Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அரசியல் பொறிக்குள் அகப்பட்டார் முரளி
#1
கிரிக்கெட் சுூதாட்ட விவகாரம் மீண்டும் சுூடுபிடித்துள்ள நிலையில் இந்த விவகாரத்தில் இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் சிக்கும் வாய்ப்புகளுள்ளதாக இந்தியப் பத்திரிகைகள் தெரிவித்துள்ளன. மும்பை நடன அழகி (பொறி) ஒருவருடனான முரளியின் தொடர்பையடுத்தே சுூதாட்ட விவகாரத்தில் முரளிதரனின் பெயரும் பலமாக அடிபடுகிறது. இதேநேரம், மும்பை நடன அழகி (பொறி) தாருன்னுகானுடன் தொடர்பு இருப்பதாக மும்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 16 மாதங்களுக்கு முன் முரளிதரன் தனிப்பட்ட பயணமாக மும்பை சென்றுள்ளார். அப்போது அவருக்கு நடன அழகியை நடிகர் ஆதித்ய பஞ்சோலி அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். மதுபான சாலையில் நடந்த இந்தச் சந்திப்பின் போது முரளிதரன் நடன அழகியின் அழகில் மயங்கியுள்ளார். பின்னர் அவருக்காக இலட்சக்கணக்கில் பணத்தை தண்ணியாக செலவிட்டுள்ளார் என்ற தகவலும் பொலிஸாருக்கு தெரிய வந்திருக்கிறது. இதனால் முரளிதரன் சுூதாட்ட பிரச்சினையில் சிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்தும் விசாரணைகள் நடைபெறுகின்றன. கிரிக்கெட் சுூதாட்டத்தில் இந்திய வீரர்கள் 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக ஐ.சி.சி. அவர்களை கண்காணித்து வருகிறது. கோடியில் புரளும் கிரிக்கெட்டில் அவ்வப்போது சுூதாட்டம் தலை து}க்குவது உண்டு. 2000 - 2001 ஆம் ஆண்டு தென் ஆபிரிக்க அணி இந்தியா வந்த போது அந்த அணி வீரர்கள் சுூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பிரச்சினைக்கு பிறகு சுூதாட்ட புகார் தலை து}க்காமல் இருந்தது. இந்த நிலையில் கிரிக்கெட் சுூதாட்ட புகார் மீண்டும் விசுவரூபம் எடுக்க ஆரம்பித்துள்ளது.

மும்பை நடன அழகி (புலனாய்வுப்பொறி) தாருன்னு கான் வருமான வரித்துறையினரிடம் சிக்கிய விசாரணையில் கிணறு தோண்ட புூதம் கிளம்பிய கதையாக கிரிக்கெட் சுூதாட்ட விவகாரம் வெளிப்பட்டுள்ளது. இது தொடர்பாக மும்பை பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் சமீபத்தில் இலங்கை மற்றும் சிம்பாப்வேயில் நடந்த 3 நாடுகள் போட்டியில் சுூதாட்டம் நடந்ததாக தெரிய வந்திருப்பதாக கூறப்படுகிறது. நடன அழகி தாருன்னு கான் சுூதாட்ட கும்பலுடன் தொடர்பு வைத்திருந்ததுடன், கிரிக்கெட் வீரர்கள் சிலருடனும் இந்தி நடிகர்களுடனும் நெருங்கிய தொடர்புடையவர் என்று தெரியவந்திருக்கிறது.

இதைத் தொடர்ந்து ஐ.சி.சி. ஊழல் தடுப்பு அதிகாரிகள் மார்ட்டின் ஹாகின்ஸ், அலன் பீக்காக் ஆகியோர் மும்பை வந்தனர். அவர்கள் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கும் சென்றுள்ளனர்.

இதனால் சுூதாட்ட புகார் மேலும் சுூடு பிடித்துள்ளது. அவர்களிடம் கேட்டதற்கு விபரங்கள் எதனையும் வெளியிட மறுத்து விட்டனர். இந்தியாவில் விசாரணை நடக்கிறது என்று மட்டும் பதிலளித்தனர்.

இதற்கிடையில் இந்த சுூதாட்டத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஷேவாக், சாகீர்கான், அகர்கார் மற்றும் இந்தி சினிமா நட்சத்திரங்கள், சுூதாட்ட தரகர்கள் ஆகியோருக்கு தொடர்பிருப்பதாக பரவலாக பேசப்படுகிறது.

இந்த நிலையில் இந்தி நடிகர் ஆதித்ய பஞ்சோலி கிரிக்கெட் சுூதாட்டத்தில் தொடர்புடைய நடன அழகி தாருன்னு கானுடன் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளார். நான் தாருன்னு கானை சந்தித்தது கிடையாது. அவருக்கு இலங்கை வீரரை அறிமுப்படுத்தவும் இல்லை. தாருன்னு கானுடன் தொடர்பு இருப்பதாக நிரூபித்தால் தண்டனையை ஏற்கத் தயார் என்று அவர் கூறியுள்ளார்.

நன்றி.நிதர்சனம்.கொம்

http://www.nitharsanam.com/?art=11731
.....

<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)