Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிங்கப்பூர் அதிபராக ராமநாதன் பதவி ஏற்பு
#1

சிங்கப்பூர் : சிங்கப்பூர் அதிபராக எஸ்.ராமநாதன் மீண்டும் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
<img src='http://www.dinamalar.com/2005SEP02/photos/impn-15.jpg' border='0' alt='user posted image'>
சிங்கப்பூரில் கடந்த மாதம் 17ம் தேதிநடந்த அதிபர் தேர்தலில் அதிபர் ராமநாதன் போட்டியிட்டார். இந்த தேர்தலில் அவர் மீண்டும் வெற்றி பெற்றார். சிங்கப்பூர் அரண்மனையில் நேற்று நடந்த விழாவில் ராமநாதன் அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார். இவ்விழாவில் சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லுõங் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் கலந்து கொண்டனர்.


திரு.ராமநாதருக்கு வாழ்த்துகள் சொல்வோம்.


Thanks: "பரஞ்சோதி"
Reply
#2
தகவலுக்கு நன்றி அஜீவன் அண்ணா
Reply
#3
வாழ்த்துக்கள் ? என்களுக்கு தகவல் தந்தஅஐPவன் அண்ணாக்கு நன்றிகள்

Reply
#4
அஜிவனுக்கு நன்றிகள்

சிங்கையின் அதிபர் இராமநாதனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Reply
#5
தகவலுக்கு நன்றிகள் அண்ணா வழ்த்துக்கள் திரு இராமநாதனுக்கு
<b> .. .. !!</b>
Reply
#6
தகவலுக்கு நன்றி, வாழ்த்துக்கள் ஜனாதிபதிக்கு
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#7
இரண்டாவது முறைவாக அதிபராக பதவியேற்றுள்ள எஸ்.ஆர்.நாதனுக்கு வாழ்த்துக்கள். சிங்கப்பூர் அதிபர் பதவி இலங்கை அதிபர் பதவி போல அல்லாமல் ஒரு பெயரளவிலான பொறுப்பாக இருந்தாலும் கூட ஒரு தமிழர் அந்த பதவியில் இருப்பதில் மகிழ்ச்சி தான். அது தவிர சிங்கப்பூரில் கல்வி உட்பட பல அமைச்சர் பதவிகளில் தமிழர்கள் உள்ளனர்.

<img src='http://www.cabinet.gov.sg/images/c_pjaya.jpg' border='0' alt='user posted image'>

சிங்கப்பூர் துணை பிரதமர் பேராசிரியர் எஸ்,ஜெயகுமார்

<img src='http://www.cabinet.gov.sg/images/c_vivian.jpg' border='0' alt='user posted image'>

உள்ளூர் மேம்பாடு, இளையோர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் Dr விவியன் பாலகிருஷ்ணன்

<img src='http://www.cabinet.gov.sg/images/c_tharman.jpg' border='0' alt='user posted image'>

கல்வி அமைச்சரான தர்மன் சண்முகரத்தினம் யாழ்ப்பாணம் ஊரெழுயை அடியாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது பாட்டனார் ஊரெழுவில் பிறந்து பின்பு மலேயாவுக்கு புலம் பெயர்ந்தார், அதன்பின்பு அமைச்சரும் அவரது தகப்பனாரும் மலேயாவிலேயே பிறந்தனர்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#8
சிங்கையின் அரசியலில் ஈடுபடுவோர்
<b>பல்கலைக் கழகத்தில் அரசியல் பட்டம் பெற்றவர்களாகவும் </b>
சிங்கை நாட்டின் மேல் அக்கறை கொண்டவர்களாகவும் இருந்தால் மட்டுமே ஈடுபட முடியும்.

இல்லாதோர் அரசியலில் ஈடுபட முடியாது.

முன்னய வெளி-விவகார அமைச்சராக தனபாலன் அவர்கள் இருந்தார்கள்.

