் அளித்த பதில்களும் தொடர்கின்றன....

<b>சந்திரமுகி, மும்பை எக்ஸ்பிரஸும் ஒரே நேரத்தில் வருகிறதே?</b>

வரட்டுமே! நானும் ரஜினியும் நடித்த படங்கள் முப்பது முறை ஒரே சமயத்தில் வந்துள்ளன. வெற்றி தோல்வி முன்னே பின்னே இருந்தாலும் இருவரும் நல்ல புரிதலோடுதான் இருந்தோம், இருக்கிறோம். பாகிஸ்தானின் கேப்டன் இன்ஸமாமும், இந்திய கேப்டன் கங்குலியும் நேரில் சந்தித்தால் பேசிக்கொள்ளாமலா இருப்பார்கள். அதுமாதிரிதான் நானும் ரஜினியும். எங்களுக்குள் போட்டி இருக்கலாம். ஆனால் அது யாரையும் காயப்படுத்தாத ஆரோக்கியமான போட்டி. வர்த்தக ரீதியில் இரண்டு படமும் வெற்றி பெற வேண்டும். அதுதான் தொழில்துறைக்கு நல்லது.

<b>கையில் அடிபடும் அளவிற்கு ரிஸ்க் எடுத்து நடித்துள்ளீர்கள் போல உள்ளது?</b>
ஏதாவது தவறு நடந்துவிட்டால் உடனே ரிஸ்க் எடுத்து விட்டதாக இங்கே நினைத்துக் கொள்கிறார்கள். அடிபட்டால்தான் ரிஸ்க் எடுத்ததாக அர்த்தமாகாது. அடிபடாவிட்டாலும் ஒவ்வொரு படத்திலும் ரிஸ்க் எடுத்துதான் நடிக்கிறேன்.

<b>ஆரம்பத்திலிருந்தே டைட்டில் பிரச்சனை இருக்கிறதே?</b>

இது இப்போது மட்டுமல்ல தொடக்க காலத்திலிருந்தே உள்ளது. சிறுவனாக இருந்தபோதே என் பெயரை மாற்றச் சொன்னார்கள். வடச்சொல் பெயராக இருப்பதாக அதற்கு காரணமும் சொன்னார்கள். நானும் ஆரம்பத்தில் மாற்றிவிடலாம் என்றுதான் நினைத்தேன். ஒரு கட்டத்தில் யோசித்து பார்த்தபோதுதான் ஏன் மாற்ற வேண்டும் என்ற கேள்வி எழ, வீம்புக்காகவே எனது பெயரை மாற்றிக்கொள்ளவில்லை.

மும்பை எக்ஸ்பிரஸ் பிரச்சனைக்கு ரொம்ப நாளாகவே எதுவும் சொல்லவேண்டாம் என்று நினைத்திருந்தேன். இப்போது சொல்கிறேன். ஞானக்கூத்தன் கவிதை ஒன்று உள்ளது. 'தமிழ்தான் என் மூச்சு அதை பிறர்மேல் விடமாட்டேன்' என்பதாக அந்த கவிதை இருக்கும். எனக்கு கூட அதுமாதிரியான மூச்சுதான். ஆங்கிலேயரால் செய்யமுடியாத காரியத்தையா கமல் செய்துவிடப்போகிறான். இன்னும் சொல்லப்போனால் தமிழுக்காக நடைபயணம் செய்தவர்களுடன் நானும் கலந்து கொள்ள ஆசைப்பட்டவன். மும்பை எக்ஸ்பிரஸ் தமிழுக்கு இழுக்கான விஷயமே இல்லை".

<b>நடிகர்திலகம் வீட்டின் மூத்தமகனாக நீங்கள் கருதப்படுகிறீர்கள் அப்படியிருக்கும் போது சிவாஜி புரொடகஷ்ன்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கிறாரே. இதில் உங்களுக்கு வருத்தம் ஏதும் உண்டா?</b>

இது வம்புக்கு இழுக்கும் கேள்வி போல் தெரிகிறது. யார் நடித்தாலும் எனக்கு சந்தோஷமே. அப்படிப்பார்த்தால் சிவாஜி புரொடக்ஷன் தயாரிப்பில் நான்தானே முதலில் நடித்தேன். 'வெற்றி விழா'வந்தபோது ரஜினி வருத்தப்படவில்லையே?

<b>மும்பை எக்ஸ்பிரஸில் நீங்கள் சொல்ல வரும் விஷயம் என்ன?</b>

விஷயம் என்பதை காட்டிலும் இந்த படம் முழுக்க அன்பும், பாசமும் தொடர்ந்து இழையோடுவதை காணலாம்.

<b>ஏற்கனவே 'வானம் வசப்படும்' படத்தில் பி.சி. ஸ்ரீராம் டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளார். அதற்கும் மும்பை எக்ஸ்பிரஸூக்கும் என்ன வித்தியாசம்?</b>

கேமராமேன்தான் (சிரிக்கிறார்). நிறைய வித்தியாசங்கள் உள்ளன. முதல் முறை என்பதைவிட முறையாக செய்ய வேண்டும் என்பதுதான் எனது எண்ணம். வித்தியாசங்களை இங்கு சொல்லி விளக்கமுடியாது.

<b>உங்களுக்கு மும்பை எக்ஸ்பிரஸ் திருப்தியை தந்துள்ளதா?</b>

நான் சந்தோஷமாக சிரித்து பேசுவதிலிருந்தே நீங்கள் புரிந்து கொள்ளலாமே.

<b>அடுத்து என்ன படம்?</b>
ரோஜா கம்பைன்ஸ் தயாரிப்பில் கெளதம் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறேன். அது முடிந்ததும் மீண்டும் ராஜ்கமல் தயாரிப்பில் நடிப்பேன்.


நன்றி: சினிசௌத்.கொம்
Reply
#2
சிறுவயது நடிகனாக நடன உதவி ஆசிரியராக முடி திருத்துவராக பல தொழில்கள் செய்து வெறும் ஏழாம் படிப்பே பள்ளிப்படிப்பைக் கொண்டவர் ஆனால் இன்று பல இலக்கிய வல்லனுர்களுடனேயே வாதிடக்கூடிய திறமை பெற்றுள்ளார் ஆங்கிலம் ஹிந்தி மற்றும் சகல மொழிகளிலும் பேசக்கூடியவர் அவருடைய மனிதாபிமானத்துககு அடிததளமாக இருப்பதற்க்கு காரணம் இளம் வயதிலிருந்து இடதுசாரிக் கருத்துகளால் ஈர்க்கப்டடிருந்தார். அன்பே சிவம் படத்தின் மூலம் இன்றும் அதே நிலையில் இருப்பதைக்காட்டியுள்ளார். ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்திருந்தும் மனதால் உள் பூணூலையும் வெளிப் பூணூலையும் அறுத்தெறிந்தவர் திரைத்துறையில் அவரது அவரது புதிய முயற்சிகள் வெற்றிப்பெற நாமும் வாழ்த்துவோம்.
Reply
#3
கமலின் திறமையை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. சும்மா விரல் வித்தை மட்டும் காட்டி விட்டு இது தான் சிறந்த நடிப்பு என தம்பட்டம் அடித்துக் கொண்டு இருப்பவர்கள் மத்தியில் நடிப்புக்காக தன் உடலை வருத்தி நடிக்கக் கூடிய சிறந்த கலைஞன் கமல்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)