Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
ஆங்கிலப் பெயருர்களுடன் வரும் தமிழ் திரைப்படங்கள் கனடாவில் திரையிடப்பட்டால் அதற்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக தமிழ் படைப்பாளிகள் கழகம் அறிவித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற கழகத்தின் செயற்க்குழு கூட்டத்தில் இவ் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவற்றின் தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடாத்தும் ஆங்கிலப் பெயர்களுக்கெதிரான இப்போராட்டத்தை புகலிடத்தில் தமிழ் படைப்பாளிகள் கழகம் முன்னெடுக்க விருக்கிறது. தற்போது கனடாவில் நிறைவேற்றப்பட்டடுள்ள இத்தீர்மாம். தொடர்ந்து பிரித்தானியாவிலும் கொண்டு வரப்பட விருப்பதாக தமிழ் வார இதழ் ஒன்றிற்க்கு தமிழ் படைப்பாளிகள் கழகத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
இதனை ஒரு முன் உதாரணமாகக் கொண்டு ஏனைய நாடுகளில் இருக்கும் சமுதாய நோக்கமுள்ள அமைப்புக்கள் ஆங்கிலப் பெயர் வைத்த தமிழ் திரைப்படங்களை எதிர்க்க முன்வரவேண்டும் என் வேண்டுகொள் விடுக்கிறோம்.
எதிர்வரும் இந்து வருடப்பிறப்பின் பொது வெளிவரவிருக்கும் இரண்டு ஆங்கிலப் பெயர் கொண்ட தமிழ் படங்களின் வெளியீட்டுக் கெதிராக தமிழ் நாட்டில் மட்டுமன்றி கனடாவிலும் போராட்டங்கள் நடைபெறவிருக்கிறது.
நன்றி: வன்னித்தென்றல்
நேசமுடன் நிதர்சன்
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Posts: 134
Threads: 5
Joined: Nov 2004
Reputation:
0
நான் நினைக்கிறேன் இந்த போராட்டம் வெற்றியளிக்காது என்று. ஏனென்றால் இங்குள்ள எல்லோரும் திரைப்பட பைத்தியக்காரர்கள்
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
ராகவா எமது ஈழப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டகாலத்தில் இப்படித்தான் பலர் சொன்னார்கள் அது இப்போது ஆலமரமாக வளரவில்லையா? நல்லதையே சிந்திப்போம். நாங்கள் அந்த திரைப்படத்தை பார்க்கமாட்டோம் என்று உறுதியாக இருந்தால் வெற்றியளிக்கும்தானே? இங்கு படத்தை திரையிடுபவர்களை சந்தித்து முதலில் அகிம்சையாகப்பெசலாம் பெரும்பாலும் அவர்கள் தங்கள் பணத்தை இழக்கவிரும்பமாட்டார்கள்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 998
Threads: 42
Joined: Sep 2003
Reputation:
0
நல்லதோர் அத்திவாரம்... 8)
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
உப்பிடித்தான் சுவிஸிலும் ஒரு முறை இந்திய திரைப்படங்களை திரையிடக் கூடாது என்று தடை போட்டார்கள். ஆனால் எவர் தடை போட்டனரோ அவர்களே பினாமிகளை வைத்து படங்களை வெளியிட்டார்கள்.சில விடயங்களை ஆர்ப்பாட்டத்தால் மாற்றி விட முடியாது. அது விளமஇபரத்தைத்தான் தேடித்தரும். நேரடியாக நேர்மையாக பேசினால் எதனையும் செய்யலாம். படத்தலைப்பை மாற்றவே மாட்டேன் என்று அடம் பிடித்த சூரியா பாரதிராஜா மாற்றியது போல்.
:roll: :roll: :roll: :roll:
<i><b> </b>
</i>
Posts: 151
Threads: 7
Joined: Nov 2004
Reputation:
0
என்ன வீடுகளுக்கை பூந்து எல்லாற்றை வீடியோக்களையும் அடிச்சுடைக்க பேயினமே.. உங்க சனம் முழுக்க கள்ளக் கொப்பிதான் பாக்குதுகளசம்மா தடை உடை எண்டாமல் தங்கடை வேலையை பாக்கிறதை விட்டுப்போட்டு உந்த தடையாலை அந்த குப்பை படங்களுக்கு விளம்பரத்ததை தேடித்தரப்போயினம்.