1994ல் சிங்கையின் பிதா லீ குவான்யு அவர்கள்
இன்னும் 50 ஆண்டுகளுக்கு தேவையான பொருளாதாரம் சிங்கை நாட்டில் இருக்கிறது எனக் குறிப்பிட்டார்.

1965ம் ஆண்டு உருவான நாடுதான் இந்த கடுகளவு சிறிதான சிங்கப்பூர்
Reply
#9
Mathan Wrote:இரண்டாவது முறைவாக அதிபராக பதவியேற்றுள்ள எஸ்.ஆர்.நாதனுக்கு வாழ்த்துக்கள். சிங்கப்பூர் அதிபர் பதவி இலங்கை அதிபர் பதவி போல அல்லாமல் ஒரு பெயரளவிலான பொறுப்பாக இருந்தாலும் கூட ஒரு தமிழர் அந்த பதவியில் இருப்பதில் மகிழ்ச்சி தான். அது தவிர சிங்கப்பூரில் கல்வி உட்பட பல அமைச்சர் பதவிகளில் தமிழர்கள் உள்ளனர்.

சிங்கப்புூர்தமிழர்கள் தம்மை தமிழர் என்று சொல்வதில்லை. இந்தியர்கள் என்றே சொல்கிறார்கள். காரணம் சிங்கப்புூர் அரசு அவ்வாறு தான் அவர்களை வகைப்படுத்தி வைத்திருக்கிறது. ஆனால் தமிழ் அரச மொழிகளில் ஒன்றாக நன்கு பயன்படுத்தப்படுகிறது.

சிங்கப்புூரில் பெரும்பான்மை சீனர்கள். சிறுபான்மை மலே. இந்தியர்கள் இரண்டாவது சிறுபான்மை. இலங்கையில் முஸ்லிம்கள் போல. இலங்கை முஸ்லிம்கள் எப்படி சிங்களவருடன் சேர்ந்து தமிழருக்கு எதிராக செயற்படுவதன் மூலம் அரசியல் இலாபம் பெறுகிறார்களோ அவ்வாறே இந்தியர்களும் சீனர்களுடன் சேர்ந்து அரசியல் இலாபம் பெறுகிறார்கள். ஆக மலே இனத்தவர் சிங்கப்புூர் இந்தியர்களை, இலங்கைத்தமிழர் முஸ்லிம்களை பார்ப்பது போல சந்தேகமாகவே பார்ப்பார்கள்.

சிங்கப்புூரில் இலங்கையர் நான்காவது இரகம்.அதாவது சீனர்கள், மலேக்கள், இந்தியர்கள் அல்லாதோர். சிங்கப்புூரில் குடியேற அல்லது பல்கலைக்கழக அனுமதி அல்லது அப்பாட்மென்றில் வீடு வாங்க போனால் நாட்டின் இனவிகிதாசாரம் மாறாத படி தான் அனுமதி வழங்கப்படும். இந்த இனவிகிதாசார ஒதுக்கீடு (சிறிலங்காவின் தரப்படுத்தல் போன்றது) செய்யப்படும் போது இலங்கையரும் அமெரிக்கரும் ஒரே இரகம். அதாவது சீனர்கள், மலேக்கள், இந்தியர் அல்லாத இரகம்.
Reply
#10
நீங்கள் கூறுவது சரி ஜுட்.
காரணம் சிங்கப்புூர் நாட்டை உருவாக்கிய போது
அதை இன்றைய நிலைக்கு பொருளாதார வளத்தாலும் கல்வி மற்றும் அனைத்து வளங்களாலும்
கொண்டு வந்த மதிப்பிற்குரிய லீ குவான்யு அவர்களது
தீர்க தரிசனமே இன்றைய வளம் கொழிக்கும் லஞ்ச ஊழல்கள் அன்ற இந்த சிறு சிங்கப்புூர்.

சிங்கப்புூர்
உருவான போது எந்த விகிதாசாரத்தில் அங்கு மக்கள் வாழ்ந்து வாழ்ந்தார்களோ அதே விகிதாசாரம் அதிகரிக்காமல் இருப்பதற்கான திட்டத்தை வகுத்தார்.

