09-08-2005, 11:39 AM
சிங்கள மக்களை மீண்டும் முட்டாளாக்க
முயற்சிக்கும் சிங்கள பேரினவாதிகள்
மிகச் சிறிய நாடான இலங்கையில், பிரிவினை எதற்கு? நாமெல்லாம் சேர்ந்து வாழலாமே! என்று இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தபோது முடிவெடுத்தவர்கள் தமிழர்கள். இருந்தாலும் இந்த முடிவு தவறு என்று விரைவிலேயே அனுபவ ரீதியாகப் பாடம் புகட்டினார்கள் பேரினவாத சிங்களத் தலைமைகள்.
ஐம்பதுக்கு ஐம்பது என்ற வகையில் நாட்டின் உரிமைகளைப் பிரித்துக் கொள்ளலாமே என்று ஜி.ஜி.பொன்னம்பலம் கேட்டபோது, அதை மறுத்த டி.எஸ்.சேனநாயக்க, அதற்குப் பதிலாக, 60 க்கு 40 என்று பிரித்துக்கொண்டு ஆட்சியமைக்கும் திட்டத்தை முன்மொழிந்தார். இது வேண்டாம், தருவதாக இருந்தால் 50 க்கு 50 தான் என்று அடம்பிடித்தவர் ஜி.ஜி.
இது வரலாறில் பழைய கதைதான். இதை எப்படியோ தூசு தட்டி, அவ்வப்போது பாட்டிக்கதை போல திரித்தும் சுழித்தும் இணைத்தும் குறைத்தும், சிங்கள மக்களைத் திசை திருப்பும் நடவடிக்கைக்காக பாவித்து வருகிறார்கள் சிங்கள பேரினவாதிகள்.
ஏதோ, தமிழர்களெல்லாம் சிங்கள மொழி பேச மறுத்தது போலவும், அவர்களைக் கட்டாயப்படுத்தி சிங்கள மொழி பேச வைத்துப் பழி தீர்ப்பதால், சிங்கள மக்களுக்கு சித்த பலனனைத்தும் நித்திய பரம்பரைக்கும் கிடைத்துவிடும் என்பது போலவும் திசைதிருப்பி, சிங்களம் மட்டும் என்ற புதிய சட்டத்தை 24 மணிநேரத்தில் நடைமுறைப் படுத்துவதாக நம்பவைத்து, அட்டகாசமான வெற்றியைப் பெற்று ஆட்சியமைத்தவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க.
சிங்களம் மட்டும் என்ற சட்டத்தை அமுல்படுத்த பண்டா நினைத்தது, சிங்கள மக்களின் நன்மைக்காக என்பது போன்று அவர்களை நம்பவைத்து, ஒட்டுமொத்த நாட்டுக்குமே துரோகம் செய்தவர் பண்டாரநாயக்க. ஆனால் உண்மையில் இந்த ஒரு துருப்பைத் தவிர, தேர்தலில் வெற்றிபெற பண்டாரநாயக்காவிடம் வேறு எதுவும் கைவசம் இருக்கவில்லை என்பது தான் உண்மை.
1949 ல் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையில் உருவாகியது பெடரல் பார்ட்டி என ஆங்கிலத்தில் கூறப்பட்ட தமிழரசுக் கட்சி. வடக்கு கிழக்கை இணைத்து, ஒரு பிரதேசமாக சமஷ்டி முறையிலான ஆட்சியமைப்பின் கீழ் கொண்டுவரவேண்டுமென்ற திட்டத்தை 1951 ல் பிரஸ்தாபித்தார்கள் தமிழரசுக் கட்சியினர்.
இதற்கிடையில், ஐக்கிய தேசியக் கட்சியில் தொடர்ந்தும் இருந்தால் தனக்கு தலைமைப் பதவி கிடைக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து கொண்ட பண்டாரநாயக்க, அதிலிருந்து விலகி, சிறீலங்கா சுதந்திரக்கட்சியை ஆரம்பித்தார். 1956 ல் பொதுத்தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், 51 ல் புதிதாகத் தொடங்கப்பட்ட கட்சியை நாடு தளுவிய ரீதியில் வெற்றிபெற வைப்பதற்கு புயல் பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டியிருந்தது. 47 ல் ஆரம்பித்து, மக்கள் செல்வாக்கைப் பெற்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சியுடன் மோதுவதற்கு, பண்டாரநாயக்க தேடியலைந்து கண்டுபிடித்த பேராயுதம் தான் ~சிங்களம் மட்டும்| என்ற பொன்முட்டையிடும் வாத்து.
