09-06-2005, 08:44 PM
கதிர்காமரின் கொலையைத்தொடர்ந்து இலங்கை அரசியலில் பெரும் மாற்றம் வருமென்று அனைவரும் எண்ணத் தலைப்பட்டுள்ள இவ்வேளையில் அவ்வாறான மாற்றங்கள் இலங்கையில் ஏற்படுமா? அவ்வாறு எண்ணம் எமக்கு ஏற்படுமிடத்து அது எவ்வாறான தாக்கத்தை இலங்கை அரசியலில் உருவாக்கும்?. இலங்கை அரசியலில் கதிர்காமர் பெயர் சொல்லும் அளவிற்கு மிளிர்ந்ததன் பிற்பாடு அதாவது பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சிக்கட்டிலில் ஏறியபின் 1994ம் ஆண்டு தேர்தலில் நின்று வெற்றி பெறாமலேயே தேசியப்பட்டியல் மூலம் தெரிவாகி அவரை வெளியுறவு மந்திரியாக்கியதன் மர்மம் என்ன? அவ்வாறான நிலையில் இக்கொலை யாரால், என்ன நோக்கத்திற்காக, எவ்வாறு உண்டானது என்பனவற்றை அலசும் நோக்கில் இக்கட்டுரை தொடரப்படுகினது…
சென்ற கட்டுரையில் ஏன் பொதுஜன ஐக்கிய முன்னணிக் கட்சியே கதிர்காமரை சுட்டிருக்கக்கூடாதென பார்த்தோம். அதன் பின் எப்படி சுடுவதற்கான ஆயுதம் அவர்களுக்கு கிடைத்திருக்கும் எனவும் கேள்வி எழுப்பி விட்டிருந்தோம். அக்கேள்விக்கான விடையை சற்றேனும் ஊன்றிப்பார்க்க வேண்டிய தேவையிருப்பதால் இப்போ அவை பற்றி நோக்குவோம். அதற்கு முன்னர் அனுரத்த ரத்வத்தை காலத்தில் எப்படி கொழும்பு இருந்தது என்பது பற்றியும், அவர்கள் (சந்திரிகா உட்பட) சமாதானத்தில் எவ்வளவு பற்றுறுதி கொண்டிருந்தார்கள் என்றும் பார்ப்போம். அனுரத்த ரத்வத்தை பாதுகாப்பமைச்சராகவிருந்த போது கொழும்பில் வெள்ளைவான் கடத்தல், தமிழ் இளைஞர்கள் கொலைசெய்யப்படல், எங்கே, எப்போ எனப்பாராது கைது போன்ற சம்பவங்கள் வகைதொகையின்றி இடம்பெற்றதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். அவற்றிக்கெல்லாம் மூலகர்த்தாவானவர் ரத்வத்தையும், அவரின் புதல்வர்களும், அவரின் அதிதீவிர விசுவாசிகளும் என்பதும் இப்போ நாமறிந்த உண்மையாகின்றது. இவைகள் சாதாரண தமிழனுக்கே தெரிந்திருந்தும் அவைகளை ஆணித்தரமாக உறுதிசெய்ய இயலாத தன்மையால் அவை வெட்டவெளிச்சமாக்க முடியாத நிலையில் இருந்தது. ஆனால் சிற்றி மிலேனிய முகாம் பற்றிய தகவல்கள் வெளியானதன் பிற்பாடுதான் சிறீலங்கா அரசின் சில குறிப்பிட்ட தில்லுமுல்லுகள் அம்பலத்திற்கு வந்ததெனலாம். காரணம் அங்கெ விடுதலைப்புலிகளுக்கு உரித்தான சீருடைகள் சிலவும் நவீன ஆயுதங்கள் சிலவும் கைப்பற்றப்பின்தான் அவை வெளிச்சத்திற்கு வந்தன. முதலில் அம்முகாமை கைப்பற்றியவுடன் அம்முகாம் விடுதலைப்புலிகளின் முகாமாகவே சித்தரிக்க முற்பட்ட இலங்கை இராணுவமும், பொலீசாரும், கைதுசெய்யப்பட்டவர்களில் சிலர் தமிழராக இருந்ததினால் விடுதலைப்புலிகளின் முகாமை கைப்பற்றியதாக அறிக்கைகளை உடனும் வெளியிட்டு விட்டனர். ஆனால் பின்னர்தான் அவர்களுக்கே அது இராணுவத்தின் ஆழ ஊடுருவும் புலனாய்வு பிரிவைச்சேர்ந்தவர்கள் தங்கும் முகாமென தெரியவந்தது. அத்துடன் அம்முகாம் பற்றிய