Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நியூட்டனை கடத்தியது யார்?
#1
நியூட்டனை கடத்தியது யார்?

ழூ தலைநகரில் ஒரே நாளில் இரு முக்கிய புள்ளிகள் கடத்தல்

கொழும்பில் கடந்த மாத பிற்பகுதியில் மோசமான மூன்று சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையின் முக்கியஸ்தர் ஹநியூட்டன்' (தாமோதரம்பிள்ளை சிவகுமார்) கடத்தப்பட்டது அல்லது காணாமல் போனமைஇ கல்கிசை பொலிஸ் நிலையப் பயங்கரவாத தடுப்புப் பிரிவைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் ரி.ஜெயரட்ணம் கடத்தப்பட்டமை மற்றும் பிரபல ஊடகவியலாளர் ரி.சிவராம் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமைஇ மேலும் பல சம்பவங்களுக்கு வழிகோலலாமென்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

போர் நிறுத்த காலத்தில் புலிகளுக்கெதிராக நடைபெறும் நிழல் யுத்தத்தின் தொடர்ச்சியே இந்தச் சம்பவங்கள். கிழக்கில் இதுவரை நடைபெற்ற பல சம்பவங்களை விட ஒருவார காலப் பகுதியினுள் நடைபெற்ற இந்த மூன்று சம்பவங்களினதும் விளைவுகள் எவ்வாறிருக்கப் போகின்றன என்பதை ஊகித்தறிய முடியாதுள்ளது.

ஏப்ரல் 20 ஆம் திகதி அதிகாலை 4.30 மணியளவில் வெள்ளவத்தையிலிருந்துஇ கல்வித் திணைக்களத்தைச் சேர்ந்த கனகரத்தினம் மனோகரன் நேரு என்பவருடன் கண்டியை நோக்கி புறப்பட்ட நியூட்டனைஇ அன்று காலை 7.30 மணிக்குப் பின்னர் காணவில்லை. இவருடன் சென்ற நேருவும் இவர்கள் பயணம் செய்த காரும் வாகனச் சாரதியான பண்டிட்ராஜ் என்பவரும் காணாமல் போயுள்ளனர்.

இவர்கள் இராணுவப் புலனாய்வுப் பிரிவால் அல்லது வேறு அரச புலனாய்வுப் பிரிவுகளால் கடத்தப்பட்டிருப்பதாக புலிகள் கருதுகின்றனர். மருத்துவ சிகிச்சைக்காக இவர் கொழும்புக்கு வந்த போதே காணாமல் போயுள்ளதாக புலிகள் கூறும் அதே நேரம்இ மருத்துவ சிகிச்சை அல்லது வேறு அலுவல்களென்றால்இ ஏனைய புலிகளைப் போல் படைத்தரப்பின் அனுமதியைப் பெற்று வந்திருக்கலாமே? ஆனால் அவ்வாறு வராததால் இவரது வருகைக்கு வேறு நோக்கமிருந்திருக்கலாமென படைத்தரப்பு கூறுகிறது.

இதேநேரம் நியூட்டனுடன் வந்தவர்கள் புலிகளுடன் தொடர்புபட்டவர்களல்லர் என்பதால்இ நியூட்டனை கடத்துவதற்காகவே இவ்விருவரும் நியூட்டனுடன் சேர்ந்து கடத்தப்பட்டிருக்க வேண்டும். இதனால் நியூட்டனை கடத்தியவர்கள்இ அவரை விடுவிக்க விரும்பும் பட்சத்திலேயே கார்ச் சாரதியும் கல்வித் திணைக்கள அதிகாரியும் விடுவிக்கப்படுவர். இல்லையேல் அவர்கள் நிலைமை பற்றியும் எதுவும் கூற முடியாது.

20 ஆம் திகதி காலை 7.30 மணிக்குப் பின்னர் நியூட்டனைப் பற்றி அவரைச் சார்ந்தவர்களுக்கு எதுவுமே தெரியாது போய்விட்டது. காரில் சென்று கொண்டிருக்கும் போது வேறு வாகனங்களில் வந்து இவர்களது காரைத் திடீரென இடைமறித்து கடத்தும் சாத்தியமில்லை.