உடனடியாகவே அதன் அறுவடையையும் அவர் கண்டுகொண்டார். அரச உயர் பதவிகளில் கோலோச்சிக்கொண்டிருந்த தமிழர்களுக்கு நிகராக சிங்கள மக்களுக்கு வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை என்றும், கற்றறிந்த ஞானிகளாக தமிழர்களே கருதப்படுகிறார்களென்றும் உள்ளுர ஆத்திரமடைந்திருந்த சிங்கள இனவாதிகளைத் துணைக்கு அழைத்துக்கொண்டு, என்னைத் தேர்தலில் தெரிவு செய்தால், தமிழர்களையெல்லாம் தூக்கி வீசி, தமிழ் மொழியையும் அவர்களது கலை கலாச்சாரத்தையும் கால்தூசிக்கும் குறைவாக 24 மணிநேரத்தில் மாற்றிக் காட்டுகிறேன் என்று முழங்கினார் பண்டாரநாயக்க.
சிங்கள மக்கள் எதுவித தொலைநோக்குப் பார்வையுமற்று, பண்டாரநாயக்காவின், சிங்கள பௌத்த தனியுரிமை ஆணையை அப்படியே நம்பிக்கொண்டு, அவருக்கு முழுமையாக வாக்களித்து, அறுதிப் பெரும்பான்மைப் பலத்துடன் அவரை ஆட்சிப் பீடமேற்றினார்கள்.
உடனடியாகவே இன மோதல்கள் வலிந்து திணிக்கப்பட்டாலும், இவை பொதுமக்களால் கட்டவிழ்த்து விடப்பட்டவை போலவும், அரசுக்கு இதிலே எள்ளளவும் சம்பந்தம் இல்லை என்பது போன்றுமே உருவாக்கம் செய்யப்பட்டது. இதனால், தமிழர்களின் அறிவு வளர்ச்சியிலும், உயர் பதவிகளைத் தமிழர்கள் பெற்றிருந்ததிலும் ஆத்திரமுற்றிருந்த சிங்களவர்கள் சிலர், அரசின் நிழல் கூலிகளாக, அவ்வப்போது தமிழர்களைத் தாக்கியும், அடித்து விரட்டியும் வந்தார்கள். 1956 லிருந்து வருடாவருடம் இனமோதல்கள் ஆங்காங்கே வெடித்துக் கொண்டே இருந்திருக்கிறது.
சிங்களம் மட்டும் என்ற கவர்ச்சி அறிக்கை மூலம் எப்படி பண்டாரநாயக்க சிங்கள மக்களை ஏமாற்றினாரோ, அதேபோன்று, தமிழ் மக்களையும் 1958 ல் ஏமாற்றலாம் என்ற முயற்சியில் இறங்கினார்.
இதற்காக பண்டாரநாயக்க உருவாக்கியதுதான் பண்டா-செல்வா ஒப்பந்தம். வடக்கு கிழக்கை இணைத்து, ஒரு சமஷ்டி ஆட்சியின் கீழ் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதாக உறுதியளித்து 58 ல் உருவாக்கப்பட்ட ஒப்பந்தம், ஒருவாரத்தில் அதே பண்டாரநாயக்காவால் மீளப்பெறப்பட்டது. பௌத்த பிக்குகளின் எதிர்ப்பைக் காரணம் காட்டி தப்பிக்க முயன்றார் பண்டா. எந்த பிக்குகளைத் திருப்திப்படுத்த, பண்டா-செல்வா ஒப்பந்தத்தை மீளப்பெற்றாரோ, அதே பிக்கு ஒருவரால், 1959ல் சுட்டுக்கொல்லப்பட்டார் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க.
பௌத்தம் மட்டுமே தனி மதம், சிங்களம் மட்டுமே தனி மொழி என்ற கவர்ச்சிப் பிரச்சாரம் மூலம் 56 ல் சிங்கள மக்களை ஏமாற்றிய பண்டாரநாயக்க, 3 வருடங்களில் அதே மதத்தின் வழிகாட்டி ஒருவரால் சுடப்படுமளவிற்கு அந்த பௌத்த சிங்களவர்கள் ஏமாற்றப் பட்டிருக்கிறார்கள்.