எத்தகவலும் சிங்கள இராணுவ உயர்மட்டத்தைச்சேர்ந்த ஒருசிலரைத்தவிர மிகுதிப்பேர்களுக்கு தெரியாதவகையில் இரகசியமாக இயங்கிய தொன்றென்பதும், அப்பிரதேச மக்களுக்கே அவைபற்றி எதுவும் தெரியாத வகையில் அவர்கள் சில வருடங்கள் தங்கிப்போயிருக்கின்றார்கள் என்பதுடன், கருணாவின் ஒட்டுண்ணிகள் சிலர் அதில் தங்கப்போய்தான் அம்முகாம்பற்றி மக்கள் பொலீசாரக்கு தகவல் கொடுத்தார்கள். சிங்களம் கருணாவிற்கு அடைக்கலம் கொடுக்கப்போய் இருந்த வெள்ளத்தை வந்தவெள்ளம் கொண்டுபோன கதையாகிவிட்டது இப்போ. மேற்படி முகாம் தங்களின் ஆழ ஊடுருவும் புலனாய்வுப்பிரிவிற்கு உரித்தானது என்று தெரிந்தபின்னர்தான் அவைபற்றி அமுக்கி வாசிக்க வேண்டிய தேவையையும் புரிந்துகொண்டனர். இருப்பினும் அப்போ ரணில் ஆட்சியைப்பிடித்திருந்ததால் சந்திரிகா அம்மையாரை மீண்டும் அரசில், அரசியலில் இடம்பெறாது செய்வதற்காக அதை சட்ட நடவடிக்கைப்பிரிவிற்கு மாற்றி அரசியல் ஆக்கினார்கள். அதுவே சிங்கள அரசின் சமாதானத்தின் மீதான பற்றுதலையும்?, தமிழ்மக்களுக்கு அவர்கள் ஆற்றிவரும்? சேவையையும் உலகிற்கு உணர்த்தப்போதுமானவையாகின. அதாவது விடுதலைப்புலிகள் யுத்தநிறுத்தத்தை கடைப்பிடிக்கத்தொடங்கிய காலத்தில் கேணல் சங்கரை மேற்படி சிறீலங்காவின் ஆழ ஊடுருவும் பிரிவே கொன்றதையும், அத்துடன் மடுவில் அரசியல்துறைப்பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல் முயற்சியையும், கடற்புலிகளின் தளபதி லெப்.கேணல் கங்கையமரன் மீதான தாக்குதலையும் அவர்களே செய்ததாக ஒப்புக்கொள்ள வைத்ததன் பின்னணியை நோக்கையில் புலிகளை சீண்டி கோபம் கொள்ள வைத்து அதன்மூலம் மீண்டும் ஓர் யுத்தத்தை புலிகளே தொடக்க வைக்கப்பார்த்ததை உலகு புரிந்துகொள்ள வழிசமைத்து நின்றது. அத்துடன் மூன்றாம் கட்ட ஈழப்போர் தொடங்கப்பட்டபின் சிங்களப்பகுதியில் வரிப்புலிச் சீருடை தரித்தவர்கள் சில சிங்கள மக்களை கொன்றதை புலிகள் கொன்றதாக பிரச்சார யுத்தத்திற்கு அரசு பாவித்ததானது மேற்படி அவர்களின் படையே காரணமாகின்றது என்பதையும் சிங்கள மக்கள் தௌ;ளத்தெளிவாக புரிந்து கொள்ளச்செய்தது. அத்துடன் இக்குழுவிற்கு தமிழருக்கு எதிராக செயற்படும் சோரம்போன தமிழ், முஸ்லீம் பேர்வழிகளையே பயன்படுத்தியமையும் தெளிவாக அனைவரும் புரிந்துகொள்ளச்செய்தது. கொழும்பில் வைத்து கொல்லப்பட்ட முத்தலிப்பின் பங்கு கேணல் சங்கரின் கொலையில் நேரடியானதாக இருந்து அவரின் மறைவிற்குபின் அரசால் வெளிக்கொண்டுவரப்பட்டதானது அவர்கள் எவ்வளவுக்கெவ்வளவு யுத்தத்தை மட்டும் நேசித்து, அதன்மூலம் தம்மை வளம்படுத்த எப்படி இலங்கை யுத்தத்தை பாவிக்கின்றார்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள். அத்துடன் இப்போ கருணாவையும் அவனுடன் சேர்ந்தியங்கும் ஒருசிலரையும் வைத்தும் தாமும் அதில் பங்குகொண்டும் மீண்டும் கிழக்கிலங்கையில் யுத்த