Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிங்கள அரசின் சதி வலையில் சிக்கியுள்ள தேசத்து துரோகிகளே
#1
சிங்கள அரசின் சதி வலையில் சிக்கியுள்ள தேசத்து துரோகிகளே தமிழர் செய்த தியாகங்களை மறந்து விடாதீர்கள் என்ற தலைப்பிலான துண்;டுப்பிரசுரம் மட்டு-அம்பாறை மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று மாலை விநியோகிக்கப்பட்டுள்ளது. 'தமிழ் மக்கள் பெருமன்றம்" என்ற பெயரிலேயே இத்துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த துண்டுப்பரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. சிங்கள அரசின் சதி வலையில் சிக்கியுள்ள தேசத்து துரோகிகளே தமிழர் செய்த தியாகங்களை மறந்து விடாதீர்கள். எமது தாயக மீட்புக்காக நாம் கொடுத்த விலை அதிகம். யாரும் கொடுக்க முடியாத உயிர்களையும்ääஉடமைகளையும் இழந்து நாம் தமிழ்த்தேசியம் என்ற பரினாமத்துடன் வளர்ந்துவந்துள்ளோம் (வளர்ந்து வருகிறோம்.) எமது இலட்சியங்களை எட்டிப்பாக்கும் நேரத்தில் எம் இனத்தையே ஏப்பம் விட நினைக்கின்ற எட்டப்பொம்மன்களின் கதை என்ன நடக்கின்றது என்பது தற்கால கண்கூடு. நாம் கொடுத்த விலை போதாது என்று எம்மை ஏளனமாக நினைக்கும் சிங்கள வெறிபிடித்த ஜே.வி.பி.ää ஜாதிக ஹெல உறுமயää மற்றும் பேரின வாத சந்திரிக்காää ரணில் அரசுகள் செய்யும் துரோகத்தனத்திற்குள் மூழ்கி விலைமதிப்பற்ற போராளிகள்ää புத்தி ஜீவிகள் போன்றோரைப்பதம் பார்த்து சிங்கள அடி வருடிகள் செய்யும் துரோகத்தனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தச்செல்வதை இனியும் அனுமதிக்க முடியாது.

இவர்களது எண்ணம் என்ன? இவர்களது நோக்கம் தான் என்ன? எம்மையே அடித்து எமது சகோதரிகளின் கற்பைச்சூறையாடிய சிறிலங்காப்படையுடன் கைகோத்து எம் இனத்தையே காட்டிக்கொடுத்து கதறக்கதற கொலை செய்த கொலைப்பாதகர்களுடன் சேர்ந்து எதைச்சாதிக்கப்போகிறார்கள்? தமிழர் தாயகத்தைத் தாரை வார்த்துக் கொடுக்கவா இத்தனை சதித்திட்டங்கள்? உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தவர்கள் ஒருபொதும் உய்யமாட்டார்.

18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகள்ää 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிர்களைக் காணிக்கையாக்கியே எமது விடுதலை வீரியம் பெற்றிருக்கின்றது. இந்த ஆத்துமாக்களுக்கு கூறும் பதில் என்ன? எந்த நோக்கத்திற்காக நாம் ஒன்று பட்டோமோ அது முடிவடையும் தறுவாயில் சோரம்போன சிங்கள அரசின் அடிவருடிகள் தாங்கள் எந்த நோக்கத்திற்காக இச்செய்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை உணர்வார்களா?

அவர்களுக்கு எங்கே உணர்வு? மதிகெட்ட மடையர்களுக்கு எங்கே உணர்வு? எமது கையை எடுத்து எமது கண்ணில் குத்துகிறோம் என்று எங்கே புரியப்போகின்றது? எமக்கு இரண்டு கண்ணும் போனால் பறவாயில்லை எதிரிக்கு சகுனம் பிழைத்தால் போதும் என்ற நிலையிலுள்ள சிறிலங்கா பேரின வாதிகளின் வலையில் சிக்கி எமது இளைய சந்ததியினரின் எதிர்காலத்தையும்ääஎமது தேசியத்தின் ஒருமைப்பாட்டையும் சிதைக்கின்றோம் என்பதை எண்ணிப்பர்க்காத தூரநோக்கில்லாத் துரோகிகள் இருண்டழ ஒரு சூனியத்திற்குள் தமிழினத்தை ஈழத்தச்செல்ல என்ன அவசரம்? எமது எதிர்கால இருப்பையும் அழித்துவித்தடிக்கம் அற்பர்களின் வலையில் வீழ்வதா?

எமது தேசியத்தலைவர் ஒரு வரலாற்றுப் புருஸர் எத்தனை எத்தனை உள்நாட்டுää வெளிநாட்டுப்படைகள் வந்தாலும் அவற்றில் வெற்றிபெற்று தமிழ்ப்படை தலை நிமிர்ந்து நிற்பதை சர்வதேசம் உணரும். எங்களது நகர்வுகள் சிறிலங்காவில் அல்ல உலக அரங்கில் உலகத் தலைவர்களின் மனங்களை நெகிழவைத்து இன்று தமிழர் பக்கம் ஈர்கப்பட்டிருக்கிறார்கள் என்றால் அதற்கெல்லாம் காரணம் தமிழரின் படைப்பலமே. வடக்கு கிழக்கைப்பிரித்த எங்களைச் சிறுபான்மையினராக்கி அதன்மூலம் தமிழர் பிரதேசங்களை சூறையாட நினைக்கும் சிங்கள வெறியர்களின் வாலைப்பிடித்துக்கொண்டு எமது ஆற்றல் மிக்க சொத்தான அறிவுஜீவிகள்ää பலகளம் கண்ட தானைத் தளபதிகளை இலக்கு வைத்து தாக்கத்துடிக்கும் சிறிலங்கா கைக்கூலிகள் தங்கள் சுகபோகத்திற்காக ஒரு தேசத்தின் குரல்வளையை நெரித்து விடத் துடிப்பது ஒரு காலமும் நடக்காது. இது ஒரு தர்ம யுத்தம் இதில் தர்மம் தான் வெல்லும் தனிப்பட்ட செல்வாக்கிற்காக செல்லாக்காசாகியவர்களின் கதி என்னவாகின என்பதனை வரலாறுகள் கூறும் பாடங்களை இவர்கள் புரட்டிப்பார்க்கட்டும். பிரேமதாஸா காலத்திலே வடக்கை மட்டும் எடுங்கள் கிழக்கை எங்களிடம் தாருங்கள் என்று கூறிய போது எமது தலைவர் வடக்கும் கிழக்கும் எமது பாரம்பரிய தேசம் அதை ஒரு காலமும் சிங்கள அரசாங்கத்திற்கு அடகு வைக்கமுடியாது என்று பிரேமதாஸாவின் முகத்திலே கரி பூசிய கதைகளை அறிவார்களா?

இனியும் வடக்கு தமிழர்ää கிழக்குத் தமிழர் என்று பல்லவி பாடி பழந்தமிழர்களின் ஒருமைப்பாட்டைச் சிதைக்க நினைக்கும் சிங்கள அரசுக்கும்ää அதன் அடிவருடிகளக்கு நாங்கள் கூறிக்கொள்வதாவது!

'நெருப்பாறு என்றாலும் நீந்திக்கடந்தால்த்தான் வருங்காலம் என்றாவது வசந்தமாய் இருக்கும்"
.
.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)