60ல் பதவியேற்ற சிறிமாவோ பண்டாரநாயக்கா காலத்திலிருந்து, இன்றுவரை தொடர்கிறது அன்று பண்டா விதைத்துச் சென்ற வித்தான சிங்கள இனவாதம். இந்த விதை, சிறிதாக முளைவிட்டு எழுந்தபோது, சுய அரசியல் இலாபங்களுக்காக, அதை நீரூற்றி வளர்த்தவர்கள் சிங்களத் தலைமைகள் தான். இதனால் நாட்டுக்கோ மக்களுக்கோ எந்தப் பயனுமில்லை என்பதை விட, தீமைகள் ஏராளம் காத்திருக்கின்றன என்பதைத் தெரிந்திருந்தும், தங்கள் பதவிகளைத் தக்க வைத்துக்கொள்ள, அடிக்கடி இதே இனவாதத்தைப் பயன்படுத்தினார்கள். இனவாதம் ஒரு பொன்முட்டையிடும் வாத்தாக, அத்தனை இனவாதிகளுக்கும் சுயலாபத்தை அள்ளி வீசியது. இனவாதத்தால் குளிர்காய்ந்த பேரினவாதிகள் ஏராளம்.
பண்டாரநாயக்காவிலிருந்து, இன்றைய சந்திரிகா வரை, ஜே.ஆர்., இரத்தினசிறீ உட்பட அத்தனைபேரும் இதே குதிரையைப் பாவித்து, தமிழருக்கு செக்மேற் வைத்தார்கள். விளைவு, ஒட்டுமொத்த இலங்கையுமே குட்டிச்சுவராகியது மட்டுமே.
இன்னும் சற்று பின்னோக்கிச் சென்று, 1952ம் ஆண்டு டட்லி சேனநாயக்கவின் முதலாவது தேர்தல் வெற்றியைப் பார்த்தால் கூட, சிங்கள மக்கள் எவ்வளவு தூரம் ஏமாற்றப்பட்டார்கள் என்பது பட்டென்று புலப்படும். அப்போது நடைபெற்றது ஒரு தேர்தல்கூட அல்ல. ஒரு ரெபரெண்டம் அல்லது நம்பிக்கை வாக்கெடுப்பு என்று தான் கூற வேண்டும். ~நாங்கள் ஆட்சியிலிருக்கும் வரை, அது எவ்வளவு காலமாக இருந்தாலும், இந்த நாட்டில் அரிசியின் விலை 25 சதமாகவே இருக்கும்| என்று அறிவித்தார் டட்லி சேனநாயக்க.
இந்த அரிசி விலைக்காக மட்டுமே, மீதி எல்லாவற்றையும் தூக்கியெறிந்து, டட்லியை ஆட்சியலமர்த்தினார்கள். ஆவணியில் ஆட்சிப் பீடமேறிய டட்லி, ஐப்பசியிலேயே, தன் வாக்குறுதியைக் காற்றில் பறக்க விட்டார். அரிசி விலையை அப்படியே வைத்துக்கொண்டு, அரிசி விநியோகத்தின் அளவை, மூன்றில் இரண்டாகக் குறைத்தார் டட்லி. சீனி விலையேற்றம் தொடர்ந்தது. மாணவர்களுக்கான மதிய உணவு நிறுத்தப்பட்டது. பாடசாலைச் சிறார்க்கான பால் விநியோகம் நின்றது, புகையிரதக் கட்டணம், முத்திரை விலை போன்றன உயர்ந்தன, இறுதியில் 25 சதம் என வழங்கப்பட்ட அரிசி விலை வாக்குறுதி, 70 சதமாக உயர்ந்தது. 1950களில், மூன்று மடங்காக விலையேற்றம் வழங்குவது என்பது சாதாரண விடயமல்ல. 70 சதம் என்பது மிகப்பெரிய தொகையாக இருந்த காலம் அது.
இப்படி வாக்குறுதிகளை வழங்கி வழங்கி, தங்கள் வாக்கு வங்கிகளை நிறைத்துக் கொண்டவர்கள் பேரினவாத அரசியல் தலைமைகள். இன்றுவரை இது தொடர்கதைதான்.
