Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பெற்ற தாயை கொலை செய்ததாக தமிழ்ப் பெண் டாக்டர் கைது
#1
அமெரிக்காவில்
பெற்ற தாயை கொலை செய்ததாக தமிழ்ப் பெண் டாக்டர் கைது


வாஷிங்டன், ஆக.11-

அமெரிக்காவில் வசிக்கும் தமிழ்நாட்டுப் பெண் டாக் டர் ஒருவர் பெற்ற தாயைக் கொலை செய்த குற்றத்துக் காக கைது செய்யப்பட்டு

இருக்கிறார்.டாக்டர் மலர்

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் மலர்பாலசுப்பிரமணியன். 28 வயதான இவர் டாக்டர், குழந்தை களுக்கான மருத்துவம் படித்தவர் இவர் அமெரிக்காவில் தாயார் சரோஜா (வயது 53) உடன் தங்கி இருந்து வேலை பார்த்து வந் தார்.

சம்பவத்தன்று இவர் அலங் கோலமாக, அரைகுறை ஆடை யில் கார் ஓட்டிச்சென்றார். இவ ரது கோலத்தை பார்த்த போலீ சார் காரைத் தடுத்து நிறுத்தினர். போலீசார் கேட்ட கேள்வி களுக்குச் சரியாகப்பதில் சொல் லாமல் குழம்பிய நிலையில் இருந்தார்.

தாயார் கொலை

காரின் பின் இருக்கையில் ஒரு பிணம் கிடந்ததை போலீசார் பார்த்தனர். அது யார் என்று கேட்ட போது தன் தாயார் என்று கூறி னார். தாயாரை அவர் கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் கொண்டனர். அவரைக் கைது செய்தனர்.

ஹாமில்டன் கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அதன் பிறகு அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டடார். கொலை செய்த பிறகு அளவுக்கு அதிக மான மாத்திரைகளை அவர் விழுங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தம்பிக்கு இ.மெயில்

டாக்டர் மலர் தன் தம்பி, தங்கைக்கு அனுப்பிய இ.மெயி லில் "நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் நான் இறந்த பிறகு உங்களை அம்மா விடம் விட எனக்கு விருப்பம் இல்லை. எனவே அம்மாவையும் கொல்லப்போகிறேன். யாரை யும் துன்புறத்த இனி அம்மா இருக்க மாட்டாள் என்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கி றது" என்று எழுதி இருக்கிறார்.

"டாக்டர் மலரின் தாயார் கொடுமைக்காரராக இருக்க வேண்டும் அவரிடம் இருந்து தம்பி, தங்கையை பாதுகாக்க இந்த கொலையைச் செய்து இருக்கவேண்டும் என்று போலீ சார் கூறினர்.


Dailythanthi
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)