Summa Irupavan!
Posts: 91
Threads: 5
Joined: Feb 2005
Reputation:
0
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
!!
Posts: 150
Threads: 40
Joined: Jan 2005
Reputation:
0
சினிமா என்ற பொழுதுபோக்கு அம்சம் தான் எங்கட மொழி வாழ்வதையும் அழிவதையும் தீர்மானிக்க போகுதா? ஊரோடினால் ஒத்தோடு என்று சொல்லுவினம். நான் நினைக்கிறன் குறைந்த பட்சம் ஏன் ஓடுது என்று கேட்டுவிட்டு ஓடும் திறனாவது நம்மிடம் இருக்க வேண்டும். அவர்கள் தங்கள் கட்சிகளை பிரபல்யப்படுத்த கிடைத்த நல்ல உணர்ச்சிவசப்படுத்தும் மொழித்தலைப்பை தூக்கி பிடித்தால் நாங்களும் அதை நம்பி அவர்களுக்கு வால் பிடிக்க நினைக்கின்றோம். கோசங்கள் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கின்றன. கருணைஇல்லம் என மாட்டிறைச்சிக்கடைக்கு பெயர்சு10ட்டி விட்டால் போதுமானதா? அது போல தான் இதுவும். வரப்போகிற வக்கிரம் பி.எப் என்று வந்தால் என்ன புளுபிலிம் என்று வந்தால் என்ன நீலப்படம் என்று எந்தால் என்ன. மாடுவிழுந்த பக்கமே குறி சுட்ட கதையாய் தமிழ் என்று சொல்லி விட்டால் நாமும் கோசம் போட தொடங்கி விடுகின்றோம்.
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பபொருள் மெய்ப்பொருள் காண்பதிறிவு.
.
.!!
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
சந்திரமுகி.. தமிழ் பெயரா?: சிக்கல் ஆரம்பம்
தமிழ் பாதுகாப்பு இயக்கத்தால் ரஜினியின் "சந்திரமுகிக்கும் பிரச்சனை கிளம்பியுள்ளது
படம் வெளியாக இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில் இப்படத்தின் பெயர் சமஸ்கிருதத்தில் இருப்பதால் அதை தமிழில் மாற்றச் சொல்லி திருமாவளவன் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
சமீப காலமாக தமிழ்ப் படங்களுக்கு தமிழ்ப் பெயர்கள் தான் சூட்டவேண்டும் என்ற தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் கோரிக்கை வலுத்து வருகிறது. இதற்கு கோலிவுட்டில் ஒருபுறம் எதிர்ப்பு கிளம்பினாலும், எதற்கு தேவையில்லாத பிரச்சினை என்று பலரும் தங்களது படத்தின் பெயர்களை மாற்றி வருகின்றனர்.
சேரன் தன்னுடைய "டூரிங் டாக்கீஸ்' படத்தின் பெயரையும், இயக்குனர் சூர்யா தனது "பி.எப்.'என்ற படத்தின் பெயரையும் மாற்றிவிட்டனர்.
கமலின் "மும்பை எக்ஸ்பிரஸ்' படத்தின் பெயரையும் மாற்றச் சொல்லி அதற்கு கெடுவும் விதித்து விட்டார் திருமாவளவன். ஆனால் பெயரை மாற்ற முடியாது என்று கமல் கூறிவருகிறார்.ஏற்கெனவே டாக்டர்.கிருஷ்ணசாமியால் "சண்டியர்' படத்தின் பெயரை மாற்றிய கமல், இப்போது திருமாவளவனின் மிரட்டலுக்கும் பணிவாரா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும்.