மிக சிறிய ஒரு நாடு.
குடிக்கும் தண்ணி கூட மலேசியாவிலிருந்தே பெறப்பட்டது.

1965ம் ஆண்டு சிங்கப்புூல் இருந்த இனங்களின் மக்கள் தொகை விகிதாசாரப்படி என்றும் சிங்கப்புூர் இருக்க வேண்டும்.

அடுத்து மக்கள் ஒன்றாக ஒரு குழுவாக எங்காவது தனித்து வாழாமல் இதே விகிதாசாரப்படி வீட்டுக் குடி மனைகளிலும் பரந்து பட்டு கலந்தே வாழ வேண்டும்.

இது இன-மத பேதங்களையோ கலவரங்களையோ ஏற்படுத்த வழி வகுக்காது.

தவிரவும் மல்ட்டி கல்சரல் எனப்படும் கலந்து வாழும் இனமாக மக்கள் வாழ வேண்டும் என்பதே மதிப்பிற்குரிய லீ குவான்யு அவர்களது கனவாக இருந்தது.

அன்றைய கால கட்டத்தில் சீனர்-மலாயர் மற்றும் இந்தியர்களே பெரும் பான்மையாக இருந்தனர்.
இலங்கை கூட இந்து சமுத்திரத்தின் பிராந்தியமாக கருதப்பட்டதால் இலங்கையரும், இந்தியர்களாகவே கருதப்பட்டனர்.
இந்தியர்களில் கூட தமிழர்கள் அதிக விகிதாசாரமாக இருந்ததால் தமிழ் சிங்கப்புூர் ஆட்சி மொழிகளுள் ஒன்றாக கருத்தில் கொள்ளப்பட்டது.

அது போலவே பாடசாலைகளிலும் இந்திய மொழிகளில் தமிழ் மட்டுமே பாட மொழியாக இருக்கிறது.

இன்றும் சிங்கப்புூரில் இருக்கும் இன விகிதாசார அடிப்படை விகிதாசாரத்தில் மேற் கூறப்பட்ட இனத்தின் விகிதாசாரம் குறையும் போது அந்த இனத்தைச் சேர்ந்த கல்வியறிவுள்ளவர்களை சீன-மலே-இந்திய மொழி பேசும் நாடுகளில் இருந்து வந்து பணிபுரிவோரை அல்லது மணம் செய்வோரை
சிங்கப்புூர் ஏற்று இன விகிதாசாரத்தை சமப்படுத்தி வருகிறது.

ஏனைய இனத்தவர்களாகக் கருதப்படும் யுரேசியர்கள் அதற்கடுத்ததாகவே கருத்தில் கொள்ளப்படுகிறார்கள்.

[b]<span style='color:green'>இதுவே இன்றைய அமைதியான சிங்கப்புூர் இருப்பதற்கு வழிவகுத்துள்ளது.

Quote:குறிப்பு:- பொதுவாக நீங்கள் சிங்கை போலீசாரின் ரோந்து நடவடிக்கையைப் பார்த்தால்,
சீன-மலாய மற்றும் இந்திய இனத்திலான கூட்டாகவேதான் போலீசார் எங்காவது செல்வதை பார்க்க முடியும்.

ஒரு இனத்தவன் மற்றுமொரு இனத்தவனால் பாதிக்கப்படக் கூடாதென்பதைக் கருத்தில் கொண்டு உருவான திட்டமே இது.

