Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எப்படி அழைப்பது?
#1
எப்படி அழைப்பது?

சுந்தரம், சண்முகம்,குமார்,ராஜன்.... இப்படியான பெயர்களை கேட்ட உடனேயே எமக்கு புரிகிறது இது ஒரு தமிழ் பெயர் அல்லது ஹிந்து சமயத்தவரின் பெயர் என்று...அதேபோல் இப்ராஹிம், ஹாசான்,அலி,முகமட் ..... இப்படியான பெயர்களை கேட்டதும் இது ஒரு இஸ்லாமிய சமயத்தவரின் பெயர் அல்லது அரப்நாட்டவரின் பெயர் என்று கூறிவிடுகிறோம்.... அப்படியே லிங்,சுங், கொங் .... என்ற பெயர்களை கேட்டவுடன் இவர் ஏதோ ஜப்பான், சீனா அல்லது கொரியநாட்டவர் என்று சொல்லிவிடுகிறோம்.......

இப்ப விஷயம் என்னவென்றால்.......

ஜோசப், அந்தோனி,வின்சண்ட் .... இப்படியான பெயர்களை கேட்டதும் உடனே நம்மவர்கள் இது கிரிஸ்ரியன் (christian) பெயர் என்கிறார்கள் .... எனது விவாதம் அவர்கள் அதை அப்படி கிரிஸ்ரியன் பெயர் என்று அழைப்பது தவறு என்பதுதான் ...காரணம் கிரிஸ்ரியன் (christian) அல்லது கிரிஸ்ரியானிட்டி (christianity) என்பது கிறிஸ்துவிற்க்கு பின்னர்தான் அந்த வசனம்/சொல் நடைமுறைக்கு வந்தது ...இயேசுநாதரின் தாய் தந்தையரின் பெயர்கள் ஜோசப், மேரி என்பதாகும் ..... அப்படிபார்த்தால் நம்மவர்கள் இன்றும் கிரிஸ்ரியன் பெயர் என்று அழைக்கும் ஜோசப்.... மேரி என்ற பெயர்கள் இயேஸுநாதர் இவ்வுலகில் பிறப்பதற்கு முன்னரே இப்பெயர்கள் பாவணையில் இருந்திருக்கும் போது அதனை எப்படி இன்று கிரிஸ்ரியன் பெயர் என்று சொல்லமுடியும் ....

சரி போனால் போகட்டும் இவைகள் அனைத்தும் ஆங்கிலேயனின் பெயர்கள் அல்லது வெள்ளைக்காரரின் பெயர்கள் என்றும் சொல்லமுடியாதுள்ளது .... காரணம் பைபிளின் படி பார்க்கும்போது இவ்வுலகில் ஆண்டவன் படைத்த முதல் மனிதர்களின் பெயர்கள் ஆதம் (Adam), (Eva) ஏவா ..... இந்த பெயர்கள் இன்றும் நடைமுறையில் பிரபல்யமாகி இருக்கிறது ....

அப்ப இன்றும் நம்மவர்களால் கிரிஸ்ரியன் பெயர் என்று அழைக்கப்படும் பெயர்களை உண்மையில் எப்படி அழைப்பது ..... இப்பெயர்களுக்கு உரிய இனத்தவர்கள் யார்?
தெரிந்தவர்கள் சொல்லுங்கோ......


(இக்கேள்வி மிக நீண்டநாட்களாக எனது மனதை உறுத்திக்கொண்டிருக்கிறது ... எனக்கும் இதுவரை தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை ..... ஆகவே உங்களிடம் விடுகிறேன் - நன்றி)
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
வானம்பாடி யேசு நாதரும் அவரது தாய் தந்தையரும் யுத இனத்தவர்கள் எனவே மேரி யோசப் நசரேத் எல்லாம்(யேசுநாதர்) எல்லாம் யுத பெயர்களே மற்றபடி ஆதாம் ஏவாள் எல்லாம் பைபிள் என்கிற கதைப்புத்தகத்தின் முதல் கதா நாயக நாயகியரே
; ;
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)