Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பொது கட்டமைப்பு கையெழுத்தானது !
#1
<b>ஜே.வி.பி. கறுப்பு கொடியுடன் கூச்சல் குழப்பம் விவதம் நடக்கமுடியாமல் சபை ஒத்திவைப்பு பொதுக்கட்டமைப்பு ஆவணம் குறித்து எம்.பி.க்களிடையே காரசாரமான வாய்த்தர்க்கம்</b>
<img src='http://www.virakesari.lk/VIRA/20050625/images/2506vdp1.jpg' border='0' alt='user posted image'>

பிரசுரிக்கப்பட்டது
25.06.2005 12.00 AM
(அ. நிக்ஸன், ஆர்.பிரியதர்ஷினி)
ஜே.வி.பி. எம்.பி.க்களின் கூச்சல், குழப்பம் கறுப்புக்கொடி போராட்டத்துக்கு மத்தியில் நேற்றுக் காலை சுனாமி நிவாரணத்துக்கான பொதுக்கட்டமைப்பு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

ஜே.வி.பி. எம்.பி.க்கள் தொடர்ந்தும் சபை நடவடிக்கைகளை நடத்த விடாது பெரும் களேபரத்தில் ஈடுபட்டமையினால் பொதுக்கட்டமைப்பு மீது விவாதம் நடத்தப்படாமலேயே சபை நடவடிக்கையை சபாநாயகர் லொக்கு பண்டார அடுத்த மாதம் 5 ஆம் திகதிவரை ஒத்தி வைத்தார்.

பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணியளவில் சபாநாயகர் வி.ஜே.மு. லொக்கு பண்டார தலைமையில் கூடியது. வழமை போன்று எம். பி. க்களுக்கான வாய் மூல கேள்வி நேரம் முடிவடைந்ததும் 9.45 மணியளவில் பொதுக் கட்டமைப்பு ஆவணம் தொடர்பாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன விசேட உரை ஒன்றை நிகழ்த்த எழுந்தார். அப்போது ஜே.வி.பி. யின் பிரசார செயலாளரும், கொழும்பு மாவட்ட எம்.பி. யுமான விமல் வீரவன்ச ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை முன் வைத்தார்.

பொதுக்கட்டமைப்பில் அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் கைச்சாத்திட்டுள்ளதாகவும் அவ்வாறு கைச்சாத்திட்ட நிலையில் பொதுக்கட்டமைப்பு ஆவணத்தை சபையில் சமர்ப்பித்து ஏன் விவாதிக்க வேண்டும் என கேள்வி எழுப்பி தனது ஒழுங்குப் பிரச்சினையை அவர் முன் வைத்தார்.

அதற்கு அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பதிலளிக்க முற்பட்டபோது அதனை ஏற்றுக் கொள்ளாத ஜே.வி.பி. எம்.பி.க்கள் தங்களது மேசைக்கு கீழ்பக்கமாக ஒளித்து வைத்திருந்த கறுப்புக் கொடிகளை எடுத்து கைகளில் ஏந்திய வண்ணம் சபை நடுவாக வந்து நின்று சத்தமிட்டனர். தமிழ் இராஜ்ஜியத்தை உருவாக்கும் பொதுக்கட்டமைப்பை கிழித்தெறிவோம் என கோஷமிட்டனர்.ஜனாதிபதிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் எதிராக ஜே.வி.பி. எம்.பி.க்கள் உரக்க சத்தமிட்டு கோஷம் எழுப்பி குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்ததற்கும் மத்தியில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பொதுக்கட்டமைப்பு தொடர்பான அரசாங்கத்தின் விளக்கவுரையை நிகழ்த்தினார்.

ஆனால், ஜே.வி.பி. எம்.பி.க்கள் அமைச்சர் மைத்திரி பால சிறிசேனவின் ஒலி வாங்கிக்கு அருகாக வந்து நின்று புலி பயங்கரவாதிகளுடன் ஒப்பந்தமா என சத்தமிட்டு அமைச்சரை பேசவிடாது தடுத்தனர். சபையில் நாகரிகமாக செயற்படுங்கள் என சபாநாயகர் கேட்டுக் கொண்டார். கூச்சல் குழப்பத்தினால் சபை அதிர்ந்தது. அதனை கட்டுப்படுத்த முடியாத நிலையில் சபாநாயகர் சபையை 9.47 மணியளவில் பத்து நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.

