05-24-2005, 01:08 PM
<b>என் உயிருக்கு குறிவைக்கும் வெடிகுண்டுப் பெண் - ஜெ</b>
சென்னை:
எனது உயிரைப் பறிக்கும் பொறுப்பை விடுதலைப் புலிகள், தற்கொலைப் படையை சேர்ந்த ஒரு வெடிகுண்டு பெண்ணிடம் ஒப்படைத்துள்ளனர் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த ஆண்டுக்கான ஆண்டறிக்கையை மேற்கோள் காட்டி பெட்ரோல், டீஸல், மருந்துகள் முதலிய பொருட்களை இலங்கைக்கு திருட்டுத்தனமாக கடத்துவதற்கு விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழக்தை தொடர்ந்து ஒரு தளமாக பயன்படுத்தி வருகிறது என்று சில பத்திரிகைகள் பிரதானமாக தலைப்பிட்டு செய்திகள் வெளியிட்டுள்ளன.
தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நடவடிக்கைகள் அதிகரிப்பதைப் போன்று ஒரு தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் சில பத்திரிகைகள் இதனைப் பெரிது படுத்தியுள்ளன. இது முற்றிலும் ஆதாரமற்றதாகும்.
தமிழக அரசு, விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு எதிராக உறுதியான சமரசத்திற்கு இடமில்லாத நிலைப்பாட்டை எடுத்து வருகின்ற நிலையில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளுக்கு தமிழகத்தில் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருப்பதை போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கும் தீயநோக்கிலான இந்த முயற்சி எனக்கு ஆழ்ந்த கவலையையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளது என்று உள்துறை அமைச்சருக்கு நான் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராக தொடர்ந்து நான் எடுத்து வருகின்ற உறுதியான நிலைப்பாட்டை நான் விரிவாக எடுத்துச் சொல்ல தேவையில்லை என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
தமிழகத்தில் இவ்வியக்கத்தினரின் ஒவ்வொரு நடவடிக்கையையும் உன்னிப்பாகவும் தொடர்ந்து கண்காணித்து வரவேண்டும் என மாநில அமைப்புகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
விடுதலைப்புலிகள் தனிப்பட்ட அதிகபட்ச பேரபாயத்திற்கு என்னை இலக்காக்கி தொடர்ந்து எனக்கு குறி வைத்துள்ளனர் என்பதை நான் மத்திய உள்துறை அமைச்சருக்கு எடுத்துக் காட்டியுள்ளேன்.
விடுதலைப்புலிகளிடமிருந்து தனிப்பட்ட குறிப்பான அபாயம் உள்ளது என்றும், இந்தக் குறிக்கோளை நிறைவேற்றும் பணி தற்கொலை வெடிகுண்டு பெண்மணி ஒருத்தியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து அளிக்கப்பட்ட தகவல் குறித்து உள்துறை அமைச்சரின் சிறப்பு கவனத்தை நான் ஈர்த்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
--------------------------------------
<b>ஜெ.வுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு</b>
சென்னை:
பெண் மனித வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால், முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஒரு பெண் மனித வெடிகுண்டு ஜெயலலிதாவைத் தீர்த்துக் கட்ட அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம், தமிழக அரசை எச்சரித்துள்ளது. இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் பாதுகாப்புக்குக் கூடுதலாக, 30 போலீஸார் சாதாரண உடையில் பாதுகாப்பை மேற்கொள்ளவுள்ளனர். இவர்களில் 10 பேர் சப் இன்ஸ்பெக்டர்களாக இருப்பார்கள்.
ஏற்கனவே இசட் பிரிவு கருப்புப் பூனைப் பாதுகாப்புப் படை வளையத்தின் கீழ் ஜெயலலிதா உள்ளார். தற்போது கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ள போலீஸாரையும் சேர்த்து 70 போலீஸார் ஜெயலலிதாவின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.
இதேபோல, தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டையிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள போலீஸார், காமராஜர் சாலையில் போர் நினைவுச் சின்னம் முதல் ரிசர்வ் வங்கி வரை கண்காணிப்புப் பணியை மேற்கொள்வார்கள்.
வாகனப் போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் உள்ளிட்டவற்றை இவர்கள் கண்காணித்து வருவார்கள். சந்தேகத்திற்கு இடமானவர்களை தடுத்து நிறுத்தி விசாரிக்கவும் இவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இது தவிர கோட்டையில் கூடுதலாக கண்காணிப்புக் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. கோட்டைக்குள் வரும் வாகனங்களை சோதனையிடுவதும் தீவிரமாக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் பொதுமக்கள் குறை தீர்ப்புப் பிரிவிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இங்கு வருவோர் தீவிர சோதனைக்குள்ளாக்கப்படுகின்றனர்.
கூடுதல் பாதுகாப்பு காரணமாக தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு எந்தவித இடையூறும் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
--------------------------------------
<b>விடுதலைப்புலிகள்: ஜெ. அறிக்கைக்கு கருணாநிதி கண்டனம்</b>
சென்னை:
விடுதலைப் புலிகள் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் ஆதாரமற்ற பல தகவல்கள் அடங்கியிருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி குறை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் ஜெயலலிதா கடந்த 23ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் பத்மநாபா கொலை குறித்தும், அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் குறித்தும் கூறியுள்ள கருத்துக்கள் தவறானவை. விடுதலைப் புலிகளுக்கு எதிராக கடுமையான நிலையை எடுத்து வரும் ஜெயலலிதா முன்பு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்ததை மக்கள் மறக்கவில்லை.
இதே ஜெயலலிதா, இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட நாளிதழ்களில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேட்டி அளித்துள்ளதை யாரும் மறக்கவில்லை. அந்தப் பேட்டிகளில், விடுதலைப் புலிகளுக்கு திமுக ஆட்சி ஆதரவு அளிக்கவில்லை என்றும் குறைப்பட்டுக் கொண்டுள்ளார் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.
பத்மநாபா கொலை செய்யப்பட்ட கால கட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஜெயலலிதா தீவிர ஆதரவு அளித்து வந்தார். விடுதலைப்புலிகளுக்கு அன்றைக்கு குரல் கொடுத்து விட்டு இன்றைக்கு திமுக மீது பாய்வது ஏன்?
ஏனோதானோ என்று பேசுவதும், ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு பேட்டி கொடுப்பதும், அறிக்கை விடுவதும், எமர்ஜென்சி காலத்தில் வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாக இருக்கலாம்.
ஆனால் ஜனநாயகம் தழைத்தோங்கும் இந்தக் கால கட்டத்தில் இதை ஏற்க முடியுமா என்பதை பொதுமக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
தற்ஸ்தமிழ்.கொம்

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>