Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
3 வயது குழந்தையின் கொலையை மறைத்த குஷ்பு
#1
3 வயது குழந்தையின் கொலையை மறைத்த குஷ்பு
நவம்பர் 15, 2005

சென்னை:

ஒரு குழந்தையின் கொலையை மறைத்ததாக குஷ்பு மீது விடுதலை சிறுத்தைகள் அமைப்பு புதிய வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளது.



சென்னை எழும்பூர் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வி. சிறுத்தைகள் மாநில மாணவரணித் துணைச் செயலாளர் ரவிசந்திரன் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.

அதில், கடந்த 2004ம் ஆண்டு சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டல் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் குஷ்பு கலந்து கொண்டிருக்கிறார். இந்த விருந்து நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர் ஒருவரின் 3 வயது பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு குளியறையில் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளது.

இந்த கொலைச் சம்பவத்தை குழந்தையின் பெற்றோரும், ஓட்டல் நிர்வாகத்தினரும் மறைத்துவிட்டனர். போலீசில் புகார் ஏதும் கொடுக்கவில்லை. இந்த விவரம் தெரிந்த குஷ்புவும் கூட அதை போலீசுக்குச் சொல்லவில்லை.

இதைபற்றி கடந்த 2004ம் ஆண்டு பிரபல வாரப் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி கொடுத்த குஷ்பு, குழந்தையின் கொலைச் சம்பவம் பற்றி குறிப்பிட்டு அந்த சம்பவம் மனதளவில் என்னை மிகவும் பாதித்து விட்டது என்று தெரிவித்துள்ளார்.

இது பற்றி அப்போதைய போலீஸ் கமிஷனரிடம் நிருபர்கள் கேட்டபோது, குழந்தை கொலை பற்றி பெற்றோரோ, ஓட்டல் நிர்வாகத்தினரோ புகார் ஏதும் கொடுக்கவில்லை. அதனால் நடவடிக்கை எடுக்க இயலாது என்று கூறிவிட்டார்.

குழந்தை கொலை பற்றி குஷ்புவுக்கு தெரியும். இதனால் தான் அது பற்றி வாரப்பத்திரிகைக்கு பேட்டி கொடுத்துள்ளார். ஆனால் கொலை பற்றி போலீசுக்கு தகவல் கொடுக்காமல் மறைத்துள்ளார்.

குற்றவியல் விசாரணை முறைச் சட்டப்பிரிவு 39ன் படி கொலையை நேரில் பார்த்தவர் அதுபற்றி உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தகவல் தெரிவிக்காவிட்டால் அது இபிகோ 201,202,203 பிரிவுகளின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

எனவே இது தொடர்பாக நடிகை குஷ்புவிடம் விசாரணை நடத்தி, அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்குக்கு ஆதாரமாக வாரப் பத்திரிகைக்கு குஷ்பு அளித்த பேட்டியின் நகலும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் இன்னொரு விவகாரத்தில் குஷ்பு மாட்டியுள்ளார்.

Thatstamil
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
ஆகா வக்கிறாங்களய்யா அம்மாச்சிக்கு அடிக்கடி ஆப்பு
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]
Reply
#3
விடுதலைச் சிறுத்தைக்கு வேலைவெட்டியில்லாமல் வெளிக்கிட்டு நிக்கிறார். வி.சிறுத்தையணியிலிருந்து எத்தனை கொலைகள் நடந்திருக்கின்றன என்பதை இனி ஏதாவது பத்திரிகை கொண்டு வந்தாத்தான் வெளிச்சம்.

குஸ்புவுக்கு விலாசம் குடுக்கிறதை விட்டிட்டு தமிழகத்து குக்கிராமங்களில் சிறுத்தை போன்ற பெருத்தவர்களின் பசிக்கு இரையாகும் சிறுமிகளுக்கு ஏதாவது நல்லது செய்தால் இந்தியாவில் பெண்சிசுக்கொலை , பெண்கள் மீதான ஆண்களின் வன்முறைகள் இல்லாமல் போகலாம்.

சிறுத்தைக்கு தனது கட்சியை வளக்க குஸ்பு மூலதனமாகியிருந்தால் சிலவேளை குஸ்பு பிழைத்திருக்கலாம்.

கள்வர் கூட்டம் அரசியல் நடந்தும் தமிழகத்திழல் எல்லாம் அரசியல்தான். இதைப்புரியாமல் ஐரோப்பி அமெரிக்க தமிழர் அறிக்கைள் என்னத்தை சாதிக்கப் போகிறது.
:::: . ( - )::::
Reply
#4
Vaanampaadi Wrote:.

இது பற்றி அப்போதைய போலீஸ் கமிஷனரிடம் நிருபர்கள் கேட்டபோது, குழந்தை கொலை பற்றி பெற்றோரோ, ஓட்டல் நிர்வாகத்தினரோ புகார் ஏதும் கொடுக்கவில்லை. அதனால் நடவடிக்கை எடுக்க இயலாது என்று கூறிவிட்டார்.


Thatstamil

<b>இதுதாண்டா போலீஸ்.</b>

புகார் குடுத்தான்தான் நடவடிக்கை எடுக்கலாமா?
அப்போ புகார் கொடுக்கல்லேண்ணா எத்தனை கொலைவேணாமானாலும் பண்ணலாமே?