எம்.பி. க்களிடையே வாய்த்தர்க்கம்

சபை ஒத்தி வைக்கப்பட்ட பின்னரும் சபை நடுவாக நின்று ஜே.வி.பி. எம்.பி. க்கள் சத்தமிட்டனர். தகாத வார்த்தைகளினால் ஜனாதிபதியையும் விடுதலைப் புலிகளையும் ஏசினர்.

இதனை பொறுத்துக் கொள்ள முடியாத அமைச்சர் டி.எம். ஜயரட்ன கையை உயர்த்தி புலிகளுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவோம். எங்களுக்கு பொதுக் கட்டமைப்பு வேண்டும் என சத்தமிட்டார்.

அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ, பிரதியமைச்சர் மகிந்தானந்த அழுத்கமே ஆகியோர் ஜே.வி.பி. எம்.பி.க்களுடன் வாய்த்தர்க்கம் புரிந்தனர். தகாத வார்த்தைகளும் பரிமாறப்பட்டன.

நடனமாடிய அமைச்சர்

ஜே.வி.பி. எம்.பி.க்களின் தகாத வார்த்தைப் பிரயோகங்களை சகித்துக் கொள்ள முடியாத அமைச்சர் டி.எம். ஜயரட்ன தனது ஆசனத்திலிருந்து எழுந்து வந்து சபாநாயகர் ஆசனத்திற்கு அருகாக நின்று இரு கைகளையும் மாறி மாறி உயர்த்தி நடனமாடி ஜே.வி.பி. எம்.பி.க்களின் கோஷங்களுக்கு எதிர்க் கோஷமிட்டார்.

"பொதுக்கட்டமைப்பு', "பொதுக்கட்டமைப்பு' என்று உரக்கக் கூறி சத்தமிட்டுக் கொண்டு நடனமாடிய அமைச்சர் நாட்டையழித்தது ஜே.வி.பி. எனவும் கோஷமிட்டார். ஜே.வி.பி. யின் அஞ்சான் உம்மா எம்.பி.யை பார்த்து உம்மா, உம்மா என்று அழைத்துக் கொண்டு நடனமாடினார்.

அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் எம்.பி. க்கள் தமது ஆசனங்களிலிருந்து எழுந்து நின்று தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். ஜாதிக்க ஹெல உறுமயவின் பிக்கு எம்.பி.க்கள் தமது ஆசனங்களில் அமர்ந்தவாறு ஜே.வி.பி.யின் ஆர்ப்பாட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தனர்.

தமிழீழம் வாழ்கவெல்க

அதற்கிடையே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் தமது ஆசனங்களிலிருந்து எழுந்து நின்று ஜே.வி.பி. களின் கோஷங்களுக்கு மத்தியில் தமிழீழம் வாழ்க வெல்க என சத்தமிட்டனர். பொதுக்கட்டமைப்பு தமிழீழத்தின் முதற்படி எனவும் கோஷமிட்டனர்.

கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. க்களான எஸ்.ஜெயானந்த மூர்த்தி, கனகசபை, அம்பாறை மாவட்ட எம்.பி. பத்மநாதன், யாழ்.மாவட்ட எம்.பி.க்களான பத்மினி சிதம்பரநாதன், சிவநேசன் ஆகியோர் ஜே.வி.பி. எம்.பி. க்களுக்கு ஆவேசம் ஊட்டும் வகையில் சத்தமிட்டனர். கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் மேற்படி எம்.பி.க்களை அமைதியாக இருக்குமாறு கையை அசைத்து உத்தரவிட்டார்.

சபை மீண்டும் கூடியது

சபை மீண்டும் 10.18 இற்கு கூடியது. அமைச்சர் மைத்திரி பால சிறிசேன மீண்டும் பேச எழுந்தார். அப்போது ஜே.வி.பி. விடாது தடுத்தனர். அமைதியாக இருங்கள் என சபாநாயகர் கூறினார். பொதுக்கட்டமைப்பை கிழித்தெறியும் வரை அமைதியாக இருக்க மாட்டோம் என ஜே.வி.பி. க்கள் சத்தமிட்டனர். பிரபாகரனுக்காக நாங்கள் அமைதியாக இருப்பதா? எனவும் கேள்வி எழுப்பி கூச்சலிட்டனர்.