ஒரு தமிழன் அல்லது இந்தியன் ஒரு சீனனாலோ அல்லது மலாய்க்காரனாலோ பாதிக்கப் படாமல் இருப்பதற்கு காரணம் அங்கு ஒரு தமிழன் அல்லது இந்தியன் இருப்பதுதான்.
இது போலவே ஏனைய இனத்தவருக்கும் அவரவர் இனத்தைச் சார்ந்த போலீசார் இருப்பதால் அவர்களும் பாதிப்படைவதில்லை.
</span>

[b]<span style='font-size:25pt;line-height:100%'>மன்சுலா சிங்கப்புூரா</span>

http://reenic.utexas.edu/asnic/countries/s...re-History.html
Reply
#11
Jude Wrote:சிங்கப்புூர்தமிழர்கள் தம்மை தமிழர் என்று சொல்வதில்லை. இந்தியர்கள் என்றே சொல்கிறார்கள். காரணம் சிங்கப்புூர் அரசு அவ்வாறு தான் அவர்களை வகைப்படுத்தி வைத்திருக்கிறது. ஆனால் தமிழ் அரச மொழிகளில் ஒன்றாக நன்கு பயன்படுத்தப்படுகிறது.

சிங்கப்பூரில் தமிழர்கள் தவிர மலையாளிகள், தெலுங்கர், சீக்கியர் உள்ளிட்ட மற்றய இந்திய இனத்தவர்களும் உள்ளனர். அனைவரையும் ஒன்றாக இணைத்தே சிங்கை அரசு இந்தியர்கள் என்ற இன பிரிவின் கீழ் வைத்திருக்கின்றது. இந்த இந்தியர்கள் பிரிவில் தமிழர்கள் பெரும்பான்மை என்பதால் தமிழை அரசகரும மொழியில் ஒன்றாக சேர்த்துள்ளார்கள்.

சிங்கப்பூரின் சீனம் (மாண்டரின்), மலாய், தமிழ், ஆங்கிலம் எனபது அரசகரும மொழியாக இருந்த போதிலும் அங்கு ஆங்கிலமே ஆட்சி மொழியாக அதிகாரம் செலுத்துகின்றது. ஆங்கிலம் தெரியாத சமயத்தில் (ஆக வயதானவர்களே அப்படி) மற்றய மொழிகளில் தகவல்களை பெற்று கொள்ளலாம். அது தவிர கல்வி கற்கும் போதனை மொழியும் ஆங்கிலமே, இரண்டாவது மொழியாக சீனம், மலாய், தமிழ் போன்ற மொழிகளில் ஒன்றை கற்று கொள்ளலாம்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#12
சிங்கப்பூர் சனாதுபதிக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#13
மதனது தகவல்களுக்கு நன்றி...........

மேலதிக தகவலாக :-
சீனர்கள் தமது இரண்டாவது மொழியாக மென்டரீன் (சீன மொழிகளுள் ஒன்று.......)மொழியை கற்கலாம்.
[quote]<span style='font-size:18pt;line-height:100%'>கொக்கியன் - கென்தனிசு என ................... இன்னும் பல மொழி இனத்தைச் சேர்ந்த சீனர்கள் இருக்கிறார்கள்.</span>

மலாயர்கள் மலாயயையும்
இந்தியர்கள் தமிழையும் கற்கலாம்.

இவற்றில் மாற்றாக வேறோர் மொழியை தேர்வு செய்து கற்கும் சுதந்திரம் இருக்கிறது.

இந்தியர்கள் பொதுவாக தமிழைக் கற்க வேண்டும்.

இந்தி அல்லது வேறு ஒரு மொழியை கற்கலாம்.மலையாளம் தெலுங்கு ......................போன்ற மொழிகளைப் பேசுவோர் தமிழை கற்க விரும்புவதில்லை
இவர்களில் பெரும்பாலானவர்கள் மலாய் அல்லது மென்டரின் மொழியை தேர்வு செய்து கற்கிறார்கள்.
Reply
#14
AJeevan Wrote:மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளைப் பேசுவோர் தமிழை கற்க விரும்புவதில்லை
இவர்களில் பெரும்பாலானவர்கள் மலாய் அல்லது மென்டரின் மொழியை தேர்வு செய்து கற்கிறார்கள்.

மலையாளிகள் தமிழ் கற்கின்றார்கள் என்றே நினைக்கின்றேன். அது தவிர மற்றவர்கள் தான் மாண்டரின் அல்லது மலாயை நாடுகின்றார்கள்.