அவ்வாறு சம்பவம் ஏதாவது நடைபெற்றிருந்தால் அதனை பெருமளவு மக்கள் பார்த்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்திருப்பர். அல்லது நியூட்டனை மட்டும் கடத்தியிருந்தால் ஏனைய இருவரும் தப்பியிருப்பர். அல்லது இவர்கள் சென்ற காரை விட்டு விட்டு அதில் சென்றவர்களைத்தான் கடத்துவதென்றால் இவர்கள் சென்ற கார் இவீதியில் எங்காவது ஓரிடத்தில் கைவிடப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால்இ இவற்றில் எதுவுமே நடைபெறாததால் மிகவும் தந்திரமாக காருடன் சேர்ந்து நியூட்டனும் மற்ற இருவரும் கடத்தப்பட்டிருக்கலாமென ஊகிக்கப்படுகிறது.

அதற்கேற்பஇ நியூட்டன் கொழும்புக்கு வந்த நேரம் முதல் அவரது ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்பட்டிருக்கலாம். அல்லது அவரது கையடக்கத் தொலைபேசி மிக நுட்பமாக ஒற்றுக் கேட்கப்பட்டு அவர் செல்லும் ஒவ்வொரு இடங்கள் பற்றியும் துல்லியமாக தகவல் பெறப்பட்டுஇ கொழும்பிலிருந்து கண்டிக்குச் செல்லும் வீதியில் வைத்து தந்திரமாகச் கடத்தப்பட்டிருக்கலாம்.

அதாவது இவர்கள் பயணம் செய்யும் வீதியில் வசதியானதொரு இடத்தில் வழமையான வீதிச் சோதனை போன்று வீதித் தடையை ஏற்படுத்தி இவர்கள் அவ்விடத்திற்கு வந்த போது காரை மறிப்பது போல் மறித்து அதற்குள்ளிருந்தவர்களை வெளியே இறக்கிச் சோதனையிடுவது போல் சோதனையிட்டு எல்லோரையும் அல்லது நியூட்டனை மட்டும் இறக்கித் திடீரென அவர்கள் அல்லது நியூட்டன் எதிர்பாராத வேளையில் மடக்கிப் பிடித்து அவர்கள் வந்த காரில் அல்லது வேறு வாகனத்தில் இவர்கள் ஏற்றப்பட்டு கடத்தப்பட்டிருக்கலாம்.

நியூட்டன் கடத்தப்பட்ட விடயம் எவ்விதத்திலும் வெளியே தெரிந்து விடக் கூடாதென்பதற்காகவேஇ தடயங்கள் எதுவும் இல்லாதவாறுஇ அவருடன் வந்த இருவரும் சேர்த்துக் கடத்தப்பட்டுள்ளனர். அத்துடன் இவர்கள் பயணம் செய்த காரும் காணாமல் போயுள்ளது.

ஆனாலும் நியூட்டனும் அவருடன் சென்றவர்களும் காணாமல் போன தகவல் தெரிய வந்த பின்னர்இ இதற்கும் தங்களுக்கும் எதுவித தொடர்புமேயில்லையென்றும் நியூட்டன் இயக்கத்திலிருந்து விலகி வெளிநாடு செல்ல விரும்பியதால் அவர் வெளிநாடு சென்றிருக்கலாமெனப் படைத்தரப்பு கூறுவதுதான்இ இதில் அவர்களுக்கு ஏதோ தொடர்பிருக்கிறது என்ற ஊகத்தை ஏற்படுத்துகிறது.

நியூட்டன் வெளிநாட்டுக்கு இரகசியமாகத் தப்பிச் செல்வதென்றால்இ கொழும்புக்கு வந்த அவர்இ எவருடனும் தொடர்பு கொள்ளாமல் எத்தனையோ வழிகளில் வெளிநாடு சென்றிருக்கலாம். ஏன் நேரு மாஸ்ரருடனும் கார்ச் சாரதியுடனும் சென்று காணாமல் போக வேண்டும்.