அந்தவேளை கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் எழுந்து சபாநாயகரிடம் ஏதோ கூற முற்பட்டார்.

பொதுக் கட்டமைப்பு

சமர்ப்பிப்பு

அதற்கிடையே பொதுக்கட்டமைப்பை சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுத்தார். கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில் பொதுக்கட்டமைப்பு ஆவணத்தை விளங்கப்படுத்தி அதில் உள்ளவற்றை வாசிக்க முடியாது என சபாநாயகரிடம் அமைச்சர் சொன்னார்.

அந்த வேளை அமைச்சருக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எம்.பி.க்கள் பாதுகாப்பு வழங்கினர். அமைச்சர்களான டி.எம்.ஐயரட்ன, மில்ரோய் பெர்னாண்டோ, ஜெயராஜ், பெர்னாண்டோ புள்ளே, பிரதி அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகே ஆகியோர் ஜே.வி.பி. எம்.பிக்கள் அருகில் நெருங்காத வகையில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை சூழ்ந்து கொண்டனர்.

அந்த வேளையில் ஒலிவாங்கியை சரிப்படுத்திய அமைச்சர் பொதுக்கட்டமைப்பு ஆவணத்தை இந்த சபையில் சமர்ப்பிப்பதாக அறிவித்தார். அப்போது ஜே.வி.பி. எம்.பி.க்களும் மேற்படி அமைச்சர்களும் ஒருவருக்கொருவர் இழுபறிப்பட்டனர். அதற்கிடையில் பொதுக்கட்டமைப்பு ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டதை சபை ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் அறிவித்தார்.

ஆவணத்தை கிழித்தெறிந்த விமல்

வீரவன்ச எம்.பி.

அந்த வேளையில் ஆத்திரமடைந்த விமல் வீரவன்ச எம்.பி. தனது கையில் வைத்திருந்த பொதுக்கட்டமைப்பு ஆவணத்தை அமைச்சர் மைத்திரி பால சிறிசேனவின் முகத்தில் கிழித்தெறிந்தார். சபையில் நிலைமை கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கையில்:

சபையை ஒத்தி வைக்குமாறு அமைச்சர் மைத்திரிபால சிறிசேன சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டார். அந்தவேளை மீண்டும் ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை விமல் வீரவன்ச எம்.பி. முன் வைத்தார்.

பிரதமர் ஏன் வரவில்லை

பொதுக்கட்டமைப்பு ஆவணத்தை ஏன் பிரதமர் சமர்ப்பிக்கவில்லை. ஆவணம் சமர்ப்பிக்கப்பட்ட போது ஏன் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ சபையில் இருக்கவில்லையென தனது ஒழுங்கு பிரச்சினையில் விமல் வீரவன்ச எம்.பி. கேள்வி எழுப்பினார். அதற்கு அரச தரப்பிலிருந்து பதிலளிக்க வில்லை. சபை முதல்வர் ஆவணத்தை சமர்ப்பித்துவிட்டார்தானே பின்னர் எதற்காக பிரதமரை கேட்கிறீர்கள்? என சபாநாயகர் கேள்வி எழுப்பியதுடன் நிலைமையை விளங்கப்படுத்தினார்.

நீங்கள் அமைதியாக இருந்தால்தானே எதற்கும் சரியான விளக்கத்தை தர முடியும் எனவும் சபாநாயகர் ஜே.வி.பி. எம். பி. க்களைப் பார்த்து கூறினார்.

அப்போது சபாநாயகருக்கு எதிராகவும் கோஷம் எழுப்பப்பட்டது.

சபை ஒத்திவைப்பு

அதேவேளை சபையை ஒத்திவைக்குமாறு அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மீண்டும் சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தார். அதனை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் சபை அடுத்த மாதம் 5 ஆம் திகதி காலை 9.30 மணி வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார். அதனையடுத்து சபை கலைந்தது.

