Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சு.ப.தமிழ்ச்செல்வன்-நேர்காணல்
#1
செய்தி: பாதுகாப்பான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படாவிட்டால் யுத்த நிறுத்த உடன்படிக்கையே முழு அளவில் கேள்விக்குறியாக மாறிவிடும் - அரசியல்துறை பொறுப்பாளர்


(கிளிநொச்சி நிருபர்)
போராளிகள் பொறுப்பாளர்கள், தளபதிகளுக்கு பாதுகாப்பான போக்குவரத்து ஏற்பாடுகள் சிறிலங்கா அரசினால் செய்யப்படாவிட்டால் யுத்த நிறுத்த உடன்படிக்கையே முழு அளவில் கேள்விக்குறியாக மாறிவிடும். நாம் எமது கடற்படை, விமானப்படை, தரைப் படை போன்றவற்றின் பாதுகாப்புடன் போக்குவரத்து ஏற்பாடு செய்யும் சூழ்நிலை உருவாகும் என தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் இன்று தெரிவித்துள்ளார்.

அப்படியான சூழ்நிலை ஏற்படுமானால் யுத்த நிறுத்தத்துக்கு அது சாதகமாக அமையுமா என்ற கேள்விக்குறியும் உள்ளது என்று அவர் சுட்டிக் காட்டினார்.

நோர்வே தூதுவர், போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பதில் தலைவர் ஆகியோருடனான சந்திப்பில் யுத்த நிறுத்த உடன்படிக்கை தொடர்பாகவும் பொதுக்கட்டமைப்பு சிறிலங்கா அரசால் இழுத்தடிக்கப்படுவது தொடர்பாகவும் புத்தர் சிலை விவகாரம் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பது மற்றும் அண்மைக்கால கொலைகள் பற்றியும் அவற்றினது பாரதூரத் தன்மை பற்றியும் எடுத்துக் கூறியதாகக் குறிப்பிட்டார்.

அண்மைக் காலத்தில் போராளிகளின் நடமாட்டம், போக்குவரத்து முக்கியமாக எமது தளபதிகள், பொறுப்பாளர்களின் பயண ஏற்பாடுகளில் இடம்பெறும் தாமதங்கள், தடைகள் பற்றி விளக்கமளித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், இது பாரதூரமான விளைவை ஏற்படுத்தக் கூடியது என்று சொன்னார்.

வன்னிக்கு தலைவரைச் சந்தித்து ஆலோசனைகள் பெற வந்த தளபதிகள், பொறுப்பாளர்கள் திரும்பிச் செல்ல முடியாத நிலையை அரசு ஏற்படுத்தி இருப்பது நெருக்கடியின் உச்சமாக உள்ளது எனவும் அரசின் போக்கின் உச்சக் கட்ட வெளிப்பாடே இது எனவும் சுட்டிக் காட்டினார்.

பாதுகாப்பான போக்குவரத்து, நடமாட்டம் உறுதி செய்யப்படாவிட்டால் - நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டால் யுத்த நிறுத்த உடன்படிக்கையே முழு அளவில் கேள்விக்குறியாகி விடும். இதற்கு விரைவில் தீர்க்கமான பதில் தருமாறு கேட்டிருக்கின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்தார். தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களை சிறிலங்காவிற்கான நோர்வே தூதர் ஹான்ஸ் பிரஸ்கர் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பதில் தலைவர் வான் விங்கெல் ஆகியோர் இன்று கிளிநொச்சியில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

முற்பகல் 10.00மணியளவில் கிளிநொச்சி சமாதான செயலகத்தில் ஆரம்பித்த இச்சந்திப்பு நண்பகல் 12.00மணிவரை இடம்பெற்றது.
<img src='http://www.battieelanatham.com/news/06/07js.jpg' border='0' alt='user posted image'>

தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் அவர்களுடன் தமிழீழ காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவன் மட்டக்களப்பு அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் இளந்திரையன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சந்திப்பின் நிறைவில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் ஊடகவியலாளார்களுக்கு வழங்கிய நேர்காணல் பின்வருமாறு:-

கேள்வி:-இன்றைய சந்திப்பு தொடர்பாக?