இரண்டாவது மொழி (பெரும்பாலும் தாய்மொழி) கட்டாயம் பாடம் என்பதுடன் இதில் சித்தியடையாமல் உயர்நிலைக்கு செல்லமுடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#15
ம்.. சரி சிங்கப்பூரில் உள்ள தமிழர் அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்கள் எமக்கு உதவுகின்றனரா?
அப்படி இல்லை ஆயின் ஏன்?
மலேசியாவில் உள்ள இலங்கையர் தம்மை யாழ்ப்பாணத்தவர் என்றே அடயாளப் படுத்துகின்றனர்.இது இந்தியத் தமிழர்களிடம் இருந்து தம்மை வேறு படுத்த முன்னர் பாவித்தனர்.ஏனெனில் இலங்கையைப் போன்று இந்தியத் தமிழர் தோட்டங்களில் வேலை செய்வதெற்கே ஆங்கிலேயரால் கொண்டு வரப் பட்டனர்.யாழ்ப்பாணத் தமிழர் அரச உத்தியோகங்களுக்கே கொண்டு வரப் பட்டனர்.

இன்று ஒரளவு அரசியற் பலம் பெற்றிருக்கும் இந்தியத் தமிழர் ,யாழ்ப்பாணத்தவரை கணக்கிலெடுப்பதில்லை.அதற்கான காரணம் ,இலங்கயைப் போன்றே தோட்டங்களில் வேலை செய்த இவர்களை ,யாழ்பாணத் தமிழர் முன்னர் பொருட்டாக மதிக்கவில்லை.மற்றும் யாழ்ப்பாணத்தவருக்கே இருந்த சாதீயப் பார்வையும் இருந்தது.

ஆனால் புலிகளுக்கு இன்று இந்தியத் தமிழரிடத்தில் ஆதரவு பெருகி வருகிறது. ஆனால் இவர்களின் அரசியற் தலைமைகள் இலங்கையைப் போன்றே வாக்குப் பேரம் பேசி ,தமது சொந்த நலங்களைக் கவனித்து வருகிறார்களே ஒழிய,தமது மக்களின் நலனில் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை.

சிங்கப் பூர் நிலவரமும் அரசியலும் இவ்வாறு தெழிவாகத் தெரியவில்லை.தெரிந்தவர்கள் எழுதவும்?
Reply
#16
[size=15]<b>மஜுலா சிங்கப்புரா</b>
- எம்.கே.குமார்

புரட்சிக்கு எடுத்துக்காட்டுகள் சொல்லவேண்டுமெனில் அதில் கம்யூனிஸ்ட்டுகளின் பெயர்கள் முக்கிய இடத்திலிருக்கும். கம்யூனிஸ்ட்டுகளை விட்டுவிட்டு நாம் புரட்சி பற்றியோ மறுமலர்ச்சி பற்றியோ பேசிக்கொண்டிருக்க முடியாது. நல்லதோ கெட்டதோ அவைகளில் அவர்களின் பங்கு மிக அதிகம்! கம்யூனிஸ்ட்டுகளுக்கு போராட்டத்தில் எவ்வளவு போர்க்குணம் இருந்ததோ அதே அளவிற்கு உலகம் முழுவதும் அதை அடக்குவதில் அமெரிக்கர்களுக்கு அளப்பரிய ஆர்வம் இருந்தது. ஆர்வம், கியூபாவிலிருந்து தொடர்ந்தது; தொடர்கிறது.

அமெரிக்காவின் அரசில், உயர்ந்த பதவியில் இருந்த ஒருவர், சம்பவம் நடந்து இருபத்தைந்து வருடங்கள் கழித்து மெதுவாக ஒரு கேள்விக்கு பதிலைச்சொன்னார். "அது உண்மைதான்! பனிரெண்டு வருடங்கள் வியட்நாமில் நடைபெற்ற போராட்டத்தில் இறந்தவர்களை விட ஐந்து மடங்கு அதிகமானோர் வெறும் நான்கு மாதத்தில் அங்கு இறந்தார்கள். அரசாங்கம் அப்போது கோரத்தாண்டவம் ஆடியது. இந்த நூற்றாண்டின் மிகக்கொடுமையான கொலைகளில் அதுவும் ஒன்று!" என்று.