இதேநேரம் படைத்தரப்பால் நியூட்டன் கடத்தப்பட்டதை புலிகள் நன்கறிவர். நியூட்டனின் மிகுந்த முக்கியத்துவம் கருதி அவரை எப்படியாவது விடுவித்து விட வேண்டுமென்பதில் அவர்கள் தீவிரம் காட்டுகின்றனர். தங்கள் வசமுள்ள சிலரை விடுவித்தாவது நியூட்டனை விடுவிப்பதில் புலிகள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர். அதற்கேற்ப தொடர்புகளையும் அவர்கள் ஏற்படுத்தியும் இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தான்இ நியூட்டன் காணாமல் போன 20 ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணம் காணாமல் போனார். இவரை இரவு விருந்துக்கு அழைத்த புளொட் உறுப்பினரான மனோ என்பவரும் பின்னர் காணாமல் போய்விட்டதால்இ மனோவின் துணையுடன் ஜெயரட்ணம் புலிகளால் கடத்தப்பட்டிருக்கலாமென படைத்தரப்பு கருதுகிறது.

அதேநேரம்இ நியூட்டனின் கடத்தலுடன் ஜெயரட்ணம் தொடர்புபட்டோ அல்லது நியூட்டன் கடத்தப்பட்ட தகவல் ஜெயரட்ணத்திற்கு தெரிந்திருந்த நிலையிலோ ஜெயரட்ணம் புலிகளால் கடத்தப்பட்டிருக்கலாமென பொலிஸார் கருதுகின்றனர்.

ஜெயரட்ணத்தை புலிகள் தான் கடத்தியிருந்தால்இ நியூட்டனை விடுவிப்பதற்காக தங்கள் வசமுள்ள எவரையாவது தாங்கள் விடுதலை செய்யத் தயாராயிருப்பதாக புலிகள் கூறியும் நியூட்டனை ஒப்படைத்து ஜெயரட்ணத்தை விடுவிக்கும் முயற்சி எதனையும் அரசு தரப்பு எடுக்கவில்லை.

இதன்மூலம்இ உண்மையிலேயே ஜெயரட்ணத்தை புலிகள்தான் கடத்தியிருந்தாலும்இ அவரை புலிகளிடமிருந்து விடுவிப்பதை விட நியூட்டனை தொடர்ந்தும் தங்கள் வசம் வைத்திருப்பதிலேயே படைத்தரப்பு ஆர்வம் காட்டுவதும்இ நியூட்டனுக்காக உடனடியாக எந்தப் பேரம் பேசலுக்கும் செல்ல படைத்தரப்பு தயாரில்லையென்பதுவும் தெளிவாகிறது.

புலிகளின் சகல நடவடிக்கைகள் பற்றியும் அதிஉயர் இரகசியங்களையும் நியூட்டன் அறிந்து வைத்திருப்பவரென்பதால் அவரிடமிருந்து அவற்றை பெறும் முயற்சியிலும் படையினர் ஈடுபடக் கூடும். அதற்காக அவர்கள் நியூட்டனை சித்திரவதைகள் செய்யலாமெனவும் புலிகள் கருதுகின்றனர்.

புலிகளின் தென்பகுதி நடவடிக்கைகளுக்கான (கொழும்பு நகர் உட்பட) புலனாய்வுப் பிரிவுத் தலைவராக மட்டுமன்றி அந்த நடவடிக்கைகளை மிகவும் துல்லியமாக செயற்படுத்துபவராகவும் நியூட்டன் விளங்குவதாக படைத்தரப்பு பல தடவைகள் கூறிவந்ததால் அவரிடமிருந்து புலிகளின் இரகசியங்களைப் பெறவே படைத்தரப்பு பெரிதும் முயலும்.