பதில்:- இன்றைய சந்திப்பில் முக்கியமாக மூன்று விடயங்களை பற்றி கலந்துரையாடியுள்ளோம். ஒன்று யுத்த நிறுத்த உடன்படிக்கை தொடர்பாகவும் அடுத்ததாக பொதுக் கட்டமைப்பு இழுத்தடிப்பு தொடர்பாகவும் தற்போது பிரச்சனைகளை எழுப்பியுள்ள புத்தர் சிலை விவகாரம் பற்றியும் அண்மை நாட்களில் நடைபெறும் படுகொலைகள் தொடர்பாகவும் நோர்வே அனுசரனையாளர்களுடன் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினருடனும் கலந்துரையாடியுள்ளோம் எங்கள் நிலைப்பாடுகள் ஆதங்கங்கள்; பற்றியும் தெளிவுபடுத்தியுள்ளோம்.
<img src='http://www.battieelanatham.com/news/06/07c.jpg' border='0' alt='user posted image'>
கேள்வி:- யுத்த நிறுத்தம் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது தொடர்பாக?

பதில்:- யுத்த நிறுத்த உடன்படிக்கையைப் பொறுத்தவரையில் கடந்த மூன்று வருடங்களாக யுத்த நிறுத்தம் போணப்பட்டு வந்துள்ளது. யுத்த நிறுத்தத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை அரசு சரியாக கடைப்பிடித்தா என்றால் அது கேள்விக் குறியாக உள்ளது. அண்மைக ;காலத்தில் யுத்த நிறுத்த உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களின் எமது போக்குவரத்து, நடமாட்டம் முக்கியாக எமது தளபதிகளின் பயண ஏற்பாடுகளில் ஏற்படுத்தப்படுகின்ற தாமதங்கள், தடைகள் என்பன பற்றி இன்றைய சந்திப்பில் எடுத்து விளக்கியுள்ளோம். எம் மீது ஏற்படுத்தும் தடைகள், இடைஞ்சல்களைப் பாரதூரமான விடயமாக கருதுவதோடு மட்டக்களப்பு, திருகோணமாலை ஆகிய மாவட்டங்களின் தளபதிகள், பொறுப்பாளர்கள் வன்னி வந்து மீண்டும் தமது இடங்களுக்கு திரும்பிச் செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து தடைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில் மட்டக்களப்பு திருகோணமலைக்கு எமது தளபதிகள் திரும்பிச் செல்ல முடியாததினால் நிலைமைகள் மோசமடைந்து வருகின்றன. போர் நிறுத்தம் ஏற்பட்ட காலம் தொடக்கம் நோர்வே ஊடாக போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இன்று எல்லா நிலைமைகளும் மோசமடைந்துள்ளன. ஆகவே, இந்நிலையை சீர் செய்யப்பட வேண்டும்@ எங்கள் போராளிகளின் பாதுகாப்பான போக்குவரத்து உறுதிப்படுத்தப்பட வேண்டும் நெருக்கடி நிலைகள் தொடருமானால் யுத்த நிறுத்த சூழலை சூழல் முழு அளவில் பாதிக்கும் என்பதை இன்றைய சந்திப்பில் சுட்டிக ;காட்டியுள்ளோம் இந்நிலைமைக்கு அரசிடம் இருந்து விரைவான பதிலை தரும்படி கோரியுள்ளோம். அல்லாதுவிடின் கடந்த காலம் போலவே சுயமான எமது பாதுகாப்புடன் கூடிய செயற்பாட்டுடன் போக்குவரத்துக்களை மேற்கொள்ளவேண்டி வரும் கடல் படை, வான்படை, தரைப்படை என்பவற்றை பயன்படுத்தி எமது சுய பாதுகாப்புடன் பயணங்கள் மேற்கொள்ளப்படும் என்பதையும் தெரிவித்துள்ளோம். அப்படியான சூழ்நிலை யுத்த நிறுத்த சூழலை தொடர்ந்து தக்க வைப்பதற்கும் சாதகமாக இருக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இது பற்றிய தெளிவான நிலைப்பாட்டை இன்றைய சந்திப்பில் விளக்கியுள்ளோம். சாதகமான பதிலை தரவேண்டும் என்பது பற்றியும் கேட்டுள்ளோம். அல்லது இலங்கையரசாங்கமோ அல்லது சம்பந்தப்பட்டவரோ இந்த யுத்த நிறுத்த உடன்படிக்கையை செம்மையாக பேணுவதற்கு ஒரு விரும்பமின்மை இருக்குமானால் அதை தெரிவிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளோம்.

