04-29-2005, 01:55 AM
<img src='http://kurumpoo.yarl.net/images/bharathithasan2.gif' border='0' alt='user posted image'>
புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாள் இன்று. அவர் 29.04.1891 புதுவையில் பிறந்தார். அப்பா: கனகசபை முதலியார் (புதுச்சேரியில் பெரும் வணிகர்), அம்மா: இலக்குமி அம்மாள், மனைவி: பழனி அம்மாள் (1920 இல் திருமணம்)
மற்றும்படி பாரதிதாசன் பற்றி நீண்டு விரித்து எழுத நான் விரும்பவில்லை. காரணம், புரட்சிக் கவிஞரின் கவிதைகள் புரட்சிக் கவிஞர் யார் என்பதைச் சொல்லும். அவர் கவிதைகள் பேசும் - இரத்தத்தைச் சூடாக்கும் - நரம்பினில் மின்சாரம் செலுத்தும் - கண்கள் விரியச் செய்யும் - நெஞ்சு நிமிர்த்தச் சொல்லும் - உலகமே உனதென்று உறுதிசொல்லும்!
இதோ அவரின் கவிதை ஒன்று:
புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம். (புதிய)
பொதுஉடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோ டதைஎங்கள் உயீரென்று காப்போம். (புதிய)
இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்
"இது எனதெ"ன்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம். (புதிய)
உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம்
"ஒருபொருள்தனி" எனும் மனிதரைச் சிரிப்போம்.(புதிய)
இயல் பொருள் பயன்தர மறுத்திடில் பசிப்போம்
ஈவதுண்டாம் எனில் அனைவரும் புசிப்போம். (புதிய)

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->