இது ஒரு புறமிருக்க, ரஜினியின் சந்திரமுகி வேகமாக ரெடியாகி தமிழ்ப் புத்தாண்டுக்கு ரிலீஸ் ஆகத் தயாராக உள்ளது.பாடல் கேசட்டுகள் விற்பனை மும்முரமாக நடந்து கொண்டிருக்க, ரசிகர்களும் ரஜினியின் படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இப்போது சந்திரமுகிக்கும் சிக்கல் வந்து விட்டது.
சந்திரமுகி பாடல் கேசட் வெளியீட்டு விழாவில் பேசிய கவிஞர் வாலி, சந்திரமுகி என்பதற்கு தமிழ் அர்த்தம் 'நிலா முகம்' என்று போகிற போக்கில் விளக்கம் தர, அப்போது தான் 'பொறி' தட்டியிருக்கிறது தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தினருக்கு.
சந்திரமுகி என்ற இந்திசமஸ்கிருத பெயரை, தமிழில் மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
படம் வெளியாக இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில், பிரச்சினையை எப்படி சமாளிப்பது என ரஜினி தரப்பு தீவிர ஆலோசனையில் உள்ளது.
மேலும் தனது சமீபத்திய படங்களில், இக்கட ரா.. ரா.. ராமையாவில் ஆரம்பித்து மாத்தாடு மாத்தாடு மல்லிகே வரை பிற மொழிகளை திணிப்பதையும், கதம்..கதம் என போன்ற இந்தி வசனங்களை தமிழர்களின் காதோரத்தில் அப்படியே சொருகிவிடுவதையும் ஒரு கொள்கையாகவே வைத்திருக்கும் ரஜினி, சந்திரமுகியிலும் தேவுடா.. தேவுடா.. என்று தெலுங்கு பாட்டை போட்டுவிட்டுள்ளார்.
இதையும் பிரச்சனையாக்க உள்ளதாம் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம்.
சந்திரமுகி ரூ. 45 கோடிக்கு விலை போயுள்ளதாக சொல்கிறார்கள். இது பாபாவை விட கொஞ்சம் கம்மி தான். ஆனால், பாபா படுதோல்வியடைந்ததால் பாதி பணத்தை திருப்பி வினியோகஸ்தர்களுக்கே கொடுத்தார் ரஜினி. இந்தப் படத்தில் தயாரிப்பு ரிஸ்க் இல்லாத ரஜினிக்கு பாபாவில் கிடைத்த லாபத்தைவிடவும் கூடுதலாகவே சம்பளம் தரப்பட்டிருக்கிறதாம்.
வழக்கமாக வெளிப் படங்களில் நடித்தால் ரஜினி, அதன் என்.எஸ்.சி. ஏரியா வினியோக உரிமையை (வட ஆற்காடு, தென் ஆற்காடு, செங்கல்பட்டு அடங்கிய பாமக பெல்ட் பகுதிகள்) அவரே வைத்துக் கொள்வார். காரணம், இது அதிக விலை போகும் பகுதி. இங்கு 40க்கும் மேற்பட்ட ஏ சென்டர் தியேட்டர்கள் உள்ளன.
ஆனால், இந்தமுறை அந்த உரிமையை ரஜினி வாங்கவில்லையாம். காரணம், டாக்டர் ராமதாஸ் தான். இதனால் இந்த ஏரியாவை சிவாஜி பிலிம்ஸ் மற்றவர்களுக்கு அதிக விலைக்கு விற்றுள்ளது.
பாசிலுக்கு பணம் தந்த சந்திரமுகி டீம்:
இது ஒரு புறமிருக்க, சந்திரமுகி படம் வெளியாக மலையாள இயக்குனர் பாசில் தடையாக இருந்தார் என்று டைரக்டர் பி. வாசு பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
மலையாளத்தில் இருந்து கதையை சுட்டு கன்னடத்தில் படமாக எடுத்துவிட்டு அதையே உல்டா செய்து தமிழில் சந்திரமுகியாக வாசு எடுத்து வந்தது குறித்து பல முறை செய்திகள் வந்தாலும் அதற்கெல்லாம் சந்திரமுகி தரப்பு அமைதியையே பதிலாகத் தந்தது.