<img src='http://www.battieelanatham.com/news/06/07e.jpg' border='0' alt='user posted image'>
கேள்வி:- அரசின் மாற்றமான போக்குகள் தொடர்பாக?

பதில்:-அரசாங்கத்தின் போக்கினுடைய ஒரு உச்ச கட்டத்தின் வெளிப்பாடே இது. ஏனெனில் அண்;மைக் காலமாக புதிய அரசு பொறுப்பெற்றதில் இருந்து ஆயுதக்குழுக்களை பரந்தளவில் வைத்துக் கொண்டு படைத்தரப்பு கொலைகளையும், கொலை அச்சுறுத்தல்களையும் விடுத்துள்ளன. அதன் உச்சகட்டமாக எமது தளபதிகள் போராளிகளின் பயணங்களின் மீது தடைகளை உருவாக்கி புலிகளை சீண்டி நெருக்கடி நிலைமைக்கு தள்ளுவதும் புலிகள் மீதான வெறுப்பை காட்டும் நோக்கோடுதான் இச்செயல்களை அரசு செய்யா வண்ணம் உள்ளது. இது எங்களுக்கு மட்டுமல்ல அண்மைக் காலமாக தமிழர் தாயகத்தின் அனைத்து மாவட்டம் தோறும் பெரும் நெருக்கடி நிலைகள் ஏற்பட்டுக்கொண்டே உள்ளன. இதன் உச்ச கட்டத்தில் எமது தளபதிகளின் பயணத்திற்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டு நிலைமைகளை மோசமடைய வைக்கும் நோக்குடன் அரசின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. இந்நிலையில் பாரதூரமான நிலைமையினை இன்றைய சந்திப்பில் எடுத்து விளக்கியுள்ளோம். இது உடனடியாக சீர் செய்யப்பட வேண்டும் ஏனெனில் மட்டக்களப்பு, திருகோணமலையின் தளபதிகள், பொறுப்பாளர்கள் வன்னியில் நிற்பதால் போராளிகளை வழி நடத்த வேண்டியிருப்பதால் ஒரு ஆபத்தான சூழ்நிலையில் இதற்கு வேகமான பதிலைத் தரவேண்டும் என்பதையும் அல்லாது விடின் விடுதலைப் புலிகள் தமது சுயபாதுகாப்புடன் பயணம் செய்வதை தவிர வழியில்லை என்பதை இன்றைய சந்திப்பில் தெளிவுபடுத்தியுள்ளோம்.

<img src='http://www.battieelanatham.com/news/06/07d.jpg' border='0' alt='user posted image'>
கேள்வி:- தொடரும் படுகொலைகள் பற்றி?

பதில்:- இன்றைய சந்திப்பில் படுகொலைகள் பற்றி கூட்டிக் காட்டியுள்ளோம் ஊடகவியலாளர் சிவராம் படுகொலை செய்யப்பட்ட பின்னர் பல மாவட்டங்களில் பல ஆதரவாளர்கள் கொலை செய்யப்படுவது தொடர்ந்த வண்ணம் உள்ளது ஆகவே இந்தப் போக்கு கிழக்கிலே அரசு ஏற்படுத்திய ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் முழுத்;தீவிற்குமே பரவலாக்கியுள்ளார்கள் என்றே நான் கருதுகிறேன். ஆகவே இராணுவ புலனாய்வு அமைப்பின் செயற்பாடுகள் உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் ஆயுதக்குழுக்களை செயல் இழக்க செய்யவேண்டும் ஆயுதக்குழுக்கள் உடனடியாக கைது செய்யப்படவேண்டும் அத்துடன் நிலைமைகள் உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்பது பற்றியும் இன்றைய சந்திப்பில் தெளிவுபடுத்தியுள்ளோம் எமது ஆதரவாளர்களை படுகொலை செய்துவிட்டு விடுதலைப் புலிகள் செய்தார்கள் என அரசும் படைகளும் பரப்புரை செய்து வருகின்றார்கள். இப்படுகொலைகளுக்குப் பின்னால் உள்ள மர்மங்கள் சக்திகள் என்பவை தொடர்பாக இலங்கை அரசாங்கந்தான் கண்டுபிடிக்க வேண்டும். இதன் உண்மைகளையும் சுட்டிக் காட்டியுள்ளோம் ஆகவே இக்கொலைகள் நிறுத்தப்பட வேண்டுமானல் இவ்ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளை முழு அளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதன் ஊடாகத்தான் எல்லா வன்முறைகளையும் கட்டுப்படுத்தலாம் என்பதை தெளிவு படுத்தியுள்ளோம்.

