Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நீதிக்காக எழுந்துநிற்க மறுக்கின்றபோது
#1
<b>உண்மை, நீதிக்காக எழுந்துநிற்க மறுக்கின்ற போது நீங்கள் மரணித்து விட்டதாகவே கருதப்படுவீர்கள்' </b>


பிரியாவிடை வைபவத்தில் நீதிவான் கணேசராஜா
திருகோணமலை நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா மூதூருக்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதையிட்டு வழங்கப்பட்ட பிரியாவிடை வைபவத்தில் திருகோணமலை முன்னாள் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் ஓ.எல்.எம்.இஸ்மாயில் தற்போதைய தலைவர் கா.சிவபாலன், செயலாளர் ஜெகசோதி, திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்ரன் பாலசிங்கம் தற்போதைய நீதிவான் வி.இராமக்கமலன், பதில் நீதிவான் செல்வராஜா மற்றும் பல சட்டத்தரணிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

திருமலை முன்னாள் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் ஓ.எம்.எம்.இஸ்மாயில் தமது உரையில், திருமலை நீதிமன்ற நீதிபதி கணேசராஜா திருகோணமலை நீதிமன்றில் அனைவரினதும் அன்பை சம்பாதித்திருந்ததாகவும், அன்பு இல்லம் வழக்கு, புத்தர் சிலை வழக்குகளில் துணிச்சலான தீர்ப்புகளை வழங்கியிருந்தார் எனவும், சட்டத்தரணிகள் சங்கத்துடன் சுமுகமான உறவை பேணுவதில் முன்மாதிரியாக விளங்கினார் எனவும் குறிப்பிட்டார்.

திருமலை நீதிவான் இராமக்கமலன், தன்னுடைய உரையில், தான் இந்நீதிமன்றில் பயிற்சி பெறுவதற்காக வந்தபோது வழக்குகளில் தனியாக இயங்கி தீர்ப்புகளை வழங்க கணேசராஜா சந்தர்ப்பம் வழங்கியதாகவும், நீதிமன்ற நடைமுறைகள் பற்றியும், சட்டத்தரணிகள், நீதிமன்ற உத்தியோகத்தர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்று அறிவுரை வழங்கி இருந்ததாகவும், இதன் காரணமாகவே தாம் தன்நம்பிக்கையுடன் தற்போது நீதிவானுக்குரிய கடமைகளை நிறைவேற்ற முடிகிறது எனவும் குறிப்பிட்டார்.

சட்டத்தரணிகள் சங்கச் செயலாளர் ஜெகசோதி தமதுரையில்;

நீதிவான் கணேசராஜா தாம் பணிபுரிந்த காலத்தில் புத்தர்சிலை வழக்கில் பயமில்லாது தயக்கமில்லாது துணிச்சலான தீர்ப்புகளை வழங்கியதாகவும், அவரது துணிச்சலையும் பாரபட்சமின்மையையும் தாம் வெகுவாக பாராட்டுவதாகவும் குறிப்பிட்டார்.

சட்டத்தரணி கா.சிவபாலன், சட்டத்தரணி செந்தில்நாதன் ஆகியோரும் நீதிவானின் பணியை பாராட்டி பேசினார்கள். மேலும் சமுதாய சீர்திருத்தப்பிரிவின் சார்பில் இரவீந்திரன் நீதிவானை பாராட்டி கவிபுனைந்தார்.

நீதிவான் கணேசராஜா தமதுரையில்; நீதிமன்றத் தீர்ப்புகள் மீளாய்வு செய்யப்படுவதற்கும் மேன் முறையீடு செய்யப்படுவதற்கும் மேல் நீதிமன்றங்கள், மேன்முறையிட்டு நீதிமன்றங்கள், உயர் நீதிமன்றம் உள்ளதாகவும், தீர்ப்புகளை அதிகாரம் படைத்தவர்கள் விமர்சிப்பது அநாகரிகமானது எனவும், நீதிமன்ற தீர்ப்புகளை அநாகரிகமான முறையில் விமர்சிப்பது தண்டனைக்குரிய குற்றம் எனவும் குறிப்பிட்டார்.