இப்போது இந்த விவகாரம் தொடர்பாக வாய் திறந்திருக்கிறார் வாசு. அவர் கூறுகையில்,
சந்திரமுகி படம் மலையாளத்தில் வெளியான பாசில் இயக்கிய மணிச்சித்திரத்தாழின் கதை அல்ல. கதைக்கு ஜாலியாக ஆடிப்பாடும் கூட்டுக் குடும்பம் தேவைப்பட்டது. மணிச்சித்திரத்தாழ் படத்தில் ஏற்கெனவே இப்படி ஒரு காட்சி இருந்ததால் பாசிலிடமும், தயாரிப்பாளர் பாப்பச்சனிடமும் பணம் கொடுத்து காட்சிக்கான உரிமையை வாங்கிவிட்டோம்.
ஆனால் இது ரஜினிக்காக நான் எழுதி டைரக்ட் செய்த படம். இப்போது சந்திரமுகியை முடக்க பாசில் வழக்கு போடப் போவதாக அறிந்து நான், ரஜினி மற்றும் பிரபு ஆகியோர் அதிர்ந்துவிட்டோம்.
பணத்தை வாங்கிக் கொண்டு இப்படி நடந்து கொள்கிறாரே என்று வருத்தப்பட்டோம். இப்படத்தின் தெலுங்கு உரிமையையும் அவர் கேட்டார்.
இறுதியில் அவருடன் பேச்சு வார்த்தை நடத்தி பெரிய தொகை கொடுத்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தோம். பாசில் இவ்வாறு நடந்து கொண்டது எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது என்று கூறியுள்ளார்.
இத்தனைக்கும் ஒண்ணு தெரியுமோ..?
பாசிலும் வாசுவும் கேரளாக்காரர்கள் தான்.
தனது ஊரைச் சேர்ந்தவர் என்பதால் வாசுவின் அப்பாவுக்கு கோடம்பாக்கத்தில் வாழ்வை உருவாக்கித் தந்தவர் எம்ஜிஆர்.
நன்றி தட்ஸ்தமிழ்
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
Nitharsan Wrote:ஆங்கிலப் பெயருர்களுடன் வரும் தமிழ் திரைப்படங்கள் கனடாவில் திரையிடப்பட்டால் அதற்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக தமிழ் படைப்பாளிகள் கழகம் அறிவித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற கழகத்தின் செயற்க்குழு கூட்டத்தில் இவ் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவற்றின் தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடாத்தும் ஆங்கிலப் பெயர்களுக்கெதிரான இப்போராட்டத்தை புகலிடத்தில் தமிழ் படைப்பாளிகள் கழகம் முன்னெடுக்க விருக்கிறது. தற்போது கனடாவில் நிறைவேற்றப்பட்டடுள்ள இத்தீர்மாம். தொடர்ந்து பிரித்தானியாவிலும் கொண்டு வரப்பட விருப்பதாக தமிழ் வார இதழ் ஒன்றிற்க்கு தமிழ் படைப்பாளிகள் கழகத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
இதனை ஒரு முன் உதாரணமாகக் கொண்டு ஏனைய நாடுகளில் இருக்கும் சமுதாய நோக்கமுள்ள அமைப்புக்கள் ஆங்கிலப் பெயர் வைத்த தமிழ் திரைப்படங்களை எதிர்க்க முன்வரவேண்டும் என் வேண்டுகொள் விடுக்கிறோம்.
எதிர்வரும் இந்து வருடப்பிறப்பின் பொது வெளிவரவிருக்கும் இரண்டு ஆங்கிலப் பெயர் கொண்ட தமிழ் படங்களின் வெளியீட்டுக் கெதிராக தமிழ் நாட்டில் மட்டுமன்றி கனடாவிலும் போராட்டங்கள் நடைபெறவிருக்கிறது.
நன்றி: வன்னித்தென்றல்
நேசமுடன் நிதர்சன்
<span style='font-size:25pt;line-height:100%'>இது என்னாச்சு?</span> :?: :?:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>