Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனையா?
#1
<b>சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனையா?</b> <i>ஈராக் அரசு பதில்</i>

முதல் வழக்கின் விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், மற்ற வழக்குகளை விசாரிக்கும் முன்பே ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை வழங்கப்படலாம் என்று ஈராக் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நேற்று ஈராக் அரசின் பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறுகையில் சதாம் உசேன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக பல வழக்குகள் பதிவு செய்யப்பட இருந்தாலும், சதாம் உசேனின் மீதான முதல் வழக்கின் விசாரணையில் அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் அவர் தூக்கிலிடப்படுவார் என்று தெரிவித்தார்.

ஆனால் ஈராக் அதிகாரிகள் இந்த முதல் கட்ட விசாரணைக்கான நாளை இன்னும் தீர்மானிக்கவில்லை. இந்த விசாரணை கடந்த 1982 ஆம் ஆண்டு பாக்தாதுக்கு மேற்கே துஜைல் என்னும் இடத்தில் 150 ஷியா முஸ்லிம்கள் கொல்லப்பட்டது குறித்து நடத்தப்படும் என்று தெரிகிறது.

இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை கிடைக்கும். இந்த வழக்கு தவிர சதாம் உசேன் மீது வேறு 12 வழக்குகளைப் போடவும் ஈராக் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். இவைகளை தனித்தனியாக நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த முதல் வழக்கில் சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டால், அடுத்த வழக்குகளின் தீர்ப்புக்காக காத்திருக்காமல் சதாமை தூக்கிலிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஒரு வேளை குற்றம் நிரூபிக்கப்பட்டால், சதாமை உடனடியாக தூக்கிலிடுவதா அல்லது உலக நாடுகளின் நீதி முறைப்படி மற்ற குற்றச்சாட்டுகள் முழுவதுமாக விசாரித்து முடியும் வரை காத்திருப்பதா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும் என்றும் அவர் கூறினார்.

சதாம் உசேன் மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக 5 நபர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு இன்னும் சில வாரங்களில் கூடி சதாமுக்கு எதிரான முதல் வழக்கு விசாரணை துவங்கும் நாளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு விசாரணையை ஈராக் மக்கள் தெரிந்து கொள்வதற்காக பொது இடத்தில் நடக்கும் என்றும் தெரிகிறது.

viktannews
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)