06-05-2005, 02:59 PM
தொ.சூசைமிக்கேல் அவர்கள் எழுதிய "பட்டுமணல் மொட்டுக்கள்" என்ற புத்தகத்தில் இருந்து....
<img src='http://img294.echo.cx/img294/561/81ll.jpg' border='0' alt='user posted image'>
<b>தமிழன் அன்றும் இன்றும்</b>
வாளொடு தோன்றிய மூத்த குடியென்று
வர்ணனை பெற்றவன் தமிழன் - இந்த
வையம் அளந்தவன் தமிழன் -இன்று
கோழையர் கும்பலாய்க் கூழைக் குடிகட்கு
கொற்றம் அமைப்பவன் தமிழன் -அஞ்சிக்
குற்றம் வளர்ப்பவன் தமிழன்
சென்ற தலமெங்கும் அன்பு தலைப்படச்
சிந்தை செழித்தவன் தமிழன் -பெரும்
சீர்புகழ் கண்டவன் தமிழன் -இன்று
நன்றி தினைத்துணை இன்றி மனத்தினில்
நஞ்சு வளர்ப்பவன் தமிழன் -உண்மை
நட்பு மறந்தவன் தமிழன்
நீதி பிழைத்தவன் மைந்தன் என்றபோது
நியாயம் புரிந்தவன் தமிழன் -மன
நேயம் வளர்த்தவன் தமிழன் -இன்று
வீதி வீதியாக நீதிக் கேடருக்கு
விழா எடுப்பவன் தமிழன் -உண்டு
விலாப்புடைப்பவன் தமிழன்
வாடும் பயிர்கண்டு வாடும் உயிர்கொண்டு
வாழ்ந்து சிறந்தவன் தமிழன் -கொடை
வள்ளல் மனத்தவன் தமிழன் -இன்று
கூடிப்பழகிய நண்பன் வறுமையைக்
கொச்சை புரிபவன் தமிழன் -வசை
கொட்டித்திரிபவன் தமிழன்
தப்பு நிகழ்ந்த தருணம் சிவனையே
சண்டைக்(கு) அழைத்தவன் தமிழன் -மொழித்
தர்க்கம் விளைத்தவன் தமிழன் -இன்று
உப்புச் சப்பில்லாத ஊளைக் கவிஞர்க்கும்
ஒப்புதல் தந்தவன் தமிழன் -கலை
ஒட்பம் இழந்தவன் தமிழன்
தன்னைப் பழித்தவனின் தலை மீதினில்
கல்லை பதித்தவன் தமிழன் -இனம்
காத்து மதித்தவன் தமிழன் -இன்று
அன்னைத் தமிழை அழிக்க முனைபவர்க்(கு)
அடிமை யானவன் தமிழன் -முற்றும்
அடங்கிப் போனவன் தமிழன்
ஒன்றே குலமென்று ஓங்கி முழங்கிய
ஒற்றுமைத் தூதுவன் தமிழன் -எங்கும்
ஒப்புமை காத்தவன் தமிழன் -இன்று
வந்தேறிகள் வந்து வீசும் ஜாதிமத
அலையில் வீழ்ந்தவன் தமிழன் -பண்பை
வழியில் விற்றவன் தமிழன்
புவனம் முழுதும்தன் பண்பு விளங்கிடப்
புகழ் படைத்தவன் தமிழன் -இன்றோ
புரை படர்ந்தவன் தமிழன் -இந்தக்
கவலை மிகுந்த அவலம் களைந்திடக்
கடமைப் பட்டவன் தமிழன் -இதைக்
கருத்தில் கொள்வானா தமிழன்..?
தொ.சூசைமிக்கேல் ( tsmina2000@yahoo.com )
<img src='http://img294.echo.cx/img294/561/81ll.jpg' border='0' alt='user posted image'>
<b>தமிழன் அன்றும் இன்றும்</b>
வாளொடு தோன்றிய மூத்த குடியென்று
வர்ணனை பெற்றவன் தமிழன் - இந்த
வையம் அளந்தவன் தமிழன் -இன்று
கோழையர் கும்பலாய்க் கூழைக் குடிகட்கு
கொற்றம் அமைப்பவன் தமிழன் -அஞ்சிக்
குற்றம் வளர்ப்பவன் தமிழன்
சென்ற தலமெங்கும் அன்பு தலைப்படச்
சிந்தை செழித்தவன் தமிழன் -பெரும்
சீர்புகழ் கண்டவன் தமிழன் -இன்று
நன்றி தினைத்துணை இன்றி மனத்தினில்
நஞ்சு வளர்ப்பவன் தமிழன் -உண்மை
நட்பு மறந்தவன் தமிழன்
நீதி பிழைத்தவன் மைந்தன் என்றபோது
நியாயம் புரிந்தவன் தமிழன் -மன
நேயம் வளர்த்தவன் தமிழன் -இன்று
வீதி வீதியாக நீதிக் கேடருக்கு
விழா எடுப்பவன் தமிழன் -உண்டு
விலாப்புடைப்பவன் தமிழன்
வாடும் பயிர்கண்டு வாடும் உயிர்கொண்டு
வாழ்ந்து சிறந்தவன் தமிழன் -கொடை
வள்ளல் மனத்தவன் தமிழன் -இன்று
கூடிப்பழகிய நண்பன் வறுமையைக்
கொச்சை புரிபவன் தமிழன் -வசை
கொட்டித்திரிபவன் தமிழன்
தப்பு நிகழ்ந்த தருணம் சிவனையே
சண்டைக்(கு) அழைத்தவன் தமிழன் -மொழித்
தர்க்கம் விளைத்தவன் தமிழன் -இன்று
உப்புச் சப்பில்லாத ஊளைக் கவிஞர்க்கும்
ஒப்புதல் தந்தவன் தமிழன் -கலை
ஒட்பம் இழந்தவன் தமிழன்
தன்னைப் பழித்தவனின் தலை மீதினில்
கல்லை பதித்தவன் தமிழன் -இனம்
காத்து மதித்தவன் தமிழன் -இன்று
அன்னைத் தமிழை அழிக்க முனைபவர்க்(கு)
அடிமை யானவன் தமிழன் -முற்றும்
அடங்கிப் போனவன் தமிழன்
ஒன்றே குலமென்று ஓங்கி முழங்கிய
ஒற்றுமைத் தூதுவன் தமிழன் -எங்கும்
ஒப்புமை காத்தவன் தமிழன் -இன்று
வந்தேறிகள் வந்து வீசும் ஜாதிமத
அலையில் வீழ்ந்தவன் தமிழன் -பண்பை
வழியில் விற்றவன் தமிழன்
புவனம் முழுதும்தன் பண்பு விளங்கிடப்
புகழ் படைத்தவன் தமிழன் -இன்றோ
புரை படர்ந்தவன் தமிழன் -இந்தக்
கவலை மிகுந்த அவலம் களைந்திடக்
கடமைப் பட்டவன் தமிழன் -இதைக்
கருத்தில் கொள்வானா தமிழன்..?
தொ.சூசைமிக்கேல் ( tsmina2000@yahoo.com )


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->