நீதிபதிகளிடம் துணிச்சல், பயமின்மை, பாரபட்சமின்மை இருக்க வேண்டுமெனவும் அப்போது தான் மக்களிடம் நீதித்துறையில் நம்பிக்கை ஏற்பட வாய்ப்புண்டு எனவும் அவர் கூறினார்.

தலைவர்கள் வரலாற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டுமெனவும் வரலாற்றிலிருந்து யாரும் பாடம் கற்றுக்கொள்ளாத வரை புத்தர்சிலை விவகாரம் போன்ற பிரச்சினைகள் தொடரவே செய்யும் எனக் குறிப்பிட்ட நீதிவான், எனது தீர்ப்புகள் சரியா, தவறா என்பதை காலமும் வரலாறும் தீர்மானிக்கும் எனவும் குறிப்பிட்டார்.

கறுப்பின மக்களின் விடிவுக்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் வாசகங்களை மேற்கோள் காட்டி பேசிய நீதிவான் கணேசராஜா தனிமனிதன் ஒருவன் நேசிப்பதற்கும் அதற்காக மரணிப்பதற்கும் உயரிய பொருளை அல்லது பணியை ஒருவன் தன் வாழ்நாளில் கண்டுபிடிக்காவிடில் அவன் வாழ்வதற்கு தகுதியற்றவன். நீங்கள் 38 வயது நிரம்பியவராக இருக்கலாம், ஒரு நாள் உங்கள் முன்னிலையில் அரிய சந்தர்ப்பம் ஒன்று, ஒரு குறிப்பிட்ட கொள்கை, தத்துவம் நீதிக்காக எழுந்து நிற்கவேண்டிய அவசியத்தை உணர்த்துகின்ற போது பயம் காரணமாக அல்லது நீண்டநாள் வாழ வேண்டுமென்பதற்காக, பதவி ஒன்றை இழந்து விடுவோமா என்ற பயம் காரணமாக அல்லது விமர்சிக்கப்படுவோமோ என்ற பயம் காரணமாக அல்லது எமது புகழை இழந்துவிடுவோமா என்ற காரணத்திற்காக அல்லது கத்திக்குத்துக்கு இலக்காகுவோமோ என்ற பயம் காரணமாக, யாராவது உங்களை சுட்டுவிடுவார்கள் அல்லது உங்களுடைய வீட்டினை குண்டுகளால் தகர்த்து விடுவார்கள் என்ற அச்சம் காரணமாக எழுந்து நிற்க மறுப்பீர்களானால் நீங்கள் தொடர்ந்து 90 வயது வரை சென்று வாழலாம். ஆனால் நீங்கள் 90 வயது வரை வாழ்ந்தாலும் முப்பத்தெட்டு வயதிலேயே மரணம் அடைந்து விட்டதாகவே கருதப்படுவீர்கள். மூச்சு 90 வயதில் நின்றாலும் 38 வயதிலேயே உங்கள் ஆன்மாவின் துடிப்பு நின்றுவிட்டதாகவே கருதப்படும்.

நீங்கள் உரிமைக்காக எழுந்து நிற்க மறுக்கின்ற போது நீங்கள் மரணித்து விட்டதாகவே கருதப்படுவீர்கள். நீங்கள் உண்மைக்காக எழுந்து நிற்க மறுக்கின்ற போது நீங்கள் மரணித்து விட்டதாகவே கருதப்படுவீர்கள். நீதிக்காக நீங்கள் எழுந்து நிற்க மறுக்கின்ற போது நீங்கள் மரணித்து விட்டதாகவே கருதப்படுவீர்கள் என குறிப்பிட்டார்.

இவ்வைபவத்தில் சமுதாய சீர்திருத்தப் பிரிவு பொறுப்பதிகாரி சட்டத்தரணி இல்லியாஸினால் நீதிவான் கணேசராஜாவுக்கு நினைவுப் பரிசு ஒன்று வழங்கப்பட்டது. சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பிலும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கணேசராஜா தமது சார்பில் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சிவபாலனுக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார்.


http://sooriyan.com/index.php?option=conte...id=2340&Itemid=
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)