ஆனாலும், ஜே.வி.பி. எம்.பிக்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எம்.பி.க்களும் சபை நடுவாக
நின்று வாய்த்தர்க்கம் புரிந்தனர். படைக்கல சேவிதர் செங்கோலை எடுத்துச் செல்வதற்குக் கூட இடமளிக்காதவகையில் சபை நடுவாக நின்று எம்.பி.க்கள் வாய்த்தர்க்கம் புரிந்தனர். உதவி படைக்கல சேவிதர்களின் பாதுகாப்புடன் படைக்கல சேவிதர் செங்கோலை எடுத்துச் சென்றார்.

முஸ்லிம் எம்.பி.க்கள் வாய்த்தர்க்கம்

அவை ஒத்தி வைக்கப்பட்ட பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அம்பாறை மாவட்ட எம்.பி.யுமான ரவூப் ஹக்கீமுக்கும் பிரதியமைச்சர் சேகு இஸ்ஸதீனுக்குமிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இருவரும் ஒருவருக்கொருவர் "வாயை பொத்து' என சபை நடுவில் நின்று சத்தமிட்டனர். பைஸல் ஹாசீம் எம்.பி.யும் சத்தமிட்டார். அப்போது ஐ.தே.க.வின் களுத்துறை மாவட்ட எம்.பி.யும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான மகிந்த சமரசிங்க ரவூப் ஹக்கீம் எம்.பி.யை சமாதானப்படுத்தினார்.

அதேவேளை, ஜே.வி.பி. எம்.பி.க்கள் சர்ச்சை ஏற்படுத்திய போது இடையிடையே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சபைக்குள் வந்து சென்றார்.

காலை 9.30 மணியளவில் சபை ஆரம்பமான போது சபைக்குள் வந்த பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பொதுக்கட்டமைப்பு தொடர்பாக விமல் வீரவன்ச எம்.பி. ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை முன்வைக்க முற்பட்டபோது தனது ஆசனத்திலிருந்து எழுந்து சபைக்கு வெளியே சென்று விட்டார். சபை ஒத்திவைக்கப்படும் வரை பிரதமர் சபைக்கு வரவேயில்லை.


<b>பொதுக்கட்டமைப்பு கைச்சாத்து
அரச தரப்பில் ஜெயசிங்கவும் புலிகள் தரப்பில் ரஞ்சன்லாலும் கையொப்பம்</b>
பிரசுரிக்கப்பட்டது 25.06.2005 12.00 AM (எஸ்.என்.ஆர். பிள்ளை)

சுனாமி நிவாரணம் தொடர்பான பொதுக்கட்டமைப்பில் நேற்று அரசாங்க தரப்பும், விடுதலைப் புலிகள் தரப்பும் கைச்சாத்திட்டுள்ளன. அரசாங்க தரப்பில் புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சின் செயலாளர் எம்.எஸ். ஜயசிங்கவும், விடுதலைப் புலிகளின் தரப்பில் திட்டமிடல் செயலகத்தின் பிரதிப் பணிப்பாளர் ரஞ்சன் லால் ஆகியோர் கையொப்பமிட்டனர். நேற்று முற்பகல் அரசாங்க தரப்பில் ஜயசிங்க பொதுக் கட்டமைப்பில் கைச்சாத்திட்டார். இதனையடுத்து இலங்கைக்கான நோர்வே தூதுவர் கான்ஸ் பிராஸ்கர் குறித்த ஆவணத்தை விமானப் படையினரது ஹெலிகொப்டரில் கிளிநொச்சிக்கு எடுத்துச் சென்றார். கிளிநொச்சிக்கு விஜயம் செய்த நோர்வே தூதுவர் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமி ழ்ச்செல்வனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். புலிகளின் சமாதான செயலகத்தில் மடையவில்லை. அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரை அரசாங்கத்தை அசைக்க முடியாது என்று ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே தெரிவித்தார்.