எங்கே நடந்தது இந்த கோரம்? மனித உயிர்களை மலிவாக புழு பூச்சிகளைப்போல கொன்று குவிப்பதற்கு யார் அதிகாரம் தந்தது அவர்களுக்கு?

அவர் சொன்னது 1965 ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் நடந்த கம்யூனிஸ்ட்டுகளின் புரட்சி பற்றியது.

'பி.கே.ஐ' எனப்படும் இந்தோனேசியா கம்யூனிஸ்ட் கட்சி (பார்ட்டாய் கொம்யூனோ இந்தோனேசியா) அசுரபலத்தோடு வீறுகொண்டு திளைத்திருந்த நேரம். இந்தோனேசியா தவிர மற்ற அருகாமை நாடுகளான மலேசியா, சிங்கப்பூர் மற்றும் புருனே நாடுகளிலும் எழுச்சி பெற்று விளங்கிய மற்ற கம்யூனிஸ்ட் கட்சிகளோடு அது ஆழமான உறவு கொண்டிருந்தது. ஆரம்பத்தில் அது அரசாங்கத்தின் தோளோடு இணைந்து மலேசியா கூட்டமைப்பை, ஆயுதங்கள், இனக்கலவரங்கள், போராட்டங்கள் மற்றும் தீவிரவாத பயிற்சிகளின் வழியாக இந்தோனேசியா அதிபர் திரு. சுகர்னோவின் ஆசியோடு எதிர்த்துகொண்டும் தாக்கிக்கொண்டும் வந்தது. சிங்கப்பூரும் அக்கூட்டமைப்பில் ஒன்றல்லவா? எப்படி விதிவிலக்காக முடியும்?

1965 ஆம் ஆண்டு சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்தபிறகு அத்தகைய நடவடிக்கைகள் சிங்கப்பூரில் இன்னும் அதிகமாயின. 1963 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் வைக்கப்பட்ட முதல் குண்டுக்கு முன்பே, இந்தோனேசியா அரசு மற்றும் இந்தோனேசிய, மலாயா கம்யூனிச சக்திகளின் துரோகங்களுக்கு சிங்கப்பூர் பலியாகி வந்தது. 'சீனர்கள் அதிகமாக வாழும் மலாயாவின் ஒரு பகுதியான சிங்கப்பூரில்' இனக்கலவரங்களை வளர்ப்பது பெட்ரோல் பங்கில் ஒரே ஒரு தீக்குச்சி கொளுத்திப்போடுவதைப்போல மிகவும் எளிதான வேலை என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். அதனாலேயே அவர்கள் இனக்கலவரங்களை மெதுவாக இங்கே வளர்த்துவிட முடிவு செய்து அவர்களுக்கு அங்கே பயிற்சிகொடுத்து வந்தார்கள்.

அவ்வாறு பயிற்சி பெற்றவர்கள் அவ்வப்போது சிங்கப்பூருக்கும் மலாயாவுக்கும் சென்று 'ஏதோ பாவம் என்னால் முடிந்தது' என்று இரண்டு குண்டுகளையோ அல்லது நான்கு கொலைகளையோ செய்துவிட்டுப் போவார்கள். அப்படி, எல்லை தாண்டி ஊடுருவுவதும் நாசவேலைகளில் ஈடுபடுவதும் தொழிற்சங்கங்களை மூளைச்சலவை செய்து நீண்ட வேலைநிறுத்தங்களையும் போராட்டங்களையும் நடத்தி வெளிநாட்டு கம்பெனிகளுக்கும் அரசாங்கத்திற்கும் நஷ்டங்களை ஏற்படுத்துவதை ஒரு தொழிலாகவே அவர்கள் செய்து வந்தனர்.

