Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வெற்றி யார் பக்கம்...?!
#1
<img src='http://img264.echo.cx/img264/2447/jesus40ip.jpg' border='0' alt='user posted image'>

<b>வயற்கரைக் குருவியொன்று
வான்வெளிதனில் வட்டமடிக்க
வந்த வல்லூறும் நோட்டம் விட
வரம்பிருந்து ஒருவன் குறிவைக்க
வரவு காத்து ஒருவன் கண்ணி வைக்க
வரும் சுழற் காற்றுச் சமனிலை குழப்ப
வண்ணச் சிட்டது
வகையாய் சிறகடித்துக் களிக்கிறது
வரம்பில்லா வானத்தில் சுதந்திரமாய்...!

வண்ணம் வண்ணமாய்
வகை வகையாய் பேசும் மனிதரெல்லாம்
வக்கணையாய்ப் பேசுகிறார்
வரவால் தாம் உயர்வினராம்
வதையில்லா உலகு படைத்து
வரவு செலவு பார்த்து
வசதியாய் வாழ்கின்றனராம்
வரம்பில்லா அறிவு
வகையாய் கொண்டதால்
வரம்பிட்டு வாழ்கின்றனராம்
வடிவாய்ச் சொல்கின்றார்
வாட்டம் அவர் வதனத்தில்
வழிவது மட்டும் ஏன்...??!

வட்டு ஒன்று
வடிவாய் நோக்கியது
வட்டமடிக்கும் வண்ணச் சிட்டையும்
வளவிருந்த மாளிகை வீட்டு மனிதரையும்...!
வரைவிலக்கணம் ஒன்று வரையலானது
வர்ணம் முதலாய்
வகை பிரித்து பகை வளர்த்து
வம்புகள் அங்கு வரவாக்கி
வரம்புகள் கற்பனையாகினும்
வகை வகையாய் தேசங்கள் பிரித்து
வஞ்சனைகள் பெருகி
வகையான அமைதியழித்து
வரமாம் இயற்கையின் விதி மறந்து
வசதி என்று உண்மை வாழ்வழித்து
வருங்காலந்தனை மாசுறுத்தி
வாழும் மனிதரை
வண்ணச் சிட்டது
வகையாய் வாழ்வியலில் வென்றதாய்...!</b>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
stalin Wrote:குருவியாரே உங்கடை மரத்துக்கு கீழே ஒதுங்குகிற காதல் ஜோடியையே மட்டும் பார்ப்பதால் காதல் கவிதை யாய் எழுதி கொண்டிருக்கிறீங்கள்---அங்கை பாருங்க மரத்துக்கங்காலை ஒட்டிய வயிற்றோடை பிச்சைக்காகரன் இரூக்கிறான்பார்த்திங்களா--- பாருங்கள் மரத்துக்கு அங்காலை பசியாலே அழும் குழந்தையின் குரலை கேளுங்கள் --------காதலை மட்டும் பாடமால் சமூக சிந்தனையுள்ள பாடலையும் பாடுங்களென்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளும்---------ஸ்ராலின்