கேள்வி:- நோர்வே அனுசரணையாளர்கள், கண்காணிப்பு குழுவினரின் செயற்பாடுகள் போதாது என்ற உணர்வு தங்களுக்கு ஏற்பட்டுள்ளதா?

பதில்:- கண்காணிப்பாளர்களோ அனுசரணையாளர்களோ தமது பணிகளை நிறைவேற்ற இரு தரப்பின் ஒத்துழைப்பு அவசியம் சம சக்திகள் பங்கேற்றுள்ள யுத்தநிறுத்த உடன்படிக்கையின் அரசிடமிருந்துதான் நோர்வே அனுசரணையாளர்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்று தான் எங்களால் கூறமுடியும் இன்றைய சந்திப்பில் ஆணித்தரமாக கூறியுள்ளோம் அனுசரணையாளர்கள் என்ற வகையில் இலங்கை அரசிடமிருந்து யுத்த நிறுத்தத்தை பேணுவது தொடர்பாகவும் மக்களின் மனிதாபிமான பிரச்சனைகளுக்கு தீர்;வு காண்பது தொடர்பாகவும் தீர்க்கமான பதிலை கிடைக்கவேண்டும் இல்லையேல் இலங்கை யரசின் நிலைப்பாட்டை தீர்க்கமாக தெளிவு படுத்த வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியு ள்ளோம்.

கேள்வி:-இன்றைய சந்திப்பின் முக்கியத்துவம் பற்றி?

பதில்:-மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது இன்று ஏற்பட்டு இருக்கின்ற ஆபத்தான சூழ் நிலைகள் பற்றி ஒன்று யுத்த நிறத்த சூழல் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டு உச்ச நெருக்கடி ஏற்பட்டிருக்கின்ற நிலை மற்றது எமது மக்களின் மனிதாபிமான நெருக்கடி தூக்கி எறியப்பட்டு இழுத்தடிக்கப்பட்டு மக்கள் கொந்தளிப்பான நிலைமைக்கு வந்திருக்கும் நிலை, அடுத்து புத்தர் சிலை விவகாரம், கொலைகள் ஊடாக தாயக பிரதேசத்தில் கொந்தளிப்பான சூழல் இப் பாரதூரமான நிலைமைகளை விளக்குவதற்கு இன்றைய சந்திப்பு வாய்ப்பாக அமைந்தது.

கேள்வி:-பொதுக்கட்டமைப்பு தொடர்பாக அரசிடமிருந்து ஏதாவது செய்த்pகள் வந்ததா?

பதில்:- ஒன்றுமே வரவில்லை ஏனெனில் இப் பொதுக்கட்டமைப்புக்கு சனாதிபதி அவர்கள் கண்டி மாகாநாட்டோடு ஒப்பம் மிடுவார் என்ற செய்தி வந்திருந்தது பின்பு வெளிநாட்டுப் பயணம் வந்ததுடன் ஒப்பமிடுவார் என்ற செய்தி வந்திருந்தது இப்போது நாட்கள் கடந்து விட்டது நெருக்கடிகள் உச்சம் அடைந்து விட்டன ஆகவே பொதுக்கட்டமைப்பில் அரசு ஒப்பமிடுமா என்பதை விட நிலைமைகள் மோசம் அடைந்து விட்டன.சர்வதேச சமூகம் தீர்க்கமான முடிவை எடுக்கின்ற நிலைக்கு வந்திருக்கிறது என்று நம்புகிறேன்.