1960 முதல் 1965 ஆம் ஆண்டு வரை இருபக்கமும் இடிகளை வாங்கி மிகுந்த துயரங்களையும் கஷ்டங்களையும் அடைந்திருந்தார் திரு. லீ குவான் யூ அவர்கள். எழுபத்தைந்து சதவீதம் சீனர்களைக் கொண்ட சிங்கப்பூரை மலாய் (முஸ்லீம்) மக்களை அதிகம் கொண்ட மலேசியா நாட்டிலிருந்து தனியே பிரித்து விரட்ட மலேசியா அரசாங்கம் இடைவிடாது தொல்லைகள் கொடுத்துக்கொண்டிருக்க, சிங்கப்பூரை கொஞ்சம் கூட வளர விடக்கூடாது; பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அதை தனது கட்டுப்பாட்டுக்குள்ளே வைத்துக்கொண்டிருக்க வேண்டும் என மறுமுனையில் இந்தோனேசியா அரசும் கம்யூனிச சக்திகளும் போராடிக்கொண்டிருக்க அவற்றுக்கு நடுவே மக்களை நம்பி தனிமனிதனாய் திரு. லீ குவான் யூ அவர்கள் இருந்தார்.

மலேசியா என்ற ஒருங்கிணைக்கப்பட்ட நாடு உருவானதில் விருப்பமில்லாத இந்தோனேசியா அரசு, சாபா மற்றும் சரவா பகுதிகளில் தொடர்ந்து தமது ராணுவத்தை ஊடுருவச்செய்தது. மலாயாவின் தென் பகுதியான ஜோகூரிலும் அப்படைகள் தரையிறங்கின. 'இத்துனூண்டு' சிங்கப்பூருக்கு 'இம்மாம் பெரிய' படைகளை அனுப்பியா சாதிக்கவேண்டும் என்று எண்ணினாரோ என்னவோ, தீவிரவாத செயல்களில் பயிற்சி பெற்றவர்களை சிங்கப்பூருக்கு அனுப்பிவைத்தார் திரு. சுகர்னோ. கரையோரக் காவலையும் தாண்டி அவ்வாறு சிங்கப்பூருக்கு வந்தவர்கள் தங்கள் காரியத்தில் கண்ணாய் இருந்தனர்.

1965 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை கிட்டத்தட்ட 29 குண்டுவெடிப்புச்சம்பவங்கள் சிங்கப்பூரில் நடந்து முடிந்தன. ஆங்காங்கு இனக்கலவரங்களும் மூளும் சூழ்நிலையில் நாடு இருக்க, அடுத்த குண்டு மார்ச் மாதம் 10ஆம் தேதி ஆர்ச்சர்ட் ரோட்டில் இருந்த மெக்டொனால்ட் ஹவுஸில் வைக்கப்பட்டது. இந்த குண்டுவெடிப்பில் மூன்று பேர் இறந்தனர்; முப்பத்துமூன்று பேர் காயமடைந்தனர்.

இதற்கிடையே ஜோகூரில் வந்து இறங்கிய இந்தோனேசிய தரைப்படையை எதிர்க்க சிங்கப்பூர் அனுப்பிய காலாட்படையில் எட்டு சிங்கப்பூர் வீரர்கள் இறந்துபோனார்கள்.

என்ன செய்வது என்று சிங்கப்பூர் அரசாங்கம் தடுமாறிக்கொண்டிருந்த வேளையில் தீவிரவாதத்தின் உண்மைமுகம் அதற்கு கைகொடுத்தது. தலை வெடிக்கச்செய்யும் வரம் வாங்கியவன் தன் தலையிலேயே தொட்டு வெடித்துச்சாவதைப்போல ஒரு சிக்கலில் மாட்டினார் இந்தோனேசியா அதிபர் திரு. சுகர்னோ. இந்தோனேசியா அரசால் வளர்த்துவிடப்பட்ட, அவர்களாலே எல்லாவித பயிற்சியும் கொடுக்கப்பட்ட தீவிரவாத கம்யூனிஸ்ட்டுகளும் பி.கே.ஐ எனப்படும் இந்தோனேசியா கம்யூனிஸ்ட் கட்சியினரும் அதிபருக்கெதிராக புரட்சியில் இறங்கினர். அதிபரின் ஆதரவு, அரசாங்கதேவைகள் எல்லாம் அவர்கள் 'வயதுக்கு' வரும் வரைக்கும் தான் என்பது அப்போதுதான் எல்லோருக்கும் உரைத்திருக்கும்.