முஸ்தீபுகளில் ஈடுபடுவதையும் நாம் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றதல்லவா?. அவ்வாறு சேர்ந்தியங்கும் குழுக்களுக்கு இராணுவ உயர்மட்ட மேலதிகாரிகளே ஆயுதத்தை வழங்குகின்றார்கள். அப்படி வழங்கப்படும் ஆயுதமானது யுத்தமுனையில் இருக்கும் இராணுவத்தினரது பாவனையில் இல்லாத அதியுயர் நவீனமயமான ஆயுதங்களே வழங்கப்பட்டிருப்பதும், அவ்வாறான ஆயுதத்தாலேயே கதிர்காமர் சுடப்பட்டிருப்பதையும் வாசகர்கள் புரிந்துகொண்டிருப்பீகள். அவ்வாறு இவர்களை வைத்து கொலைசெய்த பின்னர் கூட அவர்கள் புலிகள் மேல் பழி போட எவ்வளவு நுணுக்கமாக செயலாற்றியிருப்பினும் அவையில் பெரும் சறுக்கல் ஏற்பட்டிருப்பதை நாம் கவனிக்கலாம். அதன்மூலம் புலிகள் அக்கொலையை செய்யவில்லை என்பதை நிரூபிக்க அங்கே கிடைத்த தடயப்பொருட்கள் போதுமானவையாக இருக்கின்றது. புலிகள் தாக்குதலுக்கு முன்னர் கன்டோஸ் சாப்பிடுவதாக கேள்விப்பட்ட சிங்களம் அதற்கேற்றால்போல் வெறும் கன்டோஸ் பைக்கற்றுக்களை விட்டிருந்தார்கள். அத்துடன் வெற்றுத்தோட்டக்களையும் விட்டிருந்தார்கள். அவைகளை எடுத்தவுடன் கொழும்பு பேரினவாத பத்திரிகைகள் கதிர்காமரை கொன்றது புலிகள்தான் என்றும், அவர்கள் அதிநவீன ஆயுதத்தைக்கொண்டு இக்கொலையை செய்ததாகவும் கொக்கரிக்கத்தொடங்கியபின்தான் அடுத்த தடயமாக பல புகைத்து முடிக்கப்பட்ட சிகரெட் துண்டுகள் பொறுக்கியெடுக்கப்பட்டன. அதன்பின் புலிகளை சாட்டிய அனைவரும் அழுத்தமாக புலிகளை சாட்டமுடியாத நிலையில் இருக்கின்றார்கள். காரணம் புலி பசித்தாலும் புல்லைத்தின்னாது. அதே போல் விடுதலைப்புலிகள் சாவரினும் புகைத்தலை செய்யக்கூடியவர் இல்லை என்பதில் சிங்கள பேரினவாதிகளுக்கும் தெரிந்த ஒன்றாகையால் அவ்விடத்தில் கொலையாளி புகைபிடிப்பவராகின் புலிகள் அக்கொலையை செய்திருக்க வாய்ப்பில்லை என்றும், அது உள்வீட்டு சதியெனவும் அவர்களுக்கு புரியத்தொடங்கிவிட்டது. ஆதலினால் இப்போ கதிர்காமரை போட்டது கொழும்பில் உள்ள ஏதாவது, தங்களைச்சார்ந்த ஓர் கட்சியோ? அன்றி தம்மைச்சார்ந்த அமைப்போதான் என்கின்ற உண்மை உறைக்கத்தொடங்கிவிட்டது. இப்போ அதை நம்பத்தொடங்கிவிட்டார்கள். அனுரத்த ரத்வத்தைக்கு வேண்டியது சந்திரிக்காவிற்கு அடுத்ததாகவிருந்த தன்னைமுந்தி கதிர்காமர் வருவதா? என்கின்ற எண்ணமும், ரத்வத்தையின் விசுவாசிகளுக்கு தமது தளபதி ஏன் ஒரு தமிழனால் கட்சியில் கடைநிலைக்கு போகவேண்டும் என்கின்ற கோபமுமாக சேர்ந்து கதிர்காமரின் உயிரைக்குடித்திருக்கின்றது அல்லவா!. ஆகவே இப்போ கதிர்காமரை கொலைசெய்ய பொதுசன ஐக்கிய முன்னணிக்குள் ஆட்கள் இருப்பதையும் புரிந்திருப்பீர்கள் அல்லவா? வாசகர்களே!
இனி இம்முறை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் ராஜபக்ஷா ஏன் இக்கொலையை செய்திருக்கக்கூடாதென பார்ப்போம். அவை தொடரும்.
நன்றி
மலரினி மலரவன்.
www.tamilkural.com