என்னமோ சும்மா இருந்த ஜெயலலிதாவை எம்ஜிஆர் கடைசி ஊர்வல வண்டியில இருந்து தள்ளி விட்டு தலைவியாக்கிக்கிட்ட மாதிரி
குஸ்புவையும் தலைவியாக்கிறாங்க............
புது பொம்புள அரசியல் பிரவேசம் ஒண்ணு வரப் போகுது.

குஸ்பு பொம்பே எண்ணு கத்துவாங்க.
அம்மா மட்டும் என்ன பெங்களூர்தானுங்களே? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#5
இவ்வளவு நாளும் இந்த பிரச்சனை பற்றி ஏன் வழக்குத்தொடுக்கவில்லை.. 2004ல் நடந்திருக்கிறது. என்னமோ போங்க.. :evil: :evil:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#6
மறைக்கப்பட்டவற்றில் ஒன்று வெளிப்பட்டு இருக்கிறது போல..! சட்டத்தை மீறுபவனை விட ஏய்ப்பவன் ஆபத்தானவன்..! :roll: Confusedhock: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
aswini2005 Wrote:இதைப்புரியாமல் ஐரோப்பி அமெரிக்க தமிழர் அறிக்கைள் என்னத்தை சாதிக்கப் போகிறது.

அப்படித்தான் நானும் நினைத்தேன். முதலில் யார் இவர்கள் என்றுகூடத் தெரியவில்லை. நான் ஒருபோதும் இவர்களைப்பற்றி கேள்விப்பட்டதில்லை. யாராவது கேள்விப்பட்டீர்களா? அந்த செய்தியை வெளியிட்ட புதினம், அதனை முகப்புச்செய்தியில் போட்ட யாழ் என்பன அதுபற்றிய மேலதிக விளக்கத்தை வெளியிட்டால் நல்லம். அந்த அறிக்கைகூட ஒரு விளக்கமற்றதாகவேயிருக்கிறது. இது பற்றி யாராவது மேலதிக தகவல் தெரிந்தால் விளக்குவீர்களா?
Reply
#8
tamilini Wrote:இவ்வளவு நாளும் இந்த பிரச்சனை பற்றி ஏன் வழக்குத்தொடுக்கவில்லை.. 2004ல் நடந்திருக்கிறது. என்னமோ போங்க.. :evil: :evil:

ம் நீர் வரேல்லை அந்த இடத்துக்கு அது தான் :!: ஓய் டமிழ் ளொள்ளா ??
:evil: :evil: :evil: :evil:
[b]
Reply
#9
மேட்டூர் நீதிமன்றத்தில் குஷ்பு சரண்!
நவம்பர் 15, 2005

மேட்டூர்:

தனக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த மேட்டூர் நீதிமன்றத்தில் நடிகை குஷ்பு இன்று சரணடைய வந்தார். ஆனால், நீதிபதி இல்லாததால் நாளை வருமாறு அவரிடம் கூறபட்டது.



தமிழகப் பெண்களின் கற்பு குறித்து தவறாகப் பேசிய குஷ்பு மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அவரை கைது செய்ய மேட்டூர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதரன் பிடிவாரண்ட் பிறப்பித்தார். இந்த பிடிவாரண்ட் உத்தரவு நகல் அடங்கிய விசேஷ தபால் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தது. அதை நேற்றிரவு போலீசார் பெற்றுக் கொண்டனர்.

இந் நிலையில் தனக்கு முன் ஜாமீன் கோரி குஷ்பு தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தீர்ப்பை நாளைக்கு (செவ்வாய்க்கிழமை) நீதிபதி ஒத்தி வைத்துவிட்டார்.

நேற்று இந்த முன் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது குஷ்புவைக் கைது செய்ய தடை விதிக்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் கூறியதை நீதிபதி சக்கரியா ஹூசேன் ஏற்கவில்லை.

இந் நிலையில் மேட்டூர் நீதிமன்றத்தின் பிடிவாரண்ட் உத்தரவு போலீசாரின் வசம் வந்து சேர்ந்துவிட்டதால் குஷ்புவை போலீசார் கைது செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதையடுத்து கைதைத் தவிர்க்க இன்று மேட்டூர் நீதிமன்றத்தில் குஷ்பு சரணடையலாம் என்று நாம் ஏற்கனவே கூறியிருந்தோம். அதே போல இன்று மாலையில் அவர் மேட்டூர் இரண்டாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு வந்தார்.

ஆனால், அப்போது நீதிபதி ஸ்ரீதரன் நீதிமன்றத்தில் இல்லை. இதனால் நாளை காலை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு குஷ்புவிடம் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தான் சரணடைந்துவிட்டதை பதிவு செய்து கொள்ளுமாறு குஷ்பு கேட்டுக் கொண்டார்.

நாளை குஷ்பு மீண்டும் மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜராகி சரணடையவுள்ளார். முன்னதாக கைதைத் தவிர்க்க குஷ்பு தனது வீட்டில் இருந்து எஸ்கேப் ஆகியிருந்தார். தோழி ஒருவரின் வீட்டில் மறைந்து இருந்தார். ஆனால், சிக்கல் பெரிதானதால் மேட்டூர் நீதிமன்றத்துக்கு சரணடையச் சென்றார்.

Thatstamil
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)