Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இராணுவத்தினரை பிரபாகரனின் படத்தை காட்டி எச்சரித்த தமிழன்
#1
[b]<span style='font-size:30pt;line-height:100%'>தன்னை தாக்கி காயப்படுத்திய இராணுவத்தினரை பிரபாகரனின் படத்தை காட்டி எச்சரித்த இளைஞன்</span>

வவுனியாவில் சம்பவம்

தன்னைத்தாக்கி காயப்படுத்திய இராணுவத்தினருக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தைக் காட்டி "இவர் தான் உங்களுக்கு விரைவில் பதில் சொல்வாரென" இளைஞரொருவர் எச்சரித்த சம்பவம் சனிக்கிழமை வவுனியா செக்கட்டிப் பிலவு முத்துமாரியம்மன் கோவிலடியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது;

சனிக்கிழமை இரவு பதினொரு மணியளவில் செக்கட்டிபிலவு முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்ற இளைஞர்கள் செல்வபுரம் இராணுவ முகாமை அண்மித்த இடத்தில் வீதியில் உரையாடிக் கொண்டிருந்த போது, இந்த இடத்தில் நிற்க வேண்டாம் விலகிச் செல்லுங்கள் என காவலரணில் நின்ற படையினர் கூறியுள்ளனர்.

அப்போது க. யோகேஸ்வரன் (வயது- 25) என்ற இளைஞன் இது எமது சொந்த இடம் இந்த இடத்தில் நின்று கதைக்கக் கூடாதென நீங்கள் கூற முடியாதென கூறியபோது, அவரை படையினர் விக்கெட்டினால் அடித்துள்ளனர். இதனால், தலையில் பலத்த காயமடைந்த இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தலையில் எட்டு தையல்கள் போடுமளவிற்கு பலத்த காயம் ஏற்பட்டபோதும் சட்டைப் பையில் வைத்திருந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை காண்பித்து இவர் தான் உங்களிற்கு பதில் சொல்வாரென இளைஞன் படையினரை எச்சரித்துள்ளார்.


இவன்தான் மறத் தமிழன்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)