Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சொகுசு வாகனத்திலிருந்து நால்வரின் சடலங்கள் மீட்பு
#1
<b>சொகுசு வாகனத்திலிருந்து நால்வரின் சடலங்கள் மீட்பு</b>
<img src='http://www.virakesari.lk/VIRA/20050710/images/1.jpg' border='0' alt='user posted image'>

டி.சார்ள்ஸ் பீட்டர்ஸ்
கம்பளை வெலம்பட எனுமிடத்தில் நேற்று முன்தினம் கடத்திச் செல்லப்பட்ட மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் பிரபல வர்த்தகர்களுமான அமீர் ஹாஜி உட்பட நால்வர். நேற்று அதிகாலை 3.30 மணியளவில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக சொகுசு வாகனம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் பிரபல வர்த்தகருமான அமீர் ஹாஜி (வயது 38 ), அவரது மருமகன் சகீர் டீன் (வயது 19), சாரதியான பாஹிம் மற்றும் பணியாளர் என்பவருமே இவ்வாறு கறுவாத்தோட்ட பொலிஸாரால் சடலமாக மீட்கப்பட்டவர்களாவர்.

சொகுசு வாகனம் ஒன்று நீண்ட நேரமாக மலலசேகர மாவத்தையில் நின்றதையடுத்து அவ்வாகனத்தை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்ட பொலிஸார் வாகனத்தில் இருந்து கைகள், கால்கள், வாய் கட்டப்பட்ட நிலையில் சடலங்களை மீட்டுள்ளனர்.

கம்பளை, வெலம்பட எனுமிடத்தில் வசித்து வந்த அமீர் ஹாஜி, ஆறு பிள்ளைகளின் தந்தையாவார்.

இவர் தனது சகோதரியின் மகனான சகீர்டீன், சாரதி பாஹிம் மற்றும் பணியாளர் ஒருவரையும் அழைத்துக் கொண்டு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பகல் ஜும்மா தொ கைக்கு பின் பள்ளிவாசலில் இருந்து வெளியே வரும் போது பொலிஸ் சீருடையில் பள்ளிவாசலில் வானுடன் காத்துநின்ற மூவர் பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக வருமாறு அவர்களை அழைத்தபோது அமீர் ஹாஜியும் அவரது மருமகனும் அந்த வாகனத்தில் செல்ல சாரதியும், பணியாளரும் அமீர் ஹாஜிக்கு சொந்தமான மொண்டரோ சொகுசு வாகனத்தில் சென்றனர். அமீர் ஹாஜி கொண்டு செல்லப்பட்ட வாகனத்துக்கு பின்னால் இவர்களின் வாகனம் சென்றது. அதன் பின்னர் இவர்கள் நேற்றுக் காலை சடலமாக மீட்கப்பட்டனர் எனவும் உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

தேயிலை வர்த்தகத்திலும் அரசியலிலும் கொடிகட்டிப் பறந்த அமீர் ஹாஜிக்கு வர்த்தக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இடையூறுகள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரசியல் பழிவாங்கல் காரணமாகவும் இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என உறவினர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

அமீர் ஹாஜியுடன் கொலை செய்யப்பட்ட அவரது மருமகன் சகீர் டீன் கல்வி பயின்று வருபவர் என தெரிவிக்கப்படுகிறது. ஏனைய இருவரும் இன்னமும் திருமணம் செய்யாதவர்கள் எனவும் தெரிய வருகிறது.

கொழு ம்பில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இராஜதந்திரிகளும், முக்கியஸ்தர்களும் வசித்து வரும் இடத்தில் இருந்து இந்த நான்கு சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

அதுதவிர, பொலிஸ் சீருடையில் வந்தவர்கள், இந்தக் கொலையைச் செய்ததாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக கொழும்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவிடம் கேட்டபோது,

""தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் இந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான விசாரணைகளை நாம் முன்னெடுத்துச் செல்கின்றோம்.

இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை. பொலிஸ் சீருடையில் வந்தவர்கள் இவர்களை அழைத்துச் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இக்கொலையுடன் பொலிஸார் சம்பந்தப்பட்டிருந்தால், அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படும்'' எனத் தெரிவித்தார்.

கொலை செய்யப்பட்ட அமீர் ஹாஜி உட்பட நால்வரின் சடலங்களும் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்தக் கொலைகள் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத் தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-virakesari
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)