கேள்வி:-கிழக்கில் புலிகளின் விமானத்தளம் அமைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பாக?

பதில்:- அதாவது தெற்கிலே பல செய்திகளை பரப்பிக்கொண்டு இருக்கி;ன்றார்கள் விடுதலைப்புலிகளிடம் கடற்படை, விமானப்படை, தரைப்படை எல்லாக் கட்டுமானங்களும் கட்டியெழுப்பபட்டிருப்பது என்பது ஒரு புதுமையான விடயம் அல்ல இப்போது அவற்றை வைத்துக்கொண்டு இலங்கையரசுக்கு இருக்கின்ற சர்வதேச அழுத்தம் என்பவற்றை திசை திருப்பும் நோக்கோடுதான் இவ்வாறான செய்திகளைப் பரப்பி விட்டு அரசு தமக்குள்ள நெருக்கடிகளை திசை திருப்ப பார்க்கின்றார்கள் இவ்வாறன செய்திகளை சர்வதேச சமூகம் பெருதுபடுத்தாமல் நம்பாமல் இலங்கை அரசாங்கம் செய்ய வேண்டிய கடை மைகளை பொறுப்புக்களை நிறைவேற்ற சர்வதேச சமூகம் முழு அளவிலான அழு த்தத்தை பிரயோகிக்க வேண்டும் என்பதைத்தான் இன்றைய சந்திப்பில் தெளிவுபடுத்தினோம்.

கேள்வி:- மீண்டும் போரை ஆரம்பிப்பதற்கு அரசு ஆர்வம் காட்டினால்?

பதில்:- அரசின் செயற்பாடுகள் எல்லாம் தற்போது உள்ள நிலைமைகள் எல்லாவற்றையும் குழப்பும் நோக்கோடுதான் செயற்படுகிறது என்று எம்மால் உணரமுடிகிறது ஏனெனின் கொலைகளும் யுத்த நிறுத்த மீறல்களும் பொருளாதார தடைகளும் மீண்டும் யுத்தகால நிலையினை போன்றே பொருளாதார தடை இராணுவ நெருக்குவாரங்கள் ,புத்தர் சிலை விவகாரம் எல்லாமே யுத்த காலத்தில் எமது மக்கள் எதிர்கொண்டது போன்றே சூழல்களை அரசு புதிதாக ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள் இதைவைத்துக்கொண்டு எல்லோரும் என்ன நடக்கிறது என்பதை ஊகித்துக்கொள்வதுதான் பொருத்தம் என்று நான் நினைக்கிறோன்.

கேள்வி:- புலிகளின் வான் படை தொடர்பில் இந்தியாவின் கருத்துக்கள் தொடர்பாக?

பதில்:- இதில் எவ்வளவு உண்மையிருக்கிறது என்று கூற முடியாவிட்டாலும் இந்தியா கவலையோ கரிசனையோ கொள்ளவேண்டிய தேவையில்லை என்;பதை தெளிவுபடுத்தியு ள்ளோம் எங்களினால் கட்டியெழுப்பப்படும் படைக்கட்டுமானங்கள் அனைத்துமே அயல்நாடுகளுக்கோ எந்தவொரு மக்களுக்கோ அச்சுறுத்தல்களையும் எற்படுத்தும் நோக்கோடு கட்டியெழுப்பபடவில்லை எமது மக்களின் சுய பாதுகாப்பாகவே எமது படைக்கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டள்ளன கடந்த காலங்களில் சிறிலங்கா விமானப்படை கடற்படையினரால் எமது மக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர் இந் நிலையில் எமது மக்களை பாதுகாக்க எமது படைக்கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டதே தவிர இதில் யாரும் கரிசனையோ அக்கறையோ கொள்ளத் தேவையில்லை இதுவிடயத்தில் இந்த்pயரசாங்கம் தவறை விடாது என்று கருதுகிறேன் இந்திய அரசாங்கம் இலங்கை விமானப்படைக்கு உதவுவார்களேயானால் இது வரை எமது மண்ணிலே சிறிலங்கா விமானப்படையால் கொல்லப்பட்ட எமது மக்களுக்கு நியாயத்தை தேடிக்கொடுப்பதாகவே அமையும் ஆகவே இந்தியா அவ்வாறன செயலை செய்யும் என்று நாம் நினைக்கவில்லை இந்தியா இலங்கை விமானப்படையை பலப்படத்தி விடுவதென்பது தமிழர் தாயகத்திற்கும் தமிழ்மக்களுக்கும் அழிவை ஏற்படுத்த வழி வகுக்கும் என்பது உண்மை. ஆகவே அத்தவறை இந்தியா செய்யும் என்று நான் நினைக்கவில்லை இலங்கை அரசின் செய்பாடுகளால் சர்வதேச சமூகத்தோடு தமிழ் மக்களை முரண்பட வைக்கின்ற வேலைகளைதான் செய்த வண்ணம் உள்ளனர் இம் முயற்சிகள் வெற்றியளிக்கும் என்று நான் நினைக்கவில்லை ஏனெனில் அரசின் முகத்திரை தற்போது கிழிந்து வருகிறது.

