04-17-2005, 04:56 AM
<b>சிறீலங்கா அரசிற்கு ஏற்பட்ட புதிய தலைகுனிவு! </b>
ஞாயிற்றுக்கிழமை 17 ஏப்பிரல் 2005 6:30 ஈழம்
சிறீலங்கா அரசாங்கத்தால் புதிய தூதுவராக கனடா நாட்டிற்கு தெரிவு செய்யப்பட்ட சந்திரானந்தா டி சில்வாவின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென கனடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இத்திடீர் முடிவை இவ் வாரப்பகுதியில் கனடிய அரசாங்கம் சிறீலங்கா அரசிற்குத் தெரிவித்ததாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறீலங்கா பாதுகாப்பமைச்சின் செயலாளராக சந்திரானந்த டி சில்வா பணியாற்றிய காரணத்தால் அக்கால கட்டத்தில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பானவர் என்ற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாது விட்டாலும் கூட கனடிய குடிவரவு குடியகல்வுச் சட்டம் 2002 இன் பிரகாரம் கனடாவிற்குள் நுழைவதற்குத் தகுதியற்றவர் என கனடிய அரசாங்கம் சிறீலங்கா அரசிற்கு அறிவித்துள்ளது.
இலங்கையில் நிகழ்த்தப்பட்டு வரும் மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு விடுதலைப்புலிகளே காரணம் என வெளி உலகத்திற்கு காட்ட முயன்று வரும் சிறீலங்கா அரசாங்கத்திற்கு நல்ல பாடம் ஒன்றை கனடிய அரசாங்கம் புகட்டியுள்ளது.
சந்திரானந்தா டி சில்வா பாதுகாப்புச் செயலாளராகப் பதவியேற்கும் முன்னர் தேர்தல் ஆணையாளராகப் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கனடிய அரசியல் மட்டத்தில் செல்வாக்குச் செலுத்தும் ரொறொன்ரோ வாழ் தமிழர்கள்தான் கனடிய அரசின் இம் முடிவிற்குக் காரணம் என கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் விசனம் வெளியிட்டுள்ளன.
சுட்டது புதினம்

TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS