Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பெற்றோரைச் சந்திக்க உதவுமாறு சோனியா காந்திக்கு நளினியின் மகள
#1
பெற்றோரைச் சந்திக்க உதவுமாறு சோனியா காந்திக்கு நளினியின் மகள் கடிதம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தியின் படுகொலை தொடர்பில் கைதாகி சிறைத்தண்டனை அனுபவித்துவரும் முருகன் - நளினி தம்பதியினரின் மகள் அரித்ரா தனது பெற்றோரைச் சந்திக்க இந்தியா வருவதற்கு விசா பெற உதவுமாறு இந்திரா காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரஜீவ் காந்தியின் 14 ஆவது நினைவு தினம் நேற்றாகும். இந்நிலையிலேயே அரித்ரா தனக்கு உதவுமாறு சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான நளினி தற்போது ஆயுள் தண்டனைக் கைதியாக வேலூர் சிறையில் இருக்கிறார். இவரது கணவரான முருகன் ராஜீவ் வழக்கில் தூக்கு தண்டனை பெற்று அதே ஜெயிலில் இருக்கிறார்.

இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். ராஜீவ் கொல்லப்படுவதற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். நளினி கர்ப்பம் அடைந்தார். இந்த நிலையில்தான் ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டு இருவரும் கைதானார்கள்இ வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். அங்கு நளினிக்கு பெண் குழந்தை பிறந்தது. அரித்ரா என்று பெயரிட்டனர்.

அரித்ரா சில மாதங்கள் வரை நளினியுடனே ஜெயிலில் வளர்ந்தாள். ஜெயிலில் குழந்தையை வளர்ப்பதற்கு கஷ்டமாக இருந்ததால் இலங்கையில் உள்ள முருகனின் பெற்றோரிடம் அரித்ராவை ஒப்படைத்தனர்.

அங்கே அவள் வளர்ந்து வருகிறாள். தற்போது அவளுக்கு 13 வயது ஆகிறது. அரித்ரா தாய் நளினி மற்றும் தந்தை முருகனை பார்க்க மிகவும் ஆசைப்படுகிறாள். ஆனால்இ அவருக்கு விசா கிடைக்கவில்லை. எனவே சோனியாவின் உதவியை அரித்ரா நாடி இருக்கிறாள்.

ராஜீவ் கொலை வழக்கில் முருகன் - நளினி இருவருக்குமே தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. இதில் அப்போது சோனியா காந்தி ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் அனுப்பினார். இருவருக்குமே தூக்கு தண்டனை அளித்தால் குழந்தை அரித்ரா அனாதையாகி விடுவாள். எனவேஇ இதில் கருணை காட்ட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதனால் நளினிக்கு விதித்த தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அப்போது கருணை காட்டியது போல் இப்போதும் சோனியா காந்தி கருணை காட்டுவார் என்ற எண்ணத்தில் அரித்ரா சோனியாவுக்கு இப்போது கடிதம் எழுதி இருக்கிறாள்.

இந்தத் தகவலை நளினியின் வக்கீல் சந்திரசேகரன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது; அரித்ரா தனது பெற்றோர்களை சந்தித்து பல வருடங்கள் ஆகின்றன. அவள் இந்தியாவுக்கு வந்து பெற்றோரை சந்திக்க விசா பெறுவதற்காக இந்திய தூதரகத்தை அணுகினாள். ஆனால்இ விசா கிடைக்கவில்லை.

எனவே சோனியாகாந்தியின் உதவியைக் கேட்டு கடிதம் எழுதி இருக்கிறாள். தூக்குத் தண்டனையில் இருந்து தனது தாயை காப்பாற்றிய சோனியா காந்தி இப்போதும் கருணை காட்டுவார் என்று எதிர்பார்க்கிறாள்.

நளினிஇ முருகன் இருவருமே ஜெயிலில் மிகவும் நன்னடத்தையுடன் செயல்படுகிறார்கள். அவர்கள் மகள் மீது மிகவும் பாசம் வைத்துள்ளனர். இருவரும் சந்திக்கும் போது மகளின் போட்டோவை பார்த்து கண் கலங்குகின்றனர். அரித்ராவின் கடிதத்தால் அவர்கள் குடும்பம் விரைவில் ஒன்று சேரும் என்று எதிர்பார்க்கிறேன்.

இதேவேளைஇ ஜெயிலில் இருந்தாலும் நளினியும் முருகனும் இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் படித்து வருகின்றனர்.

நளினி உணவு - ஊட்டச்சத்து பாடத்தில் சான்றிதழ் படிப்பு முடித்துள்ளார். தற்போது கம்யூட்டர் பிரிவில் மாஸ்டர் டிகிரி 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார். முருகன் பி.சி.ஏ. படித்து வருகிறார்.

முருகன் ஓவியம் படித்துள்ளார். இதன்மூலம் தேசத் தலைவர்கள் மற்றும் தனது மகளின் படத்தை வரைகிறார். இருவரும் 2 வாரங்களுக்கு ஒரு முறை பார்வையாளர் அறையில் சந்தித்துப் பேச ஜெயில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.


-----------------------------------------------------------------------

தினகுரல்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)