Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காந்தி வேடத்தில் பிச்சை எடுத்தவருக்கு தர்ம அடி!
#1
காந்தி வேடத்தில் பிச்சை எடுத்தவருக்கு தர்ம அடி!
ஜூலை 23, 2005

சென்னை:

சென்னை திருவொற்றியூர் பகுதியில் மகாத்மா காந்தி போல வேடமணிந்து கொண்டு பிச்சை எடுத்தவரை பொது மக்கள் தர்ம அடி கொடுத்து விரட்டினர்.


திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் எல்லையம்மன் கோவில் அருகே ஒரு நபர் மகாத்மா காந்தி போல வேடமணிந்து சாலையோரம் அமைதியாக நின்று கொண்டிருந்தார். தேசத் தந்தையின் உருவத்தை அப்படியே பிரதிபலித்ததால் அப்பகுதியில் சென்று கொண்டிருந்தோர் அவரை பிரமிப்புடன் பார்த்து மெய் மறந்து நின்றனர்.

தன்னைச் சுற்றி நிறையப் பேர் சேர்ந்து விட்டதையடுத்து அந்த நபர் அப்படியே மெதுவாக பிச்சை எடுக்க ஆரம்பித்தார். காசு கொடுங்க, காசு கொடுங்க என்று அந்த நபர் கேட்கத் தொடங்கியதும் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தேசத் தந்தையை இப்படியா அவமானப்படுத்துவது என்று கூறி அந்த நபரை சரமாரியாக அடிக்க ஆரம்பித்தனர். ஆண், பெண் என அனைவரும் சேர்ந்து தர்ம அடி கொடுத்ததால் அந்த நபர் அங்கிருந்து தலை தெறிக்க ஓடினார்.

அடிப்பதற்கு முன்பு 'காந்தி' அணிந்திருந்த கண்ணாடி மற்றும் கம்பு ஆகியவற்றை பொதுமக்கள் பத்திரமாக 'சுட்டுக் கொண்டனர்' என்பது தான் இதில் விஷேசம்.

Thatstamil
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
அட அவன் சரியாதான் செய்திருக்கிறான். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img238.imageshack.us/img238/222/sam3ye.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
சீ அந்த நபர் என்னமாதிரி கேடிஸ்வரரா சீ கோடிஸ்வரராகி சுபபோக வாழ்க்கை வாழ்த்திருங்கலாம் யஸ்ட் மிஸ்ட் பண்ணீட்டாரே.. பின்ன பிச்சை எடுத்ததைவிட கையில சிகரட்டையும், கையில பியர்போத்தலையும் வைச்சுக்கொண்டு தவம் இருக்கிறமாதிரியோ அல்லது கும்பகர்ணன் நித்திரை கொண்டதைப்போல ஒரு மரத்துக்கடியில் நித்திரி கொண்டு இருந்தால் அந்த வீதியால் சென்றவர்கள் அவரை சிகரட் பீடி சாமியார் எண்டு நினைத்து அந்தமாதிரி குடுக்க கூடாத ??? எல்லாத்தையும் குடுத்துஇருப்பினம்... உதுக்காதனப்பா சொல்லுறது எந்த ஒரு செயலையும் செய்யுமுன் அதற்குரிய ஜடியாவை நம்மட ஆனந்த சங்கரிட்ட கேக்க்கோனுமெண்டு.... Idea :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
காந்தி இப்ப இருந்திருந்தாலும் பிச்சை தான் எடுத்திருப்பார்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)