Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அறிவாலயத்தில் ஜெ.வுக்கு 'பாராட்டு'!
#1
அறிவாலயத்தில் ஜெ.வுக்கு 'பாராட்டு'! - Saturday, March 25, 2006



இன்று தினமணியில் வந்த செய்தி.

அதிமுக பொதுச் செயலாளரைப் பாராட்டிப் பேசுகின்றனர் திமுகவினர். அதுவும் அண்ணா அறிவாலய வளாகத்துக்குள்ளேயே இது நடக்கிறது. இது ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா?

திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான நேர்காணல் அறிவாலயத்தில் நடந்து வருகிறது. நேர்காணலுக்கு வந்திருந்த கட்சிக்காரர்கள் தான் ஜெயலலிதாவை பாராட்டி வெளியில் பேசினர்.

எதற்காகப் பாராட்டு? ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் எம்.எல்.ஏ.வாகவோ, எம்.பி.யாகவோ, அமைச்சராகவோ வர முடியும் என்ற நிலை அதிமுகவில் இல்லை. தேர்தல் பிரசாரத்துக்கு சுவரில் வெள்ளையடித்துக் கொண்டிருந்தவரை அதே தொகுதியின் எம்.எல்.ஏ.வாக்கியதும், அரசு பஸ் ஊழியர் அமைச்சராக முடிந்ததும் அதிமுகவில் மட்டுமே இப்போதுகூட சாத்தியம்.

மாவட்டச் செயலாளர் சொல்வதைக் கூட முழுமையாக நம்பிவிடாமல், தனக்குரிய ஆள்கள் மூலம் விசாரித்து, அடிமட்டத் தொண்டன் பக்கமும் அதிர்ஷ்டக் காற்று வீசச் செய்பவர் ஜெயலலிதா என்ற கருத்து உள்ளது.

ஆனால், திமுகவில் குறிப்பிட்ட சில தலைவர்கள், அவர்களுடைய குடும்பத்தினர் தான் பதவிகளை வகிக்க முடியும் என்ற கருத்து உருவாகிவிட்டது. அதனால் தான் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு கொடுத்தவர்களின் எண்ணிக்கை அதிமுகவைவிட மிகவும் குறைவாகவே உள்ளது என திமுகவினர் கூறுகின்றனர்.

வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணலில் மாவட்டச் செயலாளர் போன்ற உயர் பதவியில் இருப்பவர்கள் உள்ளே இருந்தால், குறைகளை எப்படி எடுத்துச் சொல்ல முடியும்? என்றும் அவர்கள் கேட்கின்றனர்.

வேட்பாளர் தேர்வு, கட்சிப் பதவிகள் தருவது என்பதில் ஜெயலலிதாவின் அணுகுமுறை தொண்டர்களை ஊக்குவிப்பதாக இருக்கிறது என்று திமுகவினர் கூறுகின்றனர்.
.

.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)