03-23-2006, 11:08 AM
சிறிலங்கா அரசாங்கத்தின் ஆதரவுடன் கிழக்கில் துணை இராணுவக் குழுக்கள் இயங்குவதாக அனைத்து வகை இன ஒதுக்கல்கள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான சர்வதேச அமைப்பின் தலைவர் நிமல்கா பெர்னாண்டோ குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள நேர்காணல்:
கேள்வி: உங்கள் நாட்டில் இன ஒடுக்குமுறை உள்ளதா?
பதில்: ஆமாம். இன ரீதியான ஒடுக்குமுறை உள்ளது. சிங்கள தீவிரவாதிகள் அரசாங்கத்தில் இடம்பெற்றுக் கொண்டு தன்னாட்சிக்கும் சனநாயக உரிமைகளுக்காகவும் பல ஆண்டுகளாக போராடுகிற தமிழர் தலைமைப்பீடத்துக்கு எதிராக பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கேள்வி: ஒட்டுமொத்தமான நிலையை விளக்க முடியுமா?
பதில்: ஒரு தோல்வியடைந்த நாடு என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் சிறிலங்கா. காலனி ஆதிக்கத்துக்குப் பின்னர் பல்லின, பல் கலாச்சார, பல் மத அரசியல் நெறிகளை கடைபிடிக்காத ஒரு நாடு.
கேள்வி: இதனது விளைவு?
பதில்: இனப் பிரச்சனையால் இரு தசாப்தகாலத்துக்கும் மேலான யுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியதானது.
ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். காணாமல் போயினர்.
இந்தப் பெருமளவிலான உயிரிழப்புகளை தமிழினமே சந்தித்தது. பல இலட்சக்கணக்கான மக்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமாக இடம்பெயர்ந்தனர். அந்த இனத்தையே ஒட்டுமொத்தமாக அழித்துவிட்டது.
கேள்வி: இதற்கு தீர்வு இல்லையா?
பதில்: கடந்த 2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்த போதும் சிறிலங்காவின் புதிய அரச தலைவராக மகிந்த ராஜபக்ச நவம்பர் 19 ஆம் நாள் பதவியேற்ற பின்பு போர்ச் சூழல் உருவாகி உள்ளது. வடக்கு - கிழக்கில் வன்முறைகள் வெடித்தன. நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் நிராயுதபாணிகளாக பொதுமக்களே.
கேள்வி: இனப்பிரச்சனையில் தொடர்புடையவர்கள் பற்றி?
பதில்: அரசியல் படுகொலைகள் தொடர்பாக அரசாங்கம் எதுவித விசாரணையையும் நடத்துவதில்லை. அரசாங்கத்தின் ஆதரவுடன் துணை இராணுவக் குழுக்கள் இயக்கப்பட்டு கிழக்குப் பகுதியில் வன்முறைகளையும் கொலைகளையும் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் கூட அவர்கள் மீதான வன்முறைக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.
கேள்வி: ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட ஆசிய நாடுகளில் ஒன்று இலங்கை. 17,500 பேர் முதல் 41 ஆயிரம் பேர் வரை உயிரிழந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பதில்: போருக்குப் பின்னைய இலங்கையில் தமிழ் மற்றும் முஸ்லிம்கள் மீது மற்றொரு தாக்குதலாக நிகழ்ந்தது ஆழிப்பேரலை. தென்னிலங்கையில் மீளமைப்பும் புனரமைப்பும் பெரும் கவனமெடுத்துச் செய்யப்பட்டன. வடக்கு - கிழக்குப் பிரதேசம் புறக்கணிக்கப்பட்டது. அரச தலைவர் மகிந்தவின் அம்பாந்தோட்டை தொகுதியில் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டோரின் தேவைக்கும் அதிகமாக 500 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. ஆனால் வடக்கு - கிழக்கில் நூற்றுக்கணக்கானோர் இன்னமும் இடைத்தங்கல் முகாம்களிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
இது விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை கூட உரிய முறையில் கவனமெடுக்கவில்லை. அக்சன் எய்ட் என்ற அமைப்பு ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டோரின் மனித உரிமை மீறல் தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கேள்வி: சிறுபான்மை இனம் தொடர்பாக?