யுத்த காலத்திலும் சரி போர்நிறுத்த காலத்திலும் சரி கொழும்பு நகர் உட்பட தென்பகுதியில் புலிகளின் நடவடிக்கை தொடர்வதை அரசும் படைத்தரப்பும் நன்கறியும். அந்த நடவடிக்கைகளுக்கான இயக்குநராகவே நியூட்டனை அவர்கள் கருதுவதால்இ மீண்டுமொரு போர் விரைவில் வெடிக்கும் பட்சத்தில் தென் பகுதிக்கான ஆபத்தை எல்லாவிதத்திலும் தடுக்க இரகசியத் தகவல்களை நியூட்டனிடமிருந்து படைத்தரப்பு பெறுவதற்கும் முயலலாம்.

நியூட்டன் கடத்தப்பட்டதையடுத்துஇ கொழும்பு நகரிலும் தென் பகுதியிலுமிருந்த புலிகளின் உறுப்பினர்கள் பலர் வன்னிக்கும் கிழக்கிற்கும் சென்றுவிட்டதாக இராணுவ புலனாய்வுத் தகவல்கள் கூறுகின்றன. நியூட்டனிடமிருந்து ஏதாவது தகவலைப் பெற்று தங்களுக்கெதிராக படைத்தரப்பில் தீவிர நடவடிக்கைகளை எடுக்கக் கூடுமெனக் கருதியே புலிகளின் தலைமைப்பீடம் இவர்களை வன்னிக்கும் கிழக்கிற்கும் திருப்பியழைத்துவிட்டதாக இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனாலும் கொழும்பிலோ அல்லது தென்பகுதியிலோ அவ்வாறான செயற்பாடுகள் எதிலும் படைத்தரப்பு இதுவரை ஈடுபட்டதாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

அதேநேரம் நியூட்டன் கடத்தப்பட்ட விடயம் தெரிந்த இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வாளர்களை கடத்தி அவர்கள் மூலம் நியூட்டன் பற்றிய தகவல்களை புலிகள் பெறக்கூடுமென படைத்தரப்பு கருதுகிறது.இதன் ஒரு கட்டமாகவேஇ நியூட்டன் கடத்தப்பட்டு சுமார் 20 மணிநேரத்திற்குள் இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணத்தை புலிகள் கடத்தி விட்டதாக படைத்தரப்பு கருதுகிறது.

இதையடுத்தே இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலர் அவசர அவசரமாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கல்கிசை பொலிஸ் நிலைய பயங்கரவாத தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி நிலாப்தீன் (புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் தப்பியவர்)இ இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மேஜர் சாம்சன் ரத்நாயக்கஇ அத்துருகிரிய மிலேனியம் சிற்றியில் பாதுகாப்பான வீட்டிலிருந்து புலிகளுக்கெதிரான நீண்டதூரம் ஊடுருவி தாக்குதல் நடத்தும் படைப்பிரிவுப் பொறுப்பதிகாரியான கப்டன் எம்.எல்.எம். நிலாம்இ மேஜர் முத்தலிப் ஆகியோர் இம்மாத முற்பகுதியில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடன்இ தமிழ் குழுக்களைச் சேர்ந்த முக்கிய உளவாளிகள் சிலரும் பாதுகாப்புக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.இங்குள்ள இராணுவஇ பொலிஸ் புலனாய்வு அதிகாரிகளின் பாதுகாப்பும் பெருமளவில் அதிகரிக்கப்பட்டு அவர்களது நடமாட்டங்களும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

மேலும் நியூட்டனிருக்குமிடத்தை கண்டுபிடிக்கும் நோக்கில் விஷேட பயிற்சி பெற்ற நாற்பதுக்கும் மேற்பட்டவர்களைக் கொண்ட புலிகளின் அணியொன்றும் கொழும்பு நகருக்குள் வந்துள்ளதாகவும்இ நியூட்டனை கண்டுபிடித்து இமுடிந்தால் அவரை மீட்கவும் இல்லையேல் அவரை விடுவிப்பதற்காக படை உயர் அதிகாரிகள் எவரையாவது கடத்தி நியூட்டனின் விடுதலைக்காக பேரம் பேசும் முயற்சியிலும் புலிகள் ஈடுபடக் கூடுமெனவும் படைத்தரப்பு கருதுகிறது.