அதுதான் 1965 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ம் தேதி நடந்த கலவரம். 'ஆறு உயர் ராணுவ அதிகாரி'கள் கொல்லப்பட்ட அன்றிலிருந்த புரட்சி ஆரம்பமானது.

கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஆதரவான அரசாங்க அதிகாரிகளும் இராணுவத்தினரும் அவர்களுக்கு உதவி செய்ய, பி.கே.ஐ கட்சியினர் ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சியில் முன்னேறினர். அப்போதுதான் வந்தார் அரசாங்கத்தின் மீது மிகுந்த விசுவாசம் உடையவரான 'பிரிகேடியர் ஜெனரல் சுஹார்த்தோ.' ஏற்கெனவே அமெரிக்கப்படைகள் வியட்நாமில் இறங்கி 'ஜனநாயக சேவை' செய்துகொண்டிருந்த நேரம் அது! அமெரிக்காவின் ஆசியோடு காரியத்தில் இறங்கினார் அவர். அதிபரான சுகர்னோவும் தற்காப்பு அமைச்சர் நாசுத்தியனும் காப்பாற்றப்பட்டார்கள். மற்றவர்கள் என்ன ஆனார்கள் என்ற கேள்விக்குத்தான் இந்த அத்தியாயத்தின் முதலில் 'அமெரிக்க அரசு அலுவலர்' சொல்லிய பதில் போடப்பட்டது.

கிட்டத்தட்ட 2,50,000 பேர் கொல்லப்பட்டனர். அக்டோபர் 8 ஆம் தேதி கம்யூனிச தலைமையிடம் மக்களால் தகர்ப்பட்டது. புதிய அதிபராக திரு. சுஹார்த்தோ பதவியேற்றார். பி.கே.ஐ எனப்படும் 'பார்ட்டாய் கொம்யூனிஸ் இந்தோனேசியா கட்சி' தடைசெய்யப்பட்டது.

சுகர்னோவைப் பதவியிறக்கம் செய்தது, சுஹார்த்தோ ஆட்சிக்கு வந்தது, சுஹார்த்தோவிற்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலேயான அந்தரங்க உறவு, ராணுவ உயர் அதிகாரியான சுஹார்த்தோவை ஏற்கெனவே ஊழல் வழக்கில் சுகர்னோ பதவியிறக்கம் செய்தது என அந்நாட்டு அரசியலில் பல முகங்கள் மூழ்கிக் கிடந்தாலும் இந்தோனேசியாவில் ஏற்பட்ட இப்புரட்சி தோற்கடிக்கப்பட்டதன் மூலம், அசைக்கமுடியாத பலம்கொண்ட 'பி.கே.ஐ' என்ற யானையை முடங்கச்செய்ததன் மூலம் இந்தோனேசியாவில் மட்டுமல்ல; சிங்கப்பூரில் மட்டுமல்ல; தெற்கு ஆசியாவின் எல்லாப்பகுதிகளிலும் கம்யூனிசம் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. அதுதான் சிங்கப்பூர் வளர்வதற்கு ஆணிவேராகவும் ஆகிவிட்டது. திரு. லீ குவான் யூ அவர்களும் அன்றுதான் ஆழ்ந்த நிம்மதிப்பெருமூச்சு விட்டிருப்பார்.

(தொடரும்)
Thanks:
http://www.tamiloviam.com/unicode/02240505.asp
Reply
#17
தகவலுக்கு நன்றி அஐpவன் ... அடுத்த தொடருக்காக எதிர்பார்க்கின்றேன்

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)