கேள்வி:- பொதுக்கட்டமைப்பில் புலிகள் மட்டுமல்ல ஏனைய அரசியல் கட்சிகளையும் இணைக்க வேண்டுமென இந்தியா ஆலோசனை கூறியிருப்பது பற்றி?

பதில்:- இந்திய அரசின் அதிகார பூர்வமான அறிக்கையாக எமக்கு கிடைக்கவில்லை தெற்கிலே உள்ள ஊடகங்கள் பல்வேறு பட்ட செய்திகளை விட்ட வண்ணம் உள்ளனர் இந்திய அரசு சார்பாகவும் அதிகாரிகள் சார்பாகவும் இச் செய்திகள் வெளி வந்த வண்ணம் உள்ளன இந்தியாவின் உத்தியோகபூர்வமான கருத்துக்கள் இன்னும் வரவில்லை விடுதலைப்புலிகளை ஏகப்பிரதிநிதிகளாக மக்கள் ஐனநாயக தேர்தலில் அண்மையில் தெரிவு செய்துள்ளார்கள் எல்லாக்கட்சிகளும் இணைந்து புலிகளை ஏகப்பிரத்pநிதிகளாக வைத்து தேர்தலில் ஐனநாயக வழி மூலம் வழங்கியுள்ளார்கள் ஆகவே இவற்றை எல்லாம் அறியாது போல் அறிக்கைகள் வருவது எம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.

கேள்வி:- பொதுக்கட்டமைப்பில் முஸ்லிம் தரப்பின் பங்கு இல்லையென்பது பற்றிய பிரச்சனை தொடர்பாக?

பதில்:- பொதுக்கட்டமைப்பை இலங்கை சனாதிபதி ஒரு சிக்கலுக்குரிய விவகாரம் ஆக்குவதற்குரிய முயற்சியில்தான் ஈ;டுபட்டுள்ளார். அதற்கு முஸ்லிம் மக்களும் பலியாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது எல்லோருடைய பொறுப்பாகும் ஏனெனில் பொதுக்கட்டமைப்பு உருவாக்கப்படுமானால் பொதுக்கட்டமைப்பின் அடிப்படையே சுனாமி பேரலையால் அழிவடைந்து பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு நிவாரணப்பணிகளுக்கென அமைக்கப்படுகின்ற ஒரு சாதரண கட்டமைப்புத்தான் இதிலே பாதிப்பின் அடிப்படையில் பிரநிதித்துவம் அமைய வேண்டும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு உதவிகள் மீள்கட்டுமான முயற்சிகள் அமைய வேண்டும் என்பதில் எமது தலைமைப்பீடம் உறுதியாக உள்ளது.அந்த வகையில்தான் எமது ஆலோசனைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது சனாதிபதி இவற்றையெல்லாம் மூடிமறைத்துக் கொண்டு பொதுக்கட்டமைப்பினை சர்சைக்குரிய விடயமாக்கி இழுத்தடிப்புக்களை தொடர்ந்து கொண்டிருப்பதால் எல்லா மக்களும் குழப்புகின்ற நிலை தற்போது உருவாகி வருவது இதற்கு முழுப்பொறுப்பும் அரசும் சனாதிபதிமே ஆகும்.

நன்றி: மட்டக்களப்பு ஈழ நாதம்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)