பதில்: இலங்கையின் முஸ்லிம் சிறுபான்மையினரும் பாதிக்கப்படுகின்றனர். அரசாங்கச் செயற்பாட்டின் தோல்வியினால் ஒருபுறமும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையேயான முறுகல் நிலையில் மறுபுறமும் அவர்கள் பிரச்சனகளை எதிர்கொள்கின்றனர். கடந்த ஆண்டு பல முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர். உரிய காரணங்களின்றி கைது செய்யப்பட்டனர்.
கேள்வி: தமிழர் நிலைமை?
பதில்: இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து மொழி ரீதியாக ஒடுக்குமுறைக்குள்ளாக்கி வருகின்றனர். சிறிலங்காவின் உத்தியோகபூர்வ மொழியாக தமிழ் இருந்தபோதும் அதை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது. தமிழர்கள் கைது செய்யப்பட்டு ஒப்புதல் வாக்குமூலங்களை சிங்களத்தில் கட்டாயப்படுத்தி வாங்குகின்றனர். அவர்களுக்கு அதில் என்ன இருக்கிறது என்றே தெரியாது. வடக்கு - கிழக்கில் அரசாங்கக் கட்டுப்பாட்டு பகுதி காவல்நிலையங்களில் நன்கு தமிழ் தெரிந்த அதிகாரிகள் நியமிக்கப்படுவதில்லை. அஞ்சல் நிலையங்களில் தமிழில் தந்தி அனுப்பும் வசதிகூட இல்லை.
கேள்வி: பெண்களுக்கு என்ன விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன?
பதில்: பல மடங்கு பெண்கள்தான் ஒடுக்குமுறைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். போர்க் காலம் முழுமைக்கும் தமிழ்ப் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. யுத்த நிறுத்த ஒப்பந்த காலத்திலும் அது நீடித்தது.
கடந்த டிசம்பர் மாதம் முதல் வடக்கு கிழக்கில் அரச படைகளின் அட்டூழியங்களும் சித்திரவதைகளும் பெண்களுக்கு எதிராக அதிகரித்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட தர்சினி என்ற இளம் பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை இன்னமும் அரசாங்கம் தாக்கல் செய்யப்படவில்லை. அப்பெண்ணின் சடலம் சிறிலங்கா கடற்படை முகாமுக்கு அருகில் இருந்த பாழடைந்த கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது.
கேள்வி: இந்த சமூகங்களின் எதிர்காலம்?
பதில்: சிறுபான்மை இனங்களும் தேசிய இனங்களும் உலகம் முழுமைக்கும் உரிமைக்காக, அரசுக்காக போராடி வருகின்றன. அமெரிக்க அதிபர் புஸ் எண்ணெய் தாகம் கொண்டுள்ளார். இன ஒதுக்கல் என்பது எந்த நிலையில் நிகழ்த்தப்பட்டாலும் அதை எல்லா நிலைகளிலும் எதிர்த்துப் போராட வேண்டியது அவசியம்.
கேள்வி: ஜெனீவாவில் கடந்த பெப்ரவரியில் நடந்த பேச்சுக்கள் மற்றும் ஏப்ரலில் நடைபெற உள்ள பேச்சுக்கள் குறித்து?
பதில்: ஜெனீவாவில் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுக்களை நாம் வரவேற்கிறோம். ஏனெனில் இலங்கை மீண்டும் யுத்தத்துக்குப் போக முடியாது. மக்கள் ஆழிப்பேரலையாலும் போரினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆகையால் பேச்சுக்கள் மூலமாக இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட வேண்டியது அவசியமாகும். இப்பேச்சுக்களில் நாம் நேரடியாக பங்கேற்காவிட்டாலும் பொதுமக்கள் அமைப்பு என்கிற வகையில் அமைதி முயற்சிகளை ஆதரிக்கிறோம்.
அரசாங்கத்திடமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பேசுகிறோம். இருதரப்பு நம்பிக்கையையும் அமைதியையும் கட்டியெழுப்ப முயலுகிறோம்.
இந்தப் பிரச்சனைக்கு யுத்தம் மூலம் இல்லாமல் பேச்சுக்கள் மூலமான தீர்வு காண்பதற்கான மனநிலையை சிங்களவர் மத்தியில் உருவாக்க முயற்சித்து வருகிறோம் என்றார் நிமல்கா பெர்னாண்டோ.
தகவல் மூலம் புதினம்.கொம்