Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வசந்தம் வந்தும்...
#1
<img src='http://img256.echo.cx/img256/6562/bird127to.jpg' border='0' alt='user posted image'>

<b>வசந்தமிது வசந்தம்
பூமித்தாயின் விந்தையிது
அதிகாலை வேளையது
குருவி தானும் பாட்டெடுக்க
தென்றல் தானும் தாள மிட
தெம்மாங்கு விழுகுது காதெங்கும்..!

மலரவள் மொட்டு விரியும் நேரமது
பனித்துளி தூவுது பன்னீர்
ஆதவன் கரங்கள் சீராட்ட
காற்றுக் காவுது வசீகர வாசம்
கனவுகள் பெருகுது
வர்ணம் வர்ணமாய்...!

சோலையவள் கோலம் மாற்றி
பசுமைச் சேலை கட்ட
தோப்பெங்கும் பறவைகள்
கும்மியடிக்குது
துள்ளியோடும் புள்ளி அணில்
தூது செல்ல
சருகுகள் சரசரத்தே
சேதி சொல்லுது...!

பள்ளிச் சிட்டுக்கள்
பாடச் சுமை இறக்கிச் சிறகடிக்க
மகிழ்ச்சியங்கு களைகட்டுது..!
சின்ன உயிருமங்கே
சுறுசுறுப்பாய் இயங்குது
சிறப்பான காலத்துள்
தன்னினம் பெருக்கிட....!

வண்ணத்துப் பூச்சியவள்
"பஷன் சோ" காட்ட
மலர்களங்கே ஏங்கித் தவிக்குது
சமயம் பார்த்துத்
கள்ளனவன் கருவண்டு
திருடுகிறான் அமுதம்
மகரந்தமது காற்றில் பறந்து
துப்புத்துலக்குது...!

போர்த்துத் திரிந்த மனிதரெல்லாம்
போர்வை விலக்கி
முக்கால் முழத்தோடு அலைய
கண்கள் பலதும் கூட அலையுது
காட்சிகள் இலவசமாய்க் காண...!
அங்கு...
கார்கள் கூட விதிவிலக்கல்ல
அவையும் கூட ஆடை கழற்றுது...!

இப்படியாய்...
வசந்தக் கதை வாசமாய் வீச
சொந்தக் கதை சோகமாய்
அன்பு செய்யும் வேளை வந்தும்
மலரவள் ஊடல் நேரம் கூடிப்போச்சு...!
கொள்கை கொண்ட
குருவிதானும் என்ன செய்யும்
தனிய இருந்து
சோகம் ராகம் இசைக்குது...!</b>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
ம் இசையுங்கோ இசையுங்கோ சோகராகம். நல்ல கவிதை. வித்தியாசமாய் இருக்கு. :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
நல்லது வசந்த வரவேற்பு அதில சோக கீதம் ஏன்.
தொடருங்க...............
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#4
விடிய நான்கு மணிக்கே இங்க தோப்பில குருவிகளின் இன்ப அட்டகாசம் தாங்க முடியல்ல...பாட்டும் பறப்புமாய் ஒரே கும்மாளம்.. இந்தக் குருவிகளும் அதை ரசிச்சிட்டு இருக்க மலரின் ஞாபகம் வந்திச்சா...அதுதான் கிறுக்கலின் முடிவில் வந்திருக்கு...சோகம்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நன்றி கருத்தும் பகர்ந்து உற்சாகமும் தந்த தமிழினிக்கும் குளக்காட்டானுக்கும்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
நல்ல கவிதை,
வாழ்த்துக்கள் குருவிகளே! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#6
Quote:அன்பு செய்யும் வேளை வந்தும்
மலரவள் ஊடல் நேரம் கூடிப்போச்சு...!
கொள்கை கொண்ட
குருவிதானும் என்ன செய்யும்
தனிய இருந்து
சோகம் ராகம் இசைக்குது...!

சோகச்சுமையிலும் சுகம் தரும்
வசந்த காலத்தின் நாயகி
மலரின் சொந்தக்காரனுக்ககே
சோகம் என்றால் - மானிடர்
எங்களின் சோகம்
காட்டாறாக அடித்து சொல்வதை
யாரறிவார்.....

குருவி அண்ணா அழகான கவி...நீங்கள் தோப்பில் பார்த்ததை இந்தக் கவிக் கண்கள் ஊடாக பார்க்க வைத்திருக்கிறீர்கள்...
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
" "
" "

Reply
#7
மன்னரின் வாழ்த்துக்கும் தங்கையின் விமர்சனத்துடன் கூடிய வாழ்த்துக்கும் நன்றிகள்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
Quote:வண்ணத்துப் பூச்சியவள்
"பஷன் சோ" காட்ட
மலர்களங்கே ஏங்கித் தவிக்குது
அது தானே நாம பிடிச்சிட்டு இருக்கிறம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Quote:கொள்கை கொண்ட
குருவிதானும் என்ன செய்யும்
தனிய இருந்து
சோகம் ராகம் இசைக்குது...!
இந்த வசந்த காலத்தில்
மலரும் மலருக்காய்
சென்ற வசந்த காலத்தில் இருந்து
காத்திருக்கும் குருவிக்கு
இப்படியும் சோதனையா...?


வாழ்த்துக்கள் அண்ணா <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#9
<b>போர்த்துத் திரிந்த மனிதரெல்லாம்
போர்வை விலக்கி
முக்கால் முழத்தோடு அலைய
கண்கள் பலதும் கூட அலையுது
காட்சிகள் இலவசமாய்க் காண...!
அங்கு...
கார்கள் கூட விதிவிலக்கல்ல
அவையும் கூட ஆடை கழற்றுது...! </b>

வசந்தம் வந்ததும்
வந்துதித்த கற்பனை அருமை.
வாழ்த்துக்கள்...
Reply
#10
இயற்கையின் அதிசயத்தையும்.... அழகையும்.... என்றாவது மனிதன் ரசிக்க முயற்சித்திருக்கின்றானா.....???? Cry

காலவெள்ளத்தில்... நேரத்தை விஞ்சுகின்ற அவனது ஓட்டத்தில்
கவிதைகளில் மட்டுமே... அதனை ரசிக்க முடிகிறது. Cry

வசந்தத்தை வலைக்குள் பிடித்துப்போட்ட குருவிக்கு வாழ்த்துக்கள்...!! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:: ::

-
!
Reply
#11
குருவிகள் தந்த கொஞ்ச வசந்த வாசத்தை நுகர்ந்து கருத்தும் வாழ்த்தும் தந்த கவிதனுக்கும் சண்முகி அக்காவுக்கும் குறும்பனுக்கும் நன்றிகள்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)