Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
ஹாய் ரசிஅக்கா<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> பரிசு தானே உங்கட றெஸ்க்கு வந்து கொண்டே இருக்கு.
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
ஓடி வந்து பாட்டிசைத்து
ஒன்றாய் கூடும் உறவுகளே
ஒருவரியேனும் வாழ்துங்கள்
தூய தமிழ் யாழை.
எத்தனையோ கவிமணிகள்
இருந்தும், யாழ் எட்டாம் அகவை
எட்டுகையில், எட்டிநின்று
உங்கள் கண்மணிகளை
மூடுதல் முறையாகுமோ?
கருத்துக்கள் பலருக்கும்
பலதாக இருக்கட்டும்.
நாங்கள் கொண்ட எண்ண கருக்களை
இயம்பி மொழிந்திட
இடம் கொடுத்தவளை
எட்டிநின்று பார்த்திடல்
சரியாகுமோ?
யாழ் இளைஞ்ஞன்
தலைப்பினை இணைத்தமைக்காய்,
நாலுவரி எழுதிவிட்டு
நாமும் ஓடிப்போய் விடலாம்.
நிஞாயமா என மனட்சாட்சியை
தொட்டுகேட்டால் உறுத்துதிங்கே.
நாள்தோறும் நாம் வந்தாற
இடம் கொடுத்த ஆலமரம்.
ஆலமரத்தின் நிழலில்
ஆறிவிட்டு போகும் சுயனல
மானிடங்களா நாங்கள்?
நாம் ஆறுகின்ற ஆலமறத்தை
சுத்தம் தான் செய்ய முடியாது
விட்டாலும், சுத்தி திரிந்ததற்காய்
ஒருவரியேனும் வாழ்த்திவிட்டு போகலாமே...
என்பதற்காய் வந்தேன்.[/b]
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
ஏட்டு வயதை அடையும் யாழிற்கு வாழ்த்துக்கள்.
Posts: 422
Threads: 10
Joined: Oct 2005
Reputation:
0
[size=18]யாழ் இணையம்
வாழ்த்துக் கவிதை
தாயகத்தை விட்டகன்ற தமிழ் உறவுக்கெல்லாம்
தாய்போன்று வழிகாட்டும் ஓர் இணையம்
சேய்போன்று சேர்ந்துவரும் உறவுகளை எல்லாம்
வாயார வாழ்த்தி வரவேற்கும் இணையம்
ஓயாது எழுதுகின்ற உறவுகளும் உண்டு
ஓரிரு வரிகளோடு ஒழிபவரும் உண்டு
ஆய்வாளர் அறிஞர்கள் கவிஞர்கள் ஆர்வலர்கள்
ஓய்வாகி உலகெங்கும் உறவாடும் இணையம்.
களம் கவிதை கலைகள் கலைஞர்கள்
கருத்து கணனி சிறுகதை குறும்படங்கள்
தளம் முகவரிகள் தத்துவம் தமிழீழம்
தமிழ் தமிழர் தகவலோடு துயர்பகிர்தல்
புலம் பாராட்டு பிறமொழி ஆக்கங்கள்
போட்டி நகைச்சுவை பொழுதுபோக்கு அம்சங்கள்
நலம் விளையாட்டு விஞ்ஞானம் மருத்துவம்
இலக்கியம் சமையல் இன்னும் பலபல.
பட்டி மன்றங்கள் அடிக்கடி நடக்கும்
பட்சிகள் பாதகர் பெயர்களில் தொடரும்
வெட்டி வெட்டி வாதங்கள் வளரும்
வேடிக்கை யாகவும் வாசிக்க இனிக்கும்
கட்டி அணைத்தும் கருத்துக்கள் சொல்வார்
எட்டி உதைப்பையும் எழுத்தினில் செய்வார்
முட்டி மோதி முறைத்து வெறுத்தாலும்
குட்டிப் புூனைபோல் குழைந்து பின்மகிழ்வார்.
அகவை எட்டினை அடைந்து அன்னைக்கு
அழகு தமிழெடுத்து ஆசிகள் சொல்வேன்
உவகை கொண்டிங்கு உள்நுழைந்தோர் எல்லாம்
உனைவிட்டு அகலாது உறவாக உள்ளார்
தகமை உனக்குண்டு தரத்தில் உயர்வுண்டு
தமிழர் வளம்பேண துணையாய் பலருண்டு
மகிமை பலபெற்று மண்ணின் மரபுஏந்தி
மகுடம் தலைசுூடி மகிழ்வோடு மலர்கவே!
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
யாழ் பற்றிய நினைவுக் கவிகள் அனைத்தும் நல்லா இருக்கு...கணணித் தமிழில் யாழ் மென்மேலும் மெருகேற எங்கள் வாழ்த்துக்கள் என்றும் உண்டு..! யாழில் சிலருக்கு நிகழ்ந்த கடந்த கால கசப்புகளை தவிர்க்கவும் முயல வேண்டும்..! அதுதான் தமிழுக்கும் தமிழர்களுக்கும் நல்லது..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>