Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இப்படியும் சில மனிதர்கள்
#1
வறுமை காரணமாக, பெற்ற குழந்தையை கோதாவரி ஆற்றில் துõக்கியெறிந்தார் தந்தை. அதிருஷ்டவசமாக தப்பியது குழந்தை.

ஆந்திரா, விஜயவாடா மாவட் டத்தை சேர்ந்த கிருஷ்ணலங்கா என்ற கிராமத்தை சேர்ந்தவர் மதுசூதனராவ். பெட்டிக்கடை வைத்து பிழைத்து வருகிறார். ஏகப்பட்ட கடன் வாங்கிவிட்டதால், வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் தவித்தார். கடன்களை அடைக்க முடியாமல், இனி வாழ்வதற்கு வழியில்லை என்ற முடிவுக்கு வந்தார். அதனால் தன் இரு குழந்தைகளை யாருக்காவது "தத்து' கொடுத்து விட்டால், அவர்கள் வாழ்க்கையாவது நல்லபடியாக இருக்கட்டும் என்று நினைத்தார். விசாகப்பட்டிணத்தில் ஒருவர், இவரது மூத்த மகள் ஆறு வயது சுமதியை "வளர்ப்பு மகளாக' ஏற்க சம்மதித்தார். அதற்காக சுமதியை அழைத்துக் கொண்டு கிளம்பினார் மதுசூதனராவ்.

போகும்போதே அவருக்கு ஏகப் பட்ட குழப்பம். "தத்து கொடுக்கும் இடத்தில் தன் குழந்தை சுமதியை நன்றாக நடத்துவரா? ஏதாவது பிரச் னை வந்துவிடுமா? தன்னை போல வே குழந்தையும் எதிர்காலத்தில் பாதிக்கப்படுமா?' என்றெல்லாம் குழம்பியபடி இருந்தார். அவர் மனதில் அடுத்தடுத்த சந்தேகங்கள் வர, கடைசியில் குழப்பத்தின் உச்சகட்டத்துக்கே சென்று விட்டார்.

இப்படி எதிர்காலத்தில் குழந்தை தவிப்பதை விட, எல்லாருமாக இறப்பதே மேல் என்று எண்ணி, தோலேஸ்வரம் என்ற இடத்திற்கு வந்த போது, அங்குள்ள கோதாவரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையின் மீதிருந்து தன் ஆறு வயது மகள் சுமதியை தள்ளிவிட்டு விட்டார். எப்படி அவர் அதை செய்தார் என்றே அவருக்கு தெரியவில்லை. "ஐயோ , என் மகளை காப்பாற்றுங்க' என்று கத்தினார்.

அங்கிருந்த சில மீனவர்கள் ஆற்றில் குதித்து, தத்தளித்துக் கொண்டிருந்த சுமதியை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர். சிறிய காயங்களுடன் சுமதி தப்பினார். மகளை பார்த்து தந்தை கதறி அழ, மகள் ஒன்றும் சொல்லாமல் அவரையே பார்த்தபடி இருந்தார். ஆழம் அதிகம் இருந்தும் குழந்தையை விழுங்கவில்லை கோதாவரி ஆறு. நல்லவேளையாக காப்பாற்றிவிட்டது
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)