பொதுக் கட்டமைப்பு குறித்து சுதந்திர கட்சி செயலாளர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் பொதுக் கட்டமைப்புக் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விளக்க நேற்று மாலை தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் சுதந்திரக் கட்சி செயலாளர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஊடகவியலாளர் மாநõடு நடத்தப்பட்டது. மேற்படி ஊடகவியலாளர் மாநாட்டில் பொதுக் கட்டமைப்பு தொடர்பான விவாதம் மீண்டும் நடைபெறுமா எனக் கேட்ட போதே அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே மேற்கண்டவாறு பதிலளித்தார்.பொதுக் கட்டமைப்பு குறித்து ஒத்திவைப்பு விவாதம் நடத்த நாம் 9 மணி நேரம் ஒதுக்கி இருந்தோம். விவாதத்தில் 60 வீதத்தை எதிர்க்கட்சிகளுக்கு வழங்கி இருந்தோம். ஆனால் அந்த அவகாசத்தை பயன்படுத்திக் கொள்ள மக்கள் விடுதலை முன்னணி தவறிவிட்டது. ஆகையால் மீண்டும் ஒரு விவாதம் நடத்தப்படமாட்டாது. மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்தை விட்டு வெளியேறியதால் அரசாங்கம் பலவீனமடையவில்லை. ஜனாதிபதி தேர்தல் வரை அரசாங்கத்தை அசைக்க முடியாது. ஜனாதிபதி தேர்தல் ஒன்றுக்குப் பின் அரசாங்கம் மாறுமா? என்பது குறித்து கூற முடியாது.
ஜனாதிபதித் தேர்தலை எப்போது நடத்த வேண்டும் என்பதை தேர்தல் ஆணையாளர் தீர்மானிப்பார்.


Veerakesari
Reply
#2
ஐ.நா. செயலாளர் நாயகம் கொபி அனான், கனேடிய அரசு வரவேற்பு

பொதுக்கட்டமைப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசும் கைச்சாத்திட்டுள்ளதை ஐ.நா. செயலாளர் நாயகம் கொபி அனான் வரவேற்றுள்ளார்.


நியூயோர்க்கில் நேற்று வெள்ளிக்கிழமை (24.06.05) கொபி அனானின் பேச்சாளர் வெளியிட்ட அறிக்கை:

ஆழிப்பேரலை நிவாரணப் பகிர்விற்கான பொதுக்கட்டமைப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசும் கைச்சாத்திட்டுள்ளது குறித்து செயலாளர் நாயகம் மகிழ்ச்சியடைந்துள்ளார்

ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்க்கையில் முக்கியமான நாள் இது. அனைத்துத் தரப்பினரையும் இணைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீளமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக இப்பொதுக்கட்டமைப்பை உருவாக்கிய சிறிலங்கா ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை பாராட்டியுள்ளார். மக்களின் தேவைகளை உடனடியாக அனைத்துத் தரப்பினரும் நிறைவேற்ற வேண்டியது அவசியம்.

இப்பொதுக்கட்டமைப்பின் குழுக்களில் முஸ்லிம் சிறுபான்மையினரும் இணைக்கப்பட்டுள்ளதை செயலாளர் நாயகம் கொபி அனான் வரவேற்றுள்ளார். ஆழிப்பேரலையால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து முழுமையாக சிறிலங்கா மீள்வதற்கு இந்த ஒப்பந்தம் பேருதவியாக இருக்கும் என்றும் செயலாளர் நாயகம் நம்பிக்கை தெரிவித்துள்ளார் என்று அதில் கூறப்பட்டுள்ளார்.

கனேடிய வெளிவிவகார அமைச்சர் பியரி பெட்டிக்ரியூ மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான அமைச்சர் அய்லென் கரோல் ஆகியோர் கூறியதாவது:

இப்பொதுக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டதை வரவேற்கிறோம். இலங்கையில் வடக்கு கிழக்குப் பகுதியில் மீளமைப்புத் திட்டப் பணிகளின் தேவைகளையும் அவற்றுக்கான அங்கீகாரத்தையும் பணிகளை கண்காணிப்பையும் தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசும் மேற்கொண்டிருக்கும் இந்த ஒப்பந்தம் மூலம் நடைமுறைப்படுத்தப்பட முடியும்.

கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் மிக உறுதியான நிலைப்பாடுடன் சிறிலங்கா ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். முஸ்லிம் தரப்பினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டிருப்பதை நாம் வரவேற்கிறோம். முடங்கி நிற்கும் அமைதிப் பேச்சுகளுக்கு இப்பொதுக்கட்டமைப்பானது உந்துசக்தியாக அமையும் என்று கனேடிய அரசு நம்பிக்கை கொள்கிறது.

ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகள் வெளிப்படையாகவும், செழுமையாகவும், சமமான பகிர்வுடனும் மேற்கொள்ளப்பட இந்த ஒப்பந்தம் ஒரு முக்கிய காரணியாக விளங்கும். இருப்பினும் இலங்கையின் அரசியல் மற்றும் மனித உரிமைகள் நிலை குறித்து நாம் கவலை கொள்கிறோம். இந்த ஒப்பந்தம் ஒரு சாதகமான நிலையை உருவாக்கக் கூடும் என கருதுகிறோம் என்று அவர்கள் கூறினர்.

புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#3
இவர்களின் வரவேற்ப்புக்கு அப்பால் இதற்க்கிருக்கும் எதிர்ப்புக்களை நாம் பரர்க்க வேண்டும் இது கைச்சாத்திடப்பட்டிருப்பினும் இதன் செயற்பாடு என்பது தென்னிலங்கையின் கைகளில் தான் இருக்கிறது.....

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
ஆழிப்பேரலை நிவாரண சபையினால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் குறித்து விளக்கி ஜாதிக ஹெல உறுமய அமெரிக்க ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.


ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் எல்லாவெல மேதானந்த தேரர் நேற்று முன்தினம் இந்த கடிதத்தை அமெரிக்கத் தூதுவரிடம் கையளித்துள்ளார்.

ஜாதிக ஹெல உறுமய கட்சி பிரதிநிதிகளுக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கும் இடையே நேற்று முன்தினம் மாலை அமெரிக்க தூதரகத்தில் சந்திப்பு நடைபெற்றது.

ஆழிப்பேரலை நிவாரண சபையினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் தொடர்பாக இந்த சந்திப்பின் போது ஜாதிக ஹெல உறுமயவினர் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு விளக்கியுள்ளனர்.

ஜாதிக ஹெல உறுமய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு. புஷ்ஷிற்கு அனுப்பிய கடிதத்தில் சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளைப் பாராட்டியுள்ளது.

ஆழிப்பேரலை நிவாரண சபையினூடாக வழங்கப்படும் நிதியில் 60 சதவீத நிதி அமெரிக்காவினால் தடை செய்யப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கே வழங்கப்படுகிறது என்று இந்த கடிதத்தில் ஜாதிக ஹெல உறுமய சுட்டிக்காட்டியுள்ளது.

புதினம் 7 யூலை


United States Position on P-TOMS Trust Fund

Because of legal restrictions, the USA will not be contributing to the Trust Fund associated with P-TOMS, a press release issued by the Embassy of the United States of America in Colombo said Friday. However, the US welcomed other donor's participation in the Trust Fund.

Colombo, July 8, 2005: In order to clarify the U.S. position on the P-TOMS Trust Fund, the U.S. Embassy wishes to release the following statement:

The U.S. supports a mechanism, such as that outlined in the Post-Tsunami Operational Management Structure (P-TOMS), to coordinate the equitable and expeditious prioritization, delivery and distribution of assistance to tsunami victims from all communities in the north and east. We believe this mechanism, if properly implemented with the support and participation of all affected communities, can help improve the lives of those affected by the December 26 tragedy. Because of legal restrictions, the U.S. will not be contributing to the Trust Fund associated with the P-TOMS. We welcome other donors participation in the fund. We have allocated more than $130 million for tsunami relief and reconstruction in Sri Lanka. Some of these funds are spent on projects administered by NGOs and INGOs that work in all affected areas, including the north, east and south

Tamilnet July 08
Reply
#5
ஆழிப்பேரலை நிவாரண சபையினூடாக வழங்கப்படும் நிதியில் 60 சதவீத நிதி அமெரிக்காவினால் தடை செய்யப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கே வழங்கப்படுகிறது என்று இந்த கடிதத்தில் ஜாதிக ஹெல உறுமய சுட்டிக்காட்டித்தான் அமெரிக்காவிற்கு சட்டச்சிக்கல்கள் இருக்கின்றன என்று தெரியவந்தது என்பது நகைப்பிற்கிடமான விடயம்

அமெரிக்காவின் நோக்கம்தான் என்ன? :?
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)