1956ல் கொல்வின் ஆர். டி.சில்வா தீர்க்க தரிசனமாக ஒரு கருத்தை முன்வைத்தார். தமிழர் தாயகப் பகுதிகளை முழுமையாகப் பிரித்துக் கொடுங்கள், இரண்டு இனங்களும் இரண்டு பிரதேசங்களும் வழமை பெறும் என்றார் அவர். அத்தோடு இன்னுமொன்றையும் சொன்னார், ~தற்செயலாக தமிழர் தாயகப் பகுதிகளைப் பிரித்துக் கொடுக்காது, சிறுபான்மை இனத்திற்கு துரோகமிழைக்க முயற்சித்தால், இன்நாட்டின் இரு இனங்களும் அழிந்து போவதுடன், இரு பிரதேசங்களும் நெருக்கடியையே சந்திக்கும்| என்றார். இதுதான் தீர்க்கதரிசனமான வார்த்தைகள். இதன் இறுதி அத்தியாயத்தை இப்போது பார்க்கிறோம்.
இப்போது வாக்குக்காக மட்டுமே வாக்குறுதி கொடுப்பவர், மஹிந்த ராஜபக்ஷ. இவர், தன்னை ஆரம்பத்தில் ஒரு சமாதானப் பிரியர் போன்றும் சாந்த குணமுள்ளவர் போன்றும் காட்டிக் கொண்டாலும், இவரின் பின்புலத்தை அறிந்தவர்கள், மஹிந்தவின் தளமும் களமும் எது எது என்று அறிந்திருப்பார்கள்.
ஹம்பாந்தோட்டையின் றுகுண பகுதியில், பெலியத்த தொகுதியைப் பிரதிநிதித்துவப் படுத்தியவர் மஹிந்த ராஜபக்ஷ. சிங்கள இனவெறியருக்கும் காடையருக்கும் தாதாக்களுக்கும் பாதாள உலகக் கோஷ்டிகளுக்கும் நன்கு பரீட்சயமான பிரதேசமே இந்த றுகுண சுற்றுவட்டாரம்.
இந்தக் குழுக்களின் தலைமைகளுடன் நல்ல நட்புறவு கொண்டவராக மஹிந்த விளங்கினாலும், வெளியே புன்னகை பூத்தவாறு, பொன்மனச் செம்மலாக நடமாடுகிறார்.
பௌத்த மதத்திற்கும் மக்களுக்கும் இவர் ஆற்றிவரும் சேவைக்காக, இவருக்கு ~ஸ்ரீ றோகண ஜனரஞ்சன| என்ற பட்டத்தை, பௌத்த அதிஉயர்பீடமான மல்வத்தை பீடம், 2000ம் ஆண்டு இவருக்கு வழங்கியது. இது பெரும்பான்மை சமூகத்திற்கு புகழ்சேர்க்கும் விடயமென்றாலும், சிறுபான்மை இனங்களை நாட்டைவிட்டு வெளியேற்றும் இனவாத சக்திகளுக்கான குரலாக இவர் ஒலித்ததற்கே இந்தப் பட்டம் இவருக்குக் கிடைத்தது.
இவருக்கு எதிராக இரண்டு கொலைக் குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. தனது அரசியல் பலத்தைப் பிரயோகித்து, இந்த இரண்டு வழக்குகளையும் மூடி வைத்துள்ளார் இவர்.
ஏனைய குற்றச்சாட்டுக்கள் ஏராளம். குறிப்பாக, இவரிடம் வழக்கிற்கு செல்வோரை, இவர் அணுகுவதே ஒரு சுவாரஷ்யமான சமாச்சாரம். தனது தரப்பு ஆளுக்காக சுருக்கமான வழியில் தீர்வுகண்டு வந்தவர் இவர். எதிரி தரப்பு, பாதுகாப்புப் படையுடன் சம்பந்தப்பட்டிருந்தால், தனது அரசியல் செல்வாக்கைப் பாவித்து, அவனை அல்லது அவளை, போர் உக்கிரமாக நடக்கும் முகாமுக்கு மாற்றல் வாங்கிக் கொடுத்து, கேசை மூடி விடுவார். எதிரி தரப்பு, தமிழனாக இருந்தால், புலி என்று கூறி, நான்காம் மாடிக்கு அனுப்பி ஒரு தட்டுத்தட்டி, கேசை வாபஸ் பெற வழி செய்து விடுவார். ஏனைய ஏழைகள் யாருமென்றால், தன் செல்வாக்கைப் பயன்படுத்தி, கேசை சில வருடங்கள் இழுத்தடித்து, பணமுடக்கம் கொடுத்தே வெற்றிபெறுவார்.