ஐயோ ஸ்ராலின்...குருவிகள் அற்ப மானுட வாழ்வைத் தேடிப் பறக்கும் பறவைகள் அல்ல.. மரணத்துக்குள்ளும் அற்புத வாழ்வியல் தேடிப் பறக்கும் பறவைகள்...! நிச்சயம் காலம் அதை உணர்த்தும்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
வகை வகையாய் கவி படைக்கும்
வாண்டுக் குருவி
தொகை தொகையாய் "வ" வில்
வார்த்தை யாலம் இட்டு
வர்ணயாலம் காட்டி
வடித்த கவிதை அருமை
வாழ்த்துக்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#4
கவிதை அருமை
வாழ்த்துக்கள்.
Reply
#5
வடிவாக அண்ணாவால்
வடித்த கவிக்கு
வாழ்த்துக்கள் பல
வாயால் உரைக்கும் நான்
வாய்மை தவறா வெண்ணிலா. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
#6
வஞ்சியவள் கவிதா
வளைய வரும் வாண்டு கவிதனே
வலம் வரும் போது
வடிவாய் கவிதை கண்டு
வக்கணையாய் வாழ்த்தும் ஹரி மன்னரே
வம்புகள் குறைத்து
வரம்புகள் இட்டு
வகையாய் பேசும்
வஞ்சி சுட்டித் தங்கையே
வந்த கவி கண்டு
வரவு வைத்த உங்கள் வாழ்த்துக்களுக்கு
வணங்கி வைக்கின்றோம் நன்றிகள்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
கவிதை நல்லாயிருக்கு வாழ்த்துக்கள்...................
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#8
வயற்கரை குருவி.. வ வில. சொன்ன கவி நன்று.. :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#9
அண்ணா புதுசு புதுசா எல்லாம் கலக்கிறியள்....அழகாக சொல்லியிருக்கிங்க வாழ்வைப் பற்றி...பாவம் நீங்க குருவிகளுக்கே இப்படியென்றால்...மானிடப்பிறவிகள் மானிடர்களுக்கே வைக்கிற குறியும் கண்ணியும் யாருங்க சொல்றது.... Cry Cry Cry
" "
" "

Reply
#10
நீங்கள் இளவரசனுக்கு வைத்திருக்கிற கண்ணியை விடவா... ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#11
வாழ்த்துக்கள் குருவி கவிதை நன்றாயிருக்கிறது ----------------------------எல்லாரும் கவிதை எழுதிறீங்க கவிதையை ரசிக்கிற பக்குவம் இருக்கு ஆனால் கவிதை எழுதத்தான் வரமாட்டேங்குது கவிதை எப்படிங்க எழுதிறது ஏதாவது குறுக்கு வழியேதாவது இருக்கா?----------------------------ஆ நான் ஓரளவு ரி .ராஜேந்தர் கதைக்கிறமாதிரி எழுதுவன் அதை கவிதை என்று ஏற்றுக்கொள்வீர்களா?----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ஸ்ராலின்
Reply
#12
stalin Wrote:வாழ்த்துக்கள் குருவி கவிதை நன்றாயிருக்கிறது ----------------------------எல்லாரும் கவிதை எழுதிறீங்க கவிதையை ரசிக்கிற பக்குவம் இருக்கு ஆனால் கவிதை எழுதத்தான் வரமாட்டேங்குது கவிதை எப்படிங்க எழுதிறது ஏதாவது குறுக்கு வழியேதாவது இருக்கா?----------------------------ஆ நான் ஓரளவு ரி .ராஜேந்தர் கதைக்கிறமாதிரி எழுதுவன் அதை கவிதை என்று ஏற்றுக்கொள்வீர்களா?----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ஸ்ராலின்

தயங்காதேங்க... முதலில் எதுவும் இப்படித்தான் இருக்கும்... எழுத எழுத புடம்போடப்பட்டுவிடுவீர்கள்..முதல் தடவையாக..எழுத ஆரம்பியுங்கள்...அதற்குத்தான் துணிவு அவசியம்...!

வாழ்த்துக்கு நன்றிகள்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#13
எதுவுகாக இருந்தாலும் எழுதுங்கள் ஸ்ராலின். விரைவில் எதிர்பார்க்கின்றோம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#14
என்னது வ விலேயே கவிதை படைத்துவிட்டீர்களே.வாழ்த்துக்கள்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply
#15
Quote:வகை பிரித்து பகை வளர்த்து
வம்புகள் அங்கு வரவாக்கி
வரம்புகள் கற்பனையாகினும்
வகை வகையாய் தேசங்கள் பிரித்து
வஞ்சனைகள் பெருகி
வகையான அமைதியழித்து
வரமாம் இயற்கையின் விதி மறந்து
வசதி என்று உண்மை வாழ்வழித்து
வருங்காலந்தனை மாசுறுத்தி
வாழும் மனிதரை
வண்ணச் சிட்டது
வகையாய் வாழ்வியலில் வென்றதாய்...!
நிதர்சனமான வரிகள்.
வாழ்த்துக்கள்...
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)