06-29-2005, 05:47 AM
புதிய வகை அணு உலை பிரான்ஸில்
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41237000/jpg/_41237181_nuclear_reactor_203.jpg' border='0' alt='user posted image'>
<b>மிகச் சவாலான ஒரு சோதனை</b>
அணுஇணைவு அதாவது ப்யூஷன் முறையிலான புதிய வகை அணு உலை ஒன்றை எங்கே நிறுவுவது என்பது பற்றி பிரான்சுக்கும் ஜப்பானுக்கும் இடையில் கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்துவந்த போட்டியில் பிரான்ஸ் வெற்றி கண்டிருக்கிறது.
அணுசக்தியில் இரண்டு வகை உண்டு ஒன்று கதிரியக்கத்தை வெளியிட வல்ல யுரேனியம் போன்ற கன உலோகங்களின் அணுக்களைப் பிளப்பதால் வரும் அணுசக்தி. இந்த அடிப்படையில்தான் தற்போதைய அணுஉலைகள் இயங்குகின்றன, அணுகுண்டுகளும் இப்படித்தான் வெடிக்க வல்லவை.
இதைத் தவிர அணுசக்தி வரும் இன்னொரு வழி உண்டு. அது சூரியனில் சக்தி உருவாகும் விதம். அணு இணைவு, அதாவது, மிகச் சிறியதான ஹைட்ரஜன் வாயுவின் ஓரகத்தனிம அணுக்களை உராய்வித்து இணையவைக்கும் போது அவற்றிலிருந்து ஹீலியம் என்ற அடுத்த கட்ட வாயு மூலகம் தோன்றுகிறது.
ஹீலியம் மட்டுமல்ல, ஒன்றரை கோடி டிகிரி சென்டிகிரேட் அளவு பெரும் வெப்பம் தோன்றுகிறது. பயங்கர வெப்ப நிலையில் உள்ள இந்த வாயுவை, ப்ளாஸ்மா என்கிறார்கள். இந்த வெப்பத்தை வைத்துத்தான் சூரிய ஒளி வருகிறது.
சூரியனில் நடப்பது போன்று ஒரு உலையை பூமிக்கிரகத்திலேயே அமைக்க முடியுமா? அமைத்தால் அதிலிருந்து வரும் வெப்பத்தை வைத்து மின்சக்தி தயாரிக்க முடியுமல்லவா - இதுகுறித்த பரிசோதனைகள் கடந்த ஐம்பது ஆண்டுகளாக நடந்து வருகின்றன.
<img src='http://news.bbc.co.uk/nol/shared/spl/hi/pop_ups/05/sci_nat_iter___the_next_generation_fusion_reactor/img/laun.jpg' border='0' alt='user posted image'>
<b>சூரியனில் சக்தி உருவாகும் விதம்</b>
ஆனால் அதில் உருவாகும் வெப்ப வாயுவைக் கையாள்வதில் தான் சிக்கல். இந்த அளவு வெப்பத்தைத் தாங்கும் அளவிலான பொருட்களுக்கு எங்கே போவது? அதற்கான பிரத்தியேக ஆராய்ச்சி தற்போது நடந்துவருகிறது. இதில் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், ரஷியா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் பங்கேற்கின்றன.
சூரியனைப் போல அணுஇணைவு முறையில் அணுசக்தி தயாரிக்க முற்படும் இந்த உலை பிரான்ஸ் நாட்டின் மார்சேய் நகருக்கு அருகே அமைக்கப்படும் என்று இன்று ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் இன்று அமெரிக்கா, ரஷ்யா, சீனா, உள்ளிட்ட ஆறு நாடுகள் நடத்திய சந்திப்பில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
BBC Tamil

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->