இவர் தொழில் பார்த்த இடம் ஒன்றும் சாதாரணமானதல்ல. சிங்கள இனவெறிக்கு அடி அத்திவாரமும் தூபமுமிட்ட துட்டகைமுனு வம்சத்தின் மண் என்றும், பௌத்த சிங்கள அடிப்படைவாதிகளின் மண் என்றும் கருதப்படும் தங்காலை என்ற சிங்களக் கிராமமே, மஹிந்த ராஜபக்ச சட்டத்தரணியாக தொழிலாற்றிய பிரதேசம். இங்கு இனத்துவ வேசத்தை யாரும் புதிதாக விதைக்கும் அவசியமில்லை, அவ்வளவிற்கு அது விளைந்து போயிருக்கிறது.
தன்னை ஒரு சமாதானப் பிரியர் போன்று காட்டிக் கொண்டாலும், ஒரு பழுத்த இனவாதக் கொள்கை கொண்டவர் என்பதை, இவர் தென்பகுதி சிங்கள மக்களின் கூட்டங்களில் கலந்து கொள்ளும்போது காட்டி விடுவார். தற்போது ஊடகங்கள் பலமாக உள்ளதால், கிராமப்புறத்து மக்களிடம் ஒன்றும், மீதிப் பேரிடம் வேறொன்றும் கூறும் இவரது யுக்தி கைகூட மறுக்கிறது.
- ஜே.வி.பி.யின் நிபந்தனைகளுக்கு இணங்கி, பாமர சிங்கள கிராமவாசிகள் வாக்கைப் பெறுவது
- ஹெல உறுமயவின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு பௌத்த மேலாதிக்கத்தினரின் வாக்குகளையும் அள்ளுவது
- பிரபாகரனுடன் நேரே பேசப் போகிறேன் என்று கூறி தமிழரின் முதுகிலும் குத்துவது
என்று இவர் எடுத்த முதற்படியிலேயே, ஒரே சறுக்கலாக உள்ளது. ஊடகங்கள் கண்ணில் எண்ணெய் ஊற்றிக்கொண்டு, மஹிந்த பிரச்சாரக் கூட்டத்தின் மூலை முடுக்கில் நின்றெல்லாம் செய்திகளைக் கொண்டுவந்து, உடனே பரப்பி விடுவதால், மனிதர் கொஞ்சம் சிரமப்படுவது தெரிகிறது.
ஜே.வி.பி.யுடன் சேர்ந்தேன் என்று சொல்ல வந்தவர், சற்று இழுத்து, சேரத்தான் முயற்சிக்கிறேன், இன்னும் இல்லை, ஆனால் சேராமலும் விடவில்லை, என்றாலும் சேருவதும் சேராததும் ..... என்று ஏதோ தடுமாறுவது தெரிகிறது.
புத்த பிக்குகள் கைகொடுப்பார்கள் என்றால், அவர்களும் பக்கம் பக்கமாக நிபந்தனை வைக்கிறார்கள். எங்காவது கிராமப் புறத்தில் வைத்துக் கேட்டால், இரகசியமாக இணங்கலாம், ஆனால் இவன்கள் கொழும்பில் வைத்து, றிப்போர்ட்டர்ஸ்க்கு முன்னால கேட்டுத் தொலைக்கிறான்கள்.
இந்த அரச பேச்சாளரோ கத்தரிக்காயோ .. .. .. நிமால் சிறீபால டி சில்வா, ஏதோ தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்பது போல, அடிக்கடி சுதந்திரக்கட்சியின் கொள்கையை ஞாபகப் படுத்திறாராம்!. வெட்டி ஆற்றிலே போட்டிருவன், தேர்தல் காலமாகக் கிடக்குது .. .. .. பொருமுவது வேறு யாருமல்ல, மஹிந்த தான்.
1952 லிருந்து காலம் காலமாக சிங்கள இனவெறியை தங்கள் பிரதான அங்குசமாகப் பாவித்து, தமிழினத்தை மட்டுமல்ல, சிறீலங்கா என்ற நாட்டையே துவம்சம் செய்து குட்டிச் சுவராக்கி விட்டார்கள்.