நியூட்டனும் இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணமும் ஏப்ரல் 20 ஆம் திகதி கடத்தப்பட்டனர். அதுவொரு வியாழக்கிழமை. அடுத்த வியாழக்கிழமை கொழும்பு நகரில் வைத்து கடத்தப்பட்ட பிரபல ஊடகவியலாளர் சிவராம் பின்னர் படுகொலை செய்யப்பட்டார். இராணுவ புலனாய்வுப் பிரிவும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் தமிழ் குழுக்களுமே இவரது கொலைக்குப் பொறுப்பென புலிகள் கடுமையாகக் குற்றஞ்சாட்டினர்.

அதேநேரம் ஜே.வி.பி.இ ஜாதிக ஹெல உறுமய போன்ற மோசமான இனவாதக் கட்சிகளே சிவராமின் படுகொலைக்கான தூண்டுகோலாக இருந்ததாக பல சிங்களக் கட்சிகள் உட்பட பலரும் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருந்தனர். கிழக்கில் மட்டக்களப்பிலும் பொலநறுவை மாவட்ட எல்லைப்புறத்திலும் புலிகளுக்கெதிராக தீவிரமாகச் செயற்பட்ட இராணுவ புலனாய்வுப் பிரிவும் தமிழ் குழுக்களும்இ சிவராமின் கொலையின் மூலம் தலை நகரிலும் செயற்படத் தொடங்கியிருப்பது தெரியவந்தது.

அதற்கு முன்பே நியூட்டனின் கடத்தல் மூலம் கொழும்பிலும் இராணுவ புலனாய்வுப் பிரிவு புலிகளுக்கெதிராக தீவிரமாகச் செயற்படத் தொடங்கியுள்ளமை தெரியவந்தது.

கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் செயற்படும் புலிகளை கடுமையாக எச்சரிக்கும் நோக்கிலும் நியூட்டனின் கடத்தல் அமைந்துள்ளதுடன் இக் கடத்தல் மூலம் தென் பகுதியில் புலிகளின் நடவடிக்கைகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடலாமென படைத்தரப்பு கருதுகின்றது.

இவ்வாறு கடந்த மாதப் பிற்பகுதியில் இடம்பெற்ற மூன்று சம்பவங்களும் ஏதோவொரு விதத்தில் ஒன்றுக்கொன்று தொடர்புபட்டவையாகவேயுள்ளன. ஒருபுறம் புலிகளின் தென்பகுதிச் செயற்பாட்டை முடக்க நியூட்டன் கடத்தப்பட்ட அதேநேரம் மறுபுறம் தெற்கில் தமிழ்த் தேசியத்திற்காக குரலெழுப்பும் ஊடகவியலாளர்களை முடக்கவும் சிவராம் படுகொலை செய்யப்பட்டார்.

ஜெயரட்ணத்தை புலிகளே கடத்தியதாகக் கூறி அந்த விசாரணைகளை மேலும் நகர்த்த முயலாத பொலிஸ் தரப்புஇ சிவராமின் கொலையாளிகளை கண்டறிய முடியாதிருப்பதாக கைவிரித்து வருகிறது. இதுவரை உருப்படியான தகவலெதனையும் பொலிஸாரால் பெறமுடியவில்லை. இராணுவ புலனாய்வுப் பிரிவு மீதும் தமிழ் குழுக்கள் மீதும் குற்றஞ்சாட்டியும் இதுவரை அவ்வாறான கோணத்தில் விசாரணை எதுவும் நடைபெறவில்லை.

இந்தச் சூழ்நிலையில் போர் நிறுத்த உடன்பாடானதுஇ ஏட்டிக்குப் போட்டியாக பேராபத்தை சந்தித்து வருகிறது. யுத்த காலத்தில் எதிரிகளை பல போர் முனைகளில் வெற்றிகொண்ட புலிகளால்இ போர்நிறுத்த காலத்தில் நடைபெறும் நிழல் யுத்தத்தின் போது எதிரிக்கெதிராக எதனையும் செய்யமுடியாத இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலைமை மேலும் தொடருமா அல்லது நிலைமை மாறுமா என்பது இதுவரை தெரியவில்லை
தினகுரல்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)