இப்போது மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ கையிலும், அதே இனத்துவேச, இனவெறி, இனஅழிப்பு ஆயுதம் தான். காலங்கள் உருண்டோடினாலும், சிங்கள மக்கள் வறுமையில் வாடினாலும், நாட்டின் பொருளாதாரம் குட்டிச் சுவராகினாலும், தன் பதவிக்காக அதே துருப்பிடித்த பழைய ஆயுதம் மீண்டும் தூசுதட்டி மேசைக்கு வருகிறது.
சிறீலங்கா என்ற நாட்டில் இரு இனங்கள் இருப்பதையே ஏற்க மறுக்கும் ஜே.வி.பி.யுடனும், சிறீலங்கா பௌத்த சிங்களவர்களுக்கே சொந்தம் என்று ஓலமிடும் ஹெல உறுமயவுடனும் ஒட்டுறவு வைத்துக் கொள்ளும் மஹிந்த ராஜபக்ஷ, மறைமுகமாக சொல்லிநிற்கும் செய்தி என்ன தெரியுமா? சிறுபான்மை இனங்களின் ஆதரவோ வாக்குகளோ அபிமானமோ தனக்கு அவசியமில்லை என்பதைத்தான். சிறுபான்மை என்று சொல்லும்போது, இதற்குள் மலையகத் தமிழர், நாட்டில் வாழும் அத்தனை முஸ்லிம் சமூகத்தினர் மற்றும் ஒட்டுமொத்த தமிழரும் அடங்குவர். இவர்கள் அனைவரையும் வேரோடு பிடுங்கி எறிந்து, இவர்கள் யாரினதும் அடிப்படை உரிமை குறித்து தனக்கு எந்தவித அக்கறையும் இல்லை, இந்த சிறுபான்மை இனங்களுக்கு சிறீலங்கா என்ற நாட்டில் வாழ அருகதையே இல்லை என்பதையே, மஹிந்த ராஜபக்ஷவின் இனவாத தேர்தல் ஒப்பந்தங்கள் சுட்டிநிற்கின்றன.
சிங்கள மக்கள் எவ்வளவு காலம்தான் ஏமாறப் போகிறார்கள்? இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுவதும் நடக்கத்தான் போகிறது. இனவாதம் அழிவதற்கு வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.
தமிழ் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா சொன்னதுபோல், தங்கத் தமிழீழத்திலிருந்து புகையிரதம் தயாரித்து, சிங்கள நாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றே படுகிறது.
ஒட்டுமொத்த ஈழத் தமிழினத்தின் ஏகோபித்த பாராட்டிற்குரியவர்கள் இருவர். ~முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் ஒன்றுசேர்ந்து தங்கள் ஒருமித்த குரலை உயர்த்த வேண்டும்| என்று பகிரங்க அழைப்பு விடுத்திருக்கும், உலமாக்களின் தலைவர் மதிப்பிற்குரிய கே.உத்மான் லெப்பை, ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட பேரறிஞர்.
~மலையகத் தமிழரும் மனிதர்களே, அவர்களுக்கும் ஏனைய மக்களைப்போன்ற சுயநிர்ணய உரிமை தரவேண்டும், ஈழத்தமிழர்கள் என்றால், அதிலே மலையகத் தமிழரும் அடக்கம்? என்று தெளிவாகவும் தொடர்ச்சியாகவும் குரல்கொடுத்து வரும் பெ.சந்திரசேகரன் உண்மையில் மனிதாபிமானமுள்ள ஒரு தலைவர்.
ஆங்காங்கே கூனிகளும், சகுனிகளும், விசமிகளும், காக்கை வன்னியன்களும், ஏதிலிகளும், எட்டையப்பன்களும் கிளர்ந்தெழுந்து குரல்கொடுத்தாலும், ~ஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம், எங்கள் தலைவன் பிறந்தான்| என்ற தேனிசை செல்லப்பாவின் காந்தக் குரலே நம் காதில் ஒலிக்கிறது. பதில் விரைவில் கிடைத்துவிடும் என்றே தோன்றுகிறது.
~ஐயப் படாஅ தகத்த துணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்|
ஒருவன் மனத்தில் உள்ளதை தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடிய சக்தி தெய்வத்திற்கே உண்டு என்று கூறினால், அந்தத் திறமை படைத்த மனிதனையும் அத்தெய்வத்தோடு ஒப்பிடலாம் - கலைஞர் உரை
எண்ணப் பரிமாற்றத்தில், உங்களுடன்,
குயின்ரஸ் துரைசிங்கம்
ரொறன